Saturday, 3 May 2014

தாடி வளர்ப்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்



                        



இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435


மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வண்ணம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வண்ணம் படைத்திருப்பான்.

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம்

பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.

1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது.

Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல் ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”.

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர்.

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!




இஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...!
தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
=======================================
தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....

சூரியனிலிருந்த 95 சதவீத புற ஊதாக்கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறது என்றும், இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரு புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாடி வைத்திருப்பவர்களுக்கு சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு இளமையோடு காட்சியளிப்பர்.

இளைஞர்கள் முகத்தில் தாடி இல்லாமல் இருந்தால் இளமை போன்றும், தாடி இருந்தால் முதியவர்கள் போன்றும் பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் தாடி இல்லாதவர்கள் முகத்தில் சூரியனின் தாக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அவர்களின் முகம் முதுமையை அடைந்து விடுவதாகவும், தாடி வைத்திருப்பவர்களின் முகத்தில் சூரியனின் தாக்கம் குறைந்து காணப்படு வதால் நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தாடி வைத்திருப்போர் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தால் எப்போதும் முகம் ஜிலுஜிலுவென்ற இருக்கும். தாடி வைத்திருப்போர் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், எந்த அளவிற்கு தாடி அதிகம் உள்ளதோ அந்த அளவிற்கு தாடி குளிரை கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமாக ஷேவ் செய்வதினால் ஏற்படும் தீமைகள் :ஷேவ் செய்யும் போது பிளேடினால் ஏற்படும் கீறல்கள், சருமக்கோளாருகள் ஏற்படுகிறது.முமையாக ஷேவ் செய்த முகத்தில் பாக்டீரியா உள்ளிட்ட நோய்கள் உடனடியாக தொற்றிக் கொள்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி, தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமா உள்ளது. இதனால் ஆஸ்துமாவையு தவிர்க்க முடிகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் தாடி வைப்பது அவசியமாகிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனுக்கு எதையெல்லாம் செய்ய கூறியுள்ளதோ அவையனைத்தும் 14 நூற்றாண்டுகள் கழித்து இன்று விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 435

young boy accepted Islam





Allahu akbar! The parents of this young boy accepted Islam. The boy who also accepted Islam is now memorising the Quran!

The person who gave them dawah and guided them to Islam will get the reward of the good deeds done by the parents, the child and the good deeds of the generations to come!

Friday, 2 May 2014

உலகின் இரண்டாவது ஆலயம் மஸ்ஜிதுல் அக்ஸா



உலகின் இரண்டாவது ஆலயம் மஸ்ஜிதுல் அக்ஸா. 

மஸ்ஜிதுல் அக்ஸா. இதன் பொருள் ‘ தொலைவிலுள்ள  தொழுமிடம் என்பதாகும். 
இந்தப் பள்ளி வாயில் முதன் முதலாக நபி யஃகூப் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் நபி சுலைமான் அவர்களால் ஜின்களின் மூலமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

இதைப்பற்றி இறைவன் கூறும் பொழுது ‘ அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள பள்ளிக்கு (மஸ்ஜித் அக்ஸாவுக்கு) ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(ஆல்-குர்ஆன் 17:1)இங்கு ஓரிரவு மிஃராஜ்-விண்ணேற்றத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கிருந்து தான் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். துவக்கத்தில் 18 மாதங்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் தொழுது வந்தனர். 

அதன் பிறகு 2:144-வது வசனம் அருளப்பட்டதும் கஃபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தனர்.கி.பி 771-ல் நில அதிர்வால் சேதப்பட்ட  பொழுது  இதனை அப்பாஸியக் கலீஃபா மன்சூர் புனர் நிர்மாணம் செய்தார். 


சிலுவைப்போர் வீரர்கள் கையிலிருந்த இதனை ஸுல்தான் ஸலாஹுத்தீன் கி.பி 1187-ல் வெற்றி கொண்டார்.இப்புனிதப்பகுதி (மக்கா, மதீனா எல்லைகளைப் போல்) ‘ஹரம் ஷரீஃப்’ என்று அழைக்கப்படுகிறது. இது மக்கா, மதீனாவுக்கு அடுத்த படியாக புனித இடமாகும்.இங்குத் தொழப்படும் தொழுகை ஒருவர் தன் வீட்டில் தொழுவதை விட ஐநூறு மடங்கு மேலானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


மூளையை பாதிக்கும் பழக்கங்கள்

\


மூளையானது மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். உடம்பின் உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனையும் பெற்றுள்ளது.

எனவே மூளையை பாதிக்கும் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய சர்க்கரை சாப்பிடுவது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல் நமக்குத் தேவையான ஓக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஓக்ஸிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஓக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஓக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியான பிறகே மூளைக்கு வேலை கொடுப்பது சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால் மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

Wednesday, 30 April 2014

தாய்லாந்து விஞ்ஞானியின் மாற்றம்


டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr. Tagatat Tejasen):
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில் ஆகும்.
அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன் ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் அளித்தோம். அப்போது அவர் தங்களது புத்த சமய புத்தகங்களில் கரு வளர்ச்சி நிலைகள் பற்றிய சரியான விவரங்கள் உள்ளன என கருத்து தெரிவித்தார். நாங்கள் அந்த புத்தகங்கில் உள்ள விவரங்களை அறிய மிக ஆவலாய் உள்ளோம் எனவும் அந்த புத்தகங்களைப் பற்ற அறிய விரும்புவதாகவும் கூறினோம்.
ஒரு வருடம் கழிந்து பேராசிரியர் டிஜாஸன் “மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாளராக வந்தார். நாங்கள் அவர் கடந்த வருடம் கூறியதை நினைவு கூர்ந்தோம். அந்த கூற்றை தான் உறுதிபடுத்தாமல் கூறி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். அவர் புத்த சமய புத்தகங்களை ஆராய்ந்த போது அவைகளில் இது சம்பந்தமான ஒரு விவரமும் இல்லை என்பதை அறிந்தார். இதன் பின் பேராசிரியர் கீத் மூரே எழுதிய ‘தற்கால கருவியல் சம்பந்தமான கருத்துக்கள் எப்படி குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் உள்ள கருத்துக்களுடன் ஒத்து வருகின்றது என்ற உரையைக் கொடுத்தோம். அவரிடம் கீத் மூரே பற்றிக் கேட்டோம். அவரைப் பற்றித் தெரியும் என்றும் அவர்; ‘கருவியல் துறையில் உலக பிரசித்து விஞ்ஞானி என்றும் கூறினார். பேராசிரியர் டிஜாஸன் இந்த விவரங்ளைப் (மூரேயின் கருத்துக்கள்) படித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.
நாங்கள் அவரது சிறப்புத் துறையிலே பல கேள்விகளைக் கேட்டோம். அதில் ஒன்று தான் இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான “தோலின் உணர்ச்சிகள் பற்றியதாகும். டாக்டர் டிஜாஸன் ‘ஆம்- தோல் ஆழமாக எரிக்கப் பட்டால் (உணர்ச்சிகள் பாதிக்கும்) என்றார். அவரிடம் சொல்லப்பட்டது- ‘நீங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி கூறிய இந்த புத்தகத்தை – புனித நூலை – குர்ஆனை அறிய விரும்புகிறீர்கள?; இறை நிராகரிப்போர்களை நரக நெருப்பால் தண்டனை கொடுப்பதைப் பற்றிக் கூறும் போது அவர்களது தோல் அழிந்த பின் திரும்ப அவர்களுக்கு புதிய தோலை உருவாக்கி அவர்களுக்கு நரக வேதனையை அனுபவிக்கச் செய்யப்படும் என்று கூறுவதன் மூலம் உணர்ச்சிகளின் நரம்புகள் தோளில் தான் முடிவடைகின்றன
என்னும்உண்மை விளங்குகிறது. குர்ஆனின் வசனங்களைப் பாருங்கள்:
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ- அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை- அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென- அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:56)
நாம் அவரிடம் கேட்டோம்: 1400 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ச்சிகளின் நரம்புகள் தோலில் முடிவடைகின்றன என்பதற்கு இது ஆதாரம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ‘ஆம் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார் டாக்டர் டிஜாஸன் உணர்ச்சிகள் பற்றிய இந்த உண்மை நீண்ட காலத்திற்கே முன்பே தெரிந்ததாகும். காரணம் யாராவது ஒருவர் எதாவது தவறு செய்தால் அவர் தோலைச் சுடுவதன் மூலம் தண்டிக்கப்படும். அதன் பின் அல்லாஹ் அவருக்கு பதிய தோலை போர்த்தி வேதனையை அனுபவிக்கச் செய்வான். அதாவது பல்லாண்டுகளுக்கு முன்பே வேதனையை உணரக்கூடியவைகள் தோலில் தான் உள்ளன என்பதை அறிந்துள்ளார்கள்.
எனவே தான் புதிய தோல் மாற்றப்படுகின்றது. தோல் தான் உணர்ச்சிகளின் மையம். நெருப்பால் முழுமையாக தோல் எரியும் போது- அது அதனுடைய உணர்ச்சிகளை இழந்து விடுகின்றது. அதன் காரணமாகத் தான் மறுமையில் அல்லாஹ் தோலை மாற்றிக் கொண்டே இருப்பான் குர்ஆன் 4:56ல் உள்ளது போல். நாம் அவரிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டோம்.
‘இவை முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதர்களின் மூலமாக வந்திருக்க வாய்ப்புள்ளதா? பேராசிரியர் டிஜாஸன் இது ஒரு காலத்திலும் மனிதர்களின் மூலம் வந்திருக்க சாத்தியம் இல்லை என்று மறுத்தார். ஆனால் இந்த அறிவின் காரணியைப் பற்றியும் முகம்மது எங்கிருந்து இதனைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது? என்றும் கேட்டார். ‘மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள அல்லாஹ்விடம் இருந்த என்று நாம் கூறினோம். அதன்பின் அவர் ‘அப்படி என்றால் யார் அந்த அல்லாஹ் என்று கேட்டார்.
o அவன் தான் இருப்பவைகள் அனைத்தையும் படைத்தவன் ஆகும்.
o நீங்கள் ஒரு அறிவைக் கண்டால்- அது மிக்க அறிவுடையோனிடமிருந்து மட்டும் தான் வந்திருக்க முடியும்.
o இந்த அண்டங்களின் படைப்புகளில் அறிவைக் கண்டால்- அனைத்து அறிவுடையோனால் தான் இந்த அண்டங்கள் படைக்கபட்டதால் ஆகும்.
o இந்த படைப்புகளில் ஒரு முழுமையைக் கண்டால் இவையனைத்தையும் மிக அறிவான்மையுள்ள ஒருவனால் தான் படைக்கபட்டுள்ளது என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.
o கருணையைக் கண்டால் கருணைமிக்க வல்லோனின் படைப்பு என்பற்கு சாட்சியாக ஆகும்.
o இதே போல் படைப்புகள் அனைத்தும் ஒரு முறைப்படியாகவும்- ஒழுங்காகவும் அமையப் பெற்றதைக் கண்டால் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள ஒரே இறைவனால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.
பேராசிரியர் டிஜாஸன் நாம் கூறிவைகளை ஏற்றுக் கொண்டார். அவர் தம் நாடு திரும்பி இந்த புதிய ஞானத்தையும்- கண்டுபிடிப்புகளைப் பற்றிய பல விரிவுரைகள் நிகழ்த்தினார். இந்த விரிவுரைகளின் பயனாக அவரது மாணவர்களில் ஐந்து பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நாம் அறிந்தோம்.
பின் ரியாத்தில் நடந்த எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில் குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள மருத்துவ அறிவியல் பற்றிய விரிவுரைகளில் தொடர்ச்சியாக பங்கேற்றார். பேராசிரியர் டிஜாஸன் நான்கு நாட்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத பல அறிஞர்களிடம் குர்ஆன்- ஹதீஸ்களில் உள்ள இந்த உண்மைகளைப் பற்றி கலந்து ஆலோசிப்பதில் கழித்தார்.
அந்த மாநாட்டின் இறுதிப் பகுதியில் பேராசிரியர் எழுந்து பேசலானார்: ‘கடந்த மூன்றாண்டுகளாக ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தானி அவர்களால் தரப்பட்ட குர்ஆனில் நான் ஈடுபாடலானேன். கடந்த வருடம் நான் பேராசிரியர் கீத் மூரே அவர்களின் புதிய ஆய்வுகளை ஷேக் மூலம் பெற்றேன். அவர்கள் இதனை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்து தாய்லாந்து முஸ்லிம்களிடையே உரையாற்றக் கூறினார்கள். அவர்களது வேண்டுகோளை நான் நிறைவேற்றினேன். நான் ஷேக்கிடம் கொடுத்த வீடியோ கேசட்டில் நீங்கள் அதனைப் பார்க்கலாம். இந்த மாநாட்டு மூலமும் எனது ஆராய்ச்சிகளினாலும் நான் நம்புவது என்னவென்றால்- 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனிலே பதியப்பட்டுள்ளது அனைத்துமே உண்மை என்பதையும் அவைகளை அறிவியல் மூலம் நிருபிக்கலாம் என்பதாகும்.
படைப்பதற்கு தகுதியான இறைவன் மூலம் பெற்ற இந்தச் செய்தியை தெரிவித்த முஹம்மது நபி அவர்கள் படிக்கவோ- எழுதவோ தெரியாதவர். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். எனவே நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்.. அதாவது வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை- ‘முஹம்மது ரசூலுல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவரார்கள் என்பதை கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கிறேன். நான் இந்த மாநாட்டின் மூலம் அறிவியல் உண்மைகளை மட்டுமல்லாது மேலும் பல அறிஞர்களிடையே கலந்துரையாடி பல அறிஞர்களின் நட்பு கிடைத்தது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்ததன் மூலம் நான் அடைந்த மதிப்பிட முடியாத ஒரு பலன் என்னவென்றால் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ் என்னும் கலிமாவைக் கூறி நான் ஒரு முஸ்லிமானதுதான்.
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ- அவர்கள் உமக்கு உம்முடைய -இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும்- அது வல்லமை மிக்க- புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள். (அல்குர்ஆன்: 34:6)

Monday, 28 April 2014

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!


சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.

உலகின் வேறுபட்ட நாடுகளைச் சோந்த 1907 பேர் புனித இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர்



உலகின் வேறுபட்ட நாடுகளைச் சோந்த 1907 பேர் புனித இஸ்லாம் மதத்தை ஏற்றுக்
கொண்டுள்ளதாக துபாயில் அமைந்துள்ள தார் அல்-பத்ர் சமூகநிறுவனத்தின், இஸ்லாமிய 
தகவல் நிலையப் பணிப்பாளர் ராஷித் ஸலீம் அல்ஜூனைபி தெரிவித்துள்ளார்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு துபாயின் இஸ்லாமிய விவகாரத்
 திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதல்களும், ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக
 அல்ஜூனைபி மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களுக்கு அபாயா மற்றும் இஸ்லாமிய சட்டரீதியான 
உடைகள் என்பன இஸ்லாமிய நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக இஸ்லாத்தில் நுழைந்தவர்களை வரவேற்கும் முகமாக விழாக்கள் ஏற்பாடு
 செய்யப்பட்டதுடன்,ரமழான் காலத்தில் ஸஹர் உணவுபரிமாறும் விருந்துகளும்
 இடம்பெற்றன. 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில், இஸ்லாத்தை வரைவிலக்கணப்படுத்தும்
 2055 புத்தகங்கள் மற்றும் இறுவட்டுகள் இஸ்லாமிய நிறுவனத்தின் மூலம்
 விநியோகிக்ப்பட்டுள்ளதுடன், புதிய முஸ்லிம்களுடன் கலந்துரையாடும் பல 
தொலைக்காட்சி மற்றும் வானோலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
(முஸ்லிம் உலகம்)

கத்தோலிக் பாதிரியார் இஸ்லாத்தை ஏற்றுகொண்டார் !


திருமறை குர் ஆன் தான் இறைவனின் வேதம் என்று ஏற்றுக்கொண்டு சத்தியத்தை உணர்ந்தார் அல்லாஹ் அக்பர்
அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்…இறையருள் நிறைக!
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!
நம்மிருவரின் மத நம்பிக்கைகள் பல்வேறு விஷயங்களில் ஓன்று பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இப்ராகிம் (ஆபிரகாம்), இஸ்ஹாக் (ஈசாக்கு), யஹ்கூப் (யாக்கோபு), மூஸா( மோசே), தாவூது (தாவீது), சுலைமான் (சாலமன்) போன்றோர் உயர்ந்த தீர்க்க தரிசிகள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்களும் நம்புகிறீர்கள்.
முதல் மனிதர் ஆதமும் அவர் மனைவி ஹவ்வாவும் தேவனுக்கு மாறு செய்ததால் சொர்கத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டதாக நீங்களும் நம்புகிறீர்கள், நாங்களும் நம்புகிறோம்.
ஈசா (இயேசு) அவர்களை அன்னை மரியம் அவர்கள் திருமண உறவின்றி இறைவனின் வார்த்தை மூலம் அற்புதமாக பெற்றெடுத்தார்கள் என்று நீங்களும் நாங்களும் நம்புகிறோம்.
இப்படி பல ஒற்றுமைகள் நமக்குள் இருந்தாலும் சில அடிப்படை நம்பிக்கைகளில் வித்தியாசம் இருக்கின்றது  அத்தகைய வித்தியாசப்படும் நம்பிக்கைகளில் முக்கியமானவற்றை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.
கடவுள் ஒருவனே, அவனுக்கு பிள்ளைகள் இல்லை!வணக்கத்துக்குத் தகுதியானவன்  எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் மட்டுமே. அவனைத் தவிர வேறு கடவுளுமில்லை அவனுக்கு மகனென்று எவனும் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கை. இந்த கொள்கை குறித்து தேவன் தன இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பேசுகிறான். அத்தகைய வசனங்களில் ஒன்றை கீழே தருகிறேன்.
“வேதமுடையவர்களே! உங்கள் மதத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். இறைவன் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும் ) கூறாதீர்கள். மர்யமின் மகனாகிய ஈசா என்னும் மஸீஹ் இறைவனின் தூதரும் மர்யமிடம் அவன் போட்டானே அந்த வார்த்தையும், அவனிடமிருந்து வந்த உயிருமாவார். எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள்! மூன்று (கடவுள்) என்று கூறாதீர்கள். (இதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். (அதுவே) உங்களுக்குச் சிறந்ததாகும். இறைவன் ஒரே கடவுள் தான். அவனுக்கு மகன் இருப்பதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும்.  கடவுளே பொறுப்பேற்க போதுமானவன். (திருக்குர்ஆன் அத்தியாயம் 4, வசனம் 171).
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில், ஏசு என்ற ஈசா தீர்க்கதரிசி அவர்களை, தனிச்சிறப்புடன் ‘ஆகட்டும் என்ற தன் வார்த்தை மூலம் தகப்பனின்றி தான் உருவாக்கிய உயிர் என்று இறைவன் தெளிவு படுத்துகிறான். அப்படியிருந்தாலும் அவர் மரியமின் மகன் தானே தவிர இறைவனின் மகன் அல்ல என்பதையும் விளக்குகிறான். அத்துடன் மூன்று கடவுள் என்பது கிடையாது, ஒரே கடவுள் தான் இருக்கிறான் என்றும் அவனுக்கு மகன் இருக்கும் குறையிலிருந்து தூய்மையானவன் என்றும் குறிப்பிடுகிறான்.
இயேசு தீர்க்கதரிசி அவர்கள் தகப்பனின்றி பிறந்ததனால் கடவுளின் குமாரர்தான் என்று கூறுவதற்கு மறுப்பாக திருக்குர்ஆனில் தேவன் கூறும் அழகிய விளக்கத்தைப் பாருங்கள்!
நிச்சயமாக தேவனிடம் இயேசுவுக்கு உதாரணம் ஆதமைப் போலாகும். அவரை மண்ணினால் படைத்து ‘ஆகு என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகிவிட்டார். (திருக்குர்ஆன் 3:59)
ஆதம் தாய் தகப்பனின்றி இறைவனால் படைக்கப்பட்டவர். அதனால் அவர் இறைவனின் குமாரர் என்று நாம் சொல்வதில்லை. அதுபோலவே தகப்பனின்றி தாயின் வயற்றில் இறைவனால் படைக்கப்பட்டவர் தான் இயேசு.எனவே இவர்களையும் இறைவனின் குமாரர் என்று சொல்லக்கூடாது என்பது நமக்கு எல்லாம் வல்ல இறைவன் சொல்லித் தருவதாகும்.
ஆகவே இயேசு அவர்கள் கடவுளை மட்டுமே வணங்க வேண்டுமென பிரச்சாரம் செய்த தீர்க்கதரிசியாவார்கள். அவர்களை வணங்குவது அவர்கள் போதித்த கொள்கைக்கே எதிரானது என்பது தான் இஸ்லாத்தின் கொள்கை.
மறு உலகத்தில் விசாரணைக்காக மனிதர்கள் தேவன் முன் நிறுத்தப் படும்போது  இயேசுவிற்கும் தேவனுக்கும் நடைபெறும் உரையாடல் பற்றி தேவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அது பின் வருமாறு;
“மர்யமின் மகன் ஈசாவே! கடவுயன்றி என்னையும் என் தாயாரையும் கூட இரு கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள் என்று நீர் தான் மக்களுக்குக் கூறினீரா என கடவுள் கேட்கும்போது, நீ தூயவன் எனக்குத் தகுதியில்லாததை நான் சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதனை நீ அறிந்திருப்பாய்! எனக்குள் உள்ளதை நீ அறிவாய் உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிபவன் என்று அவர் கூறுவார்.
நீ எனக்கு கட்டளையிட்டபடி, எனது  ரட்சகனும்,உங்களது  ரட்சககனுமாகிய இறைவனையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களைப் பார்ப்பவனாக இருந்தேன், நீ என்னைக் கைப்பற்றியப் போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக ஆனாய் அவர்களை 
நீ தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகளே,அவர்களை! 
 நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்றும் அவர் கூறுவார். (திருக்குர்ஆன் 5: 116-118)
இயேசு என்ற இறைத்தூதர் ஈசா அவர்களை பற்றி இஸ்லாத்தின் நம்பிக்கை என்ன என்பது குறித்து சுருக்கமாக விளக்கவே மேற்கண்ட விவரங்களை நான் எழுதியுள்ளேன்.அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புகள், கடவுளின் நாட்டத்துடன் அவர்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் கொல்லப்படவோ சிலுவையில் அறையப்படவோ இல்லை என்பன போன்ற விவரங்களை திருக்குர்ஆனில் அத்தியாயம் 19 வசனம் 16-37, 5: 110-115, 4: 157-159 ஆகிய இடங்களில் படிக்கவும், வேறு பல இடங்களிலும் அவர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது .
எல்லாம் வல்ல இறைவன் நம்மை அவனது சத்திய வழியில் நடத்துவானாக!



Sunday, 27 April 2014

Viber, Skype போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி ஒருவருக்கு இலவச குரல் அழைப்புக்களை ஏற்படுத்தமுடியும்




Libon எனும் Android மற்றும் iOS Smart சாதனங்களுக்கான மென்பொருளானது ஏனைய Messaging மென்பொருள்களை பார்க்கிலும் சற்று வித்தியாசமான வசதியை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.

நாம் Viber, Skype போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி ஒருவருக்கு இலவச குரல் அழைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் எனின் குறிப்பிட்ட இரு நபர்களும் அந்த தளங்களில் கணக்கினை வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த Libon எனும் மென்பொருளை பயன்படுத்தி 90 இற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள எந்த ஒரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் இலவச அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இருப்பினும் இதனை நாம் வரையறை இன்றி பயன்படுத்த முடியாது. அதாவது நீங்கள் குறிப்பிட்ட மென்பொருளில் இணையும் புதிய வாசகர் எனின் ஒவ்வொரு மாதமும் இலவச 60 நிமிடங்கள் என்ற வகையில் முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும். அதன் பின்னும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் எனில் (என்னை மன்னிக்க வேண்டும்) கட்டணம் செலுத்தித் தான் பயன்படுத்த வேண்டும்.

மேலும் உங்கள் நண்பரும் Libon இல் கணக்கொன்றினை வைத்திருந்தால் அது Libon Contact என்ற பக்கத்தில் தரப்பட்டிருக்கும் அந்த இலக்கங்களுக்கு வரையறை இன்றி உங்களால் அழைப்புக்களை ஏற்படுத்த முடிவதோடு எழுத்து வடிவிலும் குரல் பதிவு மூலமும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்.

17Mb அளவினை கொண்டுள்ள இந்த மென்பொருளானது Android 2.3 பதிப்பு இயங்கக்கூடிய சாதனத்திலும் இயங்கக் கூடியது.

இலங்கை, இந்தியா,கனடா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட 90 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பினை ஏற்படுத்த உதவும் இந்த மென்பொருளை பயன்படுத்தி கடல் கடந்து இருக்கும் உங்கள் உறவுகளுடன் தாராளமாக பேசி மகிழுங்கள்.

நீங்கள் இலங்கையில் வசிப்பவரா? அப்படி எனில் இதனையும் பார்க்க: Google இன் சில முக்கிய சேவைகளுக்காக கட்டணமற்ற இணைய சேவையை வழங்கும் Dialog

Arnoud van Doorn னின் மகனும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்






எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.. நபிகள் நாயகத்திற்கு எதிரான திரைப்படத்தை எடுத்தவரின் மகன் புனித இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு.

வான் டூர்ன்" மகன் உள்ளிட்ட 37 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் !துபாய் பீஸ் கன்வென்ஷனில் நெகிழ்ச்சி !!

தட்சு நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகரும், இஸ்லாத்துக்கு (நபிகள் நாயகத்திற்கு) எதிராக 'பித்னா' என்ற திரைப்படத்தை தயாரித்தவருமான 'அர்னௌட் வான் டூர்ன்' (Arnoud Van Doorn) கடந்த 2013 ஏப்ரலில் இஸ்லாத்தை ஏற்றார்.

சரியாக ஓராண்டு இடைவெளியில், 'இஸ்கந்தர்' என்ற அவரது மகனும் நேற்றைய தினம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
22 வயது இஸ்கந்தர், முறையாக இஸ்லாமிய கல்வியை கற்ற பின்னர், கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு, முக்கிய காரணியாக இருந்தவர் 'யூனுஸ்' என்ற தனது நண்பர் தான் என்ற அவர்,
இஸ்லாத்தை ஏற்றப் பிறகு எனது தந்தையின் செயல்களாலும் பழக்க வழக்கங்களாலும், தான் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

துபாய் இண்டர்நேஷனல் பீஸ் கன்வென்ஷனில், இஸ்கந்தரையும் சேர்த்து இதுவரை 37 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக நேற்றைய (21/04/14) 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வந்துள்ளது