Saturday 24 May 2014

விஞ்ஞானிகளை வியக்கவைத்த திரு குர்ஆன்.




விஞ்ஞானிகளை வியக்க வைத்த திரு குர்ஆன்.

விஞ்ஞானிகள்  உறுதிபடுத்தியுள்ளனர்...
திரு குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல, மாறாக உணமையான இறைவன் வார்த்தைகள் தான் என்று.

20 ஆம் நூற்றாண்டில் கூட கண்டு புடிக்க முடியாத பல விஞ்ஞான தகவல்களை  1439 ஆண்டிற்கு முன்பே அகில உலகத்தையும் படைத்த இறைவன் அதனுடைய வடிவத்தை மிக தெளிவாக கூறிவிட்டான் எந்த வேதங்களிலும் இது வரை சொல்லப்படாத பல உண்மைகளை திருமறை குர் ஆனில் மட்டுமே.. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..

இந்த நூற்றாண்டில், கருவறையில் உள்ள பல நிலைகளை SCAN செய்து சொல்லப்படுவதை எந்த ஒரு கருவியும், இன்னும் electric கூட இல்லாத அந்த இருண்ட காலத்தில் மிக துல்லியமாக குறிப்பிட்ட குர்ஆன்.

படைப்புக்குளை பற்றி ......

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13:8)

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை

வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள் (23: 14, 15, 16.)

மலைகளை பற்றி திரு குர் ஆன்

பல அடுக்குகள் கொண்ட இந்த பூமி ஒரு மணிக்கு 5500 Km வேகத்தில் சுழன்று கொண்டும் 100900 km வேகத்தில் நகர்ந்து கொண்டும் சூரியனை சுற்றி வருகிறது.
இவ்வாறான வேகத்தில் ஓடும் பூமி குலுங்காமல் இருபதற்கு காரணம் மலைகள் ஆணி போன்று நிறுவப்பட்டுள்ளது. இதை சமீபமாக கண்டு பிடிதத்தை 
திரு மறையில் அன்றே இறைவன் கூறிவிட்டான்.
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். (32)

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).(15)

இது போன்று இன்னும் பல உண்மைகளை கண்டறிந்த மக்கள் இன்று அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி 
தழுவிவருகிறார்கள் இறைவனுடைய நாட்டத்தால்.இன்று இதை படித்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத நண்பர்களே சற்று சிந்தியுங்கள் இது போன்ற சத்தியத்தை எடுத்து சொல்லி நேர் வழியில் அழகிய முறையில் அழைக்கும் எங்களை ஏன் பலர் நாங்கள் தீவிரவாதி தீவிரவாதி என்று 
சித்தரிக்கிறார்கள் ????

காரணம் நாங்கள் சத்தியத்தை கொண்டு அசத்தியத்தில் வீசுகிறோம் இறைவன் ஒருவன் தான் என்று. இன்னும் நன்மைகளை ஏவுகிறோம் தீமைகளை தடுக்கிறோம் ஆனால் இதை பிடிக்காத சில எதிரிகள் மீடியாக்களின் வழியாக எங்களை தடுக்க தீவிரவாதி என்று உங்கள் முன் விளம்பரம் செய்கிறார்கள்.

எனவே நீங்கள் திருக்குர்ஆனை திறந்த மனதுடன் படிங்கள் பிறகு நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள்,
எங்களுடைய நோக்கம் நீங்கள் புனர் ஜென்மத்தில்(மறுமை வாழ்கையில்) வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே.
கீழே உள்ள website bookmark செய்து படித்து வாருங்கள்.
www.thelastchance4u.blogspot.com

நாங்கள் தினமும் உங்களுக்காக பிராத்தனை செய்து வருகிறோம். இறைவன் நாடினால் நீங்கள் முழுவதுமாக நேர்வழி பெறுவீர்கள்.. அந்த மிக பெரிய பாக்கியத்தை உங்களுக்கு அவன் விரைவில் வழங்குவானாக ஆமின்.

Thursday 22 May 2014

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...  

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.       

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.    

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது... 

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.    
முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா
ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.                 

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன். 

  
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான். 

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம். 

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.   

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல். 

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்... 

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா? 

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்? 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா? 

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன். 

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.                

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 



பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார், 

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...   

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது. 

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன? 

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...                          

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்.. 

என் மனைவி என்னை நம்பவில்லை. 

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார். 

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன். 

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுப்ஹானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன். 

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான். 

dad,..... அப்போ நீங்கள்? 

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்? 

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம், 

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது? 

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்... 

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுப்ஹானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர். 

இப்போது  யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில் பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

இஸ்லாம் என்றால் என்ன?




அன்பு சகோதர சகோதரிகளுக்கு,

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறியவிரும்பும் (சகோதரர்/சகோதரி)நீங்கள் என்று,நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses) (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான்.

இஸ்லாம் கூறும் செய்தி: 

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது.

  1. நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை --- குரான் (112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும் அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

குர் ஆன்: 

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குர்ஆன் 

குர்ஆன்  இருபத்தி மூன்று ஆண்டு கால இடை வெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது.

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?

இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து நம்பி வருகின்றார்கள்.

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது.

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), தன்னுடைய "The Developing Human" புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார்.

பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) அவர்கள் தன்னுடைய "The Bible, the Qur'an and Science" புத்தகத்தில்,

    "ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?"

அறிஞர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான மற்ற முஸ்லிம்கள் கூட, குர்ஆனில் குறிப்பிடத்தக்க ஞானம் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது குர்ஆன்  அறிவை கண்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், குர்ஆன்  உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதே ஆகும். சில நாட்களிலேயே கூட உங்களால் முழு குர்ஆனையும் படித்து விட முடியும்.

மேலும்,குர்ஆன்  என்னும் இறைவேதம், உலக மக்கள் அனைவருக்குமானது. நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டவர்கள்.  
(நபியே) உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை -குர்ஆன் 21:107.

நம் அனைவருக்கும் சொந்தமான, படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத குர்ஆனை ஏன் ஒரே ஒரு முறை படித்து பார்க்க நீங்கள் முன்வரக்கூடாது?  

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் குர்ஆன்  என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் என்னுடைய மெயில் முகவரிக்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். இறைவன் நாடினால், அனுப்பி வைக்கின்றேன்.

சகோதரத்துவம்: 

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள்,

    "எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

புரட்சி: 

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம் என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும் (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டலாம்.

உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கு உதவுவானாக...ஆமீன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..

Dear Brother/Sister,

              We kindly request you to spend a few moments of your time reading this letter because it just might be possible that this letter will open before you a new dimension of your role as a human being in this universe. We hope that you are a free thinking, broadminded, and prejudice-free human being whose goal is to find the truth. Before we continue, let us state to you the purpose of this letter- that this is an introduction and invitation to the way of life known as Islam.

1. WHAT IS ISLAM

Islam, unlike most other religions, is not named after any man. Instead Islam means the submission of one's will to the only true god worthy of worship "Allah" and anyone who does so is termed a "Muslim". The word also implies "peace" which is the natural consequence of total submission to the will of Allah. Islam is the religion that was given to Adam, the first man and the first prophet of Allah, and it was the religion of all the prophets sent by Allah to mankind like Jesus and Moses.

2. THE MESSAGE OF ISLAM

The most important message of Islam is the absolute Unity of God-that there is only One Supreme Being who has no partners and is not dependent on anyone or anything. He is the creator of everything and the whole universe is under His control. Since the total submission of one's will to Allah represents the essence of worship, Islam is the worship of Allah alone and the avoidance of worship directed to any person, place or thing other than Allah. In essence, Islam calls man away from the worship of creation and invites him to worship only its Creator. Allah is the only one deserving man's worship as it is only by His will that prayers are answered. Hence prayers to the non-living such as the sun, fire, and to humans whether they be Jesus, Moses or even Muhammad (pbut) are rejected, as Allah informs us in the opening chapter of the Qur'an, known as Soorah Al-Faatihah, verse 4:

"You alone do we worship and from you alone do we seek help."

A Muslim believes that Allah and His creation are distinctly different entities. Neither is Allah His creation or a part of it, nor is His creation Him or a part of Him. Ultimately, it is the belief that the essence of Allah is everywhere in His creation or that His divine being is or was present in some aspects of His creation, which has provided justification for the worship of creation. Islam, hence, is a clear call to the worship of the Creator and the rejection of creation-worship in any form.

3. THE MIRACLE OF QUR'AN

"And if you are in doubt as to what We [Allah] have revealed…then produce a Soorah (chapter) like thereunto"(Soorah Baqarah 2:23)

This was the challenge put forth by Allah in the Qur'an 1400 years ago. As of yet, none has or will ever come close to meeting this challenge. Hence, as a result, multitudes throughout the centuries have believed and continue to believe in the Qur'an as a revelation beyond any human capacity. Modern scientists, for instance, have been amazed by the accuracy of scientific information presented in the Qur'an. Here are just a few examples:

In his book of embryology-'The Developing Human' [W.B. Saunders Publishing, 1982], Dr. Keith Moore added a whole chapter to discuss the scientific accuracy of the Quranic discussion of this science. Another eminent scientist, Dr. Maurice Bucaille wrote in his book-'The Bible, the Qur'an and Science":

"I could not find a single error in the Qur'an…if a man was the author of the Qur'an how could he have written facts in the 7th century A.D. that today are shown to be in keeping with modern scientific knowledge"

Facts about astronomy, the animal world and other natural phenomenon, that were alien to modern science not long ago, are scattered among the messages of Allah's Unity and His Attributes throughout the miracle that is known as al-Qur'an.

I thank you for your time. May Allah guide all of us to the truth. 


பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம்





பெண்களினஉடைஎவ்வாறுஅமைதல்வேண்டும் என்பதுபற்றிஅல்குர்ஆனும்
ஸுன்னாவும் விளக்குகின்றன.

1. அவ்ரத்

பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

''மேலும் (நபியே!) முஃமினான பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்;; தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.''(அல்குர்ஆன் 24:31)

மேலே குறிப்;பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியில் தெரிவன' என்பதன் விளக்கம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இது வெளியே தெரியும் ஆடைகள் முதலான தவிர்க்க முடியாமல் வெளியே தெரியக் கூடியவற்றைக் குறிக்கும் என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கருதுகின்றார்கள். இமாம்களான ஹஸன் அல்பஸரி, இப்னு ஸீரின், நஸாஈ போன்றோரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழி) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரஹ்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் சிலர், இது வெளியே தெரியக்கூடிய மோதிரம், கழுத்துச் சங்கிலி போன்றவற்றைக் குறிக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.

பொதுவாக ஓர் இஸ்லாமியப் பெண் முகத்தையும் இரு கைகளையும் மூடாமல் திறந்துவிடுவது தொடர்பான சட்டப்பிரச்சினை மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள 'வெளியே தெரிவன தவிர' என்ற சொற்றொடரை வைத்தே எழுந்துள்ளது. சுருங்கக் கூறின் இது விடயத்தில் இரு கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன.

1. முகமும் கரங்களும் கூட தெரியலாகாது. அதனால் முகத்தையும் கரங்களையும் மறைக்க வேண்டும்.

2. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.

பெரும்பாலான ஆரம்பகால இமாம்கள் இரண்டாம் கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு முன்வைக்கும் சான்றுகளில் ஒரு ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு:

ஒரு முறை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் ஒரு மெல்லிய ஆடை அணிந்து ரஸூலுல்லாஹ்விடம் வந்திருந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் உடன் தனது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு பின்வருமாறு கூறினார்கள்:
'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.ஆயினும் முகமும், கரங்களும் கூட 'அவ்ரத்' எனக் கூறும் உலமாக்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டி இதனை ஒரு பலவீனமான ஹதீஸ் எனக் கூறுகின்றனர்.
பொதுவாக ஒரு பெண் தனக்கோ தன் மூலம் பிறருக்கோ 'பித்னா' ஏற்படாது என்று காண்கின்றபோது தனது முகத்தையும் கைகளையும் மூடாமல் திறந்துவிட அனுமதி பெறுகிறாள். ஆனால் கவர்ச்சியும் அழகும் உள்ள ஒரு பெண் ஒரு பக்குவமற்ற சமூகத்தில் முகத்தையும் கைகளையும் கூட மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இங்கு கைகள் என்பது மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியையே குறிக்கும். அதற்குமேல் உள்ள பகுதி அவ்ரத் ஆகும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
2. கனமான ஆடை
பெண்களின் ஆடைக்குரிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். மேனியை - உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக அது இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்திருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே.(அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே)'(அத்தபரானி)
மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.
இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
3. இறுக்கமற்ற உடை
பெண்களின் ஆடைக்குரிய மூன்றாம் நிபந்தனை அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.
'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், 'அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்' என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அத்தபரானி, அல்பைஹகி, இப்னு ஸஅத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் பலவீனமான ஒன்று என சிலர் கூறியபோதும் இமாம் தஹபி போன்றவர்கள் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளனர்.

4. மணம் பூசாமை

பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு நறுமணம் பூசக்கூடாது என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்:
'ஒரு பெண் மணம் பூசி, அதன் நறுமணத்தை ஒரு கூட்டத்தினர் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபசாரியாவாள்.'
ஆயினும் ஒரு பெண் வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறே வெளியிலும் துர்நாற்றம் வீசும் நிலையில் அதனைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு மாத்திரம் இலேசாக நறுமணம் பூசிக்கொள்ளவும் அனுமதி உண்டு.
5. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும். இதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன:
'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)
'நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)
மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.'
(அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)
6. காபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்
காபிரான பெண்களின் ஆடைகளை ஒத்ததாகவும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அமைதல் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
'நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவை காபிர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர்!' என்றார்கள். (முஸ்லிம்)
7. எளிமையானவை
சமூகத்தில் புகழையும் பிரபல்யத்தையும் நாடி காலத்திற்குக் காலம் வரும் நவீன வடிவமைப்புக்களில் ஆடை அணிவதும் தவிர்க்கப்படல் வேண்டும். அணியும் ஆடை பல வர்ணங்களிலும், நிறங்களிலும் வேலைப்பாடு களுடனும் கூடியதாக அமையாமல் எளிமையானதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
இதுவரை நாம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்ட ஆடையே ஒரு பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
ஓர் இஸ்லாமியப் பெண் வெளியில் செல்லும் போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டும். ஷரீஅத் கூறும் ஹிஜாப் உடைக்கான மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் பெறப்பட்டவையாகும்.

ஹிஜாபின் பயன்கள்
பெண்கள் மேற்குறிப்பிட்ட ஷரீஆ வரையறைகளைப் பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத் திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;. கெட்ட எண்ணத்துடன் அவளை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹிஜாப் உடை பெண்ணின் பாதுகாப்;பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது.
''நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்.''
(அல்குர்ஆன் 33:59)
இந்த வசனத்தில் 'அவர்கள் அறியப்படுவதற்கு' அவர்களின் 'ஜில்பாப்' எனும் முந்தானை உதவும் என்பதன் பொருள் இந்த அடக்கமான உடை, அந்தப் பெண் ஒரு கௌரவமான, கற்புடைய, அடக்கமும், நாணமும் உடைய தூய்மையான ஒரு பெண் என்பதை பிறர் அறிய உதவும் என்பதாகும். ஒரு பெண் ஹிஜாபை பேணாத போது எவ்வாறு பாதுகாப்பை இழக்கிறாள் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
'எவரேனும் ஒரு பெண் தனது கணவனது வீடல்லாத மற்ற இடங்களில் தனது ஆடைகளை களைவாளாயின் அவள் தனக்கும் அல்லாஹ்வுக் குமிடையே உள்ள தனக்கான பாதுகாப்பை -மறைப்பை- தகர்த்துக்கொள்கிறாள்.'
இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறவரும் கருத்து யாதெனில், ஒரு பெண் தனது ஆடைகளைக் களைவதன் மூலம் தனக்கிருந்த பாதுகாப்பை நீக்கி அந்நியருக்கு தனது அழகை காட்டும் போது அவள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்து நீங்கிக் கொள்கிறாள் என்பதாகும்.

மேலும் பெண்கள் ஹிஜாப் உடையை ஷரீஆ வரையறைகளைப் பேணி முறையாக அனுஷ்டிக்கின்ற போது சமூக உறுப்பினர்களும் சூழலும் தூய்மை பெற வழிபிறக்கிறது. ஹிஜாப் பார்வைக்கு திரையிடுகிறது. தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க வழியமைக்கிறது. பித்னா விளைவதை தடுக்க துணைபுரிகின்றது. இதனால் உள்ளங்கள் தூய்மை பெறுகின்றன. அத்துடன் ஹிஜாப் நோயுற்ற உள்ளங்களுக்கு வேலியாகவும் அமைகின்றது. காலக்கிரமத்தில் அத்தகைய உள்ளங்களும் கூட திருந்தி தூய்மை அடைய இது வழிவகுக்கிறது.
''(நபியின் மனைவியான) அவர்களிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னால் இருந்து கேளுங்கள். உங்களதும், அவர்களதும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்.''(அல்குர்ஆன் 33:53)
இஸ்லாம் வெட்;கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.
'ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.' (முவத்தா)
வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது' என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)
'வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்' என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழி) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)
அந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.
உண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்;பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.
'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவுத்)
இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.
அனைத்திற்கும் மேலாக ஹிஜாப் ஈமானினதும், தக்வாவினதும் வெளிப்பாடாக விளங்குகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் ஈமான் கொண்ட பெண்களை விளித்துத்தான் ஹிஜாபை அணியுமாறு பணிக்கிறான். ஈமானின் பெயராலேயே இது பற்றிய கட்டளைகள் வந்துள்ளன. ''நபியே! முஃமினான பெண்களைப் பார்த்துக் கூறுங்கள்'' முஃமின்களின் மனைவியர் என்றே ஹிஜாப் பற்றிய வசனங்கள் அமைந்துள்ளன.
பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழி) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:
'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'
'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' எனும் வட்டத்தில் அடங்கும்.
'சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் 'தபர்ருஜ்' எனும் தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;' என மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது அல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.
ஹிஜாபிற்கு எதிரான 'தபர்ருஜ்' ஐத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் பின்வருமாறு கூறுகிறது:   
''மேலும் உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முன்னைய ஜாஹிலிய்யாக் காலங்களில் (பெண்கள்) வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்தாதீர்கள்.''(அல்குர்ஆன் 33: 33)
உமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்:
'நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல 'தபர்ருஜ்' எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.' (அஹ்மத்)
இங்கு நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களின் வரிசையில் 'தபர்ருஜ்'யைக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.