Sunday, 3 September 2023
ஜின், ஷைத்தான் பற்றிய அறிமுகமும்,படைப்பின் நோக்கமும்
ஜின் ஷைத்தான் பற்றிய அறிமுகமும்,படைப்பின் நோக்கமும்
جججججججججججججججججججججججججججججججن
ஆக்கம்: மெளலவி கே.எல். ஆதம்பாவா (மதனி) சம்மாந்துறை.
ஜின் இனம் என்பது நெருப்பினால் படைக்கப்பட்ட, பகுத்தறிவுள்ள ஒருபடைப்பு. அவர்கள் மனிதனின் கண்ணுக்கு தென்படாமல் மறைந்து இருப்பதனால்தான் ஜின் என்று அழைக்கப்படுகின்றனர்.
மலக்குகள்ஒளியினாலும்,ஜின்கள்;நெருப்பினாலும்ஆதம்(அலை)அவர்கள்;உங்களுக்கு(குர்ஆனில்) கூறப்பட்ட(மண்ணினால்) படைக்கப் பட்டுள்ளார் கள்;'என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.(முஸ்லிம்)
இந்த ஜின் இனம் மனித இனத்தின் தந்தை நபி ஆதம் (அலை) படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டுள்ளனர்.(பார்க்க சூறத்துல் ஹிஜ்ர்: 26-27)
ஜின்கள் மூன்று வகையினராக இருக்கின்றனர்: ஒருவகையினர் காற்றில் பறந்து திரிபவர்கள். இன்னுமொருவகையினர் பாம்புகள்,நாய்கள் போன்றும்,மற்றுமொரு இனம் ஒரு இடத்தில் தங்கியிருந்து (தேவைக்கேற்ப வேறு இடங்களுக்கு பயணிக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர்.) எனநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(தபரானி பைஹகீ
ஜின்களைக் காணும் படைப்புக்கள்;
سيسيسسسيسسسسسسسسسسسسسسسسسسسسسس
ஜின்கள் எமது கண்களுக்கு தென்படா விட்டாலும் நாய்,கழுதைபோன்ற படைப்புக்கள் ஜின், ஷைத்தான்களைக் காண்கின்றன.
நாய்களின் ஊழைச் சத்தத்தினையும்,இரவு வேளைகளில் கழுதை கத்தும் சத்தத்தையும், நீங்கள் செவியுற்றால் ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள். ஏனெனில் நீங்கள் காணாத படைப்புக்களை அவைகள் காண்கின்றன' எனநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (; அபூதாவுத்)
ஷைத்தான் ஜின்இனத்தைச் சேர்ந்தவன்:
ششششششششششششششششششششششششششششيطان
அல்குர்ஆனில் அதிகமாக கூறப்பட்டுள்ள ஷைத்தான்;என்பவன் ஜின் இனத்தை சேர்ந்தவனாகும்.அவன்ஆரம்பத்தில் மலக்குகளுடன் சேர்ந்து வானத்தில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தான்.சுவர்க்கத்திலும் உட்புகுந்தான். ஆதம்(அலை)அவர்களுக்கு சிரம்பணியுமாறு மலக்குகளுக்கு அல்லாஹ கட்டளையிட்டபோது ஷைத்தான் மாத்திரம் பொறாமையினாலும், பெருமையினாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து, சிரம்பணிய மறுத்த காரணத்தால் , அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டும் விரட்டப் பட்டான்.இவனுக்கு இப்லீஸ் என்ற பெயரும்; உண்டு.
ஷைத்தான அல்லாஹ்வுக்கு மாறு செய்யுமுன் அஸாஸீல் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாக சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஜின்களின் உணவும் பானமும்:
உஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ
ஜின்ஷைத்தான்கள் மனிதர்களைப் போன்றே உணவு உட்கொண்டு பானங்களையும் அருந்துகின்றனர்.
'உங்களில்ஒருவர் உணவு உட்கொண்டாலோ, குடிபானம் அருந்தினாலோ அவரது வலது கரத்தினால் உண்ணட்டும், பருகட்டும்.ஏனெனில் ஷைத்தான் அவனது இடது கரத்தினால் உண்ணுகிறான்,குடிக்கிறான்' எனநபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களில் எவர் இடது கையினால் உணவு உண்கின்றாரோ அவருடன் ஷைத்தானும் உண்ணுகிறான். மேலும்எவர் தனது இடது கரத்தால் குடிக்கின்றாரோ அவருடன் ஷைத்தானும் குடிக்கிறான்.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்னத் அஹ்மத்)
மேற்கூறப்பட்ட ஆதாரங்கள்மூலம் ஜின்,ஷைத்தான்கள் உண்கின்றனர், குடிக்கினறனர்;என்பதை அறிய முடிகிறது.
ஜின்கள் திருமணம் முடித்து சந்ததிகளைப் பெருக்குகின்றனர்:
ةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةةة
மனிதர்கள் திருமணம் முடிப்பது போன்று, ஜின்களும் திருமணம் முடித்து, மனிதர்கள் பிள்ளை பெறுவதனைப் போன்று பிள்ளைகளை பெற்றுக்கொள்கின்றனர்.எனினும் மனிதர்களின் எண்ணிக்கையை விட அவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் (இப்னு அபீ ஹாதிம்)
மேலும் மனிதர்கள் மரணிப்பதைப் போன்று அவர்களும் மரணிக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் மனிதர்களை விட நீண்ட ஆயுளை கொண்டவர்கள் ஒரு ஸஹாபி பாம்பு உருவத்தில் தோன்றிய ஜின்னை கொலை செய்த விடயம் பின்னால் கூறப்படும்.ஆனால் ஜின் இனத்தின் தந்தையான ஷைத்தான் மாத்திரம் கியாமத் நாள் வரை உயிர் வாழ்ந்து மரணிப்பான்.
ஏனெனில் அல்லாஹ்விடம் அவன் அவகாசம் கேட்டான்.யா அல்லாஹ்!கியாமத் நாள் வரை நான் உயிர் வாழ்வதற்கு எனக்கு அவகாசம் தா! என்று கேட்டபோது,உனக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அல்லாஹ் கூறினான்.(07:14-15
ஜின்களின் இருப்பிடங்களும் நடமாடும் நேரங்களும்:
سسسسسسسيسسسسسسسسسسسسسسسسس
ஜின்கள் நாம்வாழும் இப்பூமியில் பாழடைந்த கட்டிடங்கள்,தனித்தஇடங்கள்,அசுத்தமான இடங்களான குப்பைத் தொட்டில்கள், மலசலகூடங்கள்,கப்ருஸ்தானங்கள் குளியலறைகள் போன்ற இடங்களில் அதிகம் குடியிருக்கிறார்கள் மேலும் கடைத்தெருக்களிலும் ஷைத்தான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
கடைத்தெருவுக்குள் நுழையும் ஆரம்பமானவனாக வோ அங்கிருந்து வெளியேறுபவர்களில்; இறுதியானவனாகவோ நீ இருப்பதைத் தவிர்த்துக் கொள்.ஏனெனில் அவை ஷைத்தானின் யுத்தகளம் அங்கேதான் ஷைத்தான் தனது படையின் கொடியை நட்டுகிறான்'என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)
மேலும்மனிதர்கள் குடியிருக்குமிடங்களிலும் ஷைத்தான்கள் குடியிருக்கிறார்கள்.ஆனால் அல்லாஹ்வின்திருநாமம் திக்ர்,குர்ஆன் ஓதுதல் குறிப்பாக ஆயதுல்குர்ஸி,சூரதுல் பகறா போன்ற சூறாக்கள் ஓதப்படுமோ,அந்த இல்லங்களிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான்.
மேலும் மாலைவேளையில் இருள் சூழ்ந்தநேரத்தில் ஷைத்தான்கள் பரவலாக உலா வருவதாகவும், அந்த வேளையில் சிறுகுழந்தைகளை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்லவேண்டாம்' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(புஹாரி)
மேலும் பாங்கு சொல்லப்பட்டால் ஷைத்தான்கள் அதனை செவியேற்க முடியாமல் தூர விலகி ஓடுவதாகவும; றமளான் மாத காலத்தில் மூர்க்கத்தனம் செய்யும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதாகவும் ஹதீஸ்களில் உள்ளன.
ஷைத்தானின் தோற்றம்:
چچچچچچچچچچچچچچچچچچچچچچچچچچچچچچچ
ஷைத்தான்மிகவும் அருவருப்பான தோற்றமுடையவன்.இரு கொம்புகளும் உயர்ந்தமீசையும்,நீண்டு சுருண்டதாடியும் தீச்சுவாலையை வெளிப்படுத்தும் வாயையும்;, நீண்ட நகங்களையுடையுமுடைய கடுமையான கறுத்த மனிதனின் தோற்றத்தில் இருப்பான்.' (دائرة المعارف الحديثة)
· அவர்களின் ஆற்றல்:
மனிதர்களுக்கு வழங்கப்படாத அளவு ஆற்றலையும்,சக்தியையும் ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.வேகமாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து செல்லுதல், பொருட்களை கொண்டு செல்லுதல் முதலானவை அல்லாஹ் ஷைத்தானுக்கு வழங்கிய ஆற்றலாகும் .
நபி சுலைமான்(அலை)அவர்களின் சபையில் இருந்த இப்ரீத் எனும் ஜின்,எமனை ஆட்சி செய்து கொண்டிருந்த பல்கீஸ் ராணியின் சிம்மாசனத்தை, ஒரு மனிதன் தான்இருந்த இடத்தில் இருந்து எழும்புவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸூக்கு கொண்டு வருவதாக உத்தரவாதமளித்த சம்பவத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் அந்-நம்லு சூறாவில் 39-40 வசனங்களில் எடுத்துக் கூறியுள்ளான்.
விண்வெளிப் பயணத்தை மனித இனத்தைவிட முந்தியவர்கள் ஜின்கள்:
ےےےےےےےےےےےےےےےےےےےےےےےےےے
ஜின்கள் பூர்வீக காலத்திலிருந்தே வானத்தில் உள்ள சில இடங்களை நெருங்கிச் சென்று வானுலகில் அறிவிக்கப்படும் பலசெய்திகளை ஒட்டுக்கேட்டு வரக்கூடியவர்களாக இருந்துள்ளார் கள். ஆனால்நபி (ஸல்)அவர்கள் நபியாக அனுப்பப்ட்ட காலம்தொட்டு, வானத்திற்குரிய பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டது. வானுலக இரகசியத்தை செவியேற்பதை விட்டும் ஜின், ஷைத்தான்கள் தடுக்கப்பட்டனர்.இது பற்றி அல்-குர்ஆனில்
"நாங்கள் வானத்தைநெருங்கினோம். அதுகடுமையானபாதுகாப்பாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டோம்."
ஒட்டுக்கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம்.அப்போது யார்(ஒட்டுக்) கேட்கிறாரோ காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு எதிராக காண்பார்கள்.(சூறதுல் ஜின்:08-09)
ஜின்களின் கட்டிடக்கலையும்,ஏனைய தொழில் ஆற்றலும்:
گگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگگ
நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்திக்கொடுத்து அவர்களின் திறன்கள், ஆற்றல்கள் போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்வித்துள்ளார்கள்.இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும்போது(அவர் விரும்பிய போர்க்கருவிகளையும் சிற்பங்களையும் தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை (ஜின்கள்)செய்தன.தாவூதின் குடும்பத்தாரே நன்றியுடன் செயல்படுங்கள்.எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர். என்று கூறினோம். (34:13
ஜின்களுக்கு மறைவான அறிவுஞானம் இல்லை:
ےےےےےےےےےےےےےےےےےےےےےےےےےےے
மனிதனைவிட ஜின் என்ற படைப்புக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாக திருக்குர்ஆன் கூறியுள்ளது. கண் மூடி திறப்பதற்குள் ஒரு நாட்டிலிருக்கும் சிம்மாசனத்தை பிரிதொரு இடத்திற்கு கொண்டு வந்து வைக்கக் கூடிய அளவிற்கு ஜின்களுக்கு ஆற்றல் இருப்பதாக அல்குர்ஆன் கூறுகிறது.
விமானங்களோ,ரொக்கெட்களோ இல்லாமல் வானவர்கள் பேசுகின்ற எல்லை வரை,மேலேறிச் சென்று அங்கு பேசுவதை ஒட்டுக்கேட்க முயற்சிக்கும் அளவிற்கு ஆற்றல் ஜின்களுக்கு உண்டு.
இவ்வளவு ஆற்றல் வழங்கப்பட்டிருந்தாலும் மறைவானவற்றை ஜின்களால் அறிந்து கொள்ள முடியுமா? என்றால் முடியாது.இங்கே சுலைமான் நபிக்கு பயந்துகொண்டு பைதுல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள்ஈடுபட்டுக்கொண்டிருந்தா ர்கள்.(பார்க்க : அல்குர்ஆன் 34:14)
ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே மரணித்துவிட்டார். ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார்.பிறகு கறையான்கள் கைத் தடியை அரித்து அவரது உடல் கீழே விழுந்த பிறகுதான்,சுலைமான் நபி ஏற்கனவே இறந்து விட்டார் எனும் செய்தி ஜின்களுக்கு தெரிய வந்தது.
தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சுலைமான் நபி உயிருடன் இருக்கின்றாரா? மரணித்து விட்டாரா? என்பதைக்கூட ஜின்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஜின்களுக்கு மறைவான ஞானம் தெரியாது எனும்போது, மகான்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்பதை நம்புவது அறியாமை தவிர வேறில்லை.
பல்வேறு உருவங்களில் தோற்றமளிக்கும் ஆற்றல்:
پپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپپ
ஜின்கள் மனித உருவத்திலும் மிருகங்களின் உருவத்திலும் தோற்றமளிக்கும் ஆற்றல் பெற்றவை. பத்ர் யுத்தம் நடை பெற்ற நாளில் ஷைத்தான் சுறாகாபின் மாலிக் என்பவரின் உருவத்தில்;வந்து முஷ்ரிகீன்களுக்கு (இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கு)நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று வாக்குறுதி வழங்கினான்.இதனைப் பற்றி அல்குர்ஆனில்;
'ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாக காட்டியதை நினைத்துப் பாருங்கள!; இன்று மனிதர்களின் உள்ளங்களை வெல்ல யாருமில்லை. நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்'எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்குநேர் சந்தித்தபோது பின் வாங்கினான். உங்களை விட்டு விலகிக் கொண்டவன் நீங்கள் பார்க்காததை (மலக்குகளை) நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்.அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன் என்று கூறினான்.' (அல்-அன்பால்-48)
மேலும் ஷைத்தானுக்கு அபூஹுரைரா (ரழி) அவர்களுடன் மிக சுவாரசியமான ஒரு சம்பவம் நடைபெற்றது. இது ஸஹீஹுல் புஹாரியிலும் வேறு பல கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள து
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:ஒரு ரமழான் மாதம் சேகரிக்கப்பட்ட ஸகாத் பொருட்களைப் பாதுகாப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் என்னைப் பொறுப்பாக்கினார்கள்.அந்த இரவு வேளையில் ஒருவர் வந்து அந்த உணவுப் பொருட்களை திருட்டுத்தனமாக எடுப்பதைக் கண்ட நான் அவனது கையைப்பிடித்து உன்னை நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்காமல் விடமாட்டேன்'என்று கூறியதும் அவன் நான் மிகவும் ஏழை, எனக்கு பிள்ளைகள் உள்ளனர், மிகவும் தேவைப்பாடு உள்ளது என்று கெஞ்சிக் கேட்டான்.நான் அவனை விட்டுவிட்டேன்.
காலையானதும் நபி(ஸல்) அவர்கள், என்னிடம் 'அபூஹுரைராவே! இரவு நீர் கைது செய்த கைதி என்ன செய்தான்'என வினவ, அல்லாஹ்வின் தூதரே! அவனது கடுமையான ஏழ்மையையும், குடும்ப கஷ்டத்தையும் முறையிட்டான். அவன் மீது இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்' என்று கூறினேன்.
அவன் உன்னிடம் பொய் கூறியுள்ளான் மீண்டும் அவன் வருவான்'என நபி (ஸல்) அவர்கள் கூறியதனால்,நிச்சயம் மீண்டும் அவன் வருவான் என எதிர்பார்த்து இருந்தேன். மீண்டும் மறுநாள் இரவு அவன் வந்து உணவுப்பண்டங்களை களவாடுவதைக் கண்டு அவனைப்பிடித்துக் கொண்டேன்.'இன்றைய தினம் உன்னை நபியவர்களிடம் ஒப்படைக்காமல் விடமாட்டேன்' என்று கூறியபோது'இல்லை என்னை விட்டுவிடு! நான் மிகவும் ஏழை எனக்கு குடும்பம் உண்டு. நான் இனிமேல் வரமாட்டேன். என்று கெஞ்சினான் நான் அவன் மீது இரக்கப்பட்டு விட்டுவிட்டேன்.
மறுநாள் காலையில் நபியவர்களை சந்தித்தபோது 'அபூஹுரைராவே இரவு உனது கைதி என்ன செய்தான்; என வினவ,'அல்லாஹ்வின் தூதரே! அவனது வறுமை, குடும்ப கஷ்டம் பற்றி முறையிட்டதால் அவன் மீது இரக்கப்பட்டு விட்டுவிட்டேன்'என கூறினேன்.
அப்போது நபியவர்கள் 'அவன் உம்மிடம் பொய் கூறியுள்ளான்.மீண்டும் நிச்சயம் வருவான்'; எனக்கூற அவனை மூன்றாம் முறையும் எதிர்பார்த்து இருந்தேன்.அவன் வந்து உணவுப் பொருட்களை திருடிய வேளையில் அவனைப் பிடித்துக் கொண்டு 'உன்னைக் கண்டிப்பாக நபியவர்களிடம் கொண்டுசெல்லப் போகிறேன். இது மூன்றாவது தடவையும் கடைசித் தடவையுமா கும். நீர் திரும்பி வரமாட்டேன்'என்று சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் வந்து விட்டாய்!' என்று கூறியபோது அவன் கூறினான் நீ என்னை விட்டுவிடு! நான் உனக்கு சில வார்த்தைகளைக் கற்றுத்தருகிறேன் அவற்றை நீர் ஓதினால் அவற்றினால் அல்லாஹ் உனக்கு பயன் தருவான்.என்று அவன் கூறியதும் அது என்ன? என்று கேட்டேன். அவன் கூறினான் 'நீ தூங்குவதற்காக உனது விரிப்புக்குச் சென்றால் நீர் ஆயதுல் குர்ஷியை இறுதி வரை ஓதிக்கொள்.நீர் அவ்வாறு செய்தால் உனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருந்து கொண்டே இருப்பார். நீ காலையாகும் வரை ஷைத்தான் உம்மை நெருங்கவே மாட்டான்'என்று அவன் கூறியதும் நான் அவனை விட்டுவிட்டேன்.(அவர்கள் (ஸஹாபாக்கள்) நலவை செய்வதில் பேரார்வம்;உள்ளவர்களாக இருந்துள்ளார்கள்) நபியவர்கள் கூறினார்கள் 'அவன் பொய்யன் ஆனால் இந்த விடயத்தில் உண்மையைக் கூறியுள்ளான்' என்று கூறிவிட்டு அபூஹுரை ராவே! பல இரவுகளாக நீர் யாருடன் உரையாடிக் கொண்டிருந்தீர் என்பதை அறிவாயா?' என வினவிய போது நான் 'இல்லை நாயகமே! என்று கூறினேன். அதற்கு நபியவர்கள்,அவன் தான் ஷைத்தான் மனித உருவத்தில் வந்துள்ளான்' எனக் கூறினார்கள். (புகாரி 2311)
சில வேளை ஷைத்தான் மிருகங்கள், கழுதை, ஒட்டகம்,பசுமாடு, நாய், பூனை, பாம்பு போன்ற உருவங்களிலும் தோற்றமளிப்பான்.
குறிப்பாக கறுத்த நாய் ஷைத்தான் என நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கறுத்த நாய் தொழுபவருக்கு முன்னால் குறுக்கிட்டால் தொழுகை முறிவடைந்து விடும்'என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எனவே ஜின்கள், கறுத்த நாய், கறுத்த பூனை,உருவத்தில் அதிகமாக தோற்றமளிப்பார்கள்.
· வீட்டில் பாம்பு:
ڈڈڈشششششششششڈڈڈڈشششششششششش
சில வேளை பாம்பு உருவத்தில் ஜின்கள் வீடுகளுக்குள் வரலாம், இதனால் வீடுகளுக்குள் வரக்கூடிய பாம்புகளை கொல்ல வேண்டாம்,; அவை இஸ்லாத்தை தழுவிய ஜின்களாக இருக்கலாம்'என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும் மதீனாவில் இஸ்லாத்தை தழுவிய ஜின் கூட்டம் ஒன்று உள்ளது எவர் வீடுகளுள் இந்த பாம்புகள் வந்ததாக கண்டால் அதனை சென்று விடும்படி மூன்று தரம் கூறவும், அவ்வாறு கூறியும் அது போகவில்லையென்றால் அதனைக் கொன்று விடவும் அது ஷைத்தானாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சயீத் அல்குத்ரி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் )
நபித்தோழர்களில் ஒருவர் வீட்டுப் பாம்பொன்றை கொலை செய்து விட்டார், அதுவே அவரது மரணத்திற்கு காரணமாகிவிட்டது.அந்த வரலாறு பின்வருமாறு:
ےےےےےےےےےےےےےےےےےےےےےےےےےے
அபுஸ்ஸாயிப் எனும் நபித்தோழர் அபூசயீத் அல்குத்ரி எனும் நபித்தோழரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் தொழுது கொண்டிருப்பதைக்கண்டு அவர் தொழுகையை பூர்த்தியாக்கும் வரை எதிர் பார்த்திருந்ததாகக் கூறினார்.அவ்வேளை அவ்வீட்டின் ஓரமாகவுள்ள ஈத்தம் பாளையிலேப ஏதோ ஒன்று அசையும் சப்தத்தை செவியுற்றேன், அதனைத் திரும்பிப் பார்த்தேன்,அது ஒரு பாம்பு' உடனே அதனைக் கொல்வதற்காக விரைந்து எழுந்தேன்,அவர்என்னை உட்காருமாறு சாடை செய்தார், நான் உடனே உட்கார்ந்து விட்டேன். அவர் தொழுது முடிந்து வந்தபோது,இந்த வீட்டைப் பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா? எனக்கேட்க, ஆம் என்றேன். பின் கூறினார். இந்த வீட்டிலே புதிதாக திருமணம் முடித்த ஒரு இளைஞன் குடியிருந்தான் அவ்வேளை நாங்கள் கந்தக் யுத்தத்திற்காக நபி (ஸல்) அவர்களுடன் வெளியே சென்றிருந்தோம்.அந்த இளைஞன் பகல் வேளைக ளில் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று, அவரது வீட்டிற்கு வந்து செல்லும் வழக்கமுள்ளவ ராக இருந்தார்.வழமை போல ஒருநாள் அனுமதி கேட்ட போது,நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி,உம்மிடம் உள்ள ஆயுதத்தை உம்முடனேயே எடுத்துச்செல்!;குரைழா கோத்திரத்தால் ஏதும் தீங்கு ஏற்பட்டாலாமென பயப்படுகின்றேன்'எனக்கூறினார்கள். அந்த இளைஞன் தனது ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி வந்த போது அவரது மனைவி, அவரது வீட்டின் கதவு நிலைகளுக்கிடையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு,ஆக்ரோசம் உண்டாகி தனது ஈட்டியை எடுத்து மனைவியை குத்த முற்பட்டபோது உமது ஈட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள்ளே நுழைந்து,என்னை வீட்டை விட்டு வெளியேற்றியது எது? என்பதைப் பாருங்கள் என்று கூறினாள்.உடனே அந்த இளைஞன் வீட்டினுள்ளே நுழைந்து பார்த்தபோது அங்கே மிக பிரமாண்டமான ஒரு பாம்பு அவர்களது படுக்கை விரிப்பில் சுருண்டு படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு ஒரு ஈட்டியை எடுத்து குறி பார்த்து அதனை நோக்கி எறிந்து அதனைக் கொன்று விட்டார். அதே வேளை அவரும் உடனே மரணித்துவிட்டார். முதலில் மரணித்தது பாம்பா? அல்லது அந்த இளைஞனா? என அறிய முடியாத அளவு குறுகிய நேரத்தில் விரைவில் மரணித்து விட்டார்.
பின்னர் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விடயத்தைக்கூறி,அவர் உயிர் பெற்று எழுவதற்கு 'நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'என நாம் வேண்டிக்கொண்டபோது 'உங்களது சகோதரருக்காக அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்'என நபியவர்கள் கூறி, மதீனாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஜின்கள் இருக்கின்றார்கள் அவர்களில் யாரையும் உங்களின் வீடுகளில் கண்டால் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு மூன்று நாட்களுக்கு அவர்களுக்கு கட்டளையிடுங்கள்.அவ்வாறு அவர்கள் வெளியேறவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடுங்கள் திட்டமாக அவைஷைத்தான்தான்'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் )
மேற்கூறப்பட்ட சம்பவத்தில் ஜின்கள் பாம்பு உருவத்திலும் வரலாம் எனவும் அவ்வாறு வந்தால் அதனை திடீரென கொல்லாமல், நீ மூமினான ஜின்னாக இருந்தால் போய்விடு! என மூன்று முறை அல்லது மூன்று நாட்களுக்கு கூற வேண்டும் அதனையும் மீறிப்போகவில்லையானால் அதனைக் கொல்ல வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.மேலும் 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றேன் நீ இந்த வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று விடு! உனது தீங்கை விட்டு எங்களைத் தூரப்படுத்து இல்லாவிட்டால் உம்மைக் கொன்று விடுவோம்' என்று கூற வேண்டும்.
அது ஜின்னாக இருந்தால் போய் விடும், அது உண்மையில் பாம்பாக இருந்தால் அதனைக் கொல்ல வேண்டும்.அவ்வாறே மூர்க்கத்தனமான காபிரான ஜின்னாக இருந்தால் அதனைக் கொல்வதுதான் பொருத்தம்.இல்லாவிட்டால் அது வீட்டில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Subscribe to:
Posts (Atom)