Wednesday, 9 April 2014

Youtube User Converted To Islaam












கனடாவைசேர்ந்த16வயதுமாணவிஎமிலிடயலோர்இஸ்லாத்தைதனதுவாழ்க்கைநெறியாகஏற்றுக்கொண்டார்...



கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி...

கனடாவை சேர்ந்த 16 வயது மாணவி எமிலி டயலோர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்...
அல்லாஹ் இவரின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக....

Emily Taylor,16 years old Canadian girl embraced Islam and took the Shahadh at the Islamic Centre Of Cambridge,MashaAllah!
Thanks to "What Do u Know about Islam"
2014.04.07

Tuesday, 8 April 2014

விருத்த சேதனம் செய்து கொள்வது பற்றிய தகவல் !!!! (circumcision)




விருத்த சேதனம் ( english : circumcision :அரபி: ختنة; ஈப்ரு: בְּרִית מִילָה) அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும். 

மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

                                      

மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு நீங்கள் கூர்ந்தீர்களா?
மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை 
கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை 
கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் 
நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?
தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் 
விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?
செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற 
அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?
இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு 
உதவினீர்களா?
உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?
பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து 
கொண்டீர்களா?அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?
நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் 
என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?
இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும்
என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்  ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டுமென்று விரும்பிக்கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் 
மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?
உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் 
நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?
இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது 
மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை 
ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே..
உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?
உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்தத்தினை நாடி 
சிந்தித்ததுண்டா?
மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?
உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?
இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி 
ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?
யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் 
பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?
மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து 
கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்."" 
'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் 
அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச்  சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஆமீன்.                       (சூரத்துல் ஆல இம்றான்)

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை அன்றி வேறில்லை....!!



உலகப்பொதுமறையான திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று உலகிலுள்ள முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர்.

உலகிலுள்ள பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் திருக்குர்ஆனை ஆய்வு செய்து திகைத்து நின்று இது இறைவனுடைய வார்த்தை தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.

அந்த வகையில் இறை மறுப்பாளர்களும், கிறித்தவர்களும் திருக்குர்ஆனின் சில வசனங்களை மேற்கோள் காட்டி இது உலக விசயத்துக்கு முரண்பட்டு இருக்கிறது என்று சில வசனத்தை மேற்கோள் காட்டினார்கள்.

1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா ?

2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா ?

3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.

4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.

5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

(திருக்குா்ஆன் 105)

மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தை மையமாக வைத்து...

யானைகள் பசுமையான பிரதேசங்களில் தான் வாழும், பாலைவனங்களில் அவைகளால் வாழ முடியாது என்றும் அரேபிய தேசத்தில் யானைகள் வாழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை என்று கூறினார்கள். 

இதற்கு நமது இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது...

அரேபியாவில் வாழ்ந்த யானைகள் என்று குர்ஆனில் குறிப்பிப்படவில்லை. அப்ரஹா என்பவன் ஏமன் நாட்டிலிருந்து யானைப்படைகளை கொண்டு வந்தான். 

அவனது தலைமையகமும் அபீசீனியாவில் தான் இருந்தது.

எனவே தங்களது பாதுகாப்பிற்காக பல மன்னர்களும் பல நாடுகளிலிருந்தும் ஒட்டகம், குதிரை, யானை போன்றவைகளை வைத்திருநதனர்.

யானைகள் வாழ்ந்து வந்ததற்கான பல ஆதாரங்கள் பைபிளில் காணக்கிடைக்கின்றது என்பதை பைபிள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி விளக்கம் சொன்னார்கள்.

அல்லாஹ் அவர்களுக்க நற்கூலி வழங்குவானாக...!!

தற்போது சவுதி அரேபியாவின் வட பகுதியில் பழங்காலத்தில் வாழ்ந்து வந்த யானைகளின் தந்தங்கள் உட்பட யானைகளின் பல பாகங்கள் புவியியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளும் இல்லை, திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தை தான் என்பதற்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதை உலகுக்கு அடையாளப்படுத்தி இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று நிரூபிப்பவர்கள் நிரூபிக்கலாம்.

இறுதியில் இஸ்லாமே வெல்லும்!

நன்றி:அரப் நியூஸ்

Monday, 7 April 2014

இஸ்லாத்தின் வளர்ச்சியை கண்டு நடுங்கும் சீனா




உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.
சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர்.
அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.
ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.
எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை.
இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே!
இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது. குழந்தைகளில் கல்விக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு கூட செல்லும் நாம், மார்க்கத்தை கற்று கொடுப்பதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். மதரஸாக்களில் செல்லாத இவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சியும், சுயநலமும், கோழைத்தனமும் தான் மிஞ்சியிருக்கும். இத்தகைய ஒரு தலைமுறையால் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ எவ்வித பலனும் இல்லை.
இளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வார்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே உள்ளோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கு நமது குழந்தைகளின் கைகளில் குர்ஆன் தவழ வேண்டும். இதனை அடைவதற்கு மூடப்பட்ட மதரஸாக்கள் திறக்கப்பட வேண்டும்.

துபாயில்( 2012ல்)மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.


டுபாயில் 2012 இந்த வருடம் மாத்திரம்

1500 பேர் புனித இஸ்லாத்தை ஏற்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.
கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின்  மொழிப்பெயர்ப்புகள்,  நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

EXPERIENCING RAMADAN


அகீகா குறித்து மூன்று பத்வாக்கள்



بسم الله الرحمن الرحيم
ஒரு குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமே அகீகாவாகும். இந்த அகீகா குறித்து பலர் அதிகமான விடயங்களை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அகீகாவுடைய விடயத்தில் அதிகமானவர்களுக்கு சந்தேகம் எழக்கூடியது பின்வரும் மூன்று விடயங்களிலேயாகும்.
1.அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
2.ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா  கொடுக்கப்பட வேண்டுமா?
3.ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக்கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
ஆகவே, இம்மூன்று வினாக்களுக்குமான தெளிவை இங்கு நாம் உங்களுக்கு சுருக்கமாகக் கூறுகின்றேன்.
முதல் வினா:
அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
விடை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நுபுவ்வத்திற்குப் பின் தனக்காக அகீகா கொடுத்ததாக ஒரு ஹதீஸ் முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பொறுத்தவரையில் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் என்ற தரத்தைப் பெற்றவராவார். ஆகவே, இவர் பலவீனமானவர் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
அத்தபரானீ அல்அவ்ஸத் என்ற நூலிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னுல் முஸன்னா என்பவர் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவர் என்ற காரணத்தால் இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
இமாம்களான அதாஃ, ஹஸன், இப்னு ஸீரீன் ஆகியவர்கள் பெரிய வயதில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீகா கொடுக்க முடியாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்கள். ஏனென்றால் அகீகா என்பது ஒரு தந்தை தனது மகனுக்கு நிறைவேற்ற வேண்டியதாகும் என்ற காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளார்கள். மேலும், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யார் இவ்வாறு அகீகா கொடுக்கிறாரோ அதனை நான் வெறுக்கமாட்டேன் என்றும் மேலும், மற்றோர் அறிவிப்பில் யார் இவ்வாறு செய்கிறாரோ அது சிறந்ததாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் இவ்வாறு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. ஏனென்றால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அவருடைய நூலான பத்ஹுல் அல்லாமில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்முங்னீ 13:397, அத்துஹ்பா பக்கம்: 87, 88, அல்மஜ்மூஃ 8:431
இரண்டாவது வினா:
ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டுமா?
விடை:
ஹன்பலீ மற்றும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் அகீகா கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றார்கள். ஏனென்றால் ஒரு குழந்தை பிறப்பதன் மூலமே அகீகா நிறைவேற்றப்படுகின்றது என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகா குறித்து வரக்கூடிய பொதுவான ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
இமாம் மாலிக் மற்றும் ஹஸன் ஆகியோர் மரணித்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல எனக்கூறுகின்றனர். அக்குழந்தைக்கு ஏழாவது நாளில் அதை அறுக்கப்பட வேண்டும் என்ற திர்மிதியில் வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸை முன்வைத்து இவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு ஏழாவது நாள் உயிர் வாழக்கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சரியான கருத்து ஏழாவது நாளுக்கு முன் மரணித்தவர்களுக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் மற்றும் இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.
மூன்றாவது வினா:
ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக் கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
விடை:
பெரும்பாலான அறிஞர்கள் ஆடு அல்லாத கால்நடைகள் அகீகாவுக்குச் செல்லுபடியாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் சரியான அறிவிப்பு வரிசையின்படி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஒட்டகத்தை அகீகாவுக்காக அறுத்ததாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இக்கருத்து ஹன்பலீ, ஷாபிஈ மற்றும் மாலிகீ ஆகிய மத்ஹப்களைச் சார்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம் மற்றும் மாடு ஆகியன ஆட்டைவிட அதிக கூலியைப் பெற்றுத்தரும் என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற பொதுவான ஹதீஸை முன்வைத்து அவர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆட்டை மாத்திரமே அகீகாவாகக் கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.
ஹப்ஸா பின்த் அப்திர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவருக்கு நீங்கள் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுக்க வேண்டாமா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், என்னுடைய மாமியான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும் மற்றும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தர்கள் எனக்கூறினார்கள்.                                        - முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் 4:328
இந்த ஆதாரத்தை முன்வைத்து இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அவருடைய கருத்தை முன்வைக்கின்றார்கள். மேலும், அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற ஹதீஸை நாம் ஆதாரமாக் கொண்டால் பறவைகளையும் அகீகாக் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மறுப்பளிக்கின்றார்.
மேலும், அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டையே குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் கூறும்போது: ஹதீஸில் வந்த செய்தியோடு சுருக்கிக்கொள்வதே மிக ஏற்றமாகும். யார் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுத்தால் அது செல்லுபடியாகும் என நான் ஆசை வைக்கின்றேன் என்கிறார்கள்.

Sunday, 6 April 2014

நடிகை பூஜா லாமா இஸ்லாத்தை தழுவி இப்பொழுது அம்னா பாருக்கி

 நடிகை பூஜா லாமா: 

 நேபாளின் பிரபல நடிகை மற்றும் விளம்பர மாதிரியாக இருந்த பூஜா லாமாவின் இஸ்லாத்தை பற்றிய பார்வை வித்தியாசமாக இருந்தது. அவர் மதங்களின் பொருத்தப்பாடு பற்றிய ஒப்பீட்டு கற்கை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். துபாய் மற்றும் கத்தார் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்குள்ள மதப்பெரியார்களுடன் இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள்
 பற்றிய விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டார்.

மதங்கள் பற்றிய தேடல் இவருக்கு பல விடயங்களை புரிய வைத்ததோடு இறுதியாக இஸ்லாத்தை தழுவும் முடிவை எடுத்தார். இஸ்லாத்தில் இணைந்த பின்னர் இஸ்லாம் அவரது வாழ்வில் உன்னத அமைதியை கொண்டு வந்ததாக கூறுகிறார்.

அப்துஸ் சபூர் நூர் என்பவர் இவருடன் ஒரு நேர்காணலை நடாத்தி இருந்தார். நேர்காணலின் வரி வடிவம் பின்வருமாறு:

கே: இஸ்லாத்தின் எந்த அம்சம் நீங்கள் இஸ்லாத்தில் இணைய தூண்டுகோலாக இருந்தது.

ஒரு வருடத்தின் முன்னர் எனது மனதில் ஏனைய மதங்களான இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தை பற்றி அறிய வேண்டும் என்ற ஒரு எண்ணம் உதயமானது. இதன் காரணமாக எனது கல்வி சுற்றுலாவின் பொழுது இவை பற்றிய ஒரு ஒப்பீட்டு கற்கையை ஆரம்பித்தேன். இந்த கற்கையின் மூலம் இஸ்லாமிய போதனைகள், அதன் பங்களிப்பு மற்றும் நாகரிகம் என்பன என்னை மிகவும் கவர்ந்தன. இஸ்லாத்தின் பிரதான விடயம் ஏகத்துவமாகும். அல்லாஹவை நம்புவபர்கள் மிகவும் உறுதியானவர்களாக இருப்பதை அவதானித்தேன்.

கே: உலகளாவிய ஊடகங்கள் இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இது உங்களை பாதிக்கவில்லையா?

உண்மையில் இந்த பிரச்சாரங்களும் நான் இஸ்லாத்தை தழுவ ஒரு காரணமாகும். இஸ்லாம் அனைவருக்கும் சம உரிமையை உறுதிப்படுத்துவதோடு அனைவருக்கும் பாகுபாடின்றி நீதியையும் அமைதியையும் வழங்குகின்றது.

கே: நீங்கள் திரைப்பட துறையில் இருந்த பொழுது பல தரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானீர்கள். இவற்றின் மூலம் அதிகம் துன்பப்பட்ட நீங்கள் ஒரு தடவை தற்கொலைக்கு கூட முயற்சித்தீர்கள் இது பற்றி சிறிது விளக்குவீர்களா?

எனது சொந்த வாழ்வில் என்னை அவமதித்ததற்காக நான் ஊடகங்களை குறை கூற போவதில்லை. எனது மூன்று திருமணத்திலும் நான் மிகவும் கடினமான காலப்பகுதியிலேயே இருந்தேன். எனினும் இஸ்லாத்தை நான் ஏற்ற பின்னர் எனது வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது. எனக்கு மன அமைதி கிடைத்துவிட்டது. இந்த அமைதி எனக்கு கிடைக்கும் என நான் ஒரு போதும் எண்ணியிருக்கவில்லை. நான் நிறைய வாசிக்கிறேன், தொழுகிறேன், மற்றும் அடுத்தவர்களுக்கு உதுவுகின்றேன் இவைகள் எனக்கு நிம்மதியை தருகின்றன.

கே: பூஜா, இஸ்லாத்தை தழுவிய பின்னர் ஸ்கார்ப் மூலம் தலையை மறைக்கும் நீங்கள் மது மற்றும் புகைத்தல் பழக்கங்களை கை விட்டுள்ளீர்கள். இம்மாற்றங்களை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்.

தயவு செய்து என்னை பூஜா என்று அழைக்காதீர்கள். எனது பெயர் அம்னா பாரூக்கி. எனது வாழ்வு மிகவும் பதற்றமானதாக இருந்தது. அந்த வேளையில் மது மற்றும் சிகரட் ஆகியனவே எனது துணைகளாக இருந்தன. மன அழுத்தத்தினால் மிகவும் அவதிப்பட்டேன். சுய நினைவு இழக்கும் வரை குடிக்கும் பலக்கமுள்ளவளாக இருந்தேன். என்னை சூழ இருட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனினும் இஸ்லாம் இவற்றை என்னிடம் இருந்து அகற்றி ஒரு புதிய வாழ்வை எனக்கு தந்துள்ளது.

கே: இஸ்லாத்தில் பெண்களின் உடலழகை வெளிக்காட்டுவது. பாடல்கள் மற்றும் இசை என்பன தடுக்கப்பட்டுள்ளன. இதை பற்றி என்ன கருதுகிறீர்கள்

இஸ்லாமிய உடைக்கலாச்சாரம் கண்ணியத்தையும் கவுரவத்தையும் வழங்குகின்றது. இசை என் இரத்தத்துடன் கலந்துள்ளதாக் எண்ணியிருந்தேன். ஆனால் தற்போது இசை பற்றி என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.

கே: இஸ்லாத்தின் நோக்கங்கள் எவை என்று கருதுகிறீர்கள்

நான் இஸ்லாம் பற்றி இன்னும் அதிகமாக கற்க விரும்புகிறேன். இவ்வாறு அதிகமாக கற்கும்போது இந்த உலகை நடைமுறை ரீதியாக என்னால் அதிகமாக விளங்கிக்கொள்ள முடியும்.

கே: நீங்கள் இஸ்லாத்தை தழுவியதை தொடர்ந்து உங்களின் குடுபத்தாரின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது.



நான் இஸ்லாத்தை ஏற்ற பின் டார்ஜிலிங் இல் வசிக்கும் எனது குடும்பத்தாருக்கு அறிவித்தேன். எனது தாயார் இதை அங்கீகரித்ததோடு எனக்கு ஒத்துழைப்பும் வழங்கினார். சிலர் நான் நேர் வழியை தேர்ந்தேடுத்துள்ளதாகவும் நான் சந்தோஷமாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்கள்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

                      
                                        

                                              


இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.


விஜயன்


இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.


விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-


"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!


பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.


சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)


இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.


மக்கள் புகார்


விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.


அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.


இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.


அடைக்கலம் கொடுத்த அழகி



விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.


விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.


(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.


இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')

குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.


பாண்டிய இளவரசி


விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.


ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.


இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.


இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.


குவேனியின் கதி


பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.


குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.


இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.


திருமணம்


பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.


முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''


இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.


தபால் தலை



1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.


தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.


இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது


நன்றி :தமிழர் வரலாறு