இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த பதிவுகள் மீளாய்வு செய்யப் படல் வேண்டும் *********************************************
இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்.
போர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது இலங்கையில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த அரேபிய வழித் தோன்றல்களை “மூர்ஸ்” என அழைத்தார்கள், அதற்கான பிரதான காரணம் ஐரோப்பாவில் கடல் வழி வர்தகத்தினூடாகவும் மேற்கு நோக்கிய இஸ்லாமிய பரம்பலினூடாகவும் குடிபெயர்ந்த அரேபிய மற்றும் ஆபிரிக்க குடிகள் வரலாற்றில் “மூர்ஸ்” என அழைக்கப்பட்டமையாகும்.
MOORS$போர்த்துக்கல் எனும் நாடு சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.பி 711-1249) இஸ்லாத்தைப் பின்பற்றிய ‘மூர்ஸ்’ என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஒரு இனத்தின் ஆளுகைக்குட்பட்டு இருந்ததும், ‘இலங்கைச் சோனகர்’ போர்த்துக்கீசரால் ‘மூர்ஸ்’ என அழைக்கப்பட்டு வந்தமையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.
ஆனால், போர்த்துக்கேயரின் இலங்கை வருகைக்கு (1505) முன்னர் இலங்கையில் “சுவனர்கள்” அல்லது “சோனகர்கள்” என அழைக்கப்பட்ட பூர்வீகக் குடிகள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இலங்கையில் ஏற்கனவே வாழ்ந்த தமிழை தாய் மொழியாக கொண்டிருந்த சுவனர்கள் அல்லது சோனகர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அரேபிய வழித் தோன்றல்கள் காரணமாக இருந்திருக்கலாம்.
தென்னிந்திய கரையோரம் தழுவிய கடல் வழி வர்த்தகத்தில் தமிழர்களினதும் கேரளத்து மலையாளிகளினதும் செல்வாக்கு இருந்தமையால் அவர்களூடாக இஸ்லாமும், அறபுத் தமிழும் இலங்கை சோனகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகளே அதிகம் காணப் படுகின்றன.
மாறாக வர்த்தக நோக்கத்திற்காக இலங்கை வந்த அறபிகள் விஜயனின் வருகைக்குப் பின்னர் இலங்கை வந்த ஆரிய சிங்கள வனிதையரை திருமணம் செய்து அறபுத் தந்தை மாருக்கும் சிங்கள தாய்மாருக்கும் பிறந்த ஒரு வம்சாவழியினராக இலங்கை முஸ்லிம்களை இனம் காண்பது வரலாற்றுத் தவறாகும்.
பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமே இருருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Moors 1அதுமாத்திரமன்றி, இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, மகாவம்சம் தருகின்ற தகவலின்படி குறைந்ததது 2300 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் சோனகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகின்றது.
இதனால்தான் முதலாவது இலங்கைப் பிரதமரான டி.எஸ் சேனாநாயக்க போன்ற தலைவர்களே நேர்மையாக, இலங்கைத்திரு நாட்டில் சிங்கள இனம் வாழும் கால அளவிற்கு யோனக மக்களின் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றிருக்கின்றார். (The Sunday Times Plus Magazine, 1 February 1998. 50 Years (Freedom) Anniversary Edition.)
குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-
அதே போன்று, கிரேக்க மாலுமி “ஓனோஸ் கிறிட்டோஸால்” என்பவரால் கி.மு 326ல் வரையப்பட்ட இலங்கை வரைபடத்தில் புத்தளம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் ‘சோனாள்களின் குடியேற்றம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்’ என்கின்ற தனது நூலில் பக் 5-8ல் குறிப்பிடுகின்றார்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துக்குரிய இக்குறிப்பையும், தொலமியின் வரலாற்றுக்குறிப்பிலிருந்தும் பார்க்கும் போது இலங்கைச் சோனகர்களின் வரலாறு கிட்டத்தட்ட 2500க்கு மேற்பட்ட கால வரலாற்றை உடையது என்பதையும் சோனகர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
அறேபியர்களதும் பின்னர் இஸ்லாத்தின் வருகைக்கும் முன்பிருந்தே சோனகர்கள் இலங்கையில் பூர்வீகத்தை கொண்டிருந்தனர்.
இலங்கை சோனகர்களின் தாய் மொழி ஏன் தமிழ் மொழியாக இருந்திருக்கின்றது, அவர்கள் ஏன் அறபு மொழியையோ, அல்லது சிங்கள மொழியையோ தாய் மொழியாக கொண்டிருக்க வில்லை, ஏன் அவர்கள் மத்தியில் அறபுத் தமிழ் புழக்கத்தில் இருந்தது என்ற கேள்விகளிற்கும் வரலாற்று ஆய்வாளர்கள் விடை கண்டேயாக வேண்டும்.
பட்டுப்பாதை எனும் மேற்காசியாவிலிருந்து கிழக்காசியா (சீனா) வரையிலான சர்வதேச கடல் வழி வணிப பாதையை மேற்கில் அரபிகளும் கிழக்கில் தமிழர்களும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததனால் அறபு திராவிட உறவு மேலோங்கியிருந்தது.
கேரளா மற்றும் தமிழ் நாட்டுடன் மாத்திரமன்றி இலங்கையில் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை அறபிகள் கொண்டிருந்தனர், ஆரிய சிங்களவர்களின் வருகையோடு அவர்களோடும் அறபு வணிகர்கள் நல்லுறவை வளர்த்துக் கொண்டனர்.
ceylon moorsஅறபிகள் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவிலும் இலங்கயிலுமிருந்த திராவிடர்களோடு கொண்டிருந்த வர்த்தக உறவு நாளடைவில் பிராந்தியத்தில் இஸ்லாத்தின் பரவலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றது, அதனால் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கின்றார்கள்.
எமது தாய்மாரின் மொழி தமிழாகவும் இருந்ததோடு மாத்திரமல்லாது எங்களுக்கு அறபுத் தமிழ் எனும் தனித்துவமான ஒரு மொழி வழக்கு கூட இருந்திருக்கின்றது.
வரலாற்றில் ஒல்லாந்தரின் ஆங்கிலேயரின் வருகையோடு எவ்வாறு சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள் தோற்றம் பெற்றார்களோ அதேபோன்று சோனகர்கள் மற்றும் அறபு வழித் தோன்றல்கள் மூலம் இஸ்லாம் இலங்கையில் பரவியுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் சகலரும் அறபு அல்லது அறபு சிங்கள பூர்வீகத்தை கொண்டவர்கள் என்ற வரலாற்று ஆய்வுகள் மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப் பட வேண்டும்.
Moor-Picசோனகர்கள் (சுவனர்கள் ) தமிழர்களா என்ற கேள்விகளோடு பல ஆய்வுகளும் அங்காங்கே தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் அவை முழுமையான நடுநிலமையான ஆய்வுகளாக இன்னும் வெளி வரவில்லை என்பதே உண்மையாகும்.
அதேபோன்றே இலங்கையில் அறேபியர்களதும் ஆரியர்களதும் வருகைக்கு முன்னர் வாழ்ந்த சுதேசிகளான நாகர்களே பெரும்பாலும் அறபு மற்றும் தமிழ் கடல் வழி வர்த்தக சமூகத்தினருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் வரலாற்று தடயங்கள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முஸ்லிம்களது பூர்வீகம் மிகவும் விரிவாக ஆழமாக பல்வேறு பரிமாணங்களில் ஆராயப் பாடல் வேண்டும் , பல்கலைக் கழக முஸ்லிம் சமூகத்தினையும் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்று பீடமும் இந்த துறையில் முனைப்பான ஆய்வு முயற்சிகளில் இறங்க வேண்டும்.
இலங்கை சோனகர்: சில வரலாற்றுக் குறிப்புக்கள்:
தமிழ்நாட்டிலுள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் சோனகர் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. சி.கந்தையாபிள்ளை குறிப்பிடுவது போன்று காயல்பட்டினமும், பொன்பரப்பி ஆற்றுப் படுக்கையும் இணைந்த நிலப்பகுதியே சோனகம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் உருவான இந்திய தமிழ் இலக்கியங்களிலும், வட இந்திய இலக்கியங்களிலும் சோனகர் என்னும் வார்த்தைப் பிரயோகம் இடம் பெற்றிருக்கின்றது.
பண்டுகாபய மன்னன் (கி.மு.377 – 307) அனுராதபுரத்தில் மேற்கு வாசலுக்கருகில் சோனகர்களுக்கு என்று ஒரு நிலப்பகுதியை ஒதுக்கிக் கொடுத்திருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகா அலக்சாந்தருடைய கட்டளைப்படி கிரேக்கத் தளபதி ஒனொஸ் கிறிட்டோஸ் (கி.மு.327) தயாரித்த பூகோளப் படத்தில் இலங்கை அரேபியரைக் குறிப்பிடுகையில் ‘சோனை'(sonai) என்னும் பெயரையும், அவர்கள் குடியிருந்த பிரதேசத்திற்கு (Sonai Potomas) என்ற பெயரையும் பிரயோகித்திருக்கிறார். (அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1992. பக்.20, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, கொழும்பு)
கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது புத்தளம் (முஸலிம்கள் வரலாறும் வாழ்வியலும். எம்.எஸ்.எம்.அனஸ் (2009) குமரன் புத்தன இல்லம், கொழும்பு.பக்.38)
KONICA MINOLTA DIGITAL CAMERA
எகிப்திய கணித வல்லுநர் க்ளோடியஸ் தொலமி (Claudius Ptolomy) கி.பி.140 ல் வரைந்த உலக வரைபடத்தில், இலங்கை இன்றிருப்பதை விட பதினான்கு மடங்கு பெரிதாக வரையப்பட்டு தப்ரபேன் (Taprobane) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.[8] பழைய கற்காலம் முழுவதும் இணைந்தே இருந்த இலங்கையும் இந்தியாவும் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிந்துள்ளன. இலங்கையில் முதல்முதலாகக் குடியேறிய மக்கள் யாராயினும் இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி வழியாக நடந்தே வந்துள்ளனர். (புத்தளம் முஸலிம்கள் வரலாறும் வாழ்வியலும். எம்.எஸ்.எம்.அனஸ் (2009) குமரன் புத்தன இல்லம், கொழும்பு.பக்.38)
கிளோடியஸ் தொலமி கி.பி. 150ல் இலங்கையை உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைந்தார். இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆவில் ஈடுபட்டிருந்த ஓனஸ் கிரிட்டஸ் என்பவரிடமிருந்து தொலமி பெற்ற தக வல்களும் புவியியல் ஆவுக் குறிப்புக்களுமே தொலமி இலங்கையையும் உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைவதற்கு உதவியாக அமைந்தது. இலங்கையின் வரலாறு பற்றிய ஐரோப்பியர்களின் தேசப் படங்களில் தொலமியின் வரைபடமே காலத்தால் முந்தியதும் மிகவும் தொன்மை யானதுமாகும்.
இலங்கையை தப்ரபேன் என்றழைக்கும் தொலமி இலங்கை யின் மிகப் பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை பாசில் பலூசியஸ் (பாரசீக நதி) என்றும் தெதுரு ஓயாவை சோனா பலூசியஸ் (அரேபிய நதி) என்றும் ஜின் கங்கையை அஸனாக் பலூலியஸ் (எதியோபிய நதி) என்றும் குறிப் பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோரங்களில் பாரசீக, அறாபிய, மற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சிதறலாகவும் வேறு சில சில இடங்களில் சேறிவாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார்.
The History of Commerce in Indian Ocean என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப் பகுதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம்பெற்றன” என்கிறார்.
“கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முற்றாக அவர்களின் (அரபிகளின்) கைகளிலேயே இருந்தது. கிறிஸ்தவ யுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதி களில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்.” (Thomas Arnold – Preaching of Islam)
அரேபியர்களின் கடல் கடந்த வணிகம் இந்தியத் துணைக் கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக் காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.
பழங்கால கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களும் இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் முதன் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்க ளுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் எனக் குறிப்பிடுகின்றது. பிலைனிங் (கி.பி.1) ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோ பிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் சேல்வாக்கினை உறுதி சேகின்றனர். கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் சேல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.
Moorsஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிகத்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென் கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும் அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்த கத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக் கண்டத் துடனான வர்த்தகத்தில் சேல்வாக்குச் சேலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
இக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் “அரேபியர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர், கள்ளிக்கோடு, கொல்லம், காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும் மலபாரின் ஏனைய துறைமுகங்களி லும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்ச” என்று குறிப்பிடுகின்றார்.
இந்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முன்னரே இலங்கை யில் அரேபியர் குடியேற்றங்கள் இருந்ததையும் அரேபியர் வியாபாரத்திற்கு செல்வாக்கு பெற்றிருந்ததையும் காட்டுகின்றன.