இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434
இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் மாதத்தோடு மலர்கின்றது. இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள்
ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத் “துறந்து செல்லல்” என்ற பொருளைத் தாங்கி நிற்கும். இந்த ஹிஜ்ரத் சன்மார்க்க வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தமது நாட்டையும், வீட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவம்.
“ஒரு முஸ்லிமுக்கு தனது உயிரிலும் மேலானது அவருடைய இஸ்லாமிய வாழ்வுதான். அவ் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லாவித தியாகங்களுக்கும் ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார்” இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.
ஹிஜ்ரத் பயண வேகத்தின் இந்த நீண்ட நெடிய கால ஓட்டத்தில் இவ்வையகத்தில் இஸ்லாம் நிகழ்த்திய அற்புதங்கள், புரட்சிகள், கற்பித்த பாடங்கள் எத்தனை எத்தனை. பெருமானார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கர்பலா களத்திலே சிந்திய இரத்தமும் இந்தப் பயண வேகத்தில் ஒரு பகுதிதான்.
இன்றும் அந்தப் பயணவேகம் தொடர்கிறது. அசத்தியத்திற்கு அடிபணியாத அவர்களின் நெஞ்சுறுதி இவ் அகிலத்தை செந்நிறமாக்கிக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை சிந்திக்க வைக்கிறது.
இஸ்லாமிய மாதங்களில் 4 மாதங்களை அல்லாஹுத்தஆலா புனிதமான மாதங்களாக ஆக்கியுள்ளான். ரஜப், துல்கஃதா, துல் ஹஜ் ஆகிய 3 உடன் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதமும். ஆனால் இந்த 4 மாதங்களில் முஹர்ரம் மாதத்துக்கு மட்டும்தான் “புனிதம்” என்ற பொருள் தங்கியுள்ளது. அது ஏன் என்று நோக்கினால் உலகில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் இம் மாதத்தில் 10 ஆம் நாளில் தான் நிகழ்ந்துள்ளது.
வானங்கள், பூமிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றை படைத்தது இந்நாளில் தான். இறை அறிவிப்புப் பலகை, இறை எழுதுகோல் ஆகியவற்றை படைத்ததும் இந்நாளில் தான். ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தை படைத்ததும், அதிலே இவ்விருவரையும் நுழைய வைத்ததும் இந்நாளில் தான்.
இதைக் கேட்ட நபீ நாயகம் (எனது சகோதரர்) மூஸாவுக்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள்நோன்பு நோற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்ததுடன். தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்புநோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.
நபீகள் (ஸல்) ஒன்பதான் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப் பட்டுள்ளது.
முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிருஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தை பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கும் தோறும் துக்கம் ஏற்படுகிறது.
கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹாதத்தின் பானத்தைப் பருகினார்கள். யkதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.
\இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது ஆதரவைக் கொடுக்க முன் வரவில்லை.
“அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் “ஷஹாதத்” சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் 10 ஆம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இதுதான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனித குல சுபீட்சத்துக்கும், நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

முஹம்மது நபீ (ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனா வந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்கள் ஆசூ;றா பத்தாம்நாள் நோன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்களும், தோழர்களும் பிர்அவ்ன் எனும் சர்வாதிகாரியையும், அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாள் என்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாள் என்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்றும் நவின்றார்கள்.
இதைக் கேட்ட நபீ நாயகம் (எனது சகோதரர்) மூஸாவுக்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள்நோன்பு நோற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்ததுடன். தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்புநோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.
நபீகள் (ஸல்) ஒன்பதான் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப் பட்டுள்ளது.
முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிருஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தை பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கும் தோறும் துக்கம் ஏற்படுகிறது.
கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹாதத்தின் பானத்தைப் பருகினார்கள். யkதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.
\இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது ஆதரவைக் கொடுக்க முன் வரவில்லை.
“அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் “ஷஹாதத்” சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் 10 ஆம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இதுதான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனித குல சுபீட்சத்துக்கும், நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.
முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும் சுருங்கக் கூறின்
- அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
- அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
- அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
- அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
- அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
- அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
- அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
- அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
- அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
- அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
- அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
- தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
- அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
- அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
- அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
- அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
- அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.