Thursday, 30 August 2012

விருத்த சேதனம் செய்து கொள்வது பற்றிய தகவல் !!!! (circumcision)


மோடி மஸ்தான் ஆட்சியும் கோயபல்ஸ் ஊடகங்களும் !!!


கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள் . கோபத்தை எப்படி குறைப்பது ?


சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள் ...... !!!!!


சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள் ...... !!!!!

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.
பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று.

துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் என ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜி. முரளி கிர்ஷ்ணன் தலைமையிலான மாணவர்குழு மேற்கொண்ட ஆய்வில் துளசி இலையில் உள்ள ஆசிமம் சாங்க்டம் என்ற சத்து சர்க்கரை நோயை போக்கிவிடும் என கண்டுபித்து ஆய்வு பூர்வமாக நிருபித்துள்ளனர்.

இந்த குழு முதலில் எலிகளை கொண்டு அதற்க்கு ஸ்ரேப்டோசிசின் என்ற ரசாயனத்தை செலுத்தி அதனுடைய சர்க்கரை அளவை அதிகபடுத்தி பின்ன இந்ததுளசி இலைகளில் கண்டு பிடித்த் மருந்தை ஒரு நாளுக்கு ஒரு முறை என 30 நாளும் செலுத்தி வந்தனர். முடிவில் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் உறுப்புகளான கிட்னி, மற்றும் லிவ்வர் பாதிக்கப்படாமல் பாத்காக்கப்பட்டதையும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம்த்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு

இன்னும் நிறைய மருத்துவம் உடையது துளசி . .....

Wednesday, 29 August 2012

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!




பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்

கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!சிலருக்கு தயிர்

இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும்

தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு) தயிர் நம் உடலுக்கு ஒரு அரு

மருந்து.குளிர்ச்சியைத் தரும்.நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.பால்

சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.


ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்


பட்டிருக்கும்.

பாலில் LACTO இருக்கிறது.தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண

சக்தியை தூண்டிவயிற்றின்   உபாதைகளை சரி செய்கிறது.வயிறு சரியில்லாத

பொழுது வெறும் தயிர் சோறுமட்டுமாவது உணவாக உட்கொள்ளச

சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண

 சக்தியைகுறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுதுவெந்தயம் + தயிர் 1 கப்

சாப்பிட்டால் வயிற்றுபொருமல்

அடங்கும்.பாலைதிரித்து உருவாக்க படுவதுதான் பனீர் (பனீரைதனியாக எடுத்த

பிறகு இருக்கும்whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த



உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது

வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா

சாப்பிடுகிறோம்.மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்குதயிர்

மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர்

வழங்குகிறது.தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்

சத்துகளும்அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற

வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.தயிரில் உள்ள புரோட்டீன்,

 பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை

 உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில்

செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும்

நன்மைகள் சில

1பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண



சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம்


 நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும்


தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு 


உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் 

பழ‌‌ச்சாறு‌க்குஇணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.



4.மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த

 மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர்,



மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப் படும்.மஞ்சள் 

காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து 

உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.


6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் 


எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7.சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை பா‌தி‌த்த இட‌த்‌தில் 

க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு 

அருமையான மருந்தாகச் செயல்படுகிறது தயிர் சோறு உண்ண 

 பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக் 

கொள்ளலாம்.


1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி  உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள்  உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.(அதிகம் வேண்டாம்,

 கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து 

நீர் மோராக்கி குடிக்கலாம்.



ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை !!

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை !!


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.


இரத்தம் சுத்தமடைய :-

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு :-

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட :-

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

Sunday, 26 August 2012

1500வருடங்கள் பழமைவாய்ந்த இரகசியபைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது




இந்நூலில் நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு கடவுள் அல்ல, மாறாக மனிதர் என்றே இன்ஜீல் வேதம் கருது
வதாக இஸ்லாமியநம்பிக்கை கூறுகின்றதுடன்,இப்பழமைவாய்ந்த நூலானது திருத்துவக் கொள்கையை முற்றாக நிராகரிப்பதுடன் நபி(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி இயேசு முன்னறிவிப்புசெய்வதாகவும் துருக்கியின் கலாச்சார மற்றும் உல்லாசத்துறை அமைச்சரான எட்துகுரல் குனாய் செய்தி நிறுவனமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.1500 வருடங்கள் பழமைவாய்ந்த இவ்வேதநூலானது பர்னாபஸ் கிறிஸ்தவநூலாக இருக்கும் என நம்பப்படுகின்றதுடன்,முஸ்லிம்களால் இது உண்மையான இன்ஜீல் வேதம் என நம்பப்படுகின்றது. சென்.பர்னாபஸ் சைப்ரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஸ்தகபராக பராம்பரிய முறையில் அடையாளப் படுத்தப்படுகின்றார்.
விலங்குகளின் தோலில் எழுதப்பட்டுள்ள இப்பைபிளானது உண்மையான பதிப்பாக இருக்க முடியமானதுடன், இஸ்லாத்தோடு இது உடன்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500வருடங்கள்

பழமைவாயந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தலைநகர் அங்காரவில் அமைந்திருக்கும் அங்காரா இனஅமைப்பியல் அருங்காட்சியகத்தில் இப்பைளிலானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தங்கத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள பழமைவாயந்த பைபிளின் பெறுமதி 28மில்லியன் அமெரிக்கடொலருக்கும் (40மில்லியன் லீரா) 
அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.