Wednesday, 20 June 2012

வழுக்கை தலையில் முடிவளர இய‌ற்கை வைத்திய முறை



வழுக்கை தலையில் முடிவளர:சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

நரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்

                                 
   

இன்றைய காலக்கட்டத்தில் இளசுகளுக்ககு கூட நரை முடி பிரச்சனை
உள்தா?சுற்று சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது. நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் தினமும் சேர்‌த்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத காரியம். சரி வந்த நரை முடியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.



தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு மற்றொரு தீர்வு, வெந்தையத்தை இரவே ஊற விட்ட, காலையில் அதனை மைய அரைத்து அந்த விழுதை தலை முடிவேர்களில் பேக் போல போட்டு, காய்வதற்குள் சியக்காய் கொண்டு அலசவும்.


வாரம் ஒரு முறை ஒரு கின்னத்தில் நல்லெண்ணெய், விலக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் தேவையானவற்றை எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் சிறு சிறு வட்ட சுழல் முறையில் மசாஜ் கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்தில் எண்ணெய் போக முடியை சியக்காய் கொண்டு அல்லது ஹெர்பல் ஷாம்பூவை தண்ணீரில் கலந்தோ உபயோகிக்கவும்.

நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், அதனுடன் புதினா, கறுவேப்பிலை. இவை மூன்றையும் தனிதனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள்.



மூன்று நாட்களில் கொற கொறப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு. காய்வதற்குள் அலசவும். இந்த பேக்கை தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எதனுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரை முடி வருவதற்கு முன்பு செய்ய இது தான் சூப்பர் டிப்ஸ்.

இளநரை ஏன் ஏற்படுகிறது தெரியுமா?



Tuesday, 19 June 2012

ஒவ்வொரு நொடிப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறது அல்லாஹ்வின் அபய பூமி, உலக மக்களின் புனித பூமி....................!!

ஒவ்வொரு நொடிப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறது அல்லாஹ்வின் அபய பூமி, உலக மக்களின் புனித பூமி....................!!


இவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா......??
? (திருக்குர்ஆன்: 29:67)

அமரிக்க ஏகாதிபத்தியப்பேய் இஸ்லாமிய நாடுகளை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து பயன் அடைந்து கொண்டும் வருகிறது

அமரிக்க ஏகாதிபத்தியப்பேய் இஸ்லாமிய நாடுகளை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து பயன் அடைந்து கொண்டும் வருகிறது . அமரிக்க பிரிட்டிஷ் கள்ளத் தொடர்பில் பிறந்த இஸ்ரேலிய குழந்தைக்கு தாய்ப்பால் ,பாலஸ்தீனிய இஸ்லாமியகுழந்தைக்கு கள்ளிப்பாலா ? அமரிக்காவின் புதிய திட்டம் முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிப்பது தற்போது சிரியாவில், பஹ்ரைனில் சவுதி படைகள் அடுத்தது என்ன ? ஸ்ரீலங்காவில் இந்திய அமைதிப்படை எப்படி ஆத்திரப்படை ஆனது தமிழ் மக்களை பாதுகாக்க வந்து தமிழ்,முஸ்லிம் மக்களையும் அழித்தத்தோடு தானும் அழிவை சந்தித்தது நாம் அறிந்த வரலாறு. முஸ்லிம்-முஸ்லிம் மோதல் நாடகத்தை ஆரம்பித்து வேடிக்கை பார்க்கிறது. அரை நூற்றாண்டு தாண்டிய பாலஸ்தீனிய பிரச்சினைக்கு தீர்வு இன்னும் இல்லை லிபியாவிலும் பாக்கிஸ்தானிலும் உலக அமைதிப்படை தாக்குதல், இவை யாவும் ஒட்டு மொத்த முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, தற்போது இலங்கையிலும் தமிழ்,முஸ்லிம் பகுதிகளில் புத்தர் சிலை வைப்பது பள்ளிவாசல் ,கோயில் தாக்குவது போன்ற சிங்கள தீவிர வாதிகள் ஈடுபடுவதும் இதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது இது இனவாதத்தை தூண்டும் செயலாகும் மூவின மக்கள் மக்கள் வாழும் சின்னஞ்சிறிய அழகிய தீவை சாக்கடையாக்க மீண்டும் ஒரு முறை ஆக்க முயற்சிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. பள்ளி வாசல் சம்பவங்களுக்கு பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை எவ்வாறு கண்டு கொள்வதில்லையோ அதேபோல்இலங்கையில் முஸ்லிம்கள்மீது சிங்கள தீவிரவாதிகள் மேற்கொள்ளும் எந்த ஒருநட வடிக்கைக்கும் சர்வ அதிகாரங்களை கொண்டுள்ள ஜனாதிபதி கண்டும் காணாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும். உலகில் நியாயம் மறைந்து அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது ,உலக முடிவு நாள் நெருங்கி விட்டது போலும் திருமறையில் சொல்லப்பட்ட யுக முடிவின் அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன .எனவே நாம் அமரிக்காவின் மோசமான இந்த இரட்டை வேட நிலைப்பாடுகளுக்கும் இஸ்ரேலின் மொசாட் நடவடிக்கைகளுக்கும்நமது எதிப்புக்களை தெரிவிப்போமாக!