Showing posts with label naadukal. Show all posts
Showing posts with label naadukal. Show all posts

Friday, 24 January 2014



இவர்கள் அரபிகளுமில்லை.. இவர்களில் சிலர் முஸ்லிமாக பிறக்கவுமில்லை.   

                             
இவர்கள் அரபிகளுமில்லை.. இவர்களில் சிலர் முஸ்லிமாக பிறக்கவுமில்லை.. இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்களும் அல்ல... ஆனால் இவர்களால் இஸ்லாம் பூமியெங்கும் பரவுகிறது..
இவர்களால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்

*பெயர்கள் வலமிருந்து இடமாக*
1) காலித் யாசிர். அமெரிக்கா. 
2) அபு ஹம்ஸா,ஜெர்மன். (முன்னால் உதைப் பந்தாட்ட வீரர்)
3) யூசுப், அமெரிக்கா.
4) சாகிர் நாயிக், இந்தியா.
5) மால்கம் எக்ஸ், அமெரிக்கா.
6) அஹ்மத் தீதாத், தென் ஆபிரிக்கா

யா அல்லாஹ் எம்மை கொண்டும் இஸ்லாத்தை பரவக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக

Tuesday, 21 January 2014

அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ்காரணம்..!


அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ் காரணம்..!
போதைவஸ்து, மது, மாது, சூது, என சீரழிந்து கொண்டிருந்த அமெரிக்க சில வாலிபர்கள் இஸ்லாத்தை தழுவ முன்னாள் ஜனாதிபதி ஜோர் புஷ் காரணமாக இருந்திருக்கிறார்.
அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஜோர் புஷ் தனது ஒவ்வொரு உரையிலும் இஸ்லாத்தை விமர்சித்து பேசுவதை அவதானித்த அவ் வாலிபர்கள் முதற்தடவையாக "இஸ்லாம்" என்ற சொல்லை கேள்விப்படுகின்றனர். பின்னர் அது பற்றி அறிய விரும்பினர்.
வழமையாக google ளில் ஆபாச படங்களை தேடும் பழக்கத்தைக் கொண்ட அவர்கள் புனித இஸ்லாம் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்..
இறுதியில் புனித இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கு மக்களை அழைக்கும் தாயிகளாகவும் மாறியுள்ளனர்.. அல்லாஹ் நாடினால் காபிர்களைக் கொண்டும் இஸ்லாத்தை பரப்புவான்.
17:97.
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ (த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்.

Sunday, 19 January 2014

"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர்



"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். 
அமெரிக்காவில்  அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட்
எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் 
குறிப்பிட்டுள்ளார். இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான 
தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் 
ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 
2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத்தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார். "இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் 
சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது"- என பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார். பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த 
மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான 
இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார். இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு 
முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது 
என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது. Jesus was a Muslim, claims U.S. religions 
professor source: lankamuslim-org குர் ஆன் (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் 
நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; 
மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) 
தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; 
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. 3:47 قَالَتْ رَبِّ أَنَّىٰ

 يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ 3:47. 
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் 
தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் 
கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு 
காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது 
ஆகிவிடுகிறது.
” 19:20 قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا 19:20. அதற்கு அவர் (மர்யம்), 
“எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் 
நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார். 19:22 فَحَمَلَتْهُ 

فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِ19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன்
தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 19:27 فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا புதிய எற்படு மத்தேயு அதிகாரம் 1 18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் 
விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், 
அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று 
காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட 
யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய 
தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் 
மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் 
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் 
பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் 
பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் 
கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு
கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று 
பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் 
என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் 
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான 
குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

Thursday, 5 December 2013

சகோதரர் சுரேஷ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்!!





இஸ்லாத்தை எதிர்த்து ஓராயிரம் சதி திட்டங்கள் ஓவ்வொருநாளும் அரங்கேறினாலும்

ஆதரிக்கும் அலைகள் ஓய்வதில்லை 

இதன் வரிசையில் சகோதரர் சுரேஷ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்!! 

தன் பெயரை "சபியுல்லாஹ்" என்றும் மாற்றி கொண்டார்...

☆☆ அல்லாஹு அக்பர்☆☆

அலைகள் தொடரும்...

இஸ்லாத்தின் எதிரிகள் மனதை திடப்படுத்தி கொள்ளட்டும் ...

Tuesday, 26 March 2013

இஸ்லாத்தைக் கடுமையாக வெறுத்த நான்,முஸ்லிம் ஆகிவிட்டேன்-அர்னோட் வேன் டோர்ன்




"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான்,முஸ்லிம் ஆகிவிட்டேன் என்பதை எங்கள் கட்சியினர் நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும்.


நான், கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்த பின்னரே, இஸ்லாத்தை ஏற்றேன் என்கிறார், நெதர்லாந்தின் "Party for Freedom" எனும் வலதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான "அர்னோட் வேன் டோர்ன்

Tuesday, 22 January 2013

சவூதி அரேபியா பற்றி அறிந்ததும் அறியாதததும்


தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம்இருக்கிறது.
அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.

சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.

பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.

*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை( world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.

*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய்( Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.

*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜிர்யாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.

*Abraj al bait towers இந்த ஹோட்டல்mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.

*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது.இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்கமுடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும்.http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers

*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.

*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.

*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university.

*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லுமளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.

*முகம்மத் பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.

*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.

*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.

*சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.

*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.

*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது.

*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.
*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.

*மேற்கூறிய கடைசி மூன்று விடயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.

*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.
ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.

*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.

*Saudi ARAMCO தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam ல் உள்ளது.

*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவூதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.

*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.

*Mono Ethlene Glycol உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள SABIC தான் வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய கம்பெனியாக உள்ளது.

நன்றி: lakshmanaperumal

Sunday, 30 December 2012

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்



அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்.

தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்! தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்.

“ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:

“ சரி போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”

Tuesday, 13 November 2012

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம்


இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் மாதத்தோடு மலர்கின்றது. இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள்

ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத் “துறந்து செல்லல்” என்ற பொருளைத் தாங்கி நிற்கும். இந்த ஹிஜ்ரத் சன்மார்க்க வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தமது நாட்டையும், வீட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவம்.

“ஒரு முஸ்லிமுக்கு தனது உயிரிலும் மேலானது அவருடைய இஸ்லாமிய வாழ்வுதான். அவ் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லாவித தியாகங்களுக்கும் ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார்” இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.

ஹிஜ்ரத் பயண வேகத்தின் இந்த நீண்ட நெடிய கால ஓட்டத்தில் இவ்வையகத்தில் இஸ்லாம் நிகழ்த்திய அற்புதங்கள், புரட்சிகள், கற்பித்த பாடங்கள் எத்தனை எத்தனை. பெருமானார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கர்பலா களத்திலே சிந்திய இரத்தமும் இந்தப் பயண வேகத்தில் ஒரு பகுதிதான்.
இன்றும் அந்தப் பயணவேகம் தொடர்கிறது. அசத்தியத்திற்கு அடிபணியாத அவர்களின் நெஞ்சுறுதி இவ் அகிலத்தை செந்நிறமாக்கிக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை சிந்திக்க வைக்கிறது.

இஸ்லாமிய மாதங்களில் 4 மாதங்களை அல்லாஹுத்தஆலா புனிதமான மாதங்களாக ஆக்கியுள்ளான். ரஜப், துல்கஃதா, துல் ஹஜ் ஆகிய 3 உடன் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதமும். ஆனால் இந்த 4 மாதங்களில் முஹர்ரம் மாதத்துக்கு மட்டும்தான் “புனிதம்” என்ற பொருள் தங்கியுள்ளது. அது ஏன் என்று நோக்கினால் உலகில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் இம் மாதத்தில் 10 ஆம் நாளில் தான் நிகழ்ந்துள்ளது.
வானங்கள், பூமிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றை படைத்தது இந்நாளில் தான். இறை அறிவிப்புப் பலகை, இறை எழுதுகோல் ஆகியவற்றை படைத்ததும் இந்நாளில் தான். ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தை படைத்ததும், அதிலே இவ்விருவரையும் நுழைய வைத்ததும் இந்நாளில் தான்.

முஹம்மது நபீ (ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனா வந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்கள் ஆசூ;றா பத்தாம்நாள் நோன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்களும், தோழர்களும் பிர்அவ்ன் எனும் சர்வாதிகாரியையும், அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாள் என்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாள் என்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்றும் நவின்றார்கள்.

இதைக் கேட்ட நபீ நாயகம் (எனது சகோதரர்) மூஸாவுக்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள்நோன்பு நோற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்ததுடன். தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்புநோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.

நபீகள் (ஸல்) ஒன்பதான் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப் பட்டுள்ளது.

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிருஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தை பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கும் தோறும் துக்கம் ஏற்படுகிறது.

கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹாதத்தின் பானத்தைப் பருகினார்கள். யkதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.

\இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது ஆதரவைக் கொடுக்க முன் வரவில்லை.
“அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் “ஷஹாதத்” சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் 10 ஆம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இதுதான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனித குல சுபீட்சத்துக்கும், நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும் சுருங்கக் கூறின்
  • அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
  • அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
  • அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
  • அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
  • அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
  • அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
  • அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
  • அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
  • அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
  • அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
  • தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
  • அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
  • அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
  • அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.

முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?


முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?

இஸ்லாமிய வரலாற்றில் நேர் எதிரான இரு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது நமது கவனத்திற்குரியது.

முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக்கூடிய மிக மோசமான செயலில் இறங்குவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம்,

இதே நாளில்தான் நபி(ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்படுகிறார்கள். அது மிக சோகமான ஒரு சம்பவம்தான். இந்நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் இதைவிட முக்கியமான ஒரு சம்பவம் நடக்கிறது. ஃபிர்அவ்ன் என்ற கொடியவனுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனு இஸ்ரவேலர்களைக் கூட்டிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். விபரம் அறிந்த ஃபிர்அவ்ன் தம் படையுடன் பின்தொடர்ந்து மூஸா(அலை) அவர்களை முற்றுகையிடுகிறான். அந்தச் சந்தர்ப்த்தில் உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் ஒன்று நிகழ்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இரண்டு மலைகள் போல் எழுந்து நின்று விடுகின்றது. அந்த வழியே மூஸா(அலை) அவர்களுக்கு வழிவிட்ட அந்தக் கடல், ஃபிர்அவ்னும் அவனுடைய சேனைகளும் உள்ளே இறங்கியதும் அவர்களைச் சுருட்டி விழுங்கி விடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின்படி நடக்கின்றன.

இந்த நாளைப் புகழந்து நன்றி செலுத்தும்விதமாக நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொன்ன விவரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த இரு நிகழ்ச்சிகளை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?

இந்த இரண்டு சம்பவங்களில் அன்றைய நிகழ்வையும் இன்றைய நிகழ்ச்சிகளையும் அலசுகின்றது கட்டுரை.

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றாலே பல்வேறு அனர்த்தங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள மூடர்கள் பலரால் அரங்கேற்றப்படுவதை பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் முஸ்லிம்களில் ஷியாக் கொள்கைக்காரர்கள்.

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;.

அன்றைய தினம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹுஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள். நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை இந்த பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள்.

ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்கள் ரொம்ப அதிகம்.

முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும்.

உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.

இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை முஸ்லிம்கள் செய்கிறார்கள்.

மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன

ஷியா பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களில் எதுவொன்றும் இஸ்லாத்தை சார்ந்ததல்ல. போட்டோக்களில் காணப்படும் இந்த இரத்தக் காணிக்கை மடமையின் உச்சக்கட்டமாகும். மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இந்த கொடுமை எல்லைக் கடந்த அறியாமை என்பது தெரியும். இந்தக் காரியங்களில் ஈடுபடுபவர்கள், இந்தக் காரியத்தை செய்யும் படி தூண்டுபவர்கள் படிப்பறிவற்ற, சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, வரலாற்று ஆய்வற்ற மிகக் கீழான அடையாளங்களாவார்கள்.
---------------------------------------------------------------------------
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு - சிறப்பிப்பது எப்படி?

“முஹர்ரம்”

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.

சொற் பொருள்”

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம் இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.

''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)

அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட முஹம்மத் (ஸல்), ”அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.                        (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ§ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ§ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஹுஸைன்(ரலி) அவர்களை விட சிறந்தவர் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள். சிறப்பு அடிப்படையில் பார்ப்பதாக இருந்தாலும் ஹுசைன் அவர்களின் சம்பவத்தை விட மதிப்பு மிக்க மூஸா அவர்களை முன்னிருத்தி அவர்களை பாதுகாத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பிருப்பதே சிறந்ததாகும்.

மூஸா என்ற இறைத்தூதர் மிகப் பெரும் அதிசயத்தால் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியான சம்பவமும், முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை 'கர்பலா'வில் கொல்லப்பட்ட துக்க சம்பவமும் பல நூற்றாண்டு வித்தியாசத்தில் ஒரே நாளில் நடக்கின்றது.

துயரமான சம்பவம் நடந்ததால் அந்த நாளை துக்க நாளாக முடிவு செய்யலாமா..?

நாளுக்குச் சக்தி இருந்து அன்றைய தினம் நல்ல நாளாக இருந்தால் ஹுசைன்(ரலி) அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த நாள் கெட்ட நாளாக இருந்தால் மூஸா(அலை) அவர்கள் தோல்வி அடைந்திருக்க வேண்டும். இது ஒன்றும் நடக்கவில்லை.

இறைவன் காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு சுழற்றுகிறான்;.

(இன்பம், துன்பம், சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் - அல்குர்ஆன்: (3:140)
யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது, யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,
ஒவ்வொரு நாளும் அவன் காரியத்திலே இருக்கிறான் - அல்குர்ஆன்: (55:29)

இத்தகைய கருத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால் காலத்தையோ, நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.

நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும். அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால்,

(முஸ்லிம்களே..) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள் நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான் இறைவனின் நல்லாசியுண்டு -
அல்குர்ஆன்: (2:155,156) 
காலத்தைக் குறைகூறி, ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.

ஜோதி என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்

புதுக்கோட்டையில் ஜோதி என்ற சகோதரர்இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

புதுக்கோட்டையில் 09.08.12 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜோதி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அவருக்கு பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரான் ஒன்று கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


Saturday, 3 November 2012

ஜம் ஜம் தண்ணீர் பற்றி இஸ்லாம்



Photo: ஜம் ஜம்  தண்ணீர் பற்றி இஸ்லாம் 


மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.


இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜசகல்லாஹ் கைர் சகோ 
முஹம்மது இக்பால் ,
அமீர்,  இஸ்லாமிய தவாஹ் குழுமம்.


Join with us our Islamic Dawah Group : http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend/likes

Join via Mobile : http://m.facebook.com/a/profile.php?fan&id=330540656965013&gfid=AQBUn7a3fLJdzZtd



தொடர்பு உடையவை :

இரக்கம் கொள்ளுதளின் அவசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=474289869256757

ஆரோக்கியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=442586625760415

தீய குணங்கள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=440747249277686

நற்குணம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=440299172655827

உறவினர்கள் பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=436121243073620

திருமணம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=428787667140311

கற்பு பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=426250134060731

கோபதை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=425646767454401

உலக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=417280944957650

புறம் பேசுவதை பற்றி இஸ்லாம்!!! : http://www.facebook.com/photo.php?fbid=414017775283967

தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=413330282019383

காதல் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=411782918840786

நோயின் ரகசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410893568929721

கணவனின் கடமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410120679007010

பதவியை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=409223415763403

வட்டியின் தீமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=406637962688615

இஸ்லாம் பார்வையில் நட்பு: http://www.facebook.com/photo.php?fbid=404734932878918

பில்லி சூனியம் செய்வினை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=402084653143946

வறுமையை ஒழிப்பதை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=399031366782608

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=398326716853073

ஹலாலான உழைப்பின் சிறப்பு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=396731247012620

சொத்துப் பங்கீடு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=381023331916745

அடிமைகள் பற்றி இஸ்லாம்
இஸ்லாம் அடிமைகளை கொடுமைபடுத்த சொல்கிறதா? : http://www.facebook.com/photo.php?fbid=380474561971622

பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=368359163183162

இஸ்லாத்தின் பார்வையில் கிரிக்கெட் : http://www.facebook.com/photo.php?fbid=354585167893895

விபச்சாரம் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=352137724805306

சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ??? : http://www.facebook.com/photo.php?fbid=351434681542277

உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=343666425652436

Verified:::





மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டா

லும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.


இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

Wednesday, 10 October 2012

Old Japanese man reverted to Islam in his last days, Allahu Akbar...

Old Japanese man reverted to Islam in his last days,
Allahu Akbar...
May Allah make our end in a good deed,Aameen...




Wednesday, 12 September 2012

இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ரேகா மற்றும் சகோதரி பூஜா


தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  குவைத் மண்டல தஃவா பணி மறுமை ஒன்றே இலக்காக வீரியமாக செயட்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் ,  ஹதியா கிளை மற்றும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  இலங்கை சகோதரர்கள் தஃவா பணியில்  இலங்கை மட்டக்களப்பு ஊரணியை பிறப்பிடமாக கொண்ட சகோதரி சின்னத்தம்பி ரேகா ,மற்றும் நேபால் நாட்டை சேர்ந்த சகோதரி பூஜா அவர்களும் தனது இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். சகோதரி ரேகா அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்களின் அல்குரான் தமிழாக்கம் கொடுக்கப்பட்டது .சகோதரி ரேகா தனது பெயரை நஸ்மியா எனவும் பூஜா அவர்கள் தனது பெயரை மரியம் எனவும் மாற்றிக்கொண்டனர். அல்லாஹு அக்பர் !

Thursday, 6 September 2012

Wednesday, 5 September 2012

பெர்முடா முக்கோணம்


வியாழன், 16 ஆகஸ்ட், 2012


பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்) - Bermuda Triangle

உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..

இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..

ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது.... ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..

இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..
இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...

இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..




இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...

ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....

அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...
NANRI:faris fana

Wednesday, 15 August 2012

இஸ்லாத்தின் வளர்ச்சியை கண்டு நடுங்கும் சீனா – முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமை..! உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம். சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது. பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது. ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு. எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை. இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே! இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை




உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.
சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர்.
அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.
ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.
எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை.
இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே!
இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது. குழந்தைகளில் கல்விக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு கூட செல்லும் நாம், மார்க்கத்தை கற்று கொடுப்பதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். மதரஸாக்களில் செல்லாத இவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சியும், சுயநலமும், கோழைத்தனமும் தான் மிஞ்சியிருக்கும். இத்தகைய ஒரு தலைமுறையால் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ எவ்வித பலனும் இல்லை.
இளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வார்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே உள்ளோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கு நமது குழந்தைகளின் கைகளில் குர்ஆன் தவழ வேண்டும். இதனை அடைவதற்கு மூடப்பட்ட மதரஸாக்கள் திறக்கப்பட வேண்டும்.