Saturday, 10 May 2014

உலகின் முதல் கார் !



கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மானியர், 1885 - ம் ஆண்டு இயந்திர காரை உருவாக்கினார். இவர் கண்டுப்பிடித்த கார் இவருடைய பெயராலேயே 'பென்ஸ் மோட்டார் வாகன்' என்று அழைக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் கார். இதற்கு 3 சக்கரங்கள் தான் இருந்தது. ஒரு சிறிய எஞ்சின் மற்றும் பல் சக்கரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் ஓடிய இந்த கார் குதிரையில்லாத வண்டியைப் போன்றே தோற்றமளித்தது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியதாக இருந்தது. உலகின் முதல் 'பென்ஸ்கார்'.
- நன்றி தகவல் களஞ்சியம் .

Friday, 9 May 2014

எறும்பு பற்றி இஸ்லாம் கூறும் அறிவியல் அற்புதம்



சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக 
குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.

இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும் அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? சுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல் இப்போதும் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள்.

அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும் அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன. பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப்படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான்

நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்
தியேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கூறிவிட்டது.

இலங்கையில் நடப்பது என்ன..? – ஒரு புற நிலைப் பார்வை


(பின் ஆதம்)

இன்று இலங்கையில் துவங்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் போர் வெறுமனே பௌத்த இனத்தைப் பாதுகாப்பதற்கான போர் அல்ல. தனது கையாலேயே தனது தலையில் மண்ணை வாரி அள்ளிக் கொட்டிக் கொள்ளும் ஒரு பேரினவாத அவலம் இன்று ஆரம்பித்திருக்கின்றது.
இஸ்லாம் நசுக்கப்பட்ட போதெல்லாம் அது முன்னரை விடப் பல மடங்கு தேடப்பட்டிருக்கின்றதுஇ அறியப்பட்டிருக்கின்றது பலம் பெற்றிருக்கின்றது. இது உலகெங்கணும் நாம் காணுகின்ற யாதார்த்தம். இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்பதற்கு வேறொரு நியாயத்தைத் தேடத் தேவையில்லை.

இலங்கைத் திரு நாட்டைக் கூறுபோட்டு (கொரியாவைப் போன்று) இரு முனைவு அரசுகளை உருவாக்கி வங்காள விரிகுடாவை தனது வல்லாதிக்கத்தின் கீழ் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் பல் அரங்க அரங்கேற்றத்தின் ஒரு காட்சியையே நாம் இங்கு கண்டுகொண்டிருக்கின்றோம்.

இது இன்று நேற்று ஆரம்பமானதல்ல..

இலங்கையைக் கூறுபோட எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் எதனையும் எடுத்து நோக்கினால் அப்போதெல்லாம் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட கதைகளைத்தான் நாம் காண்கின்றோம். அங்கெல்லாம் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான சமூகமாக அல்லது தரப்பாக ஏற்பாட்டாளர்கள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.

முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்கின்றபோது தங்களது நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிகழ்த்தி முடிக்க முடியாமல் போகும் என்பதே அவர்களது புரிதல். என்றாலும் முஸ்லிம்களைச் சூழ்நிலைக் கைதிகளாக்கி தாம் விரும்புகின்ற பக்கத்தில் அவர்களை சிறைப்படுத்துவது ஒன்றே மேலாதிக்கவாதிகளின் தேவையாக இருந்தது. ஆனால் எண்ணக் கோட்டையில் பேரிடியாக வந்து விழுந்தது வடக்குக் கிழக்குப் பிரிப்பு.

(மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் வெட்டிய வாய்க்காலில் வந்த தண்ணீரை தானே குளம் கட்டி பாய்ச்சல் பாச்சினேன் என்று தன்னைக் கரையோர நீர் விநியோக கர்த்தா என்று தம்பட்டம் அடித்தது போலவே ஜே.வி.பி. பிரேரணை கொண்டுவர விடுபட்டுப்போன கிழக்கை தான்தான் வடக்கிலிருந்து வலிந்து வடமிழுத்துப் பிரித்தேன் என சிம்மக் குரல் எடுத்து கர்ச்சிக்கும் அமைச்சரின் சங்கதி அது வேறு.)

வரலாற்றில் எந்தவொரு சந்தர்பமாக இருக்கட்டும் தேசத்தின் இறைமைக்கும் கௌரவத்திற்கும் ஊறு ஏற்படவிருந்த அனைத்துப் பொழுதுகளிலும் முஸ்லிம்கள் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு அலாதியானது. தனது உயிர் போனாலும் நாட்டின் மன்னனைக் காட்டிக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்து தன்னுயிரை ஈந்து ஸ்ரீ விக்கிரம இரஜசிங்கனைக் காத்த முஸ்லிம் பெண்மணியின் சரித்திரம் இந்த நாட்டு முஸ்லிம்களின் தேசப்பற்றுக்கு ஒரு சோற்றுப் பதமாகும். அது இன்று ஜெனீவா வரை சென்று நிற்கின்றது. இந்தத் தேசத்தைக் கூறுபோடும் ஏற்பாட்டில் முஸ்லிம்களை பகடைகளாக்குவது அவ்வளவு எளிதானதல்ல என்ற யதார்த்தம் புரியப்பட்டபோது ஜனநாயகம் எனும் துரும்பு ஒன்றே தற்போதைக்கு வசமானது என்று ஏற்பாட்டாளர் காத்திருந்தனர்.

ஜெனீவாவிலிருந்து திரும்பிய கையோடு மானம் காத்த மறவர்களுக்குக் கிடைத்த சன்மானம் தம்புள்ளைப் பள்ளி விவகாரமும் தொடர் சம்பவங்களும். சூழ்நிலைகளை அலசும்போது இரண்டும் ஒருசேர நடப்பதற்கான கால இடைவெளி இயற்கை நிலைமைகளில் நிகழ்தகவுச் சாத்தியம் அற்றதாகவே தெரிகின்றது. இது செயற்கையானது

காத்திருந்தனர் ஏற்பாட்டாளர். வந்தது கிழக்குத் தேர்தல். சந்தர்ப்பம் கனிந்து வந்ததாக எண்ணி களமிறங்கினர்.

'ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி இலங்கையைக் கூறு போட வேண்டுமானால் அதற்காக கிழக்கு வாழ் முஸ்லிம்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத தேவையாகும். எனவே தமது பிரித்தாளும் பாரம்பரிய உபாயத்தைக் கையாண்டு சிங்கள பௌத்தர்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனும் நிலைமையை முஸ்லிம்களிடம் உருவாக்குவதன் மூலம் தமது இலக்கை அடைந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் முயன்றதாகவே கிழக்குத் தேர்தலின் முன்கட்டக் காட்சிகளை நாம் நோக்க வேண்டியுள்ளது.

தவிர்க்கவொணாமல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இயக்கமாக பல தளங்களில் அங்கீகாரம் பெற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த இழுபறிக்குள் சிக்கிக்கொள்கின்றது. 'மா ரெக லே' (என்னைப் பாதுகாத்த இரத்தம்) என விக்கிரம இராஜசிங்கன் உளம் நெகிழ்ந்த இரத்தத்தின் சொந்தக்காரியான முஸ்லிம் வீரப் பெண்ணியின் பாரம்பரிய நிலைப்பட்டை கைக்கொள்ளும் மு.கா. வின் நிலைப்பாட்டை உள்ளும் புறமும் இருந்த பலர் புரிந்து கொள்ளவே இல்லை.

இதனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பிரிந்து நிற்கும் நிலைப்பாட்டுக்கு மு.கா. வந்தது. பள்ளிவாயல் மீதான தாக்குதல்களை மு.கா. சாதுர்யமாகப் பயன்படுத்தி தனது நிலையை  இஸ்திரப்படுத்திக் கொண்டது. தேர்தல் முடிந்த கையோடு மலையனைய விமர்சனங்களுக்கும், நெருக்குவாரங்களுக்கும்,  நீலிக் கண்ணீர் வடிப்புக்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய நிலைப்பாட்டுக்கே மு.கா. சென்றது. இதனைப் பலவீனமாகக் கருதியவர்களும் இல்லாமல் இல்லை.

மு.கா. எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புக்களில் மண்ணை வாரிப்போட்டது. இப்போது அவர்கள் அவர்களது இடைவேளைக்குப் பிந்திய காட்சிகளை அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றார்கள். புதிய கதாபாத்திரம் 'பொது பல சேனா' அறிமுகமாகியிருக்கின்றார்.

இப்போது அரங்கேறிக் கொண்டிருப்பதை பௌத்த பேரினவாதம் என்று நாம் கருதினால் அது தவறு. இது மேலாதிக்கவாதத்தின் சூதாட்மன்றி வேறில்லை. இந்தச் சூதாட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி முதற்கொண்டு தேசத் தலைமைகள் பல சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தாம் ஜனாதிபதியை பொறியிடைப்படுத்தியிருப்பதாக ஏற்பாட்டாளர்களின் சார்புப்  பாத்திரங்கள் வசனம் பேசுவதனை நாம் பல சந்தர்ப்பங்களில் கேட்கின்றோம். ஆம், பாதுகாத்தலும் பெறுப்புக் கூறலும் எனும் பொறிக்குள் நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது யாமறிந்தது. இது சாதாரண பொறியல்ல. உண்மைகளைச் சூழ்ச்சிகளுடன் முடிச்சுப்போட்டு பின்னப்பட்ட பொறி. இதன் உச்சம் என்ன என்பதனை உலக நடப்புக்கள் உதாரணம் சொல்லும்.

இந்தப் பொறியின் யதார்த்தம் பற்றி ஜனாதிபதி அறியாதிருப்பார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களின் தேவைக்கேற்றவாறு நாட்டைப் பிரித்துக் கொடுப்பது ஒன்றே இந்தப் பொறியில் இருந்து தப்புவதற்கான ஒரே வாசல் எனும் நிலைமை அவருக்கு ஏற்படுத்தப்படப் போகின்றது. சிங்கள பௌத்தத்தின் காவலன் என்று தன்னைப் பற்றிய கருத்தியலை நாட்டில் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதிக்கு இது ஆகாத காரியமே. ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும். ஆயின் ஏவ்வாறு? அதற்குத்தான் பொதுபலசேனா.
பொதுபலசேனா பௌத்த மத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டாலும் அந்த இலக்கினை அடைவதற்கு மிக அடிப்படையான எந்த உருப்படியான காரியத்திலும் அது இதுவரை இறங்கவில்லை. 

மாறாக முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரித்தான ஹலால் பிரச்சினை, மற்றும் முஸ்லிம் யுவதிகளின் ஆடை போன்ற தமது மதத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத விடயங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு கூத்தாடுகின்றது.

இந்த இரண்டு விடயங்களும் ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மத்தியில் வலிதானவையாகும். முதலாவது மார்க்கம் இரண்டாவது மானம். இதில் எந்தவொன்றுக்காகவும் போர் புரிவதனை தனது கடமையாகக் கூட ஒரு முஸ்லிம் எண்ணுவான். இவற்றோடு இன்னும் பல புரளிகளை அங்கும் இங்கும் சிலர் கிளப்பினாலும் இவ்விரண்டு விடயங்களையும் தெரிவு செய்து முதன்மைப்படுத்தியிருப்பது சீண்டிவிடும் காரியமாகத்தான் என்பது புரியப்பட வேண்டும்.

ஆரம்பத்தில் இது ஒரு சிறு குழுவின் குறும்புச் செயல் என அரசு சமாதானம் சொன்னது. அவ்வாறேயாயின், சர்வதேச வலைப்பின்னலும், பக்கபலமும் கொண்டிருந்த பலமான ஆயுத அமைப்பான புலிகளை தயவு தாட்ஷண்யமும் தயக்கமும் இன்றி நசுக்கிய ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இந்தச் சுட்டிப் பயல்களை நசுக்க எவ்வளவு நேரமாகும்? அது ஏன் இன்னும் நடக்கவில்லை?

ஜனாதிபதியின் ஆசீர்வாதம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனாவின் செயலாளர் கங்கொடவில ஜனா சமுத்திர தேரர் அறிக்கை விட்டிருப்பதுவும் குனூத் ஓதுவது தொடர்பாக ஜனாதிபதி கேள்வி கேட்டிருப்துவும் நமக்குச் சொல்ல வருவது என்ன?

எஹூதி நஸாறாக்களினால் காலாகாலத்திலும் (போர்கள் தொடர்பாக இறங்கிய) அல்குர்ஆன் வசனங்கள் தொட்டும் தொடுக்கப்பட்ட கேள்விகளை பொதுபலசேனா மறுபதிப்புச் செய்வதன் பின்புலம் யாது?

இனித்தான் கிளைமெக்ஸே ஆரம்பமாக இருக்கின்றது...!

நாட்டைக் கூறுபோடுதல் என்பது ஜனநாயக ஏற்பாடுகளுக்கூடாக நடாத்தப்படப் போகின்றது. இதில் நாட்டின் இணைப்பு – பிரிப்பு எந்தவொன்றிலும் இன்றியமையாத தீர்மனிக்கும் கூறான முஸ்லிம்கள் பகடைகளாக்கப்படப் போகின்றார்கள்.

நாட்டில் முஸ்லிம் – பௌத்த சிங்கள முறுகல் நிலையைத் தோற்றுவித்து வளர்த்தெடுப்பதன் மூலம் சிங்கள பௌத்தர்களுடன் இணங்கி வாழ முடியாது எனும் நிலையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்துதல் இதன் அடிப்படை விடயமாகும். இந்தக் கைங்கரியத்திற்கெனத் தோற்றுவிக்கப்பட்ட பாத்திரமே பொதுபலசேனா.

பொதுபல சேனாவின் செயற்பாடுளைக் கண்டும் காணாமல் விட்டுவிடவேண்டும் என்பது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரையாக இருக்கலாம்.

அத்தோடு இந்த அமைப்பை தீனிபோட்டு வளர்க்கும் பொறுப்பு அமெரிக்கப் பிரஜா உரிமை பெற்றிருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும், மிலிந்த மொறகொடவுக்கும் அவரது மனைவிக்கும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இனியென்ன? கிளைமெக்ஸ்.

01. நாட்டில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கு ஒப்பான ஒரு உளநிலை தேசிய – சவதேச மட்டங்களில் முஸ்லிம்களுக்கும் ஏற்படும் வகையிலான அனைத்து அட்டூழியங்களும் இந்தத் தேசத்தில் கட்டவிழ்த்து விடப்படும். அனைத்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் எனும் முத்திரையோடு நடாத்தப்படும். அரசும் தலையையும் வாலையும் காட்டிக்கொண்டு சமாளிக்கும் சங்கடத்தில் இறுகும்.

02. தொடர்ந்து ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பு சர்வதேச ஏற்பாடுகளுடன் இலங்கை மீது திணிக்கப்படும்.

03. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதற்கு இன்றுவரை வருத்தம் தெரிவிக்காது இருந்துகெண்டு 'ஒரு சமூகத்தின் உரிமையில் இன்னொரு சமூகம் தலையிட முடியாது' என இன்று அறிக்கை வசந்தம் வீசுபவர்களிடமிருந்து விரக்தியின் விளிம்பில் நிற்கப்போகும் முஸ்லிம்களுக்கு அழைப்பு வரும். கடந்த கிழக்குத் தேர்தலில் சாதிக்க முடியாது போனதை சாதிப்பதற்கு அவர்கள் புன்முறுவுவார்கள். கிழக்குத் தேர்தலுக்கு முன் முஸ்லிம்கள் சிலர் செய்ய நினைத்ததைப் போன்று தலைமைகளின் உபன்னியாசங்களையும் காலில் மிதித்துக் கொண்டு கிழக்கு முஸ்லிம்கள் விட்டில்களாவார்கள்.

04. நாட்டைக் கூறுபோடும் மக்கள் அபிப்பிராயம் திரட்டப்பட்டு ஒப்பந்தம் என      எழுதப்படும்.

05. நாடு இரண்டாகும். கூத்தாடி கொண்டாடுவான்.

06. நாட்டைக் கூறுபோடத் துணை நின்ற இழுக்கு முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது ஏற்றப்படும்.

07. நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் பாதுகாத்தல் பொறுப்புக் கூறல் எனும் குற்றக்கூண்டிலிருந்து வாக்களிக்கப்பட்டவாறே இறக்கப்படலாம். நாட்டைப் பிரித்துக் கொடுத்த அவப்பெயரிலிருந்தும் தம்மை அவர்கள் காத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து? இலங்கையிலும், ஈழத்திலும் முஸ்லிம்கள் வாழ்விழந்தவர்கள்தான்.

ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை.

இஸ்லாம் நசுக்கப்பட்ட போதெல்லாம் அது முன்னரை விடப் பல மடங்கு தேடப்பட்டிருக்கின்றது. அறியப்பட்டிருக்கின்றது. பலம் பெற்றிருக்கின்றது. இது வெறுமனே வானைப் பார்த்துக் கொண்டு வாயைப் பிளந்துகொண்டிருப்பதால் ஆகிவிடப் போவதில்லை.
 (பின் ஆதம்)            February 26, 2013

      மறு பதிப்பு 2014.05.09 
            A.S.IBRAHIM    
                                     

கோபிநாத் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!


கரூர் வெங்கமேட்டில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபிநாத்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் மாவட்டம் வெங்கமேடு கிளையில் கோபிநாத் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை அஹமதுல்லாஹ் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

பதவியை பற்றி இஸ்லாம்


 

பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்கா
மல் இல்லை.


நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.


பதவி ஏன் அமானிதம்?.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்." (நூல்: அஹ்மத் 22030)


அதிகாரமும் தலை
க்கனமும்


பின்னும் நீர் கூறும்: "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 6:57)

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 6:62)

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)


மறுமை நிலை

மறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

அல்லாஹ்தன்னுடைய(அரியணையின்)நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:

1. நீதிமிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).

4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.

5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்

6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.

7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)

அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் 'எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே" எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)


இறையச்சம்

'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!' எனக் கூறுவீராக" (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19)


ஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தா ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

''அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.'' (அல்குர்ஆன் 79:25)


கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல்


(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)



திடவுறுதி, பொறுமை, வீரம்


''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.'' .(அல்குர்ஆன் 3:159)


தகுதியும் திறமையும்


'ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர்.

முடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)


பாரபட்சம் இருக்கக் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)

உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(5:45)


பதவி என்பது பொறுப்பு

''செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.'' (அல்குர்ஆன் 17:36)


நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)


நம்பிக்கை

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)

தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.

'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)



ஆட்சிக்கு ஆசைப் படுவது

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)

அபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: "நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்!)" என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!" என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)


அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''. (அல்குர்ஆன் 110:1-3)

Thursday, 8 May 2014

அட்டாளைச்சேனையின் வரலாற்றில் இன்னொரு மைல் கல்





கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசம் இலங்கை முழுவதும் உள்ள மூவின மக்களுக்கும் சிறந்த கல்விகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட ஒரு வரலாற்று இடமாகும்.

இந்த வகையில் இது வரை காலமும் பெண்களுக்கான தனியான இஸ்லாமிய கல்லூரி இல்லாமல் இருந்து வந்த இந்த அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி வளாகம் எதிர்வரும் 2014.05.15 ஆம் திகதி(வியாழக்கிழமை) அஸர் தொழுகையைத் தொடர்ந்து பாவங்காய் வீதி, அட்டாளைச்சேனை 09யில் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Wednesday, 7 May 2014

கம்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி ஜெயராணி....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கம்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி ஜெயராணி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் கம்பம் கிளையில் ஜெயராணி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

இஸ்லாத்தை தழுவிய சகோதரி பார்கவி



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

TNTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி பார்கவி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் பார்கவி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை நசீரா என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய பிறமத சகோதரி....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய பிறமத சகோதரி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறமத சகோதரி ஒருவர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக




Tuesday, 6 May 2014

கட்டார் நாட்டில் வாகனம் செலுத்துவோரின் கவனத்திற்கு!





வாகனம் செலுத்திக் கொண்டு கையடக்க தொலைபேசி
பயன்படுத்துவோருக்கான தண்டப் பணத்தினை குறைந்தது 3000 கட்டார் முதல் கூடியது 10,000 கட்டார் றியால் வரை அதிகரிப்பதுடன் ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்க கட்டார் அரசு தீர்மானித்துள்ளது.

கட்டார் நாட்டில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அதிகமானவை கையடக்க தொலைபேசியினை பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்துவதனாலேயே ஏற்படுவதாக அறியக்கிடைத்ததனைத் தொடர்ந்து இந்தச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

அதே வேளையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி , வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல் , மதுபோதையில் வாகனம் செலுத்துதல் , போக்குவரத்து விதிகளுக்கு எதிராக செயற்படுதல் , தேவையற்ற விதத்தில் சத்தம் எழுப்புதல் , சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில் புகை வெளியேறுதல் , அதிவேகமாக பயணித்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு ஒரு மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு குற்றங்களுக்கு ஏற்ப சிறைத்தண்டனையும் 10,000 கட்டார் றியால் தொடக்கம் 50,000 கட்டார் றியால் வரை தண்டப்பணமும் செலுத்த வேண்டிவரும். குற்றங்கள் புரிவோர் தண்டப்பணம் மட்டும் செலுத்த வேண்டும்.

அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் அல்லது இரண்டினையும் அனுபவிக்க வேண்டிவரும் என கட்டார் அரசு மிகவும் கண்டிப்பான முறையில் அறிவித்துள்ளது.

அத்துடன் இடுப்புப்பட்டி அணியாதிருத்தல் , 10 வயதிக்கு குறைந்த பிள்ளைகளை முன் ஆசனத்தில் அமர்த்திக் கொண்டு பயணித்தல் , அம்பியுலன்ஸ் , பொலிஸ் வாகனங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்கள் என்பவற்றிற்கு முன்செல்ல அனுமதிக்காமை , முன் செல்லும் வாகனத்திற்கு இடையில் போதிய இடைவெளியில் வாகனம் செலுத்தாமை போன்றவற்றிற்கும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

Monday, 5 May 2014

சந்திரன் பிளந்தது

சந்திரன் பிளந்தது
இவ்வசனத்தில் (54.1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறிய போது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வான
த்தில் சந்திரனை இரண்டாகப்பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். (பார்க்க: புகாரி 3636, 4864, 4865)
இந்நிகழ்ச்சியைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. பூமியின் துணைக்கோளாக அமைந்துள்ள சந்திரனைப்பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப்பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.
ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக்கூறும்போது,அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.
நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தைச் சொல்லும்போது அவர் பயணித்த கப்பலைச்சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடலை இரண்டாகப்பிளந்து, நல்லவர்களைக் காப்பாற்றி, ஃபிர்அவ்ன் என்ற கொடியவனைக் கடலுக்குள் மூழ்கடித்த அற்புதத்தைக் கூறும்போது, அவனது உடலை அத்தாட்சியாக விட்டு வைத்துள்ளோம்' என்று குறிப்பிடுகிறான்.இறைவன் விட்டு வைத்த ஃபிர்அவ்னின் உடலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
அது போல் சந்திரன் பிளந்ததைக்கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கியபோது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.
இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.
முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.
இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான ஆதாரம் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டு பிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட ஆதாரங்களுடன் வெளிவந்தது.
சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது திணறும் நாசாவும் கிருத்துவ உலகமும்.
இவ்வசனத்தில் (54:2) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். (பார்க்க: புகாரி 3636, 4864, 4865)
இந்நிகழ்ச்சியைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. பூமியின் துணைக்கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.
ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப் பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும் போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.
நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும் போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: குறிப்பு 222)
கடலை இரண்டாகப் பிளந்து, நல்லவர்களைக் காப்பாற்றி, ஃபிர்அவ்ன் என்ற கொடியவனைக் கடலுக்குள் மூழ்கடித்த அற்புதத்தைக் கூறும் போது, "அவனது உடலை அத்தாட்சியாக விட்டு வைத்துள்ளோம்' என்று குறிப்பிடுகிறான். இறைவன் விட்டு வைத்த ஃபிர்அவ்னின் உடலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
அது போல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.
இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.
முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.
இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான சான்றும் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய போது வெளிவந்தது.
சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். (புஹாரி 3636. )
4868. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 

பிலிப்பினோ நடிகை தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


பிலிப்பினோ நடிகை தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் 

Sunday, 4 May 2014

உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம்























































































அமெரிக்காவின் புகழ்பெற்ற Fox TV அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

ஒருபுறம் இஸ்லாத்திற்கு வெளியில் இருந்து இஸ்லாத்தின் எதிரிகளின் தாக்குதல். இன்னொரு புறம் இஸ்லாத்துக்கு உள்ளிருந்து இஸ்லாத்தை பாதுக்காக்கிறோம் என்ற பெயரில் சில வழிகேடர்கள் செய்யும் தீவிரவாதம். இத்தனைக்கு மத்தியிலும் எப்படி இது சாத்தியமாகிறது?

வாளாலோ தீவிரவாதத்தாலோ மனிதர்களின் உள்ளங்களை வெல்ல முடியுமா? செப்டெம்பர் 11 தாக்குதல், இன்னும் உலகெங்கும் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் என எல்லாப்புறமும் இஸ்லாத்திற்கு கெட்ட பெயர்களை உருவாக்கும் செயல்பாடுகள் நடந்தேறியும் இந்த மக்களின் உள்ளங்களை மாற்றியது எது?

அதற்கு நீங்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான். (அல் குர்ஆன் 9:32)

எத்தனை பேர் திட்டம் போட்டோ அல்லது தன் அறியாமையாலோ இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் தேடி தர நினைத்தாலும் இறைவனின் ஒளியை யாராலும் ஊதி அணைத்துவிட முடியாது. கடைசி வரை இறைவன் அதனை பாதுகாப்பான்.

மேலும் இது போன்ற இஸ்லாமிய ஆய்வு தொடர்களையும், ஆவணப்படங்களையும் பார்வையிட எமது பக்கத்தை லைக் செய்யுங்கள்: