Friday, 24 January 2014

தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது.





தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறது? அறிவியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.. மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும் உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.

நாம் ஏன் தூங்குகிறோம். இது கேள்வி. தூக்கம் வருவதால் தூங்குகிறோம். இது பதில் பதில் வேடிக்கையாயில்லை..

நம் தூக்கத்தில் தான் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடினோசின் என்கிற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகும் போது நமக்குத் தூக்கம் வருவதாகவும் தூக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் முற்றிலும் குறைக்கபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் கண் அசையாத் தூக்கம், விரைவு கண் அசைவு தூக்கம், என இரண்டு வகைகள் உள்ளன.

தூக்கத்தில் ஐந்து கட்டங்கள் உள்ளன. முதல் கட்ட தூக்கமான லேசான தூக்கத்தின் போது சத்தம் கேட்டதும் கலைந்துவிடும் அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம். இரண்டாவது கட்டத் தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று மூளையின் அலை வேகம் குறையும்.

மூன்றாவது கட்டத் தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது, மேலும் குறைந்து இடை இடையே அலையாக மாறுகிறது. நான்காம் கட்டத்தில் முழுக்க டெல்டா அலைகள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம், நான்காம் கட்டம் ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது. இவ்வேளையில் உடல் அசைவோ கண் அசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித்து எழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்..

கண் அசைவுத் தூக்கத்திற்கு வருகையில் விரைவாக மூச்சு விடுதல், மூச்சு விடுவதை அதிகரித்தல் ஆகியன ஒழுங்கின்றி இருக்கும் கண்கள் மேலும் கீழுமாகப் பல்வேறு திசைகளில் அசைவதுடன் இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் ஆகியன அதிகரித்து கைகால்களை அசைக்க முடியாது. இது போன்ற நிலைகளில் கனவுகள் ஏற்படும்.

நாம் தூங்கத் தொடங்கிய 70 முதல் 90 நிமிடத்தில் ஏற்படுவது கண்ணசைவுத் தூக்கம், முதல் கட்டத்திலிருந்து நான்கு கட்டங்கள் வந்தபிறகு கண்ணசைவு தூக்கம் வருவதை ஒரு சுற்றுத் தூக்கம் சுழற்சி என்பார்.

ஆழ்ந்த உறக்கத்தில் தொலைபேசியில் பேசியது. அலாரம் அடித்தால் நிறுத்தி விட்டுத் தூங்கச் செல்வது போன்றவை பலருக்கு நினைவில் இருக்காது. காபி, மூக்கடைப்பிற்கு போடப்படும் சில மாத்திரைகள் மருந்துகள் தூக்கத்தைக் கெடுக்கும். மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டால் கண்ணசைவு தூக்கம் வரும். அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் கண்ணசைவு தூக்க பாதிப்பு ஏற்படும். உடலில் நிக்கோடின் அளவு புகை பிடிப்பவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைவதால் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்.

மது அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வராது.. லேசான தூக்கமே வராது. லேசான தூக்கமே வரும். ஆதலால் அவர்களை விரைவில் எழுப்பி விடலாம். ஒரு முறை கண்ணசைவுத் லேசான தூக்கம் பாதிக்கப்பட்டால் திரும்பவும் ஒரு சுற்றுத் தூக்கம் பாதிக்கும். கண்ணசைவு தூக்கம் முடிந்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். தூக்கமானது இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று பொதுவாக கூறவியலாது. தூங்குபவரின் வயதுக்கு ஏற்ப மாறும். பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும்.. கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர்..

ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது. வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிளால் சரியாகத் துங்கவில்லை என அர்த்தம். துக்கம் கெட்டு வண்டி ஒட்டினால் நிச்சயம் விபத்துகள் நேருகின்றன.

கண்களை சாலையில் சாய்ப்பது சிரமமாக இருந்தால் கொட்டாவி வருவதை நிறுத்த முடியாமல் போனால் வண்டி எந்த இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதே தெரியவில்லையெனில் வண்டி ஒட்டக்கூடாது. தூங்காமல் இருந்து வண்டி ஒட்டுவது ஆபத்து..

மூளையும் நரம்புகளும் சரியாக வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை கவனக்குறைவு ஞாபக மறதி மன உளைச்சல் ஆகியன ஏறபடும். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும்.தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அன அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும்

இரவு நீண்ட நேரம் மருத்துவமனைகளில் கண்விழித்து பணிபுரியும் மருத்துவர்களால் சரியாக வைத்தியம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பிரகாசமான விளக்குகள் எரியவிட்டால் இடையிடையே தூங்க அனுமதித்தால் அடிக்கடி ஷிப்ட் மாற்றினால் இக்குறைப்பாட்டை சரி செய்யலாம். 85 வகையான தூக்க நோய்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?

தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய் சர்க்கரை நோய் மன அழுத்தம் குழப்ப நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். பகல் இரவு ஷிப்ட் மாற்றி வேலை செய்வதால் உடல் பசி முதல் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல் மனக்குழப்பம், மன இறுக்கம் இதய பாதிப்பு கல்லீரல் குடல் நோய்கள் ஆகியன ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பிபிஒ கால் சென்டரில் வேலை பார்ப்போர் இனிமையான தூக்கத்தையும் உடல் நலத்தையும் தொலைக்கிறார்கள். தூக்கம் கெடுவதுடன் -முறையற்ற உறவுகள் போதைப் பழக்கம் ஆகியன இதனால் ஏற்படுகின்றன. நல்ல தூக்கத்தை மாத்திரை தராது இடையிடையே விழிப்பதை தவிர்க்க நீண்ட தூக்கம் அவசியம்.


இவர்கள் அரபிகளுமில்லை.. இவர்களில் சிலர் முஸ்லிமாக பிறக்கவுமில்லை.   

                             
இவர்கள் அரபிகளுமில்லை.. இவர்களில் சிலர் முஸ்லிமாக பிறக்கவுமில்லை.. இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்களும் அல்ல... ஆனால் இவர்களால் இஸ்லாம் பூமியெங்கும் பரவுகிறது..
இவர்களால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்

*பெயர்கள் வலமிருந்து இடமாக*
1) காலித் யாசிர். அமெரிக்கா. 
2) அபு ஹம்ஸா,ஜெர்மன். (முன்னால் உதைப் பந்தாட்ட வீரர்)
3) யூசுப், அமெரிக்கா.
4) சாகிர் நாயிக், இந்தியா.
5) மால்கம் எக்ஸ், அமெரிக்கா.
6) அஹ்மத் தீதாத், தென் ஆபிரிக்கா

யா அல்லாஹ் எம்மை கொண்டும் இஸ்லாத்தை பரவக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக

Tuesday, 21 January 2014

மம்தா குல்கர்னி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




10ஆண்டுகளுக்கு முன்பு மும்பை திரையுலகத்தை கலக்கி கொண் டிருந்த பிரபலநடிகை மம்தா குல்கர்னிஇஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்

கடந்த 2012 நவம்பர் 15 அன்றே அவர் இஸ்லாத்தை கொண்டாகவும்  ஒரு செய்தி கூறுகிறதுகடத்தல் வழக்கில் “துபை”யில் ஆயுள்  தண்டனை அனுபவித்து வந்தமும்பையை சேர்ந்த பிரபல வியாபாரியான “கோசுவாமி” என்பவரின் 5 நட்சத்திர ஹோட்டல், வர்த்தக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்தொழில்போன்றவைகளை கவனித்துக்கொண்டிருந்த மம்தா குல்கர்னி“கோசுவாமி”யை இஸ்லாத்தை தழுவ வைத்து, வைத்து, அவருடன் திருமணம் 

செய்து கொண்டார்.துபாய் நாட்டு சட்டப்படி “ஆயுள் தண்டனை” என்பது 25 ஆண்டு சிறை வாழ்க்கையை குறிக்கும், என்றாலும்  நன்னடத்தை காரணமாக முன்கூட்டி விடுதலை பெரும் வாய்ப்பும் உள்ளது.
இஸ்லாத்தை ஏற்பது, குறிப்பிட்ட அளவு குர்-ஆன் வசனங்களை மனனம் செய்வது உள்ளிட்ட காரியங்கள் விரைவான விடுதலைக்குவழி வகுக்கின்றன.இதன்படி, கோசுவாமியின் தொழில் துறைகளை இதன்படி,
கோசுவாமியின் தொழில் துறைகளை கவனித்து வந்த மம்தா குல்கர்னி,துபாய் சிறையிலிருந்த அவருக்கு இஸ்லாத்தை பற்றிய போதனைகளை வக்கீல் மூலம் எடுத்துரைத்து, அவரது விடுதலைக்கு
வழிவகுத்தார்.
இஸ்லாமிய முறைப்படி மம்தா – கோசுவாமி திருமணம் முடிந்து சில காலம் துபையில் தங்கியிருந்த தம்பதிகள், தற்போது “நைரோபி”யில்
தற்போது “நைரோபி”யில“நைரோபி”யில்இருப்பதாகவும் 
அவர்களது நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது.இதற்கிடையில், சினிமா நட்சத்திரங்களை வைத்து வெளி நாடுகளில் “கலை நிகழ்ச்சிநடத்தும்
மும்பை திரையுலக பிரமுகர்கள் சிலர்,மம்தாவை தொடர்பு கொண்டபோது, தான் முஸ்லிமாகிவிட்டதாகவும், இனிமேல் மேடைகளில் தோன்றும் நிகழ்ச்சிகளில், தான் பங்கேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ்காரணம்..!


அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ் காரணம்..!
போதைவஸ்து, மது, மாது, சூது, என சீரழிந்து கொண்டிருந்த அமெரிக்க சில வாலிபர்கள் இஸ்லாத்தை தழுவ முன்னாள் ஜனாதிபதி ஜோர் புஷ் காரணமாக இருந்திருக்கிறார்.
அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஜோர் புஷ் தனது ஒவ்வொரு உரையிலும் இஸ்லாத்தை விமர்சித்து பேசுவதை அவதானித்த அவ் வாலிபர்கள் முதற்தடவையாக "இஸ்லாம்" என்ற சொல்லை கேள்விப்படுகின்றனர். பின்னர் அது பற்றி அறிய விரும்பினர்.
வழமையாக google ளில் ஆபாச படங்களை தேடும் பழக்கத்தைக் கொண்ட அவர்கள் புனித இஸ்லாம் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்..
இறுதியில் புனித இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கு மக்களை அழைக்கும் தாயிகளாகவும் மாறியுள்ளனர்.. அல்லாஹ் நாடினால் காபிர்களைக் கொண்டும் இஸ்லாத்தை பரப்புவான்.
17:97.
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ (த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்.

Sunday, 19 January 2014

"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர்



"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். 
அமெரிக்காவில்  அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட்
எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் 
குறிப்பிட்டுள்ளார். இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான 
தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் 
ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 
2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத்தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார். "இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் 
சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது"- என பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார். பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த 
மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான 
இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார். இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு 
முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது 
என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது. Jesus was a Muslim, claims U.S. religions 
professor source: lankamuslim-org குர் ஆன் (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் 
நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; 
மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) 
தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; 
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. 3:47 قَالَتْ رَبِّ أَنَّىٰ

 يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ 3:47. 
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் 
தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் 
கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு 
காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது 
ஆகிவிடுகிறது.
” 19:20 قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا 19:20. அதற்கு அவர் (மர்யம்), 
“எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் 
நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார். 19:22 فَحَمَلَتْهُ 

فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِ19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன்
தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 19:27 فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا புதிய எற்படு மத்தேயு அதிகாரம் 1 18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் 
விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், 
அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று 
காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட 
யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய 
தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் 
மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் 
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் 
பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் 
பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் 
கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு
கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று 
பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் 
என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் 
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான 
குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.