இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது, இறைவனின் தூதராக அறியப்பட்ட முகமது நபி (ஸல்) அவர்கள் தான் அறிமுகபப்டுத்திய கொள்கைக்காக தன் சொந்த மக்களால்மிகவும் கொடூரமான முறையில் மக்கா நகரில் கொடுமைப்படுத்தப்படுகிறார். அந்த நகரின் அன்புக்கு உரியவாராய் 42 வருடங்கள் வாழ்ந்து வந்த நபிகள் நாயகம் அவர்கள் ,தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது. எல்லா மக்களும் சரி நிகர் சமமானவர்களே என்றது. இன வேறுபாடு கூடாது என்றது. அடிமை முறைகளை சமுதாயத்திலுருந்து வேர் அறுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ,ஒவ்வொரு இறைக் காரியங்களுக்கும் பகரமாக அடிமைகளை விடுதலை செய்து அவர்களின் உரிமைகளை கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த காலகட்டதில் அடிமை வைத்திருப்பது பெரும் செல்வம் வைத்திருப்பது போன்றதாகும், பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்களின் அன்பு தோழர்கள் அடிமைகளை விடுதலை செய்து ,உரிமையை விடுவதற்கு போட்டி போட்டனர். இன்னும் நபி அவர்கள் சமுதாயத்தின் கொடிய நோயாக இருக்கும் இன வேறுபாடுகளை களைவதற்கு தானே ஒரு முன்மாதிரியாய் மற்ற குலத்தவர்களிடம் திருமண உறவு செய்து கொண்டார். மேலும் தனது தோழர்களையும் கலப்புத்திருமனங்கள் செய்து கொள்ள ஆர்வம் மூட்டினார். அதன் மூலம் இன வெறுப்புகளை இஸ்லாமியர்களிடமிருந்து முழுமையாக களைந்தார். குல பெருமை கொள்வதை இறைவன் வெறுப்பதாக இஸ்லாமியர்களிடம் அறிவுறுத்தி ,கடும் எச்சரிக்கை செய்தார்கள். அடிமைத்தனம் ,இன வேறுபாடுகள்இல்லாத இஸ்லாம் அராபிய கண்டம் முழுவதும் வேகமாகப்பரவியது . முகமது நபி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த அரபு நாடுகளின் முதல் கலிஃபா (மக்கள் பிரதிநிதி) அபுபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலேயும், இரண்டாம் கலிஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் அடிமைத்தனங்களை முன் எப்பொதும் இல்லாத அளவிற்க்கு அரபு மன்னை விட்டு விரட்டினர். அதில் உமர் (ரலி) அவர்கள் அடிமைதனத்தை அரபு மன்னை விட்டு வேறறுக்க மிகவும் சிரத்தை கொண்டார்கள். அடிமைகளை முழுவதுமாய் விடுதலை செய்யும் சட்டத்தினை கொண்டுவந்தார், இன்னும் அடிமைகளை விடுதலை செய்வோருக்கும், அடிமைகளாய் இருந்தவர்களுக்கும் அரசு நிதிகளும் ,சன்மானங்களும் கொடுத்து மக்களை ஊக்குவித்தனர். இதற்கு முன்னால் அடிமைகளாய் இருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே இஸ்லாமியர்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்கஅறிஞர்களாக்கப்பட்டனர். தங்களுக்குள் திருமண உறவுகள் மேற்கொண்டனர். இன்னும் தங்களிடம் பணிக்கு இருக்கும் வேலைக்காரர்களுக்கு தன் எஜமானர்கள் மிகவும் மரியாதைக்கொடுக்கும் படியும் , அவர்களை தங்களுக்கு சமமாகாத்தான் நடத்தபட வேண்டும் என்றார் ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்கள். அதற்ககு தானே முன் மாதிரியாய் இருந்தார். எஜமானர்களும் ,பணியாளர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அடிமைகளிடம் உறவுகள் கொண்டு வாழ்ந்து வருவதை தடை செய்து அவர்களை திருமணம் செய்து கண்ணியம் அளித்து அவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உமர் அவர்களின் காலத்திலேயே பரந்து விரிந்த அரபு உலகம் முழுவதும் ஒரு அடிமை கூட இல்லை என்று பிரகடனபடுத்தும் அளவிற்கு அடிமை ஒழிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. 1400 வருடஙகளுக்கு முன் தொடங்கிய அடிமை சாதிய ஒழிப்பு இன்று வரை இசுலாத்தில் தொடர்ந்து வருகின்றது. அதற்கு காரணம் இஸ்லாத்தின் பார்வை ஆன்மீகத்தினைத் தாண்டி சமூக சீர்திருத்ததின் மீது கொண்ட ஆளுமையாகும். அதன் வீரியம் கொஞ்சமும் குறையாமல் ஆன்மீகத்துடன் ஒன்றாக பினைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் உலகம் போற்றும் உத்தமர் காந்தியும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமையும் அரசு உமரின் ஆட்சியை போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். சமூகதின் நோய் சாதியம் ,அச்சாதியின் பிறப்பிடமே மதங்கள் ,எனவே சமூக விடுதலை பெற ,சாதியம் ஒழிக்கப்படவேண்டும் ,அதனாலே எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகுத்தறிவாளன் அறியாமை இருள் அகற்ற வந்த தந்தை பெரியார் கூட சாதியம் அழித்து ,சமூக விடுதலை காண இஸ்லாம் ஒன்றே அருமருந்து என்றார். அடிமைத்தனம் கலைந்து , ஏகாதிபத்திய ,சாதிய விலங்குகளை உடைத்தெரிந்து உண்மையான சமூக விடுதலை காணதுடிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் மத,கலாச்சார கோட்பாடுகளை சுயஆராய்ச்சி செய்வது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது, இறைவனின் தூதராக அறியப்பட்ட முகமது நபி (ஸல்) அவர்கள் தான் அறிமுகபப்டுத்திய கொள்கைக்காக தன் சொந்த மக்களால்மிகவும் கொடூரமான முறையில் மக்கா நகரில் கொடுமைப்படுத்தப்படுகிறார். அந்த நகரின் அன்புக்கு உரியவாராய் 42 வருடங்கள் வாழ்ந்து வந்த நபிகள் நாயகம் அவர்கள் ,தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது. எல்லா மக்களும் சரி நிகர் சமமானவர்களே என்றது. இன வேறுபாடு கூடாது என்றது. அடிமை முறைகளை சமுதாயத்திலுருந்து வேர் அறுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ,ஒவ்வொரு இறைக் காரியங்களுக்கும் பகரமாக அடிமைகளை விடுதலை செய்து அவர்களின் உரிமைகளை கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த காலகட்டதில் அடிமை வைத்திருப்பது பெரும் செல்வம் வைத்திருப்பது போன்றதாகும், பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்களின் அன்பு தோழர்கள் அடிமைகளை விடுதலை செய்து ,உரிமையை விடுவதற்கு போட்டி போட்டனர். இன்னும் நபி அவர்கள் சமுதாயத்தின் கொடிய நோயாக இருக்கும் இன வேறுபாடுகளை களைவதற்கு தானே ஒரு முன்மாதிரியாய் மற்ற குலத்தவர்களிடம் திருமண உறவு செய்து கொண்டார். மேலும் தனது தோழர்களையும் கலப்புத்திருமனங்கள் செய்து கொள்ள ஆர்வம் மூட்டினார். அதன் மூலம் இன வெறுப்புகளை இஸ்சலாமியர்களிடமிருந்து முழுமையாக களைந்தார். குல பெருமை கொள்வதை இறைவன் வெறுப்பதாக இஸ்லாமியர்களிடம் அறிவுறுத்தி ,கடும் எச்சரிக்கை செய்தார்கள். அடிமைத்தனம் ,இன வேறுபாடுகள்இல்லாத இஸ்லாம் அராபிய கண்டம் முழுவதும் வேகமாகப்பரவியது . முகமது நபி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த அரபு நாடுகளின் முதல் கலிஃபா (மக்கள் பிரதிநிதி) அபுபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலேயும், இரண்டாம் கலிஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் அடிமைத்தனங்களை முன் எப்பொதும் இல்லாத அளவிற்க்கு அரபு மன்னை விட்டு விரட்டினர். அதில் உமர் (ரலி) அவர்கள் அடிமைதனத்தை அரபு மன்னை விட்டு வேறறுக்க மிகவும் சிரத்தை கொண்டார்கள். அடிமைகளை முழுவதுமாய் விடுதலை செய்யும் சட்டத்தினை கொண்டுவந்தார், இன்னும் அடிமைகளை விடுதலை செய்வோருக்கும், அடிமைகளாய் இருந்தவர்களுக்கும் அரசு நிதிகளும் ,சன்மானங்களும் கொடுத்து மக்களை ஊக்குவித்தனர். இதற்கு முன்னால் அடிமைகளாய் இருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே இஸ்லாமியர்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்கஅறிஞர்களாக்கப்பட்டனர். தங்களுக்குள் திருமண உறவுகள் மேற்கொண்டனர். இன்னும் தங்களிடம் பணிக்கு இருக்கும் வேலைக்காரர்களுக்கு தன் எஜமானர்கள் மிகவும் மரியாதைக்கொடுக்கும் படியும் , அவர்களை தங்களுக்கு சமமாகாத்தான் நடத்தபட வேண்டும் என்றார் ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்கள். அதற்ககு தானே முன் மாதிரியாய் இருந்தார். எஜமானர்களும் ,பணியாளர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அடிமைகளிடம் உறவுகள் கொண்டு வாழ்ந்து வருவதை தடை செய்து அவர்களை திருமணம் செய்து கண்ணியம் அளித்து அவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உமர் அவர்களின் காலத்திலேயே பரந்து விரிந்த அரபு உலகம் முழுவதும் ஒரு அடிமை கூட இல்லை என்று பிரகடனபடுத்தும் அளவிற்கு அடிமை ஒழிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. 1400 வருடஙகளுக்கு முன் தொடங்கிய அடிமை சாதிய ஒழிப்பு இன்று வரை இசுலாத்தில் தொடர்ந்து வருகின்றது. அதற்கு காரணம் இஸ்லாத்தின் பார்வை ஆன்மீகத்தினைத் தாண்டி சமூக சீர்திருத்ததின் மீது கொண்ட ஆளுமையாகும். அதன் வீரியம் கொஞ்சமும் குறையாமல் ஆன்மீகத்துடன் ஒன்றாக பினைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் உலகம் போற்றும் உத்தமர் காந்தியும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமையும் அரசு உமரின் ஆட்சியை போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். சமூகதின் நோய் சாதியம் ,அச்சாதியின் பிறப்பிடமே மதங்கள் ,எனவே சமூக விடுதலை பெற ,சாதியம் ஒழிக்கப்படவேண்டும் ,அதனாலே எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகுத்தறிவாளன் அறியாமை இருள் அகற்ற வந்த தந்தை பெரியார் கூட சாதியம் அழித்து ,சமூக விடுதலை காண இஸ்லாம் ஒன்றே அருமருந்து என்றார். அடிமைத்தனம் களைந்து , ஏகாதிபத்திய ,சாதிய விலங்குகளை உடைத்தெரிந்து உண்மையான சமூக விடுதலை காணதுடிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் மத,கலாச்சார கோட்பாடுகளை சுயஆராய்ச்சி செய்வது இன்றைய கால கட்டத்தின் தேவையாகும்.