Saturday, 12 May 2018

இயேசு_கிறிஸ்து_ஒரு_முஸ்லிம்!

*ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!

*உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர் களின் வழிப்பாட்டிற்குரியவரான இயேசு_கிறிஸ்து_ஒரு_முஸ்லிம்!

*ஆய்வுசெய்து அறிவித்த
அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!

*உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒருமுஸ்லிம் என பிரபல அமெரிக்கப் பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

*அமெரிக்காவில் அயோவா லூதர்
கல்லூரியில் மத விவகாரத்துறைப்
பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர்
என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத்
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Was jesus a muslim?
என்ற தனது புதிய நூலில் அவர் இதனைத்  தெளிவுபடுத்துகிறார்.

*இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலைத் துவக்குகிறார்.ஆம்! அவர்
 முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.

*மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல்
குறித்த வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய
கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார்.

“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு
இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராயத்
தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.
ஃ பாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில்
ஷெடிங்கர் கூறியதாவது:

‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல் களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவி யின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது

இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும் ஏனெனில் அது ஒரு மதம் அல்ல.மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசு வின் வாழ்க்கையும்,அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு
ஒத்துப்போகிறது.

*ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர்
கல்லூரியின் மத விவகார பாடத்துறையின்
தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர்
கூறினார்.

"Truely, The Religion With God Is Islam."
(Holy Qur'an 3:19) 
சர்வதேசப்பிறையும் தெளிவற்ற நிலையும்!

பிறையினுடைய விவகாரம் உண்மையில் குர்ஆன் சுன்னாவில் தெளிவான ஓர் விடையமே. இருந்தபோதிலும் இம் மஸ்அலாவில் சர்வதேசப் பிறை என்றும் நாட்டுக்கு நாடு உள்ளூர் பிறை என்றும் பிரதானமான இரண்டு கருத்துக்கள் இருந்துவருகின்றது.

அதில் நமது ஆய்வின் பிரகாரம் நாம் சர்வதேசப் பிறையை 100 வீதம் சரி காண்கிறோம்.

சர்வதேச பிறை  என்பது உலகத்தின் எப் பாகத்தில் பிறை தென்பட்டதாக சட்சியத்தின் அடிப்படையில் செய்தி வந்தாலும் அந்தப் பிறையை உலக முஸ்லீம்கள் அனைவரும் அவர்கள் மாதத்தை அடையும் போதோ அல்லது முடிக்கும் போதோ எடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதாகும்.....

ஆதாரம் 1⃣

🌒பிறையை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறையை கண்டு நோன்பை விடுங்கள் பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் (புஹாரி)💙

🌛இங்கு பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்றுதான் கூறப்படுகிறதே ஒழிய அந்தந்த நாட்டில் காணுங்கள், இந்த இந்த பகுதியில் காணுங்கள் என்றில்லை.
குர்ஆனோ ஹதீஸோ நாடுகளாக எல்லை போடவில்லை. அது நாமாக ஏற்படுத்திக் கொண்டது. எனவே பிறை ஒன்றுதான், *தலைப்பிறை ஒரு மாதத்தில் ஒரு முறைதான் தென்படும்,* அதனால் எங்கு முதல் பிறை தென்படுகிறதோ அந்தப் பிறையையே உலக முஸ்லீம்கள் மாதத்தை ஆரம்பிக்கவும் மாதத்தை முடிக்கவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌗பிறையை நாம் மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்துவிட்டே எதிர்பார்க்க வேண்டும்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 02:186)

மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்யும் அச்சமையம் எம் நாட்டிலோ எம் நேரத்தை ஒத்த நாடுகளிளோ பிறை தென்படவில்லை என வைத்துக்கொண்டால் நமக்கு பின் வருகிற ஏதாவது ஒரு நாட்டில் பிறை தென்பட வாய்ப்பு உண்டு.
அப்படி தென்பட்ட செய்தி சாட்சிகளின் அடிப்படையில் ஊர்ஜிதமான முறையில் கிடைக்கப்பெற்றால் அதுவே எல்லா முஸ்லீம்களுக்கும் மாதத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் பிறையாகும்... அதை ஏற்று நோன்பெடுப்பதும் நோன்பை விடுவதும் கடமையாகும்.

ஆதாரம் 02🌀

📗"நபித்தோழர் ஒருவர் கூறுகின்றார் எங்களுக்கு ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டிருந்ததால் நாங்கள் நோன்பாளியாக கலையை அடைந்தோம் அப்போது பகலின் இறுதியில் ஒரு பிரயாணக் கூட்டம் வந்து அவர்கள் நேற்று பிறையை கண்டதாக நபிகளாரிடம் சாட்சி சொன்னார்கள்.அப்போது நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுகைக்கு வெளியேறுமாறும் நபிகளார் மக்களுக்கு கட்டளை இட்டார்கள்..
(முஸன்னப் இப்னு அபீ ஷைபா📚9461/முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்📚7339)

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர் வழியாக வந்திருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வுக்குட்படுத்தினால் இதில் நபிகளார் இட்ட கட்டளை நபிகளாரையும் ஸஹாபாக்களையுமே தெளிவாக குறிக்கின்றது. காரணம் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் நோன்போடு இருந்தார்கள் என்பதே இந்த ஹதீஸின் ஆரம்பமாகும்.

இங்கு தமது பிரதேசத்தில் பிறை காணப்படாத பொழுது வெளியூரில் இருந்து பிறை கண்டதாக வந்த சாட்சியத்தை நபிகளார் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலைப்பாடே பிறை விடையத்தில் குர்ஆன் ஹதீஸை ஒத்ததாகும்.

சர்வதேசப் பிறையை மறுக்க அனேகரிடம் எழுகின்ற கேள்வி என்னவெனில் நமக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் நேர வித்தியாசமுண்டே???

பதில்👉👉உலக நாடுகள் நேர அளவில் வித்தியாசப்படுவது உண்மையிலும் உண்மையே அதனை நாம் ஏற்றே நம் நிலைப்பாட்டை எவ்வித நடைமுறை சிக்கலுமின்றி முன்வைக்கின்றோம்..

உதாரணமாக இலங்கையில் இருப்பவர்கள் ஞாயிரு மாலை 06.00 மணியளவில் பிறையை பார்கிறோம்🌙 பிறை தென்படவில்லை...அதே நேரம் இலங்கைக்கு அடுத்தடுத்து வரும்  நாடுகள் 👉🏿உதாரணமாக... சவூதியில் இருப்பவர்கள் பிற்பகல் 3.30 மணியில் இருப்பார்கள் இன்னும் சில நாடுகள் பிப.2.00, 1.00,12.00,காலை10.00, 09.00, 08.00 .......இப்படி இந்த நாடுகளில் இருப்பவர்கள் இன்னும் பிறை பார்கும் நேரத்தை அடையாமலிருப்பார்கள்...
இதில் எந்த சிக்கலும் இல்லை நேரம்தான் நமக்கும் அவர்களுக்குமிடையில் வித்தியாசம்..... *நாள் அல்ல* எவ்வளவுதான் நேர வித்தியாசம் ஏற்பட்டாலும் அது கூடி குறையுமே ஒழிய நாள் வித்தியாசமாகாது. நான் மேலே குறிப்பிட்ட நேர வரையறையில் இருப்பவர்களும் அதே ஞாயிற்றுக் கிழமையில்தான் இருப்பார்கள், இதில் என்ன சிக்கலுண்டு? நாம் பிறை பார்த்துவிட்டு தென்படாததால் இரவு 10.00 மணியில் இருப்போம் அப்போதுதான் சவூதியில் பிறை பார்பார்கள் அதே ஞாயிரு பிறை தென்பட்டவுடன் பிறையினுடைய செய்தியை எமக்கு அறிவிப்பார்கள் நாமும் அந்த சாட்சியத்தை நபிகளார் மேற்சொன்ன செய்தியில் ஏற்றது போல் ஏற்றுக்கொள்வோம்.. இப்பொழுது இரண்டு பேறும் திங்கள் சஹர் சொய்வோம் நாம் சஹர் செய்து 02.30 மணித்தியாலத்தின் பின் அவர்கள் சஹர் செய்வார்கள் எல்லாம் ஞாயிருதான்....இதில் என்ன குழப்பம் நமக்கு??? இப்படித்தான் மற்றைய நாடுகளும் நேரத்தால் வேறுபடும்.

அது போன்றதொரு வாதம்தான் நம்மவர்கள் அமெரிக்க நேரம் நம்மை விட 12.00 மணித்தியாளங்கள் வித்தியாசம் என்று அது சாத்தியமில்லை என்பார்கள்.

இது கூட நம்மவர்களின் புரிதலில் ஏற்பட்ட தவரேயாகும்...அமெரிக்காவுக்கும் நமக்கும் நேரம்தான் வித்தியாசம் உதாரணம் நாம் திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியில் இருக்கும் பொழுது அமெரிக்கர்கள் அப்பொழுதுதான் திங்கட்கிழமை அதிகாலை 12.00 மணிக்குள் நுழைகிறார்கள். நாம் திங்கள் மாலை 06.00 மணிக்கு பிறை பார்கும் போது அவர்கள் திங்கள் காலை 06.00 மணிக்கு அதே தினத்தில்தான் இருப்பார்கள். இவ் வேளை நமக்கு பிறை தென்படாமல் அமெரிகாவில் பிறை தென்பட்டுவிட்டால்.. அமெரிக்கர்கள் பிறை காணும் நேரத்தில் நாம் அடுத்த நாள் செவ்வாய் காலையை 30ஆக  பூரணப்படுத்தி அந்த செய்தி கிடைக்காதவரைக்கும் நோன்போடு இருப்போம்...செய்தி வந்துவிட்டால் நோன்பை விட வேண்டும் அடுத்த நாள் பெருநாள் எடுக்க வேண்டும்..அதற்குறிய ஆதாரம் மேலே குறிப்பிட்ட பிரயாணக்கூட்டத்தின் செய்தியாகும்...அந்த மாதம் நோன்பை ஆரம்பிக்கும் மாதமெனில் தகவல் கிடைத்தவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நாம் சாப்பாட்டை நிறுத்தி செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நோன்பை தொடர வேண்டும்...இதற்கு ஆதாரம் அரபா நோன்பின் செய்தி....இப்படி சர்வதேசப் பிறையில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலுண்டு சிந்தியுங்கள் நண்பர்களே!!! நமது நாட்டில்தான் பிறைபார்க்க வேண்டும் என நபிகளார் எந்த எல்லையும் இடவில்லை என்பதே உண்மையிலும் உண்மை......

*01-நமக்கு லைலதுல் கத்ர் இரவு ஒரு நாள்தான்.*

*02-நமக்கு அரபா தினம் ஒரு நாள்தான்.*

*03- நமக்கு வெள்ளிக்கிழமையும் ஒரு நாள்தான்.*

*04-  நமது உலகம் அழிவதும் ஒரு நாள்தான்.*

தலைப் பிறை மட்டும் எப்படி இரண்டாக முடியும்??? அல்லது இரு தலைப்பிறைகள்தான் பிறக்க சாத்தியமுண்டா??
நன்றி;ABDHUL HAKEEM

Friday, 11 May 2018

பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
இது பற்றி DR.ஜாகிர் நாயக் கூறுகிறார்
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் (மத நம்பிக்கை உடையவர்கள்) கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்து இருக்கிறது ?

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குரானின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் இறைவன் (அல்லாஹ்) அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கபட்டது) ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி உங்களுக்கு தடுக்கப்பட்ட உணவு.இது அல்லா குர்கானில் சொல்லபட்டது. அறிவியலில் பன்றி கறியை சாப்பிட்டால் மனிதவுடம்பில் ஒருவிதமான நாற்றம் தோன்றும்,நாளடைவில் தோளில் கரும்புள்ளி (அதாவது தோல் வியாதி வரும்),பன்றியினஉடம்பில் உள்ள கிருமிகள் சில எவளவு அதிகமான கொதிநிலயுளும் சாகாது அந்த கிருமி மனித உடம்பில் சென்று எந்த எடத்தில் தங்குகிறதோ அங்கு நம் உடம்பில் உள்ள நோய் எதிப்பு சக்தி கிருமிகளை கொள்ளுகிறது,பன்றியின் கிருமி நம் மூலையில் போய் தங்கும்போது மூளைக்காய்ச்சல் தோன்றுகிறது.இது நான் படித்தது மற்றதை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறய்ன் (கற்றது கையளவு கல்லாலது உலகளவு)

Taken from-இஸ்லாம் தனி மனித சொத்தல்ல-
எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது?

நாம் உண்ணும் போது தவறான உணவு சேர்க்கையால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
உதாரணத்திற்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் அதனுடன் இஞ்சி சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் புட் பாய்சன் ஆகிவிடும்.

தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

முட்டை மற்றும் பால்

இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.

பால் கலந்த ஓட்ஸ்

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும். நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும்.

மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.

வாழைப்பம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

மீன் மற்றும் பால்

மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால், அதனால் உடலில் உள்ள இரத்த பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.