Wednesday, 2 January 2013

IS THE BIBLE TRUE ?






பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்

-ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)

உடல் பலஹீனமான முதியவர் ஒருவர் சிறைச்சாலையில், குளிரில் நடுநடுங்க அமர்ந்து இருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.

“ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)

அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிறிஸ்த்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .

ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.

“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிறிஸ்த்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜெட்(Forged)” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.

மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.

இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.

இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?

எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “”ஃபோர்ஜ்ட்” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!

வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.

வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.

அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,

தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால்எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.

முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் ஜான் (யோவான்) மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

இதற்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.

பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?

புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.

அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.

அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.

இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.

முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.

மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார். இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.

ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?

பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறிஸ்த்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் .
கிறிஸ்த்துவதேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.
தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொருகிறிஸ்த்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.

ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.

இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறிஸ்த்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !

அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.

ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.

விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்கு மாற்றமானது.

“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிறிஸ்த்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !

பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!

“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும்!!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.

ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !

பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்த் வர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.

ஆனாலும், அதை பல கிறிஸ்த்தவ சகோதரர்கள் கிறிஸ்த்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.

அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!

நன்றி
tntj,net


Sunday, 30 December 2012

இஸ்லாத்தை நோக்கி ....இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் :



{{{{{ இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காமல் மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களில் சிலருக்கு..
மாற்று மதத்தைச் சார்ந்த ஒருவர் குர்ஆனை முறையாக படித்ததின் விளைவாக அறிவுரை சொல்வதை கேளீர் !!!}}}}}}}


இஸ்லாத்தை நோக்கி ....இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் :

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார்.

இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது:

குர்ஆனை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது.

இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரின் மைத்துனி லோரன் பூத் 2010ம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே!!!· ·

ல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.............!! 

இஸ்லாத்தை நோக்கி திரும்பியது டோனி பிளேரின் பார்வை.............!!


மேலும் குர்ஆனையும் புரட்ட தொடங்கிவிட்டார் டோனிபிளேர்................!





இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இஸ்லாத்தை நோக்கி தமது பார்வையை

திருப்பியுள்ளார்,

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா சபை ஐரோப்பிய தூதராகவும்

செயல்பட்டு வருகிறார்,

அடிப்படையில் கிறித்தவரான இவர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் இஸ்லாத்தை நோக்கி அவர் தனது கவனத்தை திருப்பியுள்ளார், தற்போது

அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார்,

இது குறித்து டோனி பிளேர் கூறியதாவது :-

குர்ஆன் படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன், சர்வதேச அளவில் செயல்பட

நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும், அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன்,

 உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குர்ஆனின் போதனைகள் உதவுகிறது,

இது ஒரு சீர்திருத்த புத்தகம், இதில் எல்லா விஷயங்களும் உள்ளன, அறிவியலை போற்றி,

 மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது என்றும் டோனி பிளேர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரின் மைத்துனி லோரன் பூத் 2010 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியது

அனைவரும் அறிந்ததே....

இந்நிலையில் இவரின் கவனமும் இஸ்லாத்தை நோக்கி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

அல்ஹம்துலில்லாஹ்...............!!
 —

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்



அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்.

தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்! தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்.

“ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:

“ சரி போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”