Friday, 28 February 2014

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!




பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.

நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று


பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்


இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்


என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும்.


நல்ல ஜீரண சக்தியை தருவது

தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து


32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.


ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி


நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் LACTO இருக்கிறது.


தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை


தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு


மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி


மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை


குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்


அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது


வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று


பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.


(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்


whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை


நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை


சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்


இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு


தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான


அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும்


 அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் 


`பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே


 ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத 


பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம்


 ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி 


பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண 


சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம்


 நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், 


தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு 


உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு


 இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், 


மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் 


போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த


 உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் 


எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி


 வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான


 மருந்தாகச் செயல்படுகிறது.


தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை


உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக


உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,


பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

Wednesday, 26 February 2014

குமரேசன் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.


எல்லாபுகழும்இறைவன்ஒருவனுக்கே.....!!

உத்தமபாளைய தமுமுக தலைவர் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 நபர்கள்....!! 


இறைவனின் மாபெரும் கிருபையினால் தேனி மாவட்டம் த.மு.மு.க உத்தமபாளையம் ஒன்றிய தலைவரும், தேவரம் ரஹ்மத் எத்தீம்கானா மத்ரஸா நிர்வாகியுமான அபூபக்கர் சித்தீக் அவர்களின் முன்னிலையில்... 

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் குமரேசன் தனது குடும்பத்திலுள்ள 7 நபர்களுடன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

அல்ஹம்துலில்லாஹ்....!!

லாரன் பூத் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.




பிரிட்டிஷ் முன்னாள் பிரதமராக இருந்த டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர். இவரது ஒன்று விட்ட சகோதரிதான் லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த லாரன் பூத் (Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க‌ பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.

(கீழுள்ள வீடியோவைப் பார்க்கவும்)

https://www.youtube.com/watch?v=RY6PThbfWdY



அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரக்காத்துஹு!
நம்அ னைவர்மீதும் ஏக இறைவனின்சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இஸ்லாமை ஏற்ற போது நான் பெற்ற மன அமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷாஅல்லாஹ், இனியும் விலகாது.
லாரன்பூத்(Lauren Booth) - அரசியல்விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீனமக்களுக்காக போராடியவர்/
போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது.

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடகங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை.
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை.
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.

மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ் நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன்.

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான்.

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'.

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன்


. விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.



நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'.

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'.

'இனியும் புகைபிடிப்பீர்களா?'

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது.

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'.

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள்.

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://


www.laurenbooth.co.uk/. link



Tuesday, 25 February 2014

இந்து ஆகமங்களில் இஸ்லாம்




என் இனிய நண்பர்களுக்கு..


மனித இனத்தைப் பற்றி இஸ்லாம் 

கூறுகையில்...

''மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை  

ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து 

டைத்தோம்.நீங்கள் உங்களுக்குள்    

 (ஒருவரையருவர்) அறிமுகப்படுத்திக் 

கொள்வதற்காகவே  உங்களைப்  பல்வேறு 

பிரிவினராகவும் கோத்திரங்களாகவும்  

ஆக்கினோம்.நிச்சயமாக மிக்க  கண்ணியம்  

வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம்  அஞ்சி 

வாழ்பவர்தான்.'' 

(அல்குர்ஆன்).


  • இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக உலகம்தோன்றிய போதே அதுவும் தோன்றிவிட்டது. காலப்போக்கில் அதில் மாசு படிந்தபோது அவ்வப்போது தீர்க்க தரிசிகள் இறைத்தூதர்கள் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள்.அவ்வாறு  வந்தவர்களில் இறுதியானவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களாவார்கள் சிலர் அரேபியாவிலே இஸ்லாம் தோன்றிய தால் அது அரபுகளுக்குரியது என்பர். 
அவ்வாறல்ல -அகிலத்தார் அனைவருக்கும்  

பொதுவான மார்க்கம்தான் 

இஸ்லாம்.அதாவது இப்பிரபஞ்சம் 

அனைத்துக்கும் ஒரே கடவுள்தான் அதுதான் 

அல்லாஹ். 

முஹம்மது நபியவர்கள் அவனது 

தூதராவார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதே

 இஸ்லாம் எனப்படுகின்றது. அல்லாஹ் 

என்பது அரபு நாட்டுக் கடவுளல்ல. 

தமிழில் கடவுளென்றும், ஆங்கிலத்தில் 

கடவுள் (நிஷீபீ) என்றும், உருதில் 

'குதா'என்றும்,வடமொழியில் 'பகவான்'

என்றும் கூறுவதுபோல் அரபியில் ஒரே 

இறைவனுக்கு 'அல்லாஹ்'என்கின்றோம்.

உலக சமயங்களைக் கற்பதால் நாம் 

அடையும் பெரிய இலாபம் யாதெனில் 


சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய 

வேற்றுமைகள் இருந்தபோதிலும் 

அனைத்திலுமே அடிப்படை உண்மை  
    
ன்றாக இருப்பதைக் காணமுடிகின்றது.

 இந்த அடிப்படை உண்மையின் மூலம்  

 ஏற்படும் ஒற்றுமையானது 

சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற 

குரோதம், விரோதம், 

துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீ 

கத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் 

புனிதனாக ஆக்கும் நிலையைக் காண 

முடிகின்றது.உண்மையில் மிகப் பெரும்

 சமயங்களில் ஒன்று இந்து சமயம். 

இதுவே நாளடைவில் பல்வேறு பிரிவுகளாக

மாறி ஒன்று எதிர்க்குமளவுக்கு குரோதத்தை 
யும், விரோதத்தையும் உண்டு பண்ணி  

விட்டது. அவற்றைக் களைந்து இந்து 

மதத்தின் அடிப்படைக் கொள்கை எதுவென 

அறிந்திருத்தல் ஒவ்வொரு இந்துவுக்கும்  

அவசியமாகும்.இஸ்லாம்  தன் கடவுள்

கொள்கை குறிப்டுபிகையில் .. இந்த முழு 

அண்ட சராசரங்களுக்கும் ஒரே கடவுள்தான் 

இருக்கவேண்டும்.கடவுள் 

என்பவர் அனைத்து வகையிலும் ஒப்பற்ற 

சக்திபெற்ற வல்லவராக இருக்கவேண்டும். 

அவருக்கு எத்தகைய உலக தேவைகளும் 

இருக்கக் கூடாது.அவருக்கு தூக்கமோ,

மறதியோ, அலுப்போ,ஓய்வோ தேவைப்

படக்கூடாது.அவருக்குப் பிறப்போ இறப்போ 

இருக்கக்கூடாது.ஏனெனில் கடவுளுக்கு 

இவை உண்டு என வைத்துக்கொண்டால் - 

கடவுள் பிறப்பதற்கு முன் இவ்வுலகத்தைப் 

பரிபாலித்தவர் யார்? கடவுள் இறந்து 

விட்டதன் பின் மக்களைக் காப்பவர் யார் 

போன்ற வினாக்களுக்கு விடைகாண 

முடியாத நிலை ஏற்படும்.ஒரு கடவுள் 

இறந்தபின் வேறு கடவுள் கவனித்துக் 

கொள்ளும் என்றால் ல கடவுள்கள்

ண்டென ஏற்கவேண்டும்.இவ்வாறு 

ஏற்றால் ஒவ்வொரு கடவுளுக்கும் 

குறிப்பிட்ட சி அதிகாரங்களே உண்டு என 

ஏற்கவேண்டும். எனவே கடவுள் 

அனைத்து சக்திமிக்கவர் எனும்

 விசயம் இங்கு  தகர்க்கப்பட்டு 

விடுகின்றது.இஸ்லாம் முன் வைக்கும் 

இந்தக்கடவுள் கொள்கையினையே 

இந்து மதத்தின் மூல நூற்களிலும்,முற்கால 

இந்து மதக்குருமார்கள் பலர் குறிப்பிட்டிருப் 

பதுதான் இந்த ஆச்சரியமான உண்மை  ...  

இதை நான் சொல்லவில்லை ... 

இந்துமத வேத மூலநூற்களில்

காணப் படுபவைகளையே 

எடுத்துக்காட்டுகின்றேன்.ஆனால் இப்போது 

அதிகமானோருக்க இவ்வுண்மைகள் 

தெரியாது. பிற்காலத்தில் வந்த குருக்களும் 

பூசாரிகளும் இவற்றைப் பற்றியெல்லாம் 

மக்களுக்குக்கூறுவதை விடுத்து ஒருசில 

ஆச்சாரங்கள் புரியாத மந்திரங்களை 

மாத்திரம் உச்சரித்து அவையே இந்துமதம் 

என்று மக்கள் எண்ணும் அளவுக்கு- தாங்கள் 

சொல்வதுதான் இந்துமத போதனை என 

மக்களை எண்ண வைத்து இந்து மதத்தின் 

மூலமத நூற்களை யாரும் படிக்க

முடியாத படியும்  செய்து விட்டார்கள்

இந்துமதத்தின் நான்கு வேதங்களாகிய "ரிக், 

சாம,தர்வண,யஜூர்"வேதங்கள் காலப்போ

க்கில் காணாமற் போய்விட்ட.ன. 

இந்துக்களின் மனுதர்மம் "மனு" 

 என்பவருக்குரியது.அவரது தர்ம 

சூத்திரங்கள் ஒரு இலட்சமாகும். 

மனுதர்ம சாத்திரமாக அது வடிவெடுத்த 

போது அது 2683 தான்.இன்று நடைமுறை 

யில்1928தான் உள்ளன.ஆக நடை 

முறைக்கு ஒவ்வாத மனுதர்ம சாஸ்திரமு ம் காலப்போக்கில் கரைந்து போயிற்று. 

இந்து மதமும் பல பிரிவுகளாகப் பிரிந்து 

விட்டன.இதோ இந்து மதத்தின் மூலத்தில் 

கடவுள் கொள்கை எப்படி என்று பாருங்கள்



நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் 

சாற்றியே சுற்றி வந்து மொணமொணன்று  

சொல்லும் மந்திரமேதடா? நட்ட கல்லும் 

பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட 

சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ? 

ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் 

செய்கிறீர்,வாசலில் பதித்த கல்லலை 

மழுங்கவும் மிதிக்கிறீர், பூசை பெற்ற 

கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர். 

ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லு 

மல்லவே.. (-சிவ வாக்கிய சிவாமிகள்)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் - 

திருமூலர்.



அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப்

 புராணம் இறைவனை ஏகத்துவப் 


பெயர்களால் அழைத்தாலும் எங்குமே 

அனேக மக்கள் சிலை வைத்து 

இறைவனுக்கு இணை கற்பித்துவிடுகின்ற 

ர்.ஆளுக்கொரு தெய்வம் கல்லை  

யெல்லாம் கடவுளாக்கி பல பிரிவுகளாகப் 

பிரிந்து சிதறிவிட்டனர்.

அல்குர்ஆன் சொல்கின்றது ...



"அல்லாஹ் அவனைத்தவிர 

(வணக்கத்திற்குரிய) நாயன் வேறு 

யாருமில்லை. 


அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், 

என்றும் நிலைத்திருப்பவன். அவனை 

உறக்கமோ சிறு தூக்கமோ பீடிக்கா. 

(அல் குர்ஆன் 2:255).

நபியே கூறுவீராக.. அல்லாஹ் அவன் 

ஒருவனே .. அவன் (எவரிடத்திலும்) 


தேவையற்றவன். அவன் (எவரையும்) 

பெறவுமில்லை. (எவராலும்) 

பெறப்படவுமில்லை. அவனுக்கு 

நிகராக எவரும் இல்லை (அல்குர்ஆன்).

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி ...



அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் 

பிராமணம் அல்லாம் அல்லா றஸ¨லா 


மஹாமத ரக பரஸ்ய ஸ்பஸ¨ரஸம் 

ஹாரினீ ஹ¨ம் ஹரீம் அல்லோ 

றஸ¨ல 

மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா 

இல்லல்லெ தி இல்லல்லா 

அல்லோப 

நிஸத்)



பொருள்: இறைவன் முதன்மையானவன். 

அவன் முழுமை பெற்றவன். 


அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். 

சிவனின் பதவியில் நிலை 

பெற்றிருக்கும் 

முஹம்மது (ஸல்) இறையோனின் 

திருத்தூதராக இருக்கும்.

இஸ்லாத்தைப் பற்றி இவர்கள்...



பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் 

மனிதனாக வாழ வழி செய்த 


முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை 

கிடையாது. -அம்பேத்கார்.

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் 

கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். 


இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து. -

பெரியார்.

பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் 

எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. 


இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எழிய 

தன்மையிலேயே இருக்கின்றன. 

அது ஓர் இயற்கை மதம். -

டாக்டர் ராதா கிருஷ்ணன்.

ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் 

என்பதை எள்ளளவும்

 குழப்பமின்றி உறுதிப்படுத்தியது  

இஸ்லாம்தான்.குர்ஆனைப் பக்திப் 

பரவசத்துடன் படிக்கும்போது  எனக்கு ஒரு 

வித காந்தசக்தி ஏற்படுகின்றது.என் இந்து 

சகோதரர்கள் இதை பரிசுத்த உள்ளத்து 

டன் படித்தால் உண்மை உபதேசம் 

வெளியாவதை உணர்வார்கள் 

(காந்திஜி).முஹம்மது போதித்த மார்க்கம் 

இஸ்லாம் வைரம் போன்றது.ஒரே 

இனம்,ஒரே குலம்,ஒரே மறை, ஒரே 

வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் 

தலைப்பட்டேன். 

இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் 

எனக்கு விடை தரவில்லை. (அண்ணாத்துரை)

எனதன்பின் இந்து நண்பர்களே...



இந்து வேத ஆதி மூல நூல்களில் 

கடவுளைப்பற்றி கடவுளின் தன்மைகள் 


பற்றிக்  கூறப்பட்டிருக்கும் 

விசயங்களுக்கும் இன்றைய இந்துக்களில் 

பல கடவுள்  கொள்கை வழிபாட்டுக்கும் 

இடையில் நிறைய வித்தியாசங்களும் 

வேறுபாடுகளும்,முரண்பாடுகளும் நிறைந்து

ள்ளன என்பதை இந்து வேதமூல

நூற்களை வாசிக்கும்போது நீங்களாகவே 

முடிவுசெய்து கொள்வீர்கள். இந்து மூல 

நூற்களிலும், முன்னைய இந்துமத 

அறிஞர்களின கூற்றுக்களையும் சற்று 

நேரமெடுத்து நீங்கள் படிக்க 

முன்வந்தால் நிச்சயம் உங்களுக்கு 

 இவ்வுண்மை புலப்படும். அதுபோலவே 

இந்து மூலநூற்களில் கடவுளைப்பற்றிக்

 கூறப்பட்ட அனைத்து தன்மைகளும் 

இஸ்லாத்தின் கடவுள் கோட்பாட்டுக்கு 

ஒத்துப் போவதையும் நீங்கள் உணர 

முடியும்.தனக்குவமை இல்லாதான் -

தான் சேர்ந்தார்க்கல்லான் மனக்கவலை 

மாற்றல் அரிது.


அதாவது: தனக்கு உவமை இல்லாத ஏக 

இறைவனை வணங்கினால்தான் 


மனக்கவலை இல்லாதிருக்க முடியும் 

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..

ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் 

அறிவிலிகாள்"எனப்பாரதியார் சாடுகின்றார்.


இஸ்லாத்தைப்பற்றி சில வரிகள் ...



இஸ்லாத்தில் ஒரே கடவுள்தான். 

அவன்தான் அல்லாஹ்.



இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோருக்கு 

மத்தியில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் 


கிடையாது. இ, குல வேறுபாடுகளின்றி 

அனைவரும் ஒன்றாக உண்ணலாம், 

வணங்கலாம்.இதில் உயர்சாதி, கீழ்சாதி 

எனும் சாதிப்பெருமைகளோ இன நிற

வேறுபாடுகளோ கிடையாது. 

இஸ்லாத்தில் தீண்டாமை என்பதற்கு 

இடமேயில்லை. இஸ்லாம் அதை

முற்றாக ஒழித்துகட்டிவிட்டது.


இஸ்லாம் எல்லாக் காலங்களுக்கும், 

இடங்களுக்கும், மக்களுக்கும் 

பொருத்தமான   சட்டதிட்டங்களையே 

கடைபிடிக்கின்றது.பகுத்தறிவுக்கொவ்வாத, 

புத்தி ஏற்றுக்கொள்ளாத புராணங்களோ 

இதிகாசங்களோ இதில் இல்லை.

இஸ்லாத்திலேயே பெண்களுக்கு

 முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டிரு

க்கின்றன.பெண்களுக்கு மறுமண 

உரிமையுண்டு. கணவன் இறந்தால் 

மனைவி உடன்கட்டையேறுவதெல்லாம் 

இஸ்லாத்தில் இல்லை.


இஸ்லாத்தில் கடவுளை வணங்கக் 

காணிக்கை செலுத்த வேண்டியதில்லை.



இன்னும் எத்தனையோ சிறப்பம்சங்களில் 

இஸ்லாம் ஏனைய மதங்களை 


விட்டும் வேறுபடுகின்றது.


முடிவாக ...



இஸ்லாமிய மார்க்கம் ஓர் 

அறிவுப்பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான 


மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் 

சாந்தி, சமாதானம், ஒற்றுமையுடன் 

வாழ்வதற்குரிய ஒரு முழுமையான 

வாழ்க்கைத் திட்டத்தினையே இஸ்லாம் 

உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. 

முஸ்லிம்கள் சிலரின் தனிப்பட்ட 

நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனை 


ளுக்கு மாற்றமாகக் கூட

சிலவேளை இருக்கக்கூடும். 

அதற்காகஇஸ்லாத்தைகுறைகூறமுடியாது.


இஸ்லாம் எவரையும் அதனை ஏற்றுத்தான் 

ஆகவேண்டுமென 


வற்புறுத்துவதில்லை. 

அல்லாஹ் கூறுகின்றான்...


இம்மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது 

(அல்குர்ஆன்)



எனவே இஸ்லாம் அதனை ஏற்றுத்தான் 

ஆக வேண்டுமென்று யாரையும் 


பலவந்தப் படுத்துவதில்லை.எனினும் 

அதிலுள்ள நற்பயன்களை உலக

மாந்தர் அனைவரும் அனுபவிக்கவேண்டும்

 என விரும்புகின்றது,, அழைப்பு 

விடுக்கின்றது.


அன்புள்ள நண்பர்களே...



உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் 

தூண்டிவிடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு 


வேலை கொடுங்கள்.எந்த மார்க்கம் 

சிறந்தது, எந்த மார்க்கம் அனைத்து 

விதத்திலும் நடைமுறைச் சாத்தியம் 


மிக்கது, ஒவ்வொரு மனிதனும்

கௌரவத்துடன் உயர்சாதி, 

கீழ்சாதி,ஆண்டான், அடிமை போன்ற 

பிறப்பியல் வேறுபாடுகளை மறந்து 

சமத்துவத்துடன் வாழ எம்மதம் வழி

வகுக்கின்றது என்பதுபற்றி கொஞ்ச நேரம் 

சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் 

நாடினால்  உண்மை உங்களுக்கும் 

புலப்படலாம். நீங்களும் நேரிய சீரிய ஒரு

மார்க்கத்தை - சிறந்த வாழ்க்கைத் 

திட்டத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளலாம். 

அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.