Tuesday, 21 April 2015

பெண்களை அடிமைப் படுத்துவதாகவும், தீவிரவாதத்தை போதிப்பதாகவும் கடந்த 2 தசாப்தங்களாக விமர்சிக்கப்படும் ஒரு மதத்தை (இஸ்லாத்தை) இன்று உலகெங்கும் உள்ள பலரும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அது ஏன்??? என்ற கேள்விக்கு விடை தேடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
கட்டுரையை ஆரம்பிக்க முன்னர், இந்தப் பெண்களை யார் என்று அறிந்துகொள்வோம். இன் ஷா அள்ளாஹ்.
01: யுவான் ரிட்லி எனும் செய்தியாளர். இவர் ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, செய்தி சேகரிப்பதற்காக மிகத்தந்திரமாக ஆப்கானுக்குள் ஊடுரிவிய போது தலிபாஙளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். தலிபாஙளின் ஒழுக்கத்தை நேரில் கண்ட இவர், தலிபாஙளை பற்றி மீடியா சொல்லும் பொய்களை அம்பலப்படுத்திவிட்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்...
02: ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொலை செய்த அமெரிக்க முன்னாள் அதிபரின் மகள் "ஜென்னா புஷ் ஹாகர்"...
**
இக்கட்டுரையை பதிவு செய்ததன் பின்னர் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக யூடியூப் பொய்யான ஒரு வீடியோவை வெளியிட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வரை சகோ. இதுவிஷயத்தில் கவனமாக இருக்கவும்.
03: பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்த "காமில்லா லேலன்ட்"...
04: இவரும் பிரிட்டனின் பிரபல மொடல் அழகியாக இருந்தவர். "கார்லீ வட்ஸ்"...
05: பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி "டயம் மெலானீ"...
06: நேபாள முன்னணி நடிகை "பூஜா லாமா"...
07: ரஷ்யாவைச்சேர்ந்த மொடல் அழகி "மஷா அலலிகினா"...
08: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளயரின் மைத்துனி "லாரன் பூத்"...
09: இப்போது பரபரப்பாக பேசப்படும் இந்திய நடிகை மோனிகா எனும் "ரஹீமா"...
இப்போது கட்டுரைக்கு வருவோம்....
கடந்த பல வருடங்களாக இஸ்லாம் பற்றி விமர்சிக்காத ஊடகங்களே இல்லையென சொல்லமுடியும். அந்தளவுக்கு அவதூறுகளை சந்தித்தும், முன்னேறி வருகிறது.
பொதுவாக இஸ்லாம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில், அது பெண்கள் பற்றிய தலைப்பு தான். அதோடு சேர்ந்து தீவிரவாதம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வதுண்டு.
முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னர்,
பெண் குழந்தைகள் பிறந்ததும் உயிரோடு புதைத்து கொலை செய்யும் இழிவான நிலையில் இருந்த அந்த மக்களை திருத்தியது "இந்த இஸ்லாம்" தான். அவ்வாறு கொலை செய்தால் தலையை வெட்டி மரண தண்டனை என்று சட்டமும் கொண்டு வந்தது.
அக்கணமே இக்கொலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. (ஆனால் இன்று இந்தியாவில் அது நடக்கிறது.)
எனவே இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறது என்ற பேச்சுக்கு இஸ்லாத்தின் ஆரம்ப சட்டமே மரண அடி கொடுத்துவிட்டது.
இன்றைய நாகரீகவாதிகள்! என்று தம்மை சொல்லிக் கொள்வோர் இஸ்லாத்தின் வளர்ச்சி மீதுள்ள பொறாமையை தாங்க முடியாமல், பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற அதே தலைப்பை தான் எடுத்து வைக்கிறார்கள்.
முக்கியமாக முஸ்லிம் பெண்களின் ஆடைகளை விமர்சித்து, சுதந்திரம் பெற்றுத்தருவதாக கூப்பாடு போடுகிறார்கள். (முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை. அது அரேபிய கலாச்சாரம் மட்டுமே)
ஆனால் அவர்கள் சுதந்திரமாக கருதும் நாடுகளில் தானே உலகில் அதிகமாக பெண்கள் மீது வன்முறை நடக்கின்றன?
‪#‎ஆணும்‬ பெண்ணும் சமன் என்ற ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறாகும். ஆணும் பெண்ணும் சமன் எனில்....
* உடலில் ஒரு கட்டை கால் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு ஒரு ஆணுக்கு வெளியில் வர முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு அப்படி அணிந்துகொண்டு வீட்டில் உள்ள குடும்பத்தவர்களின் முன்னால் கூட வரமுடியாது என்பதை உணர வேண்டும்.
(முடிந்தால் இதை சவாலாக ஏற்று செய்துகாட்டட்டும். எனவே ஆணும் பெண்ணும் சமன் அல்ல என்று தெளிவாக தெரிகிறது.)
இப்படி "ஆணும் பெண்ணும் சமன்" என்ற ஒரு கபடத்தனமான கருத்தை பரப்புவதன் மூலம், ஒழுக்கமாக வாழ்ந்த பெண் இனத்தை ‪#‎அவிழ்த்துக்காட்டும்‬ நிலைக்கு கொண்டுவந்தவர்கள் யாரெனில் இந்த நவ நாகரீகவாதிகள்! தான்.
பெண்கள் ஒழுக்கமாக இருந்தால் தனது ‪#‎வியாபாரத்திற்கு‬பாவிக்க முடியாது என்பதால், அவர்களை நாகரீக பெண்களாக உசுப்பேற்றிவிட்டு, அவிழ்த்துக்காட்ட வைத்து, சினிமா வியாபாரத்தில் விற்றார்கள். இன்னும் அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை காட்டி விற்கிறார்கள். ஒரு பொருளை விளம்பரப்படுத்த எதற்கு பெண்ணை காட்ட வேண்டும்???
இது தான் நவநாகரீகவாதிகள்! பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியமா???
(இஸ்லாத்தின் பார்வையில் இது கூட விபச்சாரமே...)
நடிகைகளை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, அவர்கள் வயதானதும் கைவிட்டு விடுவதும், அவர்கள் அலைந்து திரிவதும் அடிக்கடி காணும் செய்திகள். இதற்கும் ‪#‎விபச்சார‬விடுதி நடத்துவோருக்கும் என்ன வித்தியாசம்??? இரண்டிலும் பெண்களின் இளமையை வைத்து தானே வியாபாரம் நடக்கிறது???
முடியுமெனில் ‪#‎கிழவிகளை‬ மட்டும் வைத்து விளம்பரமும் சினிமாவும் எடுத்து வென்று காட்டுங்கள். அப்போது ஆணும் பெண்ணும் சமன் என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்தளவுக்கு இஸ்லாம் மீது அவதூறு பரப்பி, போதாக்குறைக்கு ‪#‎வாளால்‬ பரப்பியதாகவும் புரளி கிளப்பி விட்டு அதன் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் ‪#‎வெட்கம்‬ இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
* இவ்வாறு அவதூற்றுக்கு உள்ளாகியும், இதே மதத்தை பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால்,‪#கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும்.
அவர்கள் யாரையும் கிறிஸ்தவ திருச்சபைகள் விலைக்கு வாங்குவது போல இஸ்லாம் வாங்கவில்லை.
அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், ஏராளம் புகழோடும் செல்வாக்கோடும், வசதியோடும் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட பெண்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் எனில்.....
இஸ்லாத்தின் எதிரிகளால் வர்ணிக்கப்பட்டவாறு இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தவில்லை என்று #10000000% உறுதியாகிறது.
தன் குடும்ப பெண்களுக்கான (தாய், மனைவி, மகள், சகோதரி) செலவுகளுக்கு ஆண்கள் தான் பொறுப்பாளிகள் என்று கூறி பெண்களை கண்ணியப்படுத்திய மதம் உலகில்‪#‎இஸ்லாம்‬ மட்டுமே....
எதிரிகள் என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் அவர்களால் இறைவனை வெல்லவே முடியாது. தாயை விட அல்லாஹ் 70 மடங்கு அன்பு கொண்டவன் என்பதால் தான், இஸ்லாத்தின் எதிரிகளை தண்டிக்காமல் அவர்கள் உண்மையை ஏற்று திருந்தும் வரை இன்னும் விட்டு வைத்துள்ளான்.
[அல் குர்'ஆன் 14:42]
‪#‎மேலும்‬ அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.
எனவே இவர்கள் திருந்துவதற்கான அவகாசத்தை இறைவன் வழங்கியே இருக்கிறான்.
இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாம் மீது வேண்டுமென்றே குரோதம் கொண்டு இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
உலகின் அனைத்து மதங்களும் தினமும் வீழ்ச்சியடைந்து கொண்டு இருப்பதாக ‪#‎புள்ளிவிவரங்கள்‬ தெரிவிக்கின்றன. அதேவேளை இஸ்லாம் வளர்ச்சியடைவதாக டீவீ செய்திகள் கூட சொல்கின்றன.
இலங்கையில் இஸ்லாம் மதத்திற்கு இந்துக்கள் பெருமளவில் மாறுவதாகவும், அதை சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இந்து அமைப்பொன்று அண்மையில் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தது. அதில் வேடிக்கையாக  ‪#‎பொதுபலசேனா‬ எனும் பெளத்த அமைப்பும் இணைந்துகொண்டது.
********
இதன் மூலம் உலகம் உணரும் உண்மை என்னவெனில்,
தமது மதங்களில் உள்ள பிழையான கருதுகோள்களை சகிக்க முடியாமல் அதிலிருந்து வெளியேறி உண்மை மதமான இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று தெளிவாக தெரிகிறது.
[அல் குர்'ஆன் 9:32]
‪#‎தம்‬ வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
யா அல்லாஹ்!
உலகெங்கும் இஸ்லாத்தை விரிவடைய செய்வாயாக! ஆமீன்.

Sunday, 12 April 2015

முன்னோர்கள் யார்?!

                                         #முன்னோர்கள்_யார்?

o முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!

o சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!

o மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!

o மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!

o முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்...?

o முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!

#முன்னோர்கள்_யார்?

முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!

"எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)

#முன்னோர்களின்_அடிச்சுவட்டைப்_பின்பற்றுதலே_உண்மையை_மறுக்க_மனிதனை_தூண்டுகிறது!

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 43:23,24)

#சிலை_வணக்கம்_முன்னோர்_மூதாதையர்களின்_தெளிவான_வழிகேடு!

"நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 21:52-54)

#மூதாதையர்களின்_மீதான_பக்தியே_மனிதனை_நாசப்படுகுழியில்_வீழ்த்துகிறது!

"அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)

#மனிதன்_பின்பற்றத்_தகுதியானது_அல்லாஹ்வின்_வேதமும்_தூதரின்_நடைமுறையுமே!

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)

#முன்னோர்களின்_வழிமுறையை_விட_மாட்டோம்_என்_அடம்பிடித்தால்...?

"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)

#முன்னோர்கள்_யார்?

"பெரியார்கள், முன்னோர்கள்" என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

"முன்னோர்கள், பெரியார்கள்" என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட "மிகச் சிறந்த சமுதாயம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப் பெற்ற "ஸஹாபாக்கள்" இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த "நாற்பெரும் கலீபாக்கள்" இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை "முன்னோர் பெரியோர்" என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற "பித்அத்"களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.

அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?

இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!