Saturday, 17 May 2014

கலையுலகின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் இஸ்லாமிய பிரச்சாரகராக மாறிய அதிசயம்



கலையுலகின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்
இஸ்லாமிய பிரச்சாரகராக மாறிய அதிசயம்

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரியின் பெயர் ஹலா இவர் எகிப்த் கலை உலகின் கனவு கன்னிகளில் ஒருவராக திகழ்ந்தவர்

அரை நிர்வாண ஆடை அணிந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கொள்பவராகவும் விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்து ஆண்களை கவர்ந்து இழுப்பவராகவும் திகழ்ந்தவர்

கலையுலகில் கொடிகட்டி பறந்த இவர் திடீர் என்று காணமல் போனார் காணமல் போன தனது கனவு கன்னியை எகிப்தின் கலை உலகம் வலை போட்டு தேடியது அவரை பிடிக்க முடியவில்லை

அவர் தனது தொடர்ப்பு எண்கள் அனைத்தையுயே மாற்றியிருந்தார் எகிப்தை விட்டும் வெளியேறி இருந்தார்

சில வருடங்களுக்கு பிறகு அவர் ஹிஜாப் அணிந்த நிலையில் எகிப்துக்கு திரும்பியிருக்கிறார்

அரை நிர்வாண கோலத்தில் அவரை பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர் ஹிஜாப் அணிய தொடங்கியதை கண்டு அதிசயித்தனர்

அவர் ஹிஜாப் அணிந்ததோடு மட்டும் இல்லாமல் இனி தாம் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகராக செயல் படபோவதாகவும் அறிவித்துள்ளார்

பணத்திர்க்காக கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்சிசிகளில் பங்கெடுத்த அவர் இனிவரும் காலங்களில் எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்

அவரின் இந்த திடீர் மனமாற்றத்திர்கு காரணம் அவரை கரம் பிடித்த கணவரே

ஆம் இத்தாலியை சார்ந்த மார்க்க பற்று நிறைந்த ஒரு இளைஞர் அவரை திருமணம் செய்து கொண்டார் அதனை தொடர்ந்துதான் சகோதரி ஹலா வின் வாழ்வில் அதிரடி மாற்றங்கள் தோன்றியது

தவறான பாதையில் பயணிக்கும் மனைவியையும் நல்ல கணவனால் சரியான பாதைக்கு அழைத்து வரமுடியும் என்பதர்கு சகோதரி ஹலாவின் வாழ்கை சிறந்த எடுத்து காட்டாக அமைகிறது

பெண் குழந்தைகளுக்கு தந்தைமார்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!


நிறைய நேரங்களில் மகளை அம்மாவின்  பொறுப்பில் விட்டு விடுகின்றோம் வயது  வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்!என்று கூறுவார்கள்.அம்மாவுடன்  கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கி விடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே தந்தைமார்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு தந்தைமார்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1.நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர்கள் செலவிடும் நேரம் குறைவு.ஆங்கிலத்தில் குவாலிடிடைம் என்று சொல்லுவார்களே அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.
நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது  முக்கியம் அல்லவா?

3.கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4.ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால்
பெண்களுக்கு ஏற்படும்பிரச்சினைளை விளக்குங்கள்.நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5.வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில்  என்னவாக விரும்புகிறார்?என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு 
உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6.கடை, ஷாப்பிங் என்று அழைத்துச் செல்லுங்கள்.பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள்ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7.பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. விதவிதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள்,எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்து கொள்ளட்டும்.

8.நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், மகளைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், மகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை  அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும்
மன உறுதியையும் கொடுக்கும்.

9.நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்

10.உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள்
எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள்,உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக  சொல்லுங்கள்.

11.புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்
படுத்துங்கள்.
புத்தகங்கள் படிக்கும்  பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள்.
நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

12.உடலளவிலும் மனதளவிலும்  பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக் கொடுங்கள்.

13.இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்
கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று
காத்திருக்கவும் கூடாது.வீட்டில் ஃபியூஸ் போடுவது,வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.

14.இறை வேதமாம் திருக்குர்ஆனை பொருளறிந்து ஓதும்பழக்கத்தை
ஏற்படுத்துங்கள். நபிமார்களின்; அவர்கள்தம் மனைவிமார்களின் மற்றும் ஸஹாபிப்பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்து கொள்ளும்படிச் செய்யுங்கள்.

15.இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

15 நாள் பிரச்சாரத்தால் 35 ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்


எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!     15 நாள் பிரச்சாரத்தால் 35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்.....!! எகிப்தை சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர்களின் குழு மாற்று மதத்தவரிடையே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நோக்கில் ஆப்பிரிக்க நாடுகளின் சில கிராமங்களை இலக்காக கொண்டு 15 நாள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர். எகிப்தை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் நஷாத் அஹ்மத், அஹ்மத் அப்து ரஹ்மான், உமர் சவுத், உள்ளிட்டோரோக்கு மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் தலைமை வகித்தார். இந்த குழு ஆப்பிரிக்க நாடுகளின் பல கிரமங்களை குறிவைத்து தீவிர இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொண்டது. இவர்களின் அயராத முயற்சிக்கு இறைவன் மிகப்பெரிய பலனை கொடுத்தான். அவர்களின் அந்த 15 நாள் பிரச்சாரத்தின் விளைவாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த 35 ஆயிரம் ஆப்பிரிக்கர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொண்டனர். சில கிராமங்கள் ஏதோ அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது போன்ற உணர்வோடு இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டது உண்மையில் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்லாத்தில் இணைந்த மக்களுக்கு தேவைப்படும் பள்ளிகள் மற்றும் மதரஸாக்களை கட்டுவதற்கு தேவையான நிலங்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் அந்த அறிஞர்கள் குழு செய்து கொடுத்தது. இஸ்லாத்தை ஒட்டு மொத்தமாக அறவணைத்து கொண்ட ஒரு கிரமத்தின் பிள்ளைகளோடு மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் இருப்பதை தான் படத்தில் பார்க்கிறீர்கள். நன்றி : சையது அலி ஃபைஜி

வரலாறு புகட்டும் பாடம்


உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அலைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.

ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம்  ரோம பேரரசினிடம்அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.

நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.என்ன அது?

நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.

அவன் கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.

இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.

“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?

“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.

ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மதுகற்றுத் தந்த மார்க்கத்திலிருந்து மாறமாட்டேன்” என்றார்.

இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்கு தயார்.

வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.

சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.

சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.

இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.

எவ்வாறு ?

சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.

குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி குலையாமல் உரக்க மறுத்தார் உன்னதர்.

எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.

தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர்களை கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.

இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.

எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.

சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

இதனை எதிர் பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மகிழ்ச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?

“நிச்சயமாக இல்லை”

நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?

அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.

“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கள் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !

கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.

கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அற்பணிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.

சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.

இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிங்களை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.

வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.

உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.

இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்...!(மருத்துவ மனையில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவம்)



மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்...!(மருத்துவ மனையில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவம்)

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி,"பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.

"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.

"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

இஸ்லாத்திற்குச் சதி செய்ய வந்தவர் அழகு விதி கண்டார்; இகழ வந்தவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ்ந்தார்;




அமெரிக்காவைச் சேர்ந்த்த முன்னாள் கிறிஸ்தவரான சரிபா கார்லோ அவர்கள் அமெரிக்காவில் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இயங்கும் ஒரு குழுவில் சேர்ந்து அவ்வென்னத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அல்லாஹ்வோ அதை விட மிக சிறந்த திட்டம் வைத்திருந்தான். என்கிறார்

கார்லோ.

இஸ்லாத்தை சதி செய்ய வந்த அவர் அழகு விதி கண்டார். இகழ வந்ததவர் அல்லாஹ்வை புகழ்ந்தது மகிழ்ந்தார். 

இஸ்லாத்தை சதி செய்ய வந்தது தன்னை சரி செய்து கொண்டார். நெஞ்சுருகினார். இஸ்லாத்துடன் நெருக்கமாகினார். இன்னும் இருக்கமாகினார்.

சாந்தி பெற்று புதிய பாதையில் இப்போது புறப்பட்டு செல்கிறார். இச்சுவையான கதையை அவரே சொல்கிறார்.

நான் எப்படி இஸ்லாத்தில் நுழைந்தேன் என்பது பல கபட திட்டத்தின் ஒரு கதை.நான் திட்டம் தீட்டினேன். என்னுடன் இருந்த குழுவும் திட்டம் தீட்டியது. திட்டம் தீட்டுவதில் அல்லா மிக சிறந்த்தவனாக இருக்கிறான். 

எனது பதின் பருவ காலத்தில் ஒரு நாள் நயவஞ்சக திட்டங்களை தீட்டும் ஒரு குழுவின் பார்வை என் மீது விழுந்த்தது.அவர்கள் அமெரிக்க அரச பதவிகளில் உள்ளவர்கள்.இக்குளுவோ தளர்வான தனிநபர்கள் கொண்ட ஒரு கூட்டனையாகத்தான் இருந்த்தது. அவர்களிடம் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. 
நான் அறிந்த்த மட்டும் இது ஒரு அரசாங்க சார்பான ஒரு குழுவாக தெரிய வில்லை.தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி தமது காரியங்களை முன்னெடுக்கவே அமெரிக்க அரசாங்கதிதில் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது. 
எனது பேச்சில் உள்ள தெளிவையும் எனது இயல்பில் உள்ள உந்துதல் உணர்வையும் பெண்கள் உரிமைகள் பரிந்த்துரைப்பதில் நான் காட்டும் அக்கறையையும் கண்ட இக்குழுவில் உள்ள ஒருவர் என்னை அணுகி மத்திய கிழக்கை மையமாகக்கொண்ட சர்வதேச கல்வியை நான் கற்று தேர்ந்ததால் எனக்கு எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை பெற்றுத்தருவதாக திடமானதொரு வாக்குறுதியை வழங்கினார்.

அவர் நான் எகிப்துக்கு புக வேண்டும் என் நிலையை பயன்படுத்தி அங்குள்ள முஸ்லிம் பெண்கலுடன் பேசி பழகவும் மற்றும் அனுபவமற்ற பெண்கள் உரிமைகள் இயக்கங்களை ஊக்குவித்து அதனூடாக இக்குழுவின் திட்டங்களை அமுல் படுத்திடவும் நினைத்தார் 
இது ஒரு நல்ல யோசனையாக எனக்கு தோன்றியது. முஸ்லிம் பெண்களுடன் இருபதாம நூற்றாண்டின் சுதந்த்திற ஒளியைக்கான வேண்டும் என்ற அவா எனக்குள் இருந்தது. காரணம் முஸ்லிம் பெண்களை ஒரு நலிவுற்ற ஒடுக்கப்பட்ட ஒரு குழுவாகவே நான் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். 

இதன் நோக்கத்தை அடைவதற்கான முதல் மைல் கற்களாக கல்லூரிக்கு சென்று குரான் ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வராலாறு என்பன கற்றேன். வார்த்தைகளை தெளிவு படுத்திக்கூறி வசியப்படுத்தும் உத்தியையும் கற்றுக்கொண்டேன். திரிவு படுத்தும் என் பணிக்கு என் புலனும் சொன்னது. என் மனதை ஒரு பீதியும் ஆட்கொண்டிருந்தது.இஸ்லாத்திற்கெதிராக செயற்படவேண்டும் என்ற குறிக்கோளுடன் நான் கிறித்துவத்தை பற்றி நன்றாக தெரிந்தது கொள்ள வகுப்புகள்யெடுக்க பட்டேன் . ஹாவேட் பல்கலைக்கழகத்தில் இறையியல் முனைவர் பட்டம் பெற்றவரும் புகழ் பெற்றவருமான ஒரு பேராசிரியரிடமே இதைக்கற்க வேண்டும் என முடிவு செய்தேன்
.
நான் விரும்பியதைபோல் நல்ல ஒரு ஆசிரியர்அமைந்தார். வகுப்புகள் நடந்தேறின. நான் படிக்கும் பாடங்களுக்கும் எனது திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தததை ஒரு கட்டத்தில் என்னால் உணர முடிந்ததது. கடைசியில் இந்த பேராசிரியர் ஒரு யுனிடீரியன் கிறிஸ்தவர் என்பதை அறிந்தது கொண்டேன். அவர் ட்ரினிடி கொள்கையை அடியோடு மறுப்பவர். அவர் பைபிளில் மனிதர்கள் சிரழிக்க பட்டவைகளையும் நீர்த்தவைகளையும் நீக்கப்பட்டவைகளையும் கலப்படம் செய்தவற்றையும் அவை எவாறு வரலாற்று நிகழ்வுகளால் வடிவம் கொடுத்து மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சான்றுகளுடன் எடுத்து விளக்கினார். 

இந்த கல்வி முடிவடைந்த போது இத்தனை கால எனது நம்பிக்கை நலிவடைய ஆரம்பித்தது. நூற்றுக்கு நூறு உண்மையானது என நம்பிய எனது மதம் மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை எனது கல்வி சந்தேக மின்றி நிரூபித்து காட்டியது. 

சதித்திட்டங்கள் சந்தேகத்திற்குள்ளாயின. மணம் மார்க்கமின்றி வெருமையாகியது. ஏமாற்றப்பட்ட உணர்வுடன் ஊமையாகியது.நான் சோர்ந்து போனேன். இந்நிலை என்னை சிறுமை ஆக்கியது. வெறுமை போக்க உள்ளம் உண்மையைதேடியது. 

ஆனால் இஸ்லாம் உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்குள் இருக்கவே இல்லை. காலம் கடந்துகொண்டே இருந்தது. எனது ஆய்வும் தொடந்து கொண்டே இருந்தது. கற்றலில் மூன்று ஆண்டுகள் கடந்தன. அத்துடன் முஸ்லிம்களிடம் அவர்களும் நம்பிக்கை பற்றி அடிகடி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படி கேட்ட ஒருவர் முஸ்லிம் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான அப்துலாஹ் ஆவார். 

மார்க்கம் பற்றிய தேடலில் எனக்குள்ள ஆர்வத்தை கண்ட அவர் அவரின் சொந்தத அலுவலை போன்று உற்சாகத்துடன் இஸ்லாம் பற்றிய ஒரு நல்ல அறிமுக அறிவை எனக்கு ஊட்டினார். நானும் அவரும் சந்ததிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த பணியை அவர் செய்தார். இது நான் செல்ல இருந்த சதி வழியை துவக்கத்திலேயே துவம்சம் செய்தது. 

அல்லா அவனின் அருட்கொடைகளை அந்த சகோதரனுக்கு அதிகரிக்கச் செய்வானாக.

ஒருநாள் இவர் என்னை தொடர்பு கொண்டு முஸ்லிம் குழு ஒன்று நமது நகரத்திற்கு வரவுள்ளதாகவும் அவர்களை நான் சந்ததிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனது மார்க்கத்தின் மீதுள்ள என் நம்பிக்கை சிதறுண்டு போய் நான் வழி தடுமாறி நின்றதாலும் சகோதரரின் தக்வாவில் உண்மை நிறைந்திருப்பதாலும் அவரின் அழைப்பை விருப்போடு ஏற்றுக்கொண்டேன். எனது சந்திப்புக்கு இஷா தொழுகையின் பின் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

என்னை அழைத்துச்சென்றார்கள் அங்கே சில ஆண்கள் அமர்ந்த்திருந்தனர். நான் உட்கார ஓர் இடமும் அமைத்திருந்தனர். நான் அங்கே முதிர்ச்சியான பண்புள்ள ஓர் பாகிஸ்தான் சகோதரர் முன் நேருக்கு நேராக அமர்ந்திருந்தேன். அவரிடம் கிறிஸ்தவம் பற்றிய ஆழமான அறிவும் தெளிவும் இருப்பதை அறிந்தது கொண்டேன் .நானும் அவரும் பைபிளிலும் மற்றும் குரானிலும் உள்ள பகுதிகளைப் பற்றி கலந்துரையடினோம். வாதிட்டோம். எமது கருத்துப்பதிவுகள் சுபுஹு தொழுகை வரைக்கும் இழுத்துச்சென்றது.

என்னை இந்த மகான் இஸ்லாத்துக்குள் அழைத்ததும் எனக்குள் ஒரு வித விசை அலுத்தப்பட்டதுபோல் உடல் முழுவதும் வெளிச்சம் பரவியது. அவரின் அழைப்பு உண்மை என்றது. இரும்புத்துகல்களை இழுக்கும் காந்த்தம் போல் சிந்தனைகள் எல்லாம் உள்ளத்தில் சங்கமமாகி தெளிவாகின. உண்மை தெளிவாயின இறுதியில் இறைவனின் இஷ்டம் முடிவானது.

எல்லாம் வல்ல அல்லா என் உள்ள கதவை திறந்தான்.ஆங்கிலத்திலும் அராபியிலும் சஹாதாவை சொல்லிதந்தார். ஓர் அழகிய விசித்திர உணர்வு என்னுள் ஊர்ந்துகொண்டிருந்தது. வாழ்க்கையில் முதன் முறையில் இன்றுதான் மூச்சு விடுவதைப்போல மூச்சு முட்டி திணறியது.

அல்ஹம்துலில்லாஹ் அல்லா எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை தந்த்திருக்கிறான்.

எனது பிரார்த்தனை நாம் எல்லோரும் மரணிக்கும் வரைக்கும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க வேண்டும் என்பதே...

ஆமீன்

Hollywood நடிகை Sara Bokker என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .



நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை 
Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்...
நான் நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்

Rebecca Minor,converted to Islam



Rebecca Minor, 28, of West Hartford, Conn., converted to Islam five years ago. Wearing a hijab "reminds me to be a good person," she said.

Accusations are 'harsh'

Women convert for a wide range of reasons - spiritual, intellectual and romantic - says Yvonne Haddad, a professor of the history of Islam and Christian-Muslim relations at Georgetown University.

"Islam is attractive to women that the feminist movement left behind," says Haddad, who co-authored a 2006 book, "Muslim Women in America: The Challenge of Islamic Identity Today."

Women like Lindsey Faraj, 26, of Charlotte, N.C., say that wearing a headscarf and other traditional Islamic garb in public often leads people to assume she sacrificed her American life to please a man.

"'You must have converted in order to marry him,' I hear it all the time," says Faraj, who actually converted simultaneously with her husband, Wathek Faraj, who is from Damascus, about four years ago.

She's also heard people say that her husband is allowed to beat her, that she's not free to get a divorce, that she and her two children, ages 4 months and 2, are subservient to the man. Such concepts are untrue, of course, she says.

டாக்டர் மதுமிதா இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் ,இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக ,பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.


ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப்பட்டது.

இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் “அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்” என்றார்.

ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் “இஸ்லாம் & முஸ்லிம்” என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான “என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?” என்பதை முன் வைத்தார்.

இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.

மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.

“மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்” என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.

குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது… சத்தியமே வென்றது” என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.

மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் ‘ஜம்மியத்துல் முஹ்ஸினாத்’ பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).

நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், “தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக”ப் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.

பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.

“வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை 

அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்” என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.

ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், “முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்” என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CrPC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

“முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது… சத்தியமே வென்றது” என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.

கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். “மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்” என்றார் டாக்டர் ஜைனப்.

ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டு பிடிப்பு




நபிகள் நாயகம் இறைவனின் உண்மை தூதர் என்பது மீண்டும் நிருபணம் அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டு பிடிப்பு
************************************
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும் விசயமாகும் சிறு நீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத்துவ குணம் இருக்கமுடியும்
இப்படி சிந்தித்தார் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்றபேராசிரியை

அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்தையல்ல இறைவனின்தூதுத்துவத்தை சுமந்து நிர்கும் முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள்
அப்படியானால் அந்த வார்த்தைக்குள் ஏதோ மர்மம் இரகசியம் புதையுண்டு கிடக்கிறது

அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என எண்ணிய அந்த பேராசிரியை 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறு நீர் பற்றிய தனது ஆய்வை தொடங்கினார்

பல கட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதிநவீன ஆய்வு கூடங்களிலும் தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையை அதிசயிக்க வைக்கும் நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்துவ விஞ்ஞானத்தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான உண்மையை கண்டறிந்தார்

ஆம் ஒட்டகத்தின் சிறு நீரில் புற்று நோயை தணிக்கும் குணபடுத்தும் மூலகூறுகள் உள்ளன அதிலிருந்து புற்று நோயை குணபடுத்துவதற்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார்

அதை பல் வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்க பட்ட சிலருக்கு அவர் தயாரித்த அந்த மாத்திரைகளை கொடுத்தபோது பாதிக்க பட்டவர்கள் அந்த நோயில் இருந்து குணமடைவதை கண்டிறிந்தார்

அவரது ஆய்வு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள் நாயகத்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது

30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டத்திய அந்த முடிவிர்க்காகன அடிப்படையை சாதரண வார்த்தைகளில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல முடிந்தது

விஞ்ஞானத்தின் விழிகள் இறுக கட்டபட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத்தால் அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்திற்கு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது

அவர் சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதற்கு வாய்பே இல்லை

எல்லாவற்றையும் அறிந்துள்ள இறைவனின் தூதராக அவர் இருந்த தால் அவரிடம்இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தையாக இருந்த்தால் இது சாத்தியமானது

எனவே இந்த நபி மொழியும் நபிகள் நாயகத்தின் தூதுத்துவத்தை அறுதியிட்டு உறுதி கூறும் அற்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது

இனி அந்த நபி மெழியை தருகிறேன்

عَنْ أَنَسٍ رَضِي اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ يَعْنِي الابِلَ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإبلَ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ . رواه البخاري

வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள் அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்து மாறு கூறினார்கள் அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர் முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர் அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம் புகாரி

குறிப்பு
நபிமொழியைமுழுமையாக கொடுத்திருந்தாலும் இந்த தலைப்புக்கு தேவையான பகுதியை மட்டும் மொழிபெயர்த்துள்ளோம்

Friday, 16 May 2014

இஸ்லாத்தை ஏற்ற பிரபல நடிகை வீணா மாலிக் !



இஸ்லாத்தை ஏற்ற பிரபல நடிகை வீணா மாலிக் ! இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்; முழு ஹிஜாபை கடைப்பிடிப்பேன் : மக்காவில் உறுதி !! பாகிஸ்தான் 'ஹிந்து' குடும்ப பின்னணியைக் கொண்ட, 29 வயதுடைய பிரபல நடிகை வீணா மாலிக், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தனது கணவர் அசத் பஷீர் கானுடன் உமரா செய்ய மக்கா வந்தள்ளார். முன்னதாக, தனது இந்த மனமாற்றத்துக்கும் நேர்வழிக்கும் காரணமான சர்வதேச இஸ்லாமிய அழைப்பாளர் 'மவுலானா தாரிக் ஜமீல்' அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். துபாய் வாழ் பாகிஸ்தானியரான அசத் பாஷீர்கான் என்பவரை, கடந்த வருடமே வீணா மாலிக் திருமணம் செய்துக் கொண்டாலும், இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக, முறைப்படி இப்போது தான், ஏற்றுள்ளார். அதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீணா மாலிக், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன், அது ஏற்கனவே போட்டுள்ள ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும் என்றார்.

இஸ்லாத்தை ஏற்ற 'நாவிதர்' நரசிங்க ராவ் : 'தாடி'க்கு'நோ ஷேவ்'


ஆந்திர மாநிலம் 'குரும்குடா'வை சேர்ந்த நாவிதர் நரசிங்கராவ், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு 'தாடி'யை மழிக்கும் வேலையை,
இனி முஸ்லிம்களுக்கு செய்வதில்லை என 'அறிவிப்பு' செய்து விட்டார்.

தனது பெயரை 'முஹம்மத் நசீர்' என மாற்றிக் கொண்ட அவர்,

இஸ்லாத்தில் வலியுறுத்தி சொல்லப்படும் தாடியை, தனது கையால் 'சிரைப்பது' இஸ்லாத்தின் கட்டளையை 'சிதைப்பது' போன்ற 'குற்ற உணர்வு' ஏற்படுவதாக கூறுகிறார்,முஹம்மத் நசீர்.

முன்னதாக, இஸ்லாத்தை ஏற்க முடிவு செய்த அவர், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி வகுப்புக்கு (ஒரு மாதம்) சென்று வந்தார்.

இதையடுத்து,நாவிதர் தொழிலுக்குத் திரும்பிய அவர், ஒரு வாரமாக ஆலோசித்து, (30/10/13) முதல் முஸ்லிம்களின் தாடியை மழிக்கும் வேலை செய்வதில்லை என அறிவிப்புப் பலகையை மாட்டி விட்டார்.

முஸ்லிம் இளைஞர்களை அதிகளவு வாடிக்கையாளர்களாக கொண்ட முஹம்மத் நசீர்,

தாடி மழிப்பு குறித்த முடிவால் ஏற்படும் இழப்பு குறித்துக் குறிப்பிடும் போது:

பல தெய்வ வழிப்பாட்டிலிருந்த தனது வாழ்க்கை இழப்பை, இஸ்லாத்தை வழங்கி 'ஈடு' செய்த அல்லாஹ்வே வருமான இழப்பை ஈடு செய்யவும் போதுமானவன் என்றார், முஹம்மத் நசீர். அல்ஹம்துலில்லாஹ் !

Thursday, 15 May 2014

தெரியாததை தெரிந்து கொள்ளுவதில் நேரத்தை செலவழிக்க கற்று கொள்ள

தெரியாததை தெரிந்து கொள்ளுவதில் நேரத்தை செலவழிக்க கற்று கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்வோம் . !!! நேரத்தை வீண் செய்யாமல் இருப்போம் !!

Wednesday, 14 May 2014

ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்



ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.
“ஆது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இடம் (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8
சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும் தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும் பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். அல்குர்ஆன் 69:6-7
இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.

பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.


உலகப் பொது மறையான திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று 
உலகிலுள்ள முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர்.
உலகிலுள்ள பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப 
வல்லுனர்களும் திருக்குர்ஆனை ஆய்வு செய்து திகைத்து நின்று இது 
இறைவனுடைய வார்த்தை தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் 
இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.

Monday, 12 May 2014

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை.


பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.

தொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும் போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட ‘வளர்ந்த பிள்ளைகள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளையாகவே இருந்து இளம் வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.

சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.

சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்…இதோ வரேன்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப் போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.

இதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.

அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும்.

தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும். நாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு. 7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை ‘இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான் என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை அன்றி வேறில்லை....!!




உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று 

உலகிலுள்ள முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர்.

உலகிலுள்ள பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப 

வல்லுனர்களும் திருக்குர்ஆனை ஆய்வு செய்து திகைத்து நின்று இது 

இறைவனுடைய வார்த்தை தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் 

இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.

அந்த வகையில் இறை மறுப்பாளர்களும், கிறித்தவர்களும் திருக்குர்ஆனின் 

சில வசனங்களை மேற்கோள் காட்டி இது உலக விசயத்துக்கு முரண்பட்டு 

இருக்கிறது என்று சில வசனத்தை மேற்கோள் காட்டினார்கள்.

1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் 

அறியவில்லையா ?

2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா ?

3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.

4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.

5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

(திருக்குா்ஆன் 105)

மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தை மையமாக வைத்து...

யானைகள் பசுமையான பிரதேசங்களில் தான் வாழும், பாலைவனங்களில் 

அவைகளால் வாழ முடியாது என்றும் அரேபிய தேசத்தில் யானைகள் 

வாழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை என்று கூறினார்கள்.

இதற்கு நமது இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது...

அரேபியாவில் வாழ்ந்த யானைகள் என்று குர்ஆனில் குறிப்பிப்படவில்லை. 

அப்ரஹா என்பவன் ஏமன் நாட்டிலிருந்து யானைப்படைகளை கொண்டு 

வந்தான்.

அவனது தலைமையகமும் அபீசீனியாவில் தான் இருந்தது.

எனவே தங்களது பாதுகாப்பிற்காக பல மன்னர்களும் பல நாடுகளிலிருந்தும் 

ஒட்டகம், குதிரை, யானை போன்றவைகளை வைத்திருந்தனர்.

யானைகள் வாழ்ந்து வந்ததற்கான பல ஆதாரங்கள் பைபிளில் 

காணக்கிடைக்கின்றது என்பதை பைபிள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி விளக்கம் 

சொன்னார்கள்.

அல்லாஹ் அவர்களுக்க நற்கூலி வழங்குவானாக...!!

தற்போது சவுதி அரேபியாவின் வட பகுதியில் பழங்காலத்தில் வாழ்ந்து வந்த 

யானைகளின் தந்தங்கள் உட்பட யானைகளின் பல பாகங்கள் புவியியல் 

ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளும் இல்லை, திருக்குர்ஆன் 

இறைவனுடைய வார்த்தை தான் என்பதற்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதை உலகுக்கு 

அடையாளப்படுத்தி இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று நிரூபிப்பவர்கள் 

நிரூபிக்கலாம்.

இறுதியில் இஸ்லாமே வெல்லும்!

நன்றி :  அரப் நியூஸ்

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க



வெறும் ஐநூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க,வராமல் தடுக்க ஒரு சிறந்த கைமருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?


புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.


எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.


அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.


அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.


இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.


இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .


இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?


நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்


கஃபா ( முதல் இறையில்லம்) வரலாறு


அகில உலகத்தையும் படைத்த அல்லாஹ், ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

அப்படிப்பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.

'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா
கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம்

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.

எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

அபய பூமி

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)

மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118

இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.

கொலை, போர் செய்தல் கூடாது

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882

காஃபிர்கள் நுழைவதற்குத் தடை

இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.

ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622

பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.

ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.

இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு (இறை மறுப்பாளர்களுக்கு  அங்கே தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189

மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சென்றுவர சக்திபெற்ற மனிதர்களின்(அல்குர்ஆன் 3:97)

அளவற்ற நன்மை

'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190

''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167

எந்நேரமும் வழிபடலாம்

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.

ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.
ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) திர்மிதீ 795

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236

கஅபா இடிக்கப்படுதல்

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896

''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595.

கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.

நல்லுணர்வு பெறுவோம்

இப்னு உமர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.புகாரி 1742

இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!