Saturday 15 March 2014

92 YRS OLD WOMEN ACCEPTED IN ISLAM



மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.

பானுப்பிரியா என்ற சகோதரி , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., திருச்சி மாவட்ட TNTJ வில்,
பானுப்பிரியா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான, தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை ஷாகிரா எனவும் மாற்றிக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

Friday 14 March 2014

பாலகன்யா என்ற சகோதரி , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., திருச்சி மாவட்ட TNTJ வில்,
பாலகன்யா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான, தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன் பெயரை யாஸ்மின் எனவும் மாற்றிக் கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!



ஸ்ரீனுவாசன்என்ற சகோதரர்,இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாநகர் TNTJ கிளையில்,
ஸ்ரீனுவாசன்என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை ரபிக் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

ராஜா என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்



எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் கிளையில்,
ராஜா என்ற சகோதரர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை அபூபக்கர் எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

Thursday 13 March 2014

DR.PROF.MAURICE BUCAILLIE ACCEPTED IN ISLAM



பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice Bucaille ன் உறுதியான கருத்தும்.
------------------------------------------------------------
1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போது எ
ண்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ் வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார்.
அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.
பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார்.
நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்தசான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது.
prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும் அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.
அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே.
முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார்.
prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை.
பிர்அவ்னைப் பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார்.
அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்
மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே”என்று கூறினார்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார்.
‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது.
எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று
அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார்.
முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?”
‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?”
‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது.
மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார்.
‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை.
மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இருந்தாலும் மாரிஸ் அவர்களால்ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார்.
அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும்
‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்.
இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது.
உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக
‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம்உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு
‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார்.
இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது.
எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது.
இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான் அல்ஹம்து லில்லாஹ்...


பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! 

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற  ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட  மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.

சிந்தனையில் மோரிஸ் புகைல்!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும  என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார் அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற  ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்றஇறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார். அவ்வசனம்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன்  உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர்  நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்
(அல்-குர்ஆன் 10: 92)

இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம்  மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில்  ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருககும் போது  ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்(அல்-குர்ஆன் 10:92) 


AMERICAN PROF.(Dr.Jeffrey Lang) REVERT TO ISLAM

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.        

நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும். 


தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.       

இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்...இன்ஷா அல்லாஹ்.

"நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான். 

என் தந்தையால் என் தாய்க்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.      

இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன. 

  • என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்? 
  • ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? 
  • உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்...இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? 
  • இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
  • நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?   

இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.          

நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன். 

கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.      

பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். "தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு  பதில்கள் கிடைக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.   

அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல  நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது. 

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது. 

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன். 

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...      

முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம், 

தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3  

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம், 

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.   

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது. 

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது...   

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.     

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.          --- Qur'an 2:30            

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு. 

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன். 

அதே வசனத்தின் இறுதியில், 

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30. 

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா? 

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.   

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.          


என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. 

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை. 

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். 

ஒருமுறை என் மகள் கேட்டாள், 

"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?" 

இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.  

நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.    

நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். 

நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன். 

ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.
    
அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.  

என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. 

குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.

பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.

நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம். 
தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.  

இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.

ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,

நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க்கொள்கிறதே, அதுபோல தான்" என்று...

வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள். 

உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம். 

அதனால் தேடுவதை தொடருங்கள்...."


இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது....அல்ஹம்துலில்லாஹ்.

நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.

அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்...

டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர். 

பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். 

இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள் 
  • "Losing my religion, A call for Help", 
  • "Struggling to Surrender" மற்றும் 
  • "Even Angels Ask:: A Journey to Islam in America" 

இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய "Losing my Religion, A call for help" புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான "Even Angels Ask" என்பதிலும் இடம் பெற்றுள்ளது.   



நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ். 

இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள். 

அதிலும் இவருடைய "Even Angels Ask" என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங். 

டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம். 

For the believers, there is always a bright spot at the end of the tunnel.....
இறைவன் இவர்களுக்கு மென்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்.              

இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

பிற சமய சகோதரர் ஒருவர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., விருதுநகர் மாவட்டம் ,அருப்புக்கோட்டை TNTJ கிளையில்,
பிற சமய சகோதரர் ஒருவர்,உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்ட குத்துசண்டை வீரர் முஹம்மத் அலி


இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்ட குத்துசண்டை வீரர் முஹம்மத் அலி அவர்கள் கூறினார்கள்:

நான் புகை பிடிக்க மாட்டேன் ஆனால் என் பையில் எப்போதும் தீப்பெட்டியை வைத்திருப்பேன் !!

எப்பொழுதெல்லாம் என் உள்ளம் பாவத்தை நோக்கி செல்கின்றதோ அப்பொழுது தீயை ஏற்படுத்தி என் உள்ளங்கையை சூடாக்கி கொள்வேன் !!!

பிறகு என்னிடத்தில் கூறி கொள்வேன் : அலி உன்னால் இந்த சூட்டையே தாங்கி கொள்ள முடியாத பொழுது எப்படி தாங்க முடியாத சூடான நரக நெருப்பை தாங்கி கொள்வாய் என்று !!!!
 

பிற சமய சகோதரர் ஒருவர்,இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்., இராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் TNTJ கிளையில்,
பிற சமய சகோதரர் ஒருவர், உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

மாபோலையில் ஒரு சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளையில் வைத்து ஒரு சகோதரர் புனித இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். குறித்த சகோதரருக்கு குர்ஆன், மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
IMG-20140309-WA0008
Print Friendly

Wednesday 12 March 2014

சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் .




நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமையத்தில்...

அன்னை பாத்திமா (ரலி) மிகவும் ஆவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார். 

பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு... 

எனது அருமை மகளே... 

சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூறுகிறார்கள்.

சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவது விறகு வெட்டியின் மனைவியா ? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்....

உனது வீட்டுக்கும் அருகாமையில் தான் அவருடைய வீடு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அன்னை பாத்திமா நாயகிக்கு ஆவல் அதிகரித்து அப்படி அவரிடம் என்ன கூடுதல் தகுதி இருக்கிறது என்பதை அறிய அவரை சந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி (ரலி) அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு...

விறகு வெட்டியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறார்.

யார் அது என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. 

நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன், தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன் என்று பாத்திமா (ரலி) கூறுகிறார்.

உலகமே திரும்பி பார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் தான் பாத்திமா என்று கூறிய அந்த நேரத்திலும்.....

அந்த வீட்டின் கதவு திறக்கவில்லை, என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதி இல்லை என்று விறகு வெட்டியின் மனைவி கூறுகிறார்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் மகளை காண்பதற்கு எனக்கும் ஆசை தான், ஆனால் என்னுடைய கணவரின் அனுமதி இல்லாமல் கதவு திறப்பதற்கு எனக்கு அனுமதி இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் அந்த பெண்மணி கூறுகையில்.... 

நாளை தாங்கள் வருவதாக இருந்தால் என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறுகிறார்.

அதனடிப்படையில்....

அன்னை பாத்திமா (ரலி) இரண்டாவது நாளாக தன்னுடைய புதல்வர்கள் ஹசன், ஹுசைன் ஆகியோரை அழைத்து செல்கிறார்.

முதல்நாளை போன்று கதவை தட்டுகிறார், முதல் நாளை போல யாரது என்று பெண்ணின் குரல் கேட்கிறது.

நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன், என்னுடன் என்னுடைய புதல்வர்கள் இருவரும் வந்துள்ளனர் என்று பாத்திமா (ரலி) கூறுகிறார். 

இரண்டாவது நாளும் கதவு திறக்கப்படவில்லை, நாயகி என்னை மன்னிக்க வேண்டும், தாங்கள் வருவதற்கு தான் அனுமதி பெற்றேன்.

தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் சொல்லும் வார்த்தைகளை தாங்கள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கூறுகிறார்.

மூன்றாவது நாளாக புதல்வர்களை விட்டு விட்டு மீண்டும் அதே வீட்டிற்கு அன்னை பாத்திமா (ரலி) செல்கிறார்.

மூன்றாவது நாளும் கதவை தட்டுகிறார், யார் என்று அதேபோல குரல் கேட்கிறது....

நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்று அன்னை கூறியவுடன் கதவு திறக்கிறது. 

என்னுடைய கணவரிடம் தங்களுடைய வருகை குறித்து அனுமதி கேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர் யார் வந்தாலும் எவ்வித தடையும் இல்லை என்று கணவர் கூறியதாக அந்த பெண்மணி கூறினார்.

அதன்பிறகு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அஸர் தொழுகை வருகிறது.

இருவரும் தொழுகிறார்கள், தொழுகை முடித்து அன்னை பாத்திமா (ரலி) ஓரமாக அமர்ந்து கொள்கிறார்.

ஆனால் அந்த பெண்மணியோ யா அல்லாஹ் தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திட வேண்டும் என்று கணவருக்காக கண்ணீர் மல்க துஆ செய்கிறார்.

அங்கிருந்து சலாம் சொல்லிவிட்டு அன்னை பாத்திமா அங்கிருந்து விடைபெற்று மறுநாள் தன்னுடைய தந்தையிடம் நடந்தவிகளை சொல்லிவிட்டு அல்லாஹ்வை வணங்காமல் வேறு எதுவும் வணங்க கட்டளை இருந்தால் இனிதான கணவரையே வணங்குவதற்கு அனுமதி பெறுவேன் என்று கூறுகிறார்.

கணவனின் உடமைகளை கவனமாக காத்து கொள்பவள், கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்து கொள்பவள், கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள், கணவனின் கால் அடியில் காலமெல்லாம் சேவை செய்பவள், கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரை சேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாததவள்...

நாளை சொர்க்கத்தில் நல் இடத்தை பெற்றுக் கொள்வாள் என்றும் நரகத்திலிருந்து தப்பி கொள்வாள்.

எனது அருமை மகள் பாத்திமாவே....
ஒட்டகத்தில் நீ வரும் போது விறகு வெட்டியின் மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறு முதல் ஆளாய் சொர்க்கத்தின் உள்ளே நுழைவார், கண்ணான என் மகளே அடுத்தபடி நீ நுழைவாய்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.