Saturday, 18 August 2012

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு


கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது !!!

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் த
ருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

சக்தி 41 கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா
வின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

Wednesday, 15 August 2012

இஸ்லாத்தின் வளர்ச்சியை கண்டு நடுங்கும் சீனா – முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமை..! உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம். சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது. பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது. ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு. எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை. இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே! இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை




உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.
சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர்.
அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.
ஆக முற்றிலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தை தங்கள் வீடுகளில் கூட பின்பற்றாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கள் மிகவும் கவனமாக உள்ளது. இஸ்லாத்தை அறிந்து கொள்ளாத இவர்களை அறியாமையிலும் பயத்திலும் எப்போதும் வைத்திருக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கணக்கு.
எங்கோ சீனாவின் ஸிங்ஸியாங் பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையை குறித்து சிந்தித்து கொண்டிருக்கும் போதே நமது உள்ளூர் நிலைமையும் நினைவிற்கு வந்தது. ஸிங்ஸியாங் பிரதேசத்தை போன்று மஸ்ஜித்களுக்கு செல்லக்கூடாது என்றோ மார்க்க கல்வி கற்க கூடாது என்றோ நமக்கு எவரும் தடைகளை விதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள தலைமுறையினர் இவற்றை விட்டும் விலகியே இருக்கின்றனர் என்பதுதானே உண்மை.
இருபது வருடங்களுக்கு முன்னர் காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக கையில் குர்ஆனுடன் மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளை நம்மால் காண முடியும். அனைத்து மஸ்ஜித்களிலும் உள்ள மதரஸாக்களில் குழந்தைகளின் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் மதரஸா செல்லவில்லை என்றாலும் வீட்டிலும் மதரஸாவிலும் உள்ள கண்டிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அங்கே குர்ஆனுடன் இணைத்து ஒழுக்கமும் ஒரு சேர கற்று கொடுக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்று கொடுக்கப்பட்டன. அது மட்டுமா, இன்று மேடைகளில் முழங்கும் எத்தனையோ பேச்சாளர்கள் அன்று முதலில் முழங்கியது அந்த வகுப்புகளில் தானே!
இந்த சிந்தனையில் வளர்க்கப்பட்ட தலைமுறை இஸ்லாத்தை மேலும் கற்பதில் ஆர்வம் காட்டியது. அத்துடன் கற்ற இஸ்லாத்தை தனது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இஸ்லாத்தை கற்ற இந்த தலைமுறையிடம் ஒழுக்க வீழ்ச்சியும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது, ஏமாற்றும் கிடையாது. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இருந்த அந்த மதரஸாக்கள் மக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனல் இன்று நிலை என்ன? அவசரமும் போட்டியும் நிறைந்த உலகில் இந்த மதரஸாக்கள் எங்கே சென்றன என்பதே தெரியவில்லை. உலக கல்வியின் மீதுள்ள மோகம் குர்ஆனை அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறது. குழந்தைகளில் கல்விக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு கூட செல்லும் நாம், மார்க்கத்தை கற்று கொடுப்பதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறிதான். மதரஸாக்களில் செல்லாத இவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சியும், சுயநலமும், கோழைத்தனமும் தான் மிஞ்சியிருக்கும். இத்தகைய ஒரு தலைமுறையால் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ எவ்வித பலனும் இல்லை.
இளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வார்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே உள்ளோம். ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கு நமது குழந்தைகளின் கைகளில் குர்ஆன் தவழ வேண்டும். இதனை அடைவதற்கு மூடப்பட்ட மதரஸாக்கள் திறக்கப்பட வேண்டும்.

மருதாணி பற்றிய தகவல் !!!!


மருதாணிபற்றிய தகவல் !!!!

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.
... 

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர். 

மருதாணியின் பயன்கள் 

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும். 

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் 

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். 

தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டுகாலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர 
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை 
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி 
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும். 

படைகள் 
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம். 

இளநரையை போக்கும் மருதாணி 

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

Tuesday, 14 August 2012

ஆதி மனிதன் ஆசியாவிலேயே தோன்றினான்-புதிய கண்டுபிடிப்பு



ஆதி மனிதன் ஆசியாவிலேயே தோன்றினான்-புதிய கண்டுபிடிப்பு

ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றவில்லை .ஆசியாவில்தான் தோன்றினான். என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. லிபியாவின் சகாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் உடல் அமைப்பை போன்ற எலும்பு கூட்டை புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்தனர்.


அது சுமார் 3 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என கணித்த அவர்கள் ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றியதாக அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது மியான்மரில் புதிதாக 4 மனித பற்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அது ஆதிகால மனிதனின் பல் என உறுதி செய்யப்பட்டது. இது குறித்து 6 வருடங்கள் நடத்திய ஆய்வுக்கு பிறகு மனிதன் ஆசியா கண்டத்தில் தான் முதன்முதலில் தோன்றினான் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


'அப்ராசியா டிஜிடே' என பெயரிடப்பட்ட புதைபடிவம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தின் மனித உடல் உறுப்புகளுடன் தொடர் புடையதாக உள்ளது. எனவே, ஆசியாவில் தோன்றிய மனிதன் இடம் பெயர்ந்து ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


இந்த தகவல் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.