Saturday 5 April 2014

ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்...


இன்று (04.04.2014) சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ராஜ் முஹம்மது என மாற்றம் செய்து கொண்டார்....அல்ஹம்துலில்லாஹ்

முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்...


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
சுல்தான்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் முருகன்.....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் முருகன் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

முருகன் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.





எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., நெல்லை மாவட்டம், பேட்டை TNTJ கிளையில், முருகன் என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை அப்துல்லாஹ் எனவும் மாற்றிக் கொண்டார்.

சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

குமார் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்., திருப்பூர் மாவட்டம், சிட்கோ TNTJ கிளையில், குமார் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தங்களது பெயர்களை ,
குமார் என்பதை சித்திக் எனவும்,
கிருபா என்பதை ஆயிஷா எனவும்
மாற்றிக் கொண்டனர்.
அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!

Friday 4 April 2014

அரசியல் என்பது சாக்கடையா?












சுமார் 24வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா  இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது டிர்  பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.


கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா? 

பாக்யராஜ் பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி, "எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?" என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கேள்வி கேட்டவருக்கு விளக்கும் போது கூறியிருந்தார்.

French Foot Ball Player CONVERTED IN ISLAM


அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ் காரணம்..!




போதைவஸ்து, மது, மாது, சூது, என சீரழிந்து கொண்டிருந்த அமெரிக்க சில வாலிபர்பகள் இஸ்லாத்தை தழுவ முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் காரணமாக இருந்திருக்கிறார்..

அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர்  ஜோர்ஜ்புஷ்  தனது ஒவ்வொரு உரையிலும் இஸ்லாத்தை விமர்சித்து பேசுவதை அவதானித்த அவ் வாலிபர்கள் முதற்தடவையாக "இஸ்லாம்" என்ற சொல்லை கேள்விப்படுகின்றனர். பின்னர் அது பற்றி அறிய விரும்பினர்.
வழமையாக google ளில் ஆபாச படங்களை தேடும் பழக்கத்தைக் கொண்ட அவர்கள் புனித இஸ்லாம் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்..
இறுதியில் புனித இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கு மக்களை அழைக்கும் தாயிகளாகவும் மாறியுள்ளனர்.. அல்லாஹ் நாடினால் காபிர்களைக் கொண்டும் இஸ்லாத்தை பரப்புவான்.
17:97.
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ (த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்.

இறுதியாக "ஜோர்ஜ் புஷ்"யின்  மகள், சகோதரி "LAURA BUSH" இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.என்ற செய்தி இன்று "FACEBOOK"படிக்கும் போது அல்லாஹ் காபிர்களை  கொண்டும் இஸ்லாத்தை பரப்புவான்  என்ற  வாக்கு ன்றும் உண்மை .அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தின் எதிரிகள் மனதை திடப்படுத்தி கொள்ளட்டும்



As Salamu Alaikum Va Rahmathulillahi Va Barkathuhu.

Dr.Zakir Naik ....Before president (USA) Bush daughter accepted Islam.

முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் மகள் இஸ்லாத்தை ஏற்றார்!!!

இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்





இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ் அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற
 எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.
32 வயதாகும் இவரது இயற்பெயர் மெலோனி ஜியார்ஜியடிஸ். சில காலம் போதை மருந்துக்கும் அடிமையாய் இருநதார். கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். மன நிம்மதி இழந்து தவித்து பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். எந்த பலனும் இல்லை. ஒரு முறை இவரது தோழி இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் 'இரு தொழுது விட்டு வருகிறேன்' என்று சென்றதை ஆச்சரியத்தோடு பார்த்தார். இந்த அளவு இந்த தொழுகைக்கு முக்கியத்துவமா? அப்படி என்ன இருக்கிறது இந்த குர்ஆனில் என்று தொடர்ந்து குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரது மனதை ஆட்கொண்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். குர்ஆனை நன்கு படித்து தெளிந்தவுடன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக சுவீகரித்துக் கொண்டார். இவரது முடிவை இவரது ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் முழு ஹிஜாபோடு சமீபத்தில் தொலைக் காட்சிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
'சிலர் சொல்வது போல் எவரது மிரட்டலுக்காகவும் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. குர்ஆனை ஆராய்ந்து தெளிவு கிடைத்த பிறகே எனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முடிவால் சிலருக்கு வருத்தம் உள்ளதை அறிவேன். எனக்கு தேவை மன நிம்மதி. அது இஸ்லாத்தில் கிடைத்துள்ளது. இறைவன் இட்ட கட்டளைகளை நான் அடி பிறழாது பின்பற்றுவேன். இஸ்லாத்தை ஏற்று முதன் முதலாக எனது நெற்றி இறைவனை வணங்க தரையை தொட்டபோது இனம் புரியாத சந்தோஷம் என்னுள் பரவுவதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. எனக்கு எனது அமைதியான வாழ்வுதான் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்கிறார் டயாம்ஸ்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.

சாதாரண ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றால் அது அவனுக்கு மறுமை வாழ்வை சிறப்பாக்குவதோடு அவனது உலக வாழ்விலும் அழகிய வாழ்க்கை நெறியைப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இந்த பெண்மணி புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த முடிவை எடுக்கிறார். இதனால் இசைத் துறையை கை கழுவ வேண்டி வரும். பொது மக்கள் முன்னிலையில் பல ஆண்களோடு இனி நடனமாட முடியாது. மிகப் பெரும பொருளாதார இழப்பும் ஏற்படும். ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். பேரும் புகழும் இனி இந்த மங்கையை தேடி இந்த உலகில் வராது. இருந்தும் அதை அனைத்தையும் தூர எறிந்து அழகிய வாழ்வு முறையை இவ்வுலகத்துக்கும் மறு உலகத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள இந்த சகோதரியை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்வோம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இவரை யாரும் கத்தியை காட்டி மிரட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொல்லவில்லை. பணம் காசு தருகிறோம் இங்கு வந்து விடு என்று யாரும் ஆசை காட்டவில்லை. 'வாளாலும் பணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது' என்று கூறுபவர்களுக்கு இந்த பெண்மணி அழகிய பதிலை அளித்துக் கொண்டிருக்கிறார்.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3.

நீயூஸ்லாந்தை சேர்ந்த கிறிஸ்துவ சகோதரர் பெட்டர் (பெயர் இல்யாஸ்) இஸ்லாத்தை தழுவினார்.மாசா அல்லாஹ்


நீயூஸ்லாந்தை சேர்ந்த கிறிஸ்துவ சகோதரர் பெட்டர் (பெயர் இல்யாஸ்) இஸ்லாத்தை தழுவினார்.மாசா அல்லாஹ் ..!! வெல்கம் மை டியர் பிரதர்.அல்லாஹ் அருள்புரியட்டும்..

Thursday 3 April 2014

சாட்ரூம்(chat room)வழியாக"ஷஹாதாகலிமா"மொழிந்துஇஸ்லாத்தைஏற்றகிறிஸ்தவசகோதரிசோஃபிஜென்கின்ஸ்!



இஸ்லாமிய பெண்கள் குறித்த பாகத்தை படித்த போது வியந்து போனேன்...
சாட் ரூம் (chat room) வழியாக "ஷஹாதா கலிமா" மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!
[ நான் சிறுமியாக இருந்தபோது "இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்". பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது.]

நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.

சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.

நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.

நான் சிறுமியாக இருந்தபோது "இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்". பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர்களுக்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.

நான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன். உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் "இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்" என்றும் "அது பெண்களை துச்சமாக மதிக்கிறது"என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" என்று பயிற்றுவிக்ககப்பட்டது.

மேலும் "இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்" என்றும், "முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்குகிறார்கள்" என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.

அதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.

நான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை, மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா? என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன்.

ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் "இஸ்லாத்தின் அடிப்படைகள்" (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது.

அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது? என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன்.

இஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.

நான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது என் வாழ்க்கையை மாற்றியது. இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் "வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்" என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.

Originally posted on :
குளோபல் இஸ்லாம் 

துபாயில் 200 பிலிப்பினோக்கள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்

துபாயில் 200 பிலிப்பினோக்கள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்


பிலிப்பன்ஸ் நாட்டின் முன்னனி நடிகர்..."ராபின் படிலா"அல்லாஹ்வின் நாட்டத்தால் தன் வாழ்வியல்நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



பிலிப்பன்ஸ் நாட்டின் முன்னனி நடிகர்..."ராபின் படிலா"அல்லாஹ்வின் நாட்டத்தால்  தன்    வாழ்வியல்நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
      


கொரியன் படை வீரர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

கொரியன் படை வீரர்கள் தங்கள் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் 
  


ஈராக் போருக்கு அனுப்பப்பட்ட கொரிய நாட்டு வீரர்களில் 37 பேர் நாடு திரும்பியதும் இஸ்லாத்தை ஏற்றனர். 
.
மனிதாபிமானமிக்க இன வெறி இல்லாத மார்க்கம் இஸ்லாம் என புகழந்துள்ளர்கள். 
.
இப்போது சொல்லுங்கள் இஸ்லாம் வாளால் பரவியதா? மனிதாபிமானத்தால் பரவியதா?
.
இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்று உலகிற்கு காட்ட எதிரிகளினால் உருவாக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளின் திட்டம் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது.
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்u

A BROTHER WITH EXTREME TATTOOS&BODY PIERCINGS REVERTED TO ISLAM

பிரிட்டனின் மத ஒப்பீட்டு ஆய்வாளர்அன்னாகென்னடி தன்வாழ்வியல்நெறியாகஇஸ்லாத்தைஏற்றுக்கொண்டார்


பிரிட்டனின் மத ஒப்பீட்டு ஆய்வாளர் புனித இஸ்லாத்தை ஏற்றார்


பிரித்தானியாவின் பிரபல மத ஒப்பீட்டு ஆய்வாளரான அன்னா கென்னடி புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பலஸ்தீனுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இவர் தனது இந்த அறிவிப்பை ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்தார். 39 வயதுடைய அன்னா கென்னடி, லண்டன் பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டுத் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகின்ற அதேவேளை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெய்ஹ் சாலிம் சலாமா அன்னா கென்னடிக்கு அல்குர்ஆன் பிரதியையும் இதன்போது அள்பளிப்புச் செய்துள்ளார்.

பிரபல பாப் இசை பாடகியும், நடன நாயகியுமான ஜானட் ஜாக்சன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜென்னத் விஸ்ஸம் என மாற்றிக்கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

உலக புகழ் பெற்ற பிரபல பாப் இசை பாடகியும், நடன நாயகியுமான ஜானட் ஜாக்சன் 
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஜென்னத் விஸ்ஸம் என மாற்றிக்கொண்டார்.
இவர் மறைந்த மீக்காயில் ஜாக்சன் (மைகேல் ஜாக்சன்) அவர்களின் சகோதரி ஆவார்.

டேனி வில்லியம்ஸ் இஸ்லாத்தை தழுவினார்....




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

டேனி வில்லியம்ஸ் இஸ்லாத்தை தழுவினார்..............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல
Heavy Weight Champion டேனி வில்லியம்ஸ் புனிதமிக்க சமத்துவமார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்

அல்ஹம்துலில்லாஹ்..............!





அமெரிக்கா ராணுவ வீரர் ஜசியன் பார்ஸ் இஸ்லாமிய கொள்கையில் தன்னை இணைத்து கொண்டார்


அமெரிக்கா ராணுவ வீரர் ஜசியன் பார்ஸ் இஸ்லாமிய கொள்கையில் தன்னை இணைத்து கொண்டார் மாசா அல்லாஹ் ..!

அல்லாஹ் இவருக்கு இம்மையுளும் மறுமையுளும் வெற்றியை தருவானாக.!

(அமெரிக்கா ஈராக் யுத்தத்தில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிட தக்கது )

கலிபோர்னியாவை சேர்ந்த படத்தயாரிப்பாளர் இஸ்லாமிய கொள்கையில் தன்னை இணைத்து கொண்டார்


அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி 

கலிபோர்னியாவை சேர்ந்த படத்தயாரிப்பாளர் இஸ்லாமிய கொள்கையில் தன்னை இணைத்து கொண்டார் .பெயர் முஸ்தபா .

அல்ஹம்துலில்லாஹ்..!

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்..........!!




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்..........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 5 கிறித்தவ சகோதரிகள் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.


போர்ச்சுகல் விளையாட்டு வீரர் அபெல் கேவியர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை பைசல் என மாற்றிக் கொண்டார்,


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் போர்ச்சுகல் விளையாட்டு வீரர் அபெல் கேவியர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை பைசல் என மாற்றிக் கொண்டார்

ஜூலியா ரேக்வாவா இஸ்லாத்தில் இணைந்தார்............!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

ஜூலியா ரேக்வாவா இஸ்லாத்தில் இணைந்தார்............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் ரஷ்யா விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சுவிடன் நாட்டை சேர்ந்த கிறித்தவ சகோதரி ஜூலியா ரேக்வாவா தூய
்மைமிக்க இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.

உலகத்தில் இருக்கும் பல முக்கிய பிரபலங்கள் எல்லாம் இஸ்லாத்தில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். சினிமாத்துறையினைச் சேர்ந்தவர்கள், ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆய்வாவாளர்கள், பொப் இசைப்பாடகர்கள் மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் என பல பிரபலங்கள் இஸ்லாத்தோடு இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் என்ற பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு இருக்கும் நாம் ஒரு உண்மை முஸ்லிம்களாக இருக்கிறோமா..??? உங்கள் உள்ளத்தில் கையை வைத்துக் கொண்டு கேட்டுப் பாருங்கள்...


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா டெய்லர் இஸ்லாத்தை தழுவினார்............!!


மாஷா அல்லாஹ் ...
அல்ஹம்துலில்லாஹ் !
அல்லாஹு அக்பர் !!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா டெய்லர் இஸ்லாத்தை தழுவினார்............!!

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறித்தவ சகோதரியான எம்மா டெய்லர் புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

அவர் கூறிய வார்த்தைகளில் சில...
நான் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தேன், எனது ஆடைகளை எப்பொழுதும் கவர்ச்சிகரமாக தான் அணிவேன், இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய என்னுடைய தோழி ஒருவர் எனக்கு அவருடைய இல்லத்தில் விருந்துக்கு அழைத்திருந்தார்,

அப்பொழுது தான் நான் என்னையே அறியாமல் சிந்திக்க ஆரம்பித்தேன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய எனது தோழியின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மன அமைதியும், தென்றலாய் வீசும் சந்தோசமும் என்னை சிந்திக்கத் தூண்டியது,

இது பற்றி எனது தோழியிடம் விசாரித்த போது தன்னுடைய அமைதிக்கும், சந்தோசத்திற்கும் ஒரே காரணம் இஸ்லாம் என்று அவர் கூறிய பதில் எனக்கு கூடுதல் தாக்கத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது,

அதன் பின் நண்பர்களின் உதவியுடன் இஸ்லாத்தை தழுவினேன்,
இஸ்லாத்திலுள்ளவர்கள் என்னை மன நிறைவோடு வரவேற்றார்கள், நான் மன நிம்மதியோடு கண்ணியமான முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன்,

நான் 13 வயதிலிருந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவள், ஆனால் இஸ்லாத்திற்கு மாறிய பின் மது அருந்துவதை முழுமையாக நிறுத்தி விட்டேன், கவர்ச்சிகரமாக ஆடையே அணிந்திருந்த நான், தற்போது இஸ்லாம் கற்று தந்த முறையான ஆடையை பேணி ஹிஜாப் அணிந்து தான் வெளியில் செல்கிறேன்....

தன்னுடைய குடும்பத்தினர் தன் மீது வருத்தத்தில் இருப்பதாகவும் கூறிய அவர் அருகிலுள்ள மசூதியில் தினமும் 5 வேளையும் தொழுகையில் ஈடுபட்டு வருகிறேன் எனவும் சந்தோசத்துடன் கூறினார்

[MTV முதல் மக்கா வரை ] பேக்கர் கிறிஸ்டியானா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.






Cristiane Backer, a former MTV Europe presenter, author of From MTV to Makkah, and a convert to Islam.



இசையிலேயே எப்பொழுதும் மூழ்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியான பேக்கர் 1990 களில் ஐரோப்பாவின் நம்பர் ஒன் சேனலில் தொகுப்பாளராக இருந்தார். வெகு விரைவிலேயே நேயர்களின் விருப்பத்திற்கு உரியவராகவும் இருந்தார். 1965 டிசம்பர் 13ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்கரில் பிறந்த கிரிஸ்டியானா, ஐரோப்பாவின் பிரசித்திப் பெற்ற MTV யின் தொகுப்பாளராக 1996 வரை பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.ஒரு முறை கோல்டன்  
கேமரா அவார்டும் இரண்டு முறை கோல்டன் ஓல்ட் அவார்டும் பெற்றிருந்தார்.

1992-ல் அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் லண்டனில் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன்பின் இம்ரான்கானின் விருந்தாளியாக பாகிஸ்தான் செல்ல நேர்ந்தது. பாகிஸ்தான் பயணம் கிறிஸ்டியானாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மக்களின் குணமும்,பழக்கவழக்கமும்,மனிதநேயமும அவரை மிகவும் கவர்ந்தது. எனவே கிறிஸ்துவ மதத்தை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய சூபிசம் அவருக்கு மிகவும் பிடித்தது. மனிதநேயமும்,அன்பும் சூபிசத்தின் மூலம் கிடைக்கிறது என்பது கிறிஸ்டியானாவின் கருத்து. இஸ்லாம் ஏற்றுக்கொண்டபின் 1995க்கு பின் தன் பிறந்த நாடான ஜெர்மனிக்கு சென்றாலும், அங்கிருந்தவர்களின் அணுகுமுறை பிடித்தமானதாக இருக்கவில்லை. .

நண்பர்களும், உறவுகளும் அதிருப்தியுடன் பார்க்க துவங்கியதுடன் அவர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். இப்பொழுது லண்டனில் வசிக்கிறார். மேற்கத்திய இசையின் மூலம் ஏராளமான பணமும் புகழும் கிடைத்தபோதும் ஏதோ ஒரு வெறுமை தன் மனதில் தோன்றுவதாக உணர்ந்தார். இந்த மன உளைச்சலும்,வெறுமையும் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே விலகியது என்றும், 1995ல் வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரேயே ‘’நான் ஒரு முஸ்லிம்’’ என்ற உள்ளுணர்வின் நிழலில் வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைத்ததாக அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் என்றும் அவர் சான்று பகர்கிறார்.

சமீபத்தில்,இஸ்லாத்தின் சிறப்புகளையும், இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலலிக்கக்கூடிய வகையில் ‘’from mtv to mecca’’ [MTV முதல் மக்கா வரை ] என்ற புத்தகத்தை கிறிஸ்டியானா வெளியிட்டார். மேற்கத்திய சமூகத்தில் இந்த புத்தகத்திற்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் பார்லிமென்டின் கீழுள்ள all group parliment committy ஹாலில் 2012-sep 3ம் தேதி புத்தகத்தின் வெளியீட்டைப் பற்றிய சர்ச்சை நடந்தது. பிரிட்டனின் அறிவு ஜீவிகள் பங்கு கொண்ட செமினாரில் இஸ்லாம் சூடேறிய சர்ச்சைக்குட்பட்டது. இந்த புத்தகத்தின் அரபி, ஜெர்மன், இந்தோனேசியா, மலேஷியன் பதிப்புகள் உடன் வெளிவரும். தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் எவ்விதம் ஈர்த்தது என்பதைப் பற்றியே இந்த புத்தகம் கூறுகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ,அதன் உள்ளடக்கம், கருத்துக்கள் பற்றி தெளிவாக கூறினார்.

‘’சத்தியத்தைத் தேடும் ஒரு பெண்ணின் விடியலுக்கான பயணம்’’ என்று சிந்தனையாளர் தாரிக் ரமதான் இந்த புத்தகத்தை குறித்து சிறப்பித்தார். இஸ்லாம் மதத்தைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் கிறிஸ்டியானாவுக்கு அறிமுகப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய விருப்பம் பாடல்களிலும், உணவுகளிலும் மட்டுமல்ல பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இருந்தது என்பது அவரது சிறப்பியல்புகலாக இருந்தது. தொடர் முயற்சிகளின் பலனாக தன்னுடைய நம்பிக்கையின் மூலம் சத்தியத்தைப் பற்றிய தேடல் எனக்கு அவர்மீது மதிப்பை தந்தது. இந்த புத்தகம் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கவரும் என்பது உண்மை. அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எல்லா வெற்றிகளையும் தந்தருள்வானாக! என்று இம்ரான் கான் புத்தகத்தைக் குறித்து புகழ்ந்து கூறினார்.

ஒரு சர்ச்சையில் இஸ்லாத்தில் ஹிஜாபைக் குறித்து கிறிஸ்டியானா கூறியது; இஸ்லாம் கலாச்சாரத்தோடு உள்ள ஆடை அணிய வலியுறுத்துகிறது. ஹிஜாபை பரிகாசம் செய்பவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தையே பரிகாசம் செய்பவர்களாவர். காரணம், கலாச்சார நாகரீகம் கொண்ட எந்த சமூகமும் பிற சமூகத்தை பரிகசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஹிஜாபை பற்றி விமர்சிப்பவர்களை அடக்கி ஆள்வதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக, அவர்களே அதை சுயமாக தேர்ந்தெடுக்கும் நிலை கொடுக்க வேண்டாமா என்பதே கிறிஸ்டியானாவின் கேள்வி. 43வயதான கிறிஸ்டியானா, ஹோமியோபதி மருத்துவர். இப்பொழுது NBC EUROPE போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்.


யூரோப்பில் சமீபத்தில் நடந்த நபிகள் நாயகம் கருத்தரங்கத்தில் பங்குகொண்டு இஸ்லாத்தில் பெண்களின் உயர்ந்த நிலை, பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புகள், நபிகள் நாயகம் சொன்ன பெண் விடுதலை போன்ற விஷயங்களை அவர் தைரியத்தோடு வெளிப்படுத்தினார். ’’சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதஉரிமை பாதுகாப்பு, பிற உயிரினங்களிடம் கருணை, ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் உதவி செய்தல், போன்ற பல விஷயங்களையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இஸ்லாம் உலகத்தில் வசிக்கும் அனைத்து படைப்புகளின் ஒழுங்கமைப்பு என்ற நிலையில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கிறது என்று உதாரணங்களுடன் தன் கருத்தை பதிவு செய்தார்.

இஸ்லாத்தை தழுவிய இங்கிலாந்து பெண் காவலாளி.............!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

இஸ்லாத்தை தழுவிய இங்கிலாந்து பெண் காவலாளி.............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஐக்கிய இராச்சிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பெண் காவலாளி ஒருவர் இஸ்லாத்தை தழுவி ஹிஜாபுடன் பணியாற்றும் போது எடுத்தப்படம்.

ஒரே தடவையில் மேலும் 30 சகோதரர்கள் புனித இஸ்லாத்தைத் தழுவினர்


ஒரே தடவையில் மேலும் 30 சகோதரர்கள் புனித இஸ்லாத்தைத் தழுவினர்

சஊதி அரேபியா யன்பு பிரதேசத்தில் பணிபுரிகின்ற 37 கிருஸ்த்தவ சகோதரர்கள் கடந்த இரு வாரங்களின் புனித இஸ்லாத்தைத் தழுவியதைத் தொடர்ந்து கடந்த (03.01.2013) வியாழக்கிழமை மேலும் 30 கிருஸ்த்தவ சகோதரர்கள் நான்கு பொறியியளாளர்கள் உள்ளடங்களாக ஓரே நேரத்தில் புனித இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

யன்பு தஃவா நிலையத்தில் பல மொழிகளுக்கான தஃவா இணைப்பாளராக செயல்படும் காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் உப தலைவர் சகோ. ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் அயராத முயற்சியினால் அவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இச்சகோதரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. இஸ்லாத்தைத் தழுவிய அனைத்து சகோதரர்களும் நேற்றைய தினம் (04.01.2013) தங்களது முதலாவது ஜும்ஆ தொழுகைக்காக யன்புவில் அமைந்துள்ள பின் பாஸ் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு வருகை தந்து தொழுகையில் கலந்து கொண்டதுடன் கலிமா ஸஹாதாவை மொழிந்ததைத் தொடர்ந்து அங்கு தொழுகைக்காக வருகை தந்திருந்த அறபு மக்களால் கௌரவிக்கப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் சஊதி இணையத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன.

தகவல்
இஸ்லாமிக் சென்றர்

காத்தான்குடி.   

ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா இஸ்லாத்தை தழுவினார்...........!!



ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா இஸ்லாத்தை தழுவினார்...........!!
எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் ஜப்பான் நாட்டின் குத்து சண்டை 
பெண் வீராங்கனை சிக்கா நகமூரா புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை
நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை காலிதா என மாற்றிக் கொண்டார்



A Chinese family of three, mother, father and daughter who embraced Islam




A Chinese family of three, mother, father and daughter who embraced Islam

This news story, from Gulfnews, is a couple of months old but it recently caught my attention. It discusses the experience of Ramadan of new converts to Islam. They also talk about a Chinese family of three who converted to Islam. Here are the relevant excerpts from the story.

A Chinese family of three, mother, father and daughter who embraced Islam two months ago, said Ramadan is an experience although it has been difficult since it is the first time they have abstained from food and drink.


The 26-year-old daughter who chose Fatima as her name, told Gulf News through a translator, that she was feeling thirsty throughout the day and did not eat enough at suhoor because she is not used to eating at dawn.

ஷோபனா என்ற சகோதரி "திருக்குர் ஆன்" னை இன்டர்நெட்டின் மூலம் மட்டுமே படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.




இந்த காலத்தில் இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்கள் இன்டர்நெட்டில்...பல விஷயங்கள் பார்க்கும் நேரத்தில்...ஷோபனா வயது 24 என்ற இளம் பெண்மனி அல்லாஹ்வால் இறக்கப்பட்ட "திருக்குர் ஆன்" னை இன்டர்நெட்டின் மூலம் மட்டுமே படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.... அல்லாஹ் அக்பர்..."அல்லாஹ் நாடியதை யாராலும் தடுக்கமுடியாது அல்லாஹ் தடுப்பதை யாராலும் குடுக்கமுடியாது...." அல்லாஹ்வே மிகப் பெரியவன்...






நெப்போலியன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் நெப்போலியன்............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் அமெரிக்காவை சேர்ந்த கிறித்தவ சகோதரரான நெப்போலியன் அவர்கள் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட போது எடுத்தப்படம், 

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதருக்கு இறைவன் ஈருலகிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக.....


ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவ அறிஞர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!! 

ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவ அறிஞர் இஸ்லாத்தை தழுவினார்...........!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவ அறிஞரான Vyacheslav Polosin என்ற சகோதரர் புனிதமிக்க இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள், மேலும் அவர் தனது பெயரை அலி என மாற்றிக் கொண்டார்கள் 


இந்த அறிஞர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்க கடற்படையை சேர்ந்த பல் மருத்துவர் இஸ்லாத்தை தழுவினார்...........!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

அமெரிக்க கடற்படையை சேர்ந்த பல் மருத்துவர் இஸ்லாத்தை தழுவினார்...........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் அமெரிக்க கடற்படையை சேர்ந்த பல் மருத்துவரான சகோதரி ஹீத்தர் உலகமே உற்று நோக்கும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்,

அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே இஸ்லாத்தை ஆய்வு செய்ததாகவும், அதன்பின்பே இஸ்லாத்தின் உண்மை தன்மைகளை அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.


சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....