Saturday, 26 April 2014

கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள் . கோபத்தை எப்படி குறைப்பது ?




ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப
 ்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக…

சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது
உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 15 வழிகள்

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

14.. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

15. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்


டென்மார்க்கில் 2012இலும் இம்முறை 2018 இல் ஐஸ்லாந்திலும் முஸ்லிம்கள்  21மணி நேர நோன்பை கடைப்பிடித்தனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம் கள் ஆவர்.

அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.
அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும்,நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. அங்கு 20 மணிநேரம் நோன்பு நோற்கவேண்டும் என அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளனர். சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.


உலகநாடுகளில் நோன்பு இருக்கவேண்டிய நேரங்கள்..
*துருக்கி- 17.5மணித்தியாலம்
*சிரியா-16மணித்தியாலம்
*லெபனான்-16மணித்தியாலம்
*பலஸ்தீன்-15மணித்தியாலம்
*ஈராக்-15மணித்தியாலம்
*பஹ்ரைன்-15மணித்தியாலம்
*குவைட்-15மணித்தியாலம்
*கட்டார்-15மணித்தியாலம்
*சவூதிஅரேபியா-15மணித்தியாலம்
*ஐக்கிய அரபு இராச்சியம்-15மணித்தியாலம்
*மொரோக்கோ-16மணித்தியாலம்
*டியூனிசியா-16மணித்தியாலம்
*அல்ஜீரியா-16மணித்தியாலம்
*லிபியா-16மணித்தியாலம்
*எகிப்து-16மணித்தியாலம்
*இத்தாலி-17மணித்தியாலம்
*கிரேக்கம்-17மணித்தியாலம்
*ஸ்பைன்-17மணித்தியாலம்
*போர்த்துக்கல்-17மணித்தியாலம்
*பிரான்ஸ்-17மணித்தியாலம்
*சுவீடன்-20மணித்தியாலம்
*டென்மார்க்-20மணித்தியாலம்
*லக்ஸம்பேர்க்-17.5மணித்தியாலம்
*ரஷ்யா-20மணித்தியாலம்
*உக்ரைன்-17மணித்தியாலம்
*கொஸ்கஸ்-17மணித்தியாலம்
*ஒல்லாந்து-17மணித்தியாலம்
*பெல்ஜியம்-17மணித்தியாலம்
*சுவிஸர்லாந்து-17.5மணித்தியாலம்
*அவுஸ்ரியா-17.5மணித்தியாலம்
*பிரேசில்-9.5மணித்தியாலம்
*ஆர்ஜன்டீனா-9மணித்தியாலம்
*தென்ஆபிரிக்கா-10மணித்தியாலம்
*மேற்கு ஆபிரிக்கா-13.5மணித்தியாலம்
*ஐஸ்லாந்து-21மணித்தியாலம்
*ஜெர்மன்-20மணித்தியாலம்
*போலாந்து-20மணித்தியாலம்
*பிரித்தானியா-20.5மணித்தியாலம்
*நோர்வே-20மணித்தியாலம்
*பின்லாந்து-20மணித்தியாலம்
*அவுஸ்ரேலியா-9.5மணித்தியாலம்
*கனடா-19மணித்தியாலம்
*ஐக்கியா அமெரிக்கா-20மணித்தியாலம்
*நியூஸிலாந்து-9.5மணித்தியாலம்
*இந்தோனேசியா-12மணித்தியாலம்
*மலேசியா-12மணித்தியாலம்
*இலங்கை-14மணித்தியாலம்
*இந்தியா -14மணித்தியாலம்
*ஆப்கானிஸ்தான்-17மணித்தியாலம்
*பாகிஸ்தான்-15.5மணித்தியாலம்
*ஈரான்-17மணித்தியாலம்
*மாலைத்தீவு-13.5மணித்தியாலம்
*பங்களாதேஷ்-15மணித்தியாலம்
*யெமன்-12.5மணித்தியாலம்
*சீனா-14மணித்தியாலம்
*ஜப்பான்-17மணித்தியாலம்
*தென்கொரியா-16.5மணித்தியாலம்
*சிங்கப்பூர் -14மணித்தியாலம்
*பிலிப்பைன்ஸ்-14மணித்தியாலம்
*புரூனை-13மணித்தியாலம்
*தாய்லாந்து-14மணித்தியாலம்

குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட நேரவலயங்களைக் கொண்ட நாடுகளின் வெவ்வேறு பகுதிகளில் நோன்பு இருக்க வேண்டிய நேரங்கள் வேறுபடும்

Friday, 25 April 2014

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை !!


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.


இரத்தம் சுத்தமடைய :-

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு :-

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட :-

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

கிருஷ்ணவேணி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருஷ்ணவேனி. அல்ஹம்துலில்லாஹ் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 02.11.12 வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ணவேணி என்கின்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை மர்யம் என்று மாற்றிக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் 

புதுக் கோட்டையில் ஜோதி என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்



புதுக்கோட்டையில் ஜோதி என்ற சகோதரர்இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

புதுக்கோட்டையில் 09.08.12 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜோதி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அவருக்கு பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரான் ஒன்று கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தைதழுவியது...!




ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...!

துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. 

இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்றது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து தாங்களாகவே இஸ்லாமிய பெயர்களை சூட்டி கொண்டதாகவும், இவர்களுக்கு இங்கு யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை என்றும் இவர்களின் ஆர்வம் தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறி, ஒரு கைப்பெட்டி நிறைய இஸ்லாமிய வாழ்க்கை புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியதும் இவர் இங்குள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் கடந்த இரண்டு வருடமாக தான் இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும் குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு அஹமது தீதாத், ஜாகீர் நாயக் மற்றும் யூசுப் எஸ்டேட் போன்ற மத வழிகாட்டிகளின் பேச்சுக்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை இந்தியாவில் உள்ள தங்களின் மற்ற உறவினர்களுக்கு தெரியும் என்றும், இதைபற்றி அவர்கள் ஒன்றும் கூறவில்லை என்றும், ஊரில் உள்ள அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாமும் இவர்களுக்காக துவா செய்து இவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்று அதன் தூய வடிவில் வாழ துவா செய்வோம்.

திருகோணமலை ஈச்சிலம்பத்தை நவரத்ன ராஜா இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .



இலங்கை திருகோணமலை மாவட்டம் ,பூனகார் ஈச்சிலம்பத்தை வசிப்பிடமாக கொண்ட நவரத்னராஜா) புனித இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக்கொண்டார் . அப்துல் ராசிக்  அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்களின் அல்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது

Thursday, 24 April 2014

வர்கீஸ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்




பல்லாவரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வர்கீஸ்

காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 18-11-2012 அன்று வர்கீஸ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
=




மீனா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று க்கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

கள்ளக்குறிச்சி TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி மீனா............!!


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 24.11.2012 அன்று மீனா என்ற சகோதரி புனிதமிக்க, சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தமது பெயரை சபினா என மாற்றிக் கொண்டார்கள்,


அல்ஹம்துலில்லாஹ்............!!

Wednesday, 23 April 2014

3 ஆயிரம்பேரை இஸ்லாத்தில் இணைத்த முன்னாள் கரசேவகர்...........!!


மூன்று ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த முன்னாள் கரசேவகர்...........!!

எடுங்கள் கடப்பாறையை.... உடையுங்கள் மசூதியை.........!!

அன்று.....

தோட்தே... தோட்தே... ( தகருங்கள்.... தகருங்கள்....) என்று பாபர் மசூதியை இடிக்க சீறி பாய்ந்தவர் தான் பல்பீர்சிங்....

இன்று.....

ஏக் ஹை... ஏக் ஹை... (ஒரே இறைவன்.... ஒரே இறைவன்....) என்று முழுங்குகிறார் முஹம்மது அமீராக......

பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பல்பீர்சிங் புனிதமிக்க இஸ்லாத்தை தழுவி, தன்னுடைய முயற்சியால் 3 ஆயிரம் பேரை இஸ்லாத்தை தழுவ செய்துள்ளார்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!

மணி என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

சவூதி TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணி..........!!


சவூதி அரேபியா ஜித்தா மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் காட்டு பரமக்குடியை சேர்ந்த சகோதரர் மணி அவர்கள் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள், 


தபூக் கிளை தலைவர் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் மார்க்கத்தை பற்றி விளக்கி கூறினார்கள், மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் உள்ளிட்ட நூல்களை வழங்கினார்கள்


Facebook மூலம் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் தினகரன்...........!!


            எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.............!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் தினகரன் என்ற சகோதரர் வசித்து வருகிறார், இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார், இவர் இன்டர்நெட் உபயோகிக்கும் பழக்கம் உடையவர்.


இன்னிலையில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தற்கொலை செய்து கொண்டதாக சாதிக் பாஷா அவர்களின் செய்தி பத்திரிக்கையில் வந்ததை பார்த்து தனது முகநூல் (facebook) நண்பரான சவூதி அரேபியா ரியாத்தில் பணி புரிந்துவரும் கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ.சபியுல்லாஹ் (Abu Usama ) என்பவரிடம்

தற்கொலை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா ? என்ற முதல் கேள்வியை வைக்கின்றார்?

அதற்கு பதில் கூறி மேலும் இஸ்லாத்தை பற்றி கூறி உள்ளார் சகோ.சபியுல்லாஹ்...


அதன் பின் பல்வேறு நாட்களில் இஸ்லாத்தை பற்றிய சகோதரர் தினகரனின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை தொடர்ந்து முகநூல் மூலமே தஃவா செய்து கொண்டிருந்தார் சகோ.சபியுல்லாஹ்...


இந்நிலையில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் கடலூர் நகர செயலாளர் சகோ.ஷாநவாஸ் அவர்களுக்கு போன் செய்து தினகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதாக கூறி இருக்கின்றார் உங்களை நேரில் பார்க்க சொல்லி இருக்கிறேன் என கூறினார்.


அதன் பின் சகோ.தினகரன் அவர்களும் நேரில் வந்தார், வந்தவர் நான் தற்போது இருக்கும் மதத்தில் மிகுந்த கடவுள் பக்தி உடையவனாக இருந்தேன். ஆனால் இறை திருப்தியை என்னால் அங்கே உணர முடியவில்லை. ஒரு வருட காலமாகவே மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு முடிவு கட்டி இன்று இஸ்லாத்தை ஏற்க வந்துள்ளேன் என கூறினார்.


அவருக்கு இஸ்லாம் சம்பந்தமாக TNTJ நிர்வாகிகள் மூலம் மேலும் தஃவா செய்யப்பட்டது. அதன்பின் அவர் அணிந்திருந்த தாயத்து மற்றும் மத சம்பந்தப்பட்ட மோதிரம் ஆகியவைகள் அவரிடமிருந்து அவரின் முழு விருப்பத்தோடு அகற்றப்பட்டது.


அதன் பின் நேற்று 11.12. 2012 அன்று TNTJ நிர்வாகிகள் முன்னிலையில் அந்த சகோதரர் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும்

அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் தான் என்றும் உளபூர்வமாக ஏற்றுகொள்வதாக கூறி சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்டு அப்துல்லாஹ் என்றும் தனது பெயரை மாற்றம் செய்துக்கொண்டார்,

Facebook - முகநூல் மூலம் பல்வேறு தீமைகள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் அதே முகநூலை சத்திய இஸ்லாத்திற்கான பிரச்சாரகளமாகஆக்கி செயல்பட்டால் நிறைய நன்மைகள் அடையலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.


(இவருக்கு தஃவா செய்த சகோதரர் சபியுல்லாஹ் அவர்களின் சொந்த இடத்தில்தான் ஆயங்குடி TNTJ மர்கஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது)


புகைப்படம் மற்றும் செய்தி: D.முத்துராஜா (கடலூர் மாவட்ட TNTJ தலைவர்)

     

முருகன் என்ற சகோதரரின் குடும்பம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர்.




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

புளியந்தோப்பு TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் முருகன் குடும்பத்தினர்............!! 


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையின் சார்பில் கடந்த 25.11.12 அன்று முருகன் என்ற சகோதரரின் குடும்பம் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு முருகன் என்ற பெயர் இப

்ராஹிம் என்றும் மனைவி நதியா பெயர் கதிஜா என்றும் மகன் பிரதிஸ் பெயர் இஸ்மாயில் என்றும் மாற்றம் செய்து கொண்டனர்.

இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது,


அல்ஹம்துலில்லாஹ்............!!

புனிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

பெரியப்பட்டிணம் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி புனிதா...........!! 


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 23-6-2011 அன்று புனிதா என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆஃபியா என மாற்றிக் கொண்டார். 


இவருக்கு கிளை சார்பாக இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்..........!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

சவூதி அரேபியா TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய 5 பிலிப்பைன்ஸ் சகோதரிகள்..........!!


இறைவனின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையில் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 5 கிறித்தவ சகோதரிகள் புனிதமிக்க மார்க்கமான இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்.





ஞானசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


சேப்பாக்கம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஞானசேகரன்

தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 10/11/2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது. இதன் பலனாக கடந்த 18/11/2012 அன்று ஞானசேகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று அனீஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அவருக்கு ”குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை” மற்றும் ”துஆக்களின் தொகுப்பு” ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது. 

அசோக் என்ற சகோதரர இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்

       

 எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!


கே.கே.நகர் TNTJ யில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் அசோக்............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே.நகர் கிளையில் கடந்த 08.11.12 அன்று அசோக் என்ற சகோதரர் புனிதமிக்க, சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்கள்,

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாத்தின் அடிப்படை கல்வி, துஆகளின் தொகுப்பு, மனனம் செய்வோம், நபிவழிதொழுகை ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்............!!
       



வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


பேரணாம்பட்டு TNTJ கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வேணுகோபால் அல்ஹம்துலி்ல்லாஹ்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!

===================================================


கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


                 
நெல்லிக்குப்பம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக் அல்ஹம்துலி்ல்லாஹ்!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 30.11 2012 அன்று கார்த்திக் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அர்ஷத் அலி என்று மாற்றி கொண்டார். அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” , ”மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் ”இஸ்லாமிய கொள்கை” போன்ற பல நூல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலி்ல்லாஹ்!
=========================================================


பிற சமய சகோதரர்கள் இருவர் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்


அம்பாசமுத்திரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற செல்வமுத்து மற்றும் மாதவன். அல்ஹம்துலி்ல்லாஹ்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று பிறசமய சகோதரர்கள் இருவர் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களில் செல்வமுத்து என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது கனி என்றும். மாதவன் என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது தௌஃபீக் என்றும் மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!
 
  ======================================================


மாதவன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்



     
காரைக்காலில் இஸ்லாத்தை ஏற்ற மாதவன் அல்ஹம்துலி்ல்லாஹ்!

காரைக்கால் மாவட்ட கிளையில் கடந்த 21/11/12 அன்று மாதவன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துர்ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!
   =======================================================

                           


அருண்பிரசாத் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

     


சேப்பாக்கம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அருண் பிரசாத் அல்ஹம்துலி்ல்லாஹ்!

தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 23-11-12 அன்று அருண்பிரசாத் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹம்மது யாசீன் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு ’மாமனிதர் நபிகள் நாயகம்’ மற்றும் ‘துஆக்களின் தொகுப்பு’ ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!
========================================================
....

பூர்ணிமா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


கானத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பூர்ணிமா அல்ஹம்துலி்ல்லாஹ்!

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 24/11/12 அன்று பூர்ணிமா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷாஹினா என மாற்றம் செய்து கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!

=============================================================

    

வெங்கடேசன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்


கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடேசன் அல்ஹம்துலி்ல்லாஹ்!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் கடந்த 23-11-12 அன்று வெங்கடேசன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல் கபீர் என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!

===========================================================



சாகர் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


அபுதாபி மண்டலத்தில் இஸ்லாத்தை ஏற்ற சாகர்

கடந்த 18.11 -2012 ஞாயிறுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை ஹிலால்கோ கேம்ப் சார்ந்த சாகர் என்ற கிறிஸ்துவ சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

========================================================

மகேந்திரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்



தாம்பரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மகேந்திரன்

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 20-11-2012 அன்று மகேந்திரன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
=========================================================


சண்முகம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



புளியந்தோப்பு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சண்முகம் அல்ஹம்துலி்ல்லாஹ்!

வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 08.11.12 அன்று சண்முகம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யாஸீன் என மாற்றிக் கொண்டார். அவருக்கு நபிவழி தொழுகை நூல் வழங்கப்பட்டது
========================================================


ராஜா மற்றும் ஜான் என்ற சகோதரர்கள் தங்களது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்



அல்லாஹ் அக்பர்..!!

காஞ்சி மேற்கு மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற ராஜா

காஞ்சி மேற்கு மாவட்டத்தில் கடந்த 03-11-2012 அன்று ராஜா மற்றும் ஜான் என்ற சகோதரர்கள் தங்களது வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தங்களது1 பெயரை ராஜா முஹம்மது மற்றும் ஜமாலுதீன் என பெயர் மாற்றிக் கொண்டனர்.
=======================================================




பார்த்திபன் என்ற சகோதரர் இஸ்லாத்தை உள் அன்போடும் முழுமன தோடும் தழுவினார்


அஸ்ஸலாமு அலைக்கும், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க (K-Tiq) கைத்தான், தமிழ் குத்பா பள்ளிவாசலில் இன்று (07/12/2012) ஜும்மாவில் பெங்களூரை சேர்ந்த குவைத் மங்காப்பில் வசிக்கும் சகோதரர் பார்த்திபன் என்ற இவருக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க பொதுசெயலாளர் கலீல் அஹ்மத் பாகவீ,கலிமா சொல்லி கொடுக்க அவர் இஸ்லாத்தை உள் அன்போடும் முழுமனதோடும் தழுவினார் தனது பெயரை முஹமத் பாரூக் என மாற்றிக்கொண்டார். 

Tuesday, 22 April 2014

கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.


புதுபேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

வடசென்னை மாவட்டம் புதுபேட்டை கிளையில் கடந்த 25 .09 .12 அன்று கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
--

மோசே என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்


பாண்டிபஜார் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மோசே

தென் சென்னை மாவட்டம் பாண்டிபஜார் கிளை சார்பாக கடந்த 20.09.2012 அன்று மோசே என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை மூஸா என மாற்றிக் கொண்டார் இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

பிற சமய சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


மாஸ்கான்சாவடி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிறசமய சகோதரர்

வடசென்னை மாவட்டம் மாஸ்கான்சாவடி கிளை சார்பாக கடந்த19.09.2012 அன்று பிறசமய சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது.

முருகவேல் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


கோவையில் இஸ்லாத்தை ஏற்ற முருகவேல்

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிளை சார்பாக கடந்த 04 – 11 -2012 அன்று முருகவேல் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சித்திக் என மாற்றிக் கொண்டார்.

மாணிக்கம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்


திருத்துறைப்பூண்டியில் இஸ்லாத்தை ஏற்ற மாணிக்கம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 2 வது கிளையில் கடந்த 04.11.12 அன்று மாணிக்கம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஸ்தபா என மாற்றிக் கொண்டார்.

நவநீதம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.



                         திருத்துறைப்பூண்டியில் இஸ்லாத்தை ஏற்ற நவ்நீதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளையில் கடந்த 2.10.12 அன்று நவநீதம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் நாசர் என்று மாற்றிக்கொண்டார்.

சத்தியமூர்த்தி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்


பெரம்பலூரில் இஸ்லாத்தை ஏற்ற சத்யமூர்த்தி

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கிளை சார்பாக க்டந்த 03/10/2012அன்று மருவத்தூரைச் சேர்ந்த சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது ரில்வான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

ஜெயபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்


சுல்தான் பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெயபால்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக 21.09.2012 அன்று ஜெயபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

சுப்ரமணியன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


செய்துங்கநல்லூரில் இஸ்லாத்தை ஏற்ற சுப்ரமணியன்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையில் கடந்த 09.09.2012 அன்று சுப்ரமணியன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

Japanese Mafiya King Converted To ISLAM

                                                                                                                                                                                                                           





Monday, 21 April 2014

சரவணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



தாம்பரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சரவணன் அல்ஹம்துலி்ல்லாஹ் !

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 08-12-2012 அன்று சரவணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை சித்திக் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு தஃவா டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்

கோபால் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,



தபூக் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபால்...........!!



இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவூதி அரேபியா தபூக் கிளையில் 13.12.2012 இன்று உத்திரபிரதேசம் கோராப்பூரைச் சேர்ந்த கோபால் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,தனது பெயரை சிராஜ்தீன் என்றும் மாற்றிக்கொண்டார்

அவருக்கு கிளைத் தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் அவருடைய ஹிந்தி மொழியில் விளக்கிக்கூறி, (ஸஹாதா) கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார். இறுதியில் அவருக்கு ஹிந்தி மொழியிலான முக்கிய நூல்களையும் வழங்கினார்.

புனிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்


இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பெரம்பலூர் புனிதா 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கிளையில் 02/12/2012 அன்று பெரம்பலூரைச் சேர்ந்த புனிதா என்ற சகோதரி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார்.

ஏற்கனவே ஓரளவு இஸ்லாத்தை பற்றி அறிந்து வைத்திருந்த இவர் "யார் இவர்" என்ற நோட்டீஸை படித்தப்பின் நம்மை அனுகி மேலும் சில சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டு இஸ்லாத்தினை ஏற்று கொண்டார்.

புனிதா தனது பெயரை ஜன்னத்துல் பிர்தௌஸ் என மாற்றிக்கொண்டனர், அவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...



லட்சுமணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!! 

கடலூர் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சிவானந்தன்...........!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கடலூர் OT கிளையில் லட்சுமணன் என்ற சகோதரர் தூய்மைமிக்க சமத்துவ மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹசன் என மாற்றிக் கொண்டார்கள், 

இவருக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்களும்  DVD க்கள் வழங்கப்பட்டது,




ஷோபனா என்ற 24 வயது இளம் பெண்மனி " திருக்குர்ஆனை" இன்டர்நெட்டின் மூலம் மட்டுமே படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டா





இந்த காலத்தில் இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்கள் இன்டர்நெட்டில்...பல விஷயங்கள் பார்க்கும் நேரத்தில்...ஷோபனா வயது 24 என்ற இளம் பெண்மனி "திருக்குர்ஆனை" இன்டர்நெட்டின் மூலம் மட்டுமே படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.... அல்லாஹ் அக்பர்..."அல்லாஹ் நாடியதை யாராலும் தடுக்கமுடியாது அல்லாஹ் தடுப்பதை யாராலும்  கொடுக்கவும்  முடியாது...." அல்ஹம்துலில்லாஹ்!

அல்பிட்டோ என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்





 துறைமுகம் பகுதியில் இஸ்லாத்தை ஏற்ற ஞானசேகர் அல்பிட்டோ
வட சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியில் உள்ள மாநில தலைமையில் கடந்த 08.11.12 அன்று அல்பிட்டோ என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆரிஃப் என மாற்றிக் கொண்டார். அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்கப்பட்டது

மஞ்சு என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்கள்.


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

தக்கலை TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி மஞ்சு...........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 16.12.2012 அன்று மஞ்சு என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்கள்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரிக்கு இறைவன் ஈருலகிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக.....


கார்த்திகேயன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!! 


பழைய வண்ணராப்பேட்டை TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் 

கார்த்திகேயன்..........!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பழைய வண்ணராப்பேட்டை கிளை சார்பாக கடந்த 16.12.12 அன்று கார்த்திகேயன்என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை அப்துல் கபீர் என மாற்றிக்கொண்டார், மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் 
மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....


கங்கை அமரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

கள்ளக்குறிச்சி TNTJ யில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் கங்கை அமரன்..............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 25.12.2012 அன்று கங்கை அமரன் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹமது ரஃபீக் என்று மாற்றி கொண்டார்கள்,

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

நடராஜர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!


அசோக் நகர் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் நடராஜர்..........!! 


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் 


சென்னை மாவட்டம் அசோக் நகர் கிளையில் கடந்த 14.12.2012 அன்று நடராஜர் 


என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது 


வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை யூசுஃப் என 


மாற்றிக்கொண்டார்கள்,



அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது