Thursday, 29 November 2012

நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு






நூஹ் நபியின்                                    
கப்பல் தங்கிய மலை
கண்டுபிடிப்பு

-----------------------------------------

“திருக்குர்ஆன் வசனத்
தை நிருபிக்கும் 16
ஆயிரம் அடி உயரமுடைய
மலையின் மேல் உள்ள
ஒரு கப்பல்”
” பூமியே!
உனது தண்ணீரை நீ
உறிஞ்சிக் கொள்! வானமே நீ
நிறுத்து!”
என்று (இறைவனால்)
கூறப்பட்டது. தண்ணீர்
வற்றியது. காரியம்
முடிக்கப்பட்டது. அந்தக்
கப்பல்
ஜூதி மலை மீது அமர்ந்தது
. “அநீதி இழைத்த
கூட்டத்தினர்
(இறையருளை விட்டும்)
தூரமாயினர்” எனவும்
கூறப்பட்டது .
(திருக்குர்ஆன் 11:44.) இதில்
சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர்
நம்பிக்கை கொள்வதில்லை”
(திருக்குர்ஆன்
26:121.).“அவரையும்,
கப்பலில் இருந்தோரையும்
காப்பாற்றினோம்.
இதை அகிலத்தாருக்குச்
சான்றாக்கினோம்”.
(திருக்குர்ஆன் 29:15.)”
பலகைகள் மற்றும் ஆணிகள்
உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம்.
அது நமது கண்காணிப்பில்
ஓடியது. இது (தன்
சமுதாயத்தால்)
மறுக்கப்பட்டவருக்கு (
நூஹுக்கு) உரிய கூலி.
அதைச் சான்றாக
விட்டு வைத்தோம்.
படிப்பினை பெறுவோர்
உண்டா? “.
(திருக்குர்ஆன்
54:13-15.)இவ்வசனங்களில்
நூஹ் நபியின்
கப்பலை அத்தாட்சியாக
மலையின் மேல்
விட்டு வைத்திருப்பதாக
திருக்குர்ஆன்
கூறுகின்றது.
மலை போன்ற
உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால்
ஜூதி மலைக்கு மேல் கப்பல்
நிலை கொண்டது.
இம்மலை துருக்கி நாட்டின்
எல்லையில்
அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த
போதான் மாவட்டத்திலுள்ள
அரராத் என்ற மலை தான்
ஜூதி மலை என்று
ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த
ஒருமலையேறும்
குழு அம்மலையை ஆய்வு
செய்து பனிப்
பாறைகளுக்கு அடியில்
கப்பல் துண்டுகள்
இருந்ததைக்
கண்டு பிடித்துள்ளது.1969
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2
ஆம் திகதியன்று
கிழக்குத்துருக்கியின்
ரஷ்ய எல்லையில்
அமைந்துள்ள அரராத் மலைத்
தொடரில் ஒரு கப்பலின் சில
மரப் பகுதிகளை அந்த
ஆராய்ச்சிக்குழு
கண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின்
மேற்குப்பகுதியில், 16,000
அடி உயரத்தில் பனியால்
மூடப்பட்ட
பாறைகளுக்கிடையே20
மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின்
மரப் பலகைகள்
புதைந்து கிடந்தன.
16 ஆயிரம்
அடி உயரமுடைய
மலையின் மேல் ஒரு கப்பல்
நிலை கொண்டுள்ளது
என்றால் அந்த
அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க
வேண்டும்.
அதன் காரணமாக அந்த
மலைக்கும் மேலே கப்பல்
மிதந்து கொண்டு
இருக்கும் போது வெள்ளம்
வடிந்திருக்க வேண்டும்.
இதனால் அந்தக் கப்பல்
மலையின்
மீது நிலை கொண்டிருக்க
வேண்டும்
என்று ஆய்வாளர்கள்
ஊகித்துச்
சொல்வதை திருக்குர்ஆன்
1430
ஆண்டுகளுக்கு முன்பே
சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக்
கொண்டு போய்
வைத்தது யார்? என்ற
கேள்விக்குத் திருக்குர்ஆன்
மட்டுமே தக்க
விடை கூறுகிறது.
‘அக்கப்பலை அத்தாட்சியாக
விட்டு வைத்திருக்கிறோம்
; சிந்திப்பவர் உண்டா?’
என்று கூறி, சமீபத்தில் 40
ஆண்டுகளுக்கு முன்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த
உண்மையை 14
நூற்றாண்டுகளுக்கு
முன்பே திருக்குர்ஆன்
முன்னறிவிப்பு
செய்துள்ளது .
திருக்குர்ஆன்,
“இறைவனின் வேதம்”
என்பதற்கு இது
சான்றாகவுள்ளது.
இந்த சம்பவங்கள் மூலம்
இஸ்லாம் எவ்வாறான
மார்க்கம் என்றும் இஸ்லாம்
மட்டுமே உண்மையான
மார்க்கம் என்றும் அறிய
முடிகிறது.

யூத விஞ்ஞானிக்கு அறிவியல் ரீதியாக வழி காட்டிய அல்குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!


கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். 

இவரது மனமாற்றத்திற்கு  வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்
.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க

வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய்

பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள்

விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட்

மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு

மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம்

காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே

அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத

 விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப,

அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர்

அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம்

பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது.

முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள்

மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம்

செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.

குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.