Thursday, 16 November 2017

FACEBOOK மூலம் நரகம் செல்லவிருக்கும் முஸ்லிங்கள்

பேஷ் புக் மூலமாக நரகம் செல்லவிருக்கும் முஸ்லிம்கள்.



பேஷ் புக்யில் கணக்கு வைத்து இருக்கும் முஸ்லிமா நீங்கள் தயவு செய்து இதை முழுமையாக வாசிக்கவும்
   
இன்றைக்கு Facebook இல் நமது முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் அட்டகாசம் ஒன்றல்ல இரண்டல்ல இந்த facebook ஆனது நமது சமுதாயத்தில் கூடுதலான மக்களின் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் தொலைத்து கொண்டிருக்கிறது அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் நமக்கு சில வரம்புகளை நமக்கு போட்டுள்ளார்கள் அதில் பலவற்றை நாம் facebookஇல் மீறி கொண்டிருக்கின்றோம் அதாவது நபி அவர்கள் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் எப்படி பழக வேண்டும் என்பதை கூட நமக்கு காட்டி தந்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் நமக்கு எத்தனையோ பாடங்களை படிக்க முடியும் . ஆனால் நமது சகோதரர்கள் இரவு ஒரு மணிவரைக்கும் facebook இல் இருக்கின்றார்கள். இவர்கள் சுபஹ் தொழுவது கிடையாது அவர்களின் கண்களுக்கு அவர்கள் ஒய்வு கொடுப்பது கிடையாது இதனால் இவர்களின் நிலைமை என்னவென்றால் இந்த உலகத்திலே அவர்கள் பார்வையை இழந்து நஷ்டமடைய போகிறார்கள் மற்றும் அல்லாஹ்விடத்திலும் இதற்கு பதில் சொல்லவும் வேண்டி இருக்கிறது . நபி அவர்கள் கூறுகிறார்கள்.“என் வழியை யார் கை விடுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), (நூல் புஹாரி: 5063)இன்றைக்கு facebook எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றால் அது முழுக்க முழுக்க சீர்கேடுதான் யாராவது ஒருவர் ஒரு சினிமா நடிகையின் போட்டோவை post பண்ணினால் போதும் எல்லோருடைய கவனமும் அந்த போட்டோவில்தான் இருக்கின்றது. அந்த போட்டோவுக்கு comments எழுதுவதும் அதை share பண்ணுவதும் தான் அவர்களின் வேலையாக இருந்து கொண்டிருக்கிறது நாம் share பண்ணுவதற்கு எத்தனை நல்ல விசயங்கள் இதே FACEBOOKஇல் இருந்தாலும் அதைச் செய்வதில்லை உதாரணமாக நபிகளாரின் ஒரு பொன் மொழியை post பண்ணினால் அதை ஒரு சிலர் மட்டும்தான் share பண்ணுகிறார்கள்  இதே போலே ஒரு சினிமா நடிகை அல்லது தேவை இல்லாத ஒரு ஆபாச போட்டோவை post பண்ணினால் போதும் அது பலரிடத்தில் சென்று அதற்கு எல்லாரும் comments எழுதுவதும் அதை like பண்ணுவதுமாக இருப்பார்கள்  அதிலும் சிலர் வெட்கம் இல்லாமல் சில ஆபாச வார்த்தைகளையும்  பின்னூட்டத்தில் எழுதுக்கிறார்கள்

அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கின்றான்…..

“வெட்ககேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)

நமது சகோதரர்கள் இன்றைக்கும் செய்யும் மிகவும் மோசமான ஒரு நாச வேலைதான் பெண்களின் பெயரில் பொய்யான account ஒன்றை திறந்து அதில் தேவை இல்லாத செய்திகள் ஆபாச படங்களை post பண்ணுகிறார்கள் மற்றும் இந்த மாதிரியான account களில் 5000 மேலே நண்பர்கள் இருப்பதை பார்க்கலாம். அதிலும் எல்லோருடைய பெயரை பார்த்தாலும் பாத்திமா என்று ஆரம்பிக்கிறது அதனுடன் ஒரு துணை பெயரும் இருக்கின்றது. நமது நபி அவர்களின் மகள் பாத்திமாவின் ஒழுக்கமும் சிறந்த, நடைமுறையும் நம்மால் இன்றைக்கு கூடுதலான பெண்ணிடத்தில் பார்க்க முடியாமல் இருக்கின்றது.நபி அவர்களின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்த ஒரு சிறந்த பெண் மணி அதனால் தான் பாத்திமா என்ற பெயரில் கூட ஒரு கண்ணியம் இருக்கிறது ஆனால் இன்றைக்கு பாத்திமா என்ற பெயர் தான் facebook இல் தேவை இல்லாத கண்ணியமில்லாத விசயத்திற்கு பயன் படுத்தப்படுகின்றது.

நீங்கள் உண்மையாக இஸ்லாமிய சகோதரர்கள் என்றால் இந்த நாச செயலை இன்றைக்கே நிறுத்துங்கள் நீங்கள் இப்படி செய்வது எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா??? இஸ்லாம் மார்க்கம் ஒழுக்கத்தை சொல்லக்கூடிய ஒரு சிறந்த மார்க்கம், ஒழுக்கம் என்பது இஸ்லாத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது ஆனால் நீங்கள் செய்யும் இந்த நாச செயலானது நமது சமுதாய சகோதரிகளுக்கு கொடுக்கும் அவமானமாகும் இன்றைக்கு அந்நிய  மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் இவர்கள் உங்களைப் பார்த்து விட்டு இஸ்லாத்தை நோக்கி வரவில்லை அவர்கள் அல் குர்ஆனைப் படிக்கிறார்கள் பின்னர் இதுதான் சரியான மார்க்கம் என்று தெரிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் இப்படி வருபவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள் காரணம் இவர்கள் இந்த மார்க்கத்தின் பெறுமதியை புரிந்து கொண்டு வந்தவர்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம்?? நமக்கு இந்த மார்க்கம் மிகவும் இலகுவாக கிடைத்து விட்டது அதனால் தான் இந்த சத்திய மார்க்கத்தின் பெறுமதி எங்களுக்குப் புரிய வில்லை இதனால் தான் நீங்கள் வரம்பு மீறி நடக்கிறீர்கள், நீங்கள் செய்யும் இந்த நாச வேலையானது இந்த மார்க்கத்திற்கு கூட கெட்ட பெயரை கொடுக்கிறது. அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நரக வேதனையை நீங்கள் ருசிக்க  விரும்புகிறீர்களா  ? நரக நெருப்பு நீங்கள் நினைப்பது போல சாதாரண விசயம் இல்லை அல்லாஹ் நரகத்தை அல் குர்ஆனில் பல இடங்களில் எப்படி வர்ணிக்கிறான் என்பதை நான் உங்களுக்கு நினவூட்டுகிறேன்.
நமது சமுதாய மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டியது என்னவென்றால் இந்த சினிமாக்காரர்கள் நமக்கு எதை போதிக்கிறார்கள் இவர்களால் நமது சமுதாயதிக்கு என்ன லாபம்? அவர்கள் உங்களுக்கு உலக நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? மார்க்க விசயங்களை போதிக்கிறார்களா? அல்லது அறிவை வளர்க்கக் கூடிய நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? அல்லது சமூக சேவை செய்கிறார்களா, ஒழுக்க விழுமியங்களை உங்களுக்கு போதிக்கிறார்கள் என்றால் முழுக்க முழுக்க அவை ஒன்றும் கிடையாது இவர்கள் காட்டுவது எல்லாம் ஆண்களும் பெண்களும் அரையும் குறையுமாக ஆடை அணிந்து கூத்தடிப்பதை மட்டுமே  காட்டுகிறார்கள் மற்றும் படுக்கை அறையை காட்டுகிறார்கள் அல்லது ஒருவன் நூறு பேருக்கு அடிப்பதை காட்டுகிறார்கள் இப்படிப்பட்ட அசிங்கமான சினிமாக்காரர்களுக்கு தான் இன்றைய சமுதாயத்தில் சிறந்த வரவேற்பு இருக்கிறது இவர்களுடைய போட்டோக்களை தான் facebook இல் கூடுதலாக பார்க்க முடிகிறது. நாம் இதிலிருந்து எதை விளங்க வேண்டும்? ஒரு மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்றுதான் ஆடை, இந்த சினிமாக்காரர்கள் ஆடையை அரையும் குறையுமாக அணிகிறார்கள் இன்னும் சிலர் மிருகங்கள் (நாய் இன்னொரு நாயுடன்) எப்படி சாலை ஓரங்களில் நமது தேவையை நிறைவேற்றுமோ அதை விட மிக மோசமான முறையில்,ஒரு ஆணுடன் ஒரு பெண் முழுமையாக ஆடைகளை அவிழ்த்து விட்டு உறவாடுவதை காட்டுகிறார்கள் அதைதான் நீங்கள் facebook இல் post பண்ணுகிறீர்கள், நீங்கள் இப்படி post பண்ணும் போது உங்களுடைய சகோதரர்களும் பார்க்கிறார்கள் மற்றும் பெண்கள் பார்க்கிறார்கள் சிறுவர்கள் பார்க்கிறார்கள், நல்லவர்கள் படித்தவர்கள் ஒழுக்கமுள்ள பெண்கள் பார்க்கிறார்கள். நீங்கள் மிகவும் இலகுவாக post பண்ணி இருப்பீர்கள் ஆனால் இது எத்தனை பேரின்கைக்கு போகிறது. இதை பார்த்து விட்டு ஒரு பெண் அல்லது ஒரு ஆண் வழி தவறிப்போனால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள் இதனால் ஏற்படும் சகல தீய விளைவுகளுக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு சொல்ல வேண்டி இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதைபற்றி நபி அவர்கள் கூறுகையில்…

“யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்கு பின் அதன்படி செயல் படுபவர்களின் நன்மையும் உண்டு; அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்கு பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் உண்டு அவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறைத்து விடாது”

அறிவிப்பவர்: ஜாரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் முஸ்லிம்: 1848

ஆகவே அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே நடந்த தவறுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள் நேர் வழியை தேடுங்கள் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான்.

Wednesday, 15 November 2017

பிறக்கும் குழந்தைகள் யாவரும் முஸ்லிங்களாகவே பிறக்கின்றனர்

''பிறக்கும் குழந்தைகள், அனைத்தும் முஸ்லிம்களே'' - உறுதிசெய்த பிரிட்டன் ஆய்வாளார் ஜஸ்டீன்
''பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே'' என்ற முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை ஆய்வின் மூலம் உறுதி செய்த பிரிட்டன் ஆய்வாளார்  ஜஸ்டீன்.
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :அ مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ ، كَمَا تُنْتَجُ البَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ؟ ثُمَّ يَقُولُ ( فِطْرَةَ اللَّهِ الَّتِى فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ ) –صحيح البخاري

''பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இஸ்லாமிய) இயல்பிலேயே பிறக்கின்றன வளர்ப்பு முறையில் தான் அந்த குழந்தைகள் யூதனாகவும்,கிறிஸ்தவவனகவும், நெருப்பை வணங்ககுடியவனாகவும் வார்த்தெடுக்க படுகின்றனர்.'' (அறிவிப்பவர் அபூ  ஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு,  நூல்:   புகாரி 2568)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழிகளில் இதுவும் ஒன்று அந்த மாமனிதரின் இந்த சொல்லும் அவரின் தனித்துவத்தையும் அவர்களின் தூதுத்துவத்தையும் அறுதியிட்டு உறுதி கூறும் அற்தபுதச் சான்றுகளில் ஒன்றாக ஒளிர்கிறது.

பிரிட்டனை சேர்ந்த ஜெஸ்டின் குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில் ஈடு பட்டிருந்தார் சில ஆண்டுகள் தொடர்ந்த அவரது ஆய்வில் குழந்தைகள் பற்றிய பல அரிய தகவல்களைக் கண்டறிந்தார்

பிறக்கும் குழந்தைகள் தனது தாய் மற்றும் தந்தை மற்றும் தன்னை சார்ந்தவளின் கொள்ளைகைகளையும் கோட்பாடுகளையும் பார்க்காத நிலையிலும் அறியாத நிலையிலும் வேறு எந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போதிக்க படாத நிலையிலேயும் வளர்க்க பட்டால் அப்படி வளர்க்க பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் ஏகத்துவம் மட்டுமே குடிகொண்டிருக்கும் என்பதும் அவர் கண்டறிந்த  உண்மைகளில் ஒன்றாகும்.

ஆக இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்பது இயல்பானது. திசைதிருப்பாமலும் எதையும் போதிக்காமலும் வளர்க்கப்படுகின்ற குழந்தைகளின் உள்ளங்களில் இயல்பாகவே அது தான் குடிகொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் முடிவாகும்.

இப்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அண்ணல் நபியின் அமுதமொழியை மீண்டும் படியுங்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த அருள் மொழியில் வார்த்தைகள் சொல்லி வைத்தது போல் அளந்து பயன் படுத்தப்பட்டுள்ளது.

வளர்ப்பு முறையில் தான் குழந்தைகள் முஸ்லிமாக ஏகத்துவ வாதியாக வளர்த்து எடுக்கப் படுகின்றனர் என்று சொல்லப்படவில்லை.

மாறாக அந்த ஏகத்துவம் இயல்பாகவே அந்த குழந்தைகளின் உள்ளங்களில் நிலை பெற்றுள்ளது வளர்ப்புமுறையில் தான் அந்த குழந்தைகள் மாற்று மதத்தவர்களாக வார்க்கபடுகின்றனர் என்ற அற்புதமான உண்மையை நயமாக நபிகள் நாயகம் சொல்லி உள்ளார்கள்.

ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பல்வேறு சோதனைகளை செய்து இந்த உண்மையை கண்டு பிடிப்பது பெரிய விசயமல்ல.

எந்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈடுபடாத முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இந்த உண்மையை சர்வ சாதாரணமான வார்த்தைகளில் எப்படி சொல்ல முடிந்தது.

அவர் சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எந்த அறிவு இருந்ததோ அந்த அறிவை கொண்டு மட்டுமே அவர்கள் பேசியிருக்க வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பெற்ற அறிவை அன்றே அண்ணல் நபியால் எப்படி சொல்ல முடிந்தது?

அவர்கள் யாவற்றையும் அறிந்த படைத்தவனின்ரா தூதராக இருந்ததால் மட்டுமே இதை அன்றே சொல்ல முடிந்தது இந்த நபி மொழியும் உத்தம நபியின் நுபுவத்தை உறுதி செய்யும் அற்புத வார்த்தைகளில் ஒன்றாகும்.