Saturday, 19 April 2014

அன்னப்பொட்டு என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!

ராமநாதபுரத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அன்னப்பொட்டு....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னப்பொட்டு என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை மர்யம் ஹிதாயா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

Friday, 18 April 2014

சுகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுகன் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிளும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.



கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டைச் சார்ந்த தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரை சாதிக் என்றும் தனது மனைவியின் பெயரை சுமையா என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

இந்த சாதிக் - சுமையா குடும்பத்தினருக்கு இம்மை மற்றும் மறுமை வாழ்வு வெற்றி பெற பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

Sunday, 13 April 2014

ஜெர்மனில் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு வந்த இந்த சகோதரர்களின் தாவா பணி


ஜெர்மனில் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு வந்த இந்த சகோதரர்களின் தாவா பணியை பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது....
கையில் குர்ஆனோடு நிற்கும் இவர்கள் தெருவில் கடந்த செல்பவர்களிடம் அழகிய முறையில் உரையாடி இலவச குர்ஆன் பிரதிகளையும் தருகிறார்கள்..

மாஷா அல்லாஹ் !! 

தஜ்ஜால் தோன்றும் காலம் இறுதி நாளின் சமீபம்

பெயர் : தஜ்ஜால்
புனைப்பெயர் : மஸீஹ் தஜ்ஜால்
குடும்பம் : குழந்தை பிறக்காத மலடன்
தோன்றும் காலம் : இறுதி நாளின் சமீபம்

தோன்றும் இடம் : மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா
நாடுக்களுக்கிடையே உள்ள குரஸான் (ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில்.

அவனது இனம் : யூத இனம்

வாழும் காலத்தின் அளவு : நாற்பது நாட்கள்

விளக்கம் : அவன் வாழும் நாற்பது நாளில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும், மற்றொரு நாள் ஒரு வாரம் போன்றும் இருக்கும். மீதமுள்ள நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றும் இருக்கும் .

அவனது தோற்றம் :

1. திடகாத்திரமான இளைஞன், சிவப்பானவன் .

2. மரக்கிளை போன்று அடர்த்தியான சுருட்டை முடி உடையவன் .

3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண் நிலை குத்திய நிலையில் பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன் .

4. குட்டையானவன், குண்டானவன் .

5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்
கொண்டவன்.

6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்

அவன் பிரவேசிக்கும் இடம் ; மக்கா, மதீனா,தூர் சீனா மலை, பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளும்.

அவனது அதிசய வித்தைகள் ;

1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான் .

2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும் வைத்திருப்பான் .

3. மலை போன்ற ரொட்டிகளை (உணவுப்பொருட்களை) வைத்திருப்பான்.

4. மழை பொழிய வைப்பான்.

5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட
நோய்களை குணப்படுத்துவான்.

6. ஒருவனை ஒரு முறை மட்டும் கொன்று விட்டு
மீண்டும் உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய இயலாது)

7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்
கொழுக்க வைப்பான்.

8. பூமியில் புதையல் உள்ள இடங்களை
அறிந்திருப்பான்.

அவனது கொள்கை : தானே இறைவன் என வாதிட்டு, மக்களை ஈமான் கொள்ளச் செய்வது.

அவனது மரணம் :

இஸ்ரேலின் தலைநகரான டெல்அவிவ்வுக்கு அருகில் உள்ள லுத்து என்னும் இடத்தில் வைத்து மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா நபி அவர்கள் அவனைக் கொல்வார்கள்.

சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள், தினமும் உங்களின் தொழுகையில் அல்லாஹ்விடம் தஜ்ஜாலின் தீங்கில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள், அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.