Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Sunday, 25 May 2014

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கீழே உள்ள குறிப்புகளை படிங்கள்


சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுப் படுத்தி விடும் .

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப் படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில் பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால்  மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் இஸ்ரேலிய ஆராட்சியாளார் கண்டுபிடித்த
மற்றுமொரு உண்மை யாதெனில் குறித்த நேரம் தவறாமல் தொழுகையை  தொழுபவர்களுக்கு இங்கு மேலே குறிப்பிட்ட அல்சீமெர்ஸ் என்ற நோய் வராதாம்.

Sunday, 18 May 2014

ஆரோக்கியம் பற்றி இஸ்லாம்


ஆரோக்கியம் என்றால் என்ன
ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர்.

இஸ்லாம் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு வலியுறுத்தியுள்ளது?

இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துவதைப்போல் உலகில் வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை.

தூய்மை என்பது ஈமானின் பாதி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 328)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு. அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1.ஆரோக்கியம் 2.ஓய்வு. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)

நோயற்ற வாழ்வே ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்குமான ஒரு உந்துகோளாக அமைகின்றது. நோயற்ற வாழ்விற்கு தூய்மை முதல் இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டுகின்றது.

நாளின் துவக்கத்திலேயே இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியத்தில் கூட உடல், உள சுத்தத்தையே வலியுறுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உளுச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளு செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள் (நூல்: புகாரி 162)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளுச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் தான் தங்கியிருக்கின்றான்.
அறிவிப்பவர்:அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 3295)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து, தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கைகள் உறங்கும்போது எங்கே கிடந்தன என்று அறியாத காரணத்தினால் கைகளை முதலில் கழுவிக் கொள்ளுமாறும்; மூக்கிற்கு தண்ணீர் செலுத்துமாறும் நபி(ஸல்)அவர்கள் கட்டளை இடுகிறார்கள்.

ஏன் என்றால் மூக்கின் நாசிப்பகுதியல் ஷைத்தான் தங்கி இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.

இங்கு ஷைத்தான் தங்கியிருக்கிறான் என்றால் அழுக்குகள் தங்கியிருக்கிறது என்று பொருளாகும். நபி(ஸல்)அவர்கள் ஏதாவது தீங்கான செயல்களைக் குறிப்பிடும் போது ஷைத்தானுடன் ஒப்பிட்டு கூறுவார்கள்.இது போன்று ஏராளமான செய்திகளில் நபி(ஸல்)அவர்கள் தீங்கான விஷயங்களுக்கு ஷைத்தானை ஒப்பிட்டு கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் மலஜலம் கழித்துவிட்டு சுத்தப்படுத்துமாறு கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.

மேலைத்தேய நாடுகளில் மலஜலம் கழித்துவிட்டு முறையாக சுத்தம் செய்யாத காரணத்தினால் அவர்கள் அடிப்படை சுகாதார அறிவற்றவர்களாகவும், தூய்மையில் பின் தங்கியவர்களாகவும் உள்ளனர்.

ஏன், நம் நாட்டவர்கள் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடம் கூட சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யும் பழக்கம் காணப்படுவதில்லை. இதனால் இவர்கள் இலகுவாக சிறுநீர் சம்பந்தமான தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், இஸ்லாம் நாம் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கே வழிகாட்டுகின்றது.

மூக்கிலுள்ள நுண்ணிய மயிர்கள் வெளியிலிருந்து மூக்கிற்குள் வரும் தூசு, துணிக்கைகளை அகற்றக்கூடியவையாகவுள்ளன. அத்துடன் ஐந்து நிமிடங்களிற்கு ஒரு முறை மூக்கினுள் சளி சுரக்கப்பட்டு இதுவும் வெளியிலிருந்து மூக்கினுள் வரும் அந்நிய பதார்த்தங்கள் உடலினுட் செல்லாமல் உடலைப் பாதுகாக்கின்றது. இச்சளி அந்நிய பதார்த்தங்களுடன் மூக்கில் தேங்குகின்ற காரணத்தினால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் பக்டீரியாக்கள் இலகுவாக நுரையீரலுக்கள் நுழையும் அபாயம் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளுச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 160, 164)

எனவே தூக்கத்திலிருந்து எழுந்தவுடனும், ஐவேளை உளுச் செய்யும்போதும் மூக்கை சுத்தம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தி நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மார்க்கமாக விளங்குகின்றது.

பற் சுத்தம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 7240)

இன்று அநேகமானோர் பற் சுகாதாரத்தைப் பேணாததால் நிறைய பல் வியாதிகளால் அவதிப்படுகின்றனர். மனிதன் சாப்பிடுவதோ மூன்று வேளை. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முடியுமானால் ஐவேளை பல் துலக்குமாறு கட்டளையிடுகின்றார்கள். அதாவது மனிதர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் தான் கட்டாயமாக செய்யும்படி தாம் வலியுறுத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வாய், பற் சுகாதாரத்தைப் பேண வலியுறுத்துகின்றார்கள்.

பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்று பொதுவாக சொல்வார்கள். அதாவது வாய், பல் சுகாதாரம் பேணப்படாதவிடத்து வாய்க்குள் ஏற்படும் கோளாறுகளால் உணவு உட்கொள்ள முடியாமல் மனிதன் ஆரோக்கியத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

British Medical Journal (BMJ) ஆய்வின்படி பல் துலக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இருதய அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின்படி வாயிலுள்ள குறிப்பிட்ட இரு பக்டீரியாக்களில் ஒன்றின் மூலம் 50% மற்றையதின் மூலம் 35% இருதய அடைப்பு ஏற்படுவதற்குரிய அபாயம் காணப்படுகின்றது. பல் துலக்கல், வாய் சுகாதாரம் பேணப்படாதவிடத்து இருதய நோய்களுக்கான அறிகுறிகள் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்பாதிப்பு மனிதனுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைக்கு முன் பல் துலக்கலை கடமையாக்க நினைக்கும் அளவிற்கு வலியுறுத்துகிறார்கள்.

இஸ்லாம் போன்ற ஒரு இனிய மார்க்கத்தை உலகில் எந்ந இடத்திலாவது காணக் கிடைக்குமா?

கண்களின் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர் ! (சில நாட்கள்) நோன்பு வையும், (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும் (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 1975

மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்துள்ள இக்காலகட்டத்தில், மனிதனின் நவீன கண்டுபிடிப்பு சாதனங்கள் சிலதின் மூலம் மனிதன் அவனது கண்களின் ஆரோக்கியத்தை இழந்தவனாகக் காணப்படுகின்றான். அவற்றில் சில தொலைக்காட்சிப்பெட்டி, கணனி ஆகியன. இவற்றின் பாவனை இடைவிடாது தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் கண்கள் பார்வையைப் படிப்படியாக இழக்கின்றன. மனிதன் கண்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வைக் கொடுக்கத் தவறியமையே இதற்குக் காரணம்.

இதனாலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்லித் தருகின்றார்க
ள். மனிதனது கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். இதற்கு முறையான உறக்கமே சிறந்த வழி. ஆனால் இன்று பொருளாதாரத்தை மையமாக வைத்து உலக மக்கள் அனைவரும் இயங்குவதால் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லாமல் இரவு, பகல் பாராமல் உழைக்கத் தழைப்பட்டுள்ளனர். பெரும்பாலான இள வயதினர் பொழுதுபோக்கிற்காகவும், தம் நேரங்களை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்ற ரீதியில் தொலைக்காட்சியிலும், கணனியிலும் தங்கள் நேரங்களை செலவிட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தங்கள் கண் பார்வையில் பிர்ச்சினை ஏற்படும் வகையில் தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள்

எனவே, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நம் உடலுக்கும், கண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வோமேயானால் உடலினதும், கண்களினதும் ஆரோக்கியம் கெடாமல் வாழலாம்.

தோல் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தினத்தில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 858)

சில தண்ணீர் வசதியில்லாத பிரதேசங்களைப் பொருத்தமட்டில் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியமில்லை. சில நோயாளிகளைப் பொருத்தமட்டிலும் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியப்படாமல் போகலாம். இவ்வனைத்தையும் கருத்திற் கொண்டு இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்தும் மார்க்கமாக உள்ளதால் கிழமைக்கு ஒரு முறையாவது அதாவது ஜும்ஆ தினத்தன்று குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமை என்று வலியுறுத்துகின்றது.

வியர்க்கும் போது தோலிலுள்ள வியர்வைத் துவாரங்களின் மூலம் வியர்வை வெளியேறி தோலில் படிகின்றது. குளித்து சுத்தமாகும்போது தோலிலுள்ள இக்கழிவுகள் அகற்றப்பட்டு வியர்வைத் துவாரங்கள் அடைபடாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு கிழமைக்கு மேலாகவும் குளிக்காமல் இருந்தால் வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது.

இஸ்லாத்தைப் பொறுத்தளவில் ஐவேளைத் தொழுகைக்கு வுழூ செய்யும்போதும் முகம், கை, கால், மூக்கு, வாய், காது, தலைமுடி ஆகியவை சுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே, கடமை தவறாத ஒரு முஃமினானவன் எந்ந வேளையிலும் சுத்தத்தைப் பேணியவனாகவே இருப்பான்.

நகங்களை வெட்டி அகற்றப்படவேண்டிய முடிகளை அகற்றி ஆரோக்கியம் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1.விருத்தசேதனம் செய்வது. 2.மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது. 3.அக்குள் முடிகளை அகற்றுவது. 4.மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 6297)

மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடியைக் களைவது, மர்ம உறுப்பு முடியைக் களைவது ஆகியவற்றுக்கு நாற்பது இரவுகளை விட விட்டு வைக்கக்கூடாது என நாங்கள் நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 379)

நகங்கள் வளர்ந்து அதனுள் அழுக்குகள் தேங்குவதால் உணவு உட்கொள்ளும்போது அவையும் உணவுடன் சேர்ந்து சமிபாட்டுத் தொகுதிக்குள் சென்று உணவு சமிபாட்டில் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்திபேதி, உணவு நஞ்சாதல் போன்ற நோய்கள் ஏற்படும். அத்துடன் அக்குள் முடி, மர்ம உறுப்பு முடி ஆகியவற்றைக் களையாதவிடத்து வியர்வையின்போது வியர்வை அவ்விடங்களில் படிந்து பக்டீரியாக்களின் தாக்கம் அதிகரிக்கும்.

ஆனால், இஸ்லாம் நாற்பது இரவுகளுக்குள் அக்குள் முடி, மர்ம உறுப்பு முடிகளைக் களைந்து, மீசையைக் கத்தரித்து வாரத்தில்  ஒருமுறை  நகங்களை வெட்டி ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிகாட்டுகின்றது.

மன ஆரோக்கியம் மனிதனின் கட்டாயத் தேவையே!

பிறர் நலம் நாடுதல்.

உடல் ஆரோக்கியம் எந்தளவிற்கு ஒரு மனிதனுக்கு முக்கியமோ அதேபோல் மன ஆரோக்கியமும் அத்தியவசியமானது. சிலர் உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பினும் மன ஆரோக்கியம் இல்லாத காரணத்தினால் எந்த விடயத்திலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் வாழ்க்கையில் விரக்தியடைகின்றனர்.

இன்று பெரும்பாலான மனிதர்களின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தும் வகையிலும், மனதைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன. இதனால் மனதளவில் நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 10)

மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத் தாரி(ரலி)அவர்கள் (நூல்: முஸ்லிம் 82)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் (நூல்: புகாரி 13)

எனவே, நாம் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருந்தால் நம் நாவினாலும், கைகளினாலும் பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இதனால் மன ஆரோக்கியம் பேணப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 2320)

ஒரு முஸ்லிமானவன் தனக்கு எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு பிறருக்கு உதவக்கூடியவனாகவும், பிறர் நலம் நாடக்கூடியவனாகவும் இருக்க வேண்டும். இதனால் தாம் மனநிறைவைப் பெறுவது மட்டுமல்லாமல் பிறர் மனதையும் குளிர்சிசியடையச் செய்ய முடியும்.

பொது இடங்களில் மனச் சங்கடங்களை ஏற்படுத்துதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம், பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 239)

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் இரண்டு சாபத்திற்குரிய காரியங்களுக்கு பயந்து கொள்ளுங்கள். அந்த இரண்டு காரியங்களும் என்ன இறைத்தூதர் அவர்களே என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். அவை மக்களின் பாதையில் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலஐலம் கழிப்பதும் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: முஸ்லிம் 397)

இன்று சில மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமாக பாதைகளில் நடந்து கொள்கின்றனர். தாம் சுற்றாடலை
அசுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றனர்.

எனவே, இஸ்லாம் காட்டிய வழியில் நடந்து நம் உடல் , உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பிறர் உடல், உள ஆரோக்கியம் கெடாத வண்ணமும் நம் நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக வாழ முயற்சிப்போமாக!

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்


நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க  குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க.. 
நாம் பார்க்கும் , கேட்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது  முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :

ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல் .

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :

explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :

மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்

யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி

முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி

தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ ,சிங்களமோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்

2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .
3 .முழு கவனம் மிக அவசியம் .

4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்

Example - news - north ,east,west,south ....

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை

8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 .தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.

Saturday, 17 May 2014

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்...!(மருத்துவ மனையில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவம்)



மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்...!(மருத்துவ மனையில் நடைப்பெற்ற ஒரு உண்மை சம்பவம்)

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி,"பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.

"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.

"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

Monday, 12 May 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க



வெறும் ஐநூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க,வராமல் தடுக்க ஒரு சிறந்த கைமருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?


புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.


எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.


அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.


அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.


இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.


இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .


இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?


நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்


Saturday, 3 May 2014

தாடி வளர்ப்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்



                        



இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435


மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வண்ணம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வண்ணம் படைத்திருப்பான்.

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம்

பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.

1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது.

Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல் ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”.

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர்.

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!




இஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...!
தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
=======================================
தாடி வைத்தால் கேன்சர் வருவதை தடுக்கும் புதிய விஞ்ஞான ஆய்வு. வ. - இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞான உலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது.
யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ள தடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும் தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்....முகத்தில் ஆண்கள் வைக்கும் தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....

சூரியனிலிருந்த 95 சதவீத புற ஊதாக்கதிர்கள் நம் சருமத்தை நேரடியாக தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறது என்றும், இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரு புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாடி வைத்திருப்பவர்களுக்கு சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு இளமையோடு காட்சியளிப்பர்.

இளைஞர்கள் முகத்தில் தாடி இல்லாமல் இருந்தால் இளமை போன்றும், தாடி இருந்தால் முதியவர்கள் போன்றும் பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் தாடி இல்லாதவர்கள் முகத்தில் சூரியனின் தாக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அவர்களின் முகம் முதுமையை அடைந்து விடுவதாகவும், தாடி வைத்திருப்பவர்களின் முகத்தில் சூரியனின் தாக்கம் குறைந்து காணப்படு வதால் நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தாடி வைத்திருப்போர் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தால் எப்போதும் முகம் ஜிலுஜிலுவென்ற இருக்கும். தாடி வைத்திருப்போர் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், எந்த அளவிற்கு தாடி அதிகம் உள்ளதோ அந்த அளவிற்கு தாடி குளிரை கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமாக ஷேவ் செய்வதினால் ஏற்படும் தீமைகள் :ஷேவ் செய்யும் போது பிளேடினால் ஏற்படும் கீறல்கள், சருமக்கோளாருகள் ஏற்படுகிறது.முமையாக ஷேவ் செய்த முகத்தில் பாக்டீரியா உள்ளிட்ட நோய்கள் உடனடியாக தொற்றிக் கொள்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி, தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமா உள்ளது. இதனால் ஆஸ்துமாவையு தவிர்க்க முடிகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் தாடி வைப்பது அவசியமாகிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனுக்கு எதையெல்லாம் செய்ய கூறியுள்ளதோ அவையனைத்தும் 14 நூற்றாண்டுகள் கழித்து இன்று விஞ்ஞானிகளால் கூறப்பட்டு வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 435

Friday, 2 May 2014

மூளையை பாதிக்கும் பழக்கங்கள்

\


மூளையானது மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். உடம்பின் உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனையும் பெற்றுள்ளது.

எனவே மூளையை பாதிக்கும் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய சர்க்கரை சாப்பிடுவது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல் நமக்குத் தேவையான ஓக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஓக்ஸிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஓக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஓக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியான பிறகே மூளைக்கு வேலை கொடுப்பது சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால் மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

Monday, 28 April 2014

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு.!


சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.

Saturday, 26 April 2014

கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள் . கோபத்தை எப்படி குறைப்பது ?




ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப
 ்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக…

சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது
உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

கோபத்தை குறைக்க 15 வழிகள்

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.

7. மதம் சம்பந்தான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்

9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.

11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

13. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.

14.. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.

15. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

Friday, 25 April 2014

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை !!


ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron

Malayalam - Kunguma Poo

Telugu - Kumkuma poova

Sanskrit - kumkuma

Botanical Name - Crocus sativus

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.


இரத்தம் சுத்தமடைய :-

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு :-

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட :-

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

Sunday, 20 April 2014

அல்சர் நோயும்! அதை குணப்படுத்​தும் வழிமுறைகளு​ம்!

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.


1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:
*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
*புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது.

இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.
*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:
1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.
*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.
*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்

Tuesday, 8 April 2014

விருத்த சேதனம் செய்து கொள்வது பற்றிய தகவல் !!!! (circumcision)




விருத்த சேதனம் ( english : circumcision :அரபி: ختنة; ஈப்ரு: בְּרִית מִילָה) அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும்.