Tuesday, 21 January 2014

அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ்காரணம்..!


அமெரிக்க வாலிபர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்க ஜோர்ஜ் புஷ் காரணம்..!
போதைவஸ்து, மது, மாது, சூது, என சீரழிந்து கொண்டிருந்த அமெரிக்க சில வாலிபர்கள் இஸ்லாத்தை தழுவ முன்னாள் ஜனாதிபதி ஜோர் புஷ் காரணமாக இருந்திருக்கிறார்.
அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஜோர் புஷ் தனது ஒவ்வொரு உரையிலும் இஸ்லாத்தை விமர்சித்து பேசுவதை அவதானித்த அவ் வாலிபர்கள் முதற்தடவையாக "இஸ்லாம்" என்ற சொல்லை கேள்விப்படுகின்றனர். பின்னர் அது பற்றி அறிய விரும்பினர்.
வழமையாக google ளில் ஆபாச படங்களை தேடும் பழக்கத்தைக் கொண்ட அவர்கள் புனித இஸ்லாம் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்..
இறுதியில் புனித இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கு மக்களை அழைக்கும் தாயிகளாகவும் மாறியுள்ளனர்.. அல்லாஹ் நாடினால் காபிர்களைக் கொண்டும் இஸ்லாத்தை பரப்புவான்.
17:97.
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ (த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்.

Sunday, 19 January 2014

"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர்



"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். 
அமெரிக்காவில்  அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட்
எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் 
குறிப்பிட்டுள்ளார். இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான 
தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் 
ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 
2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத்தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார். "இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் 
சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது"- என பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார். பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த 
மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான 
இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார். இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு 
முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது 
என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது. Jesus was a Muslim, claims U.S. religions 
professor source: lankamuslim-org குர் ஆன் (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் 
நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; 
மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) 
தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; 
(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. 3:47 قَالَتْ رَبِّ أَنَّىٰ

 يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ 3:47. 
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் 
தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் 
கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு 
காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது 
ஆகிவிடுகிறது.
” 19:20 قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا 19:20. அதற்கு அவர் (மர்யம்), 
“எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் 
நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார். 19:22 فَحَمَلَتْهُ 

فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِ19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன்
தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 19:27 فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا புதிய எற்படு மத்தேயு அதிகாரம் 1 18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் 
விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், 
அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று 
காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட 
யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய 
தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் 
மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் 
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் 
பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் 
பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் 
கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு
கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று 
பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் 
என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் 
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான 
குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

Monday, 16 December 2013

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்-ஹங்கேரிப் பெண்

ஆயிஷா - ஹங்கேரி
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்..
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லி மாளாதது.
சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக…
“என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.
பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.
ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.
நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.
பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.
இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்…
“வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்”
நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.
நன்நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்…ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன்.
ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை.
எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித் தரவில்லை.
ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று”.
இப்படி சொன்ன அந்த சகோதரர் மட்டும் என் கையில் சிக்கினார்…… இறைவன் அவருக்கு நல்லறிவை அளிப்பானாக…ஆமின்
“நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அப்போது நான் மிகவும் பயந்து விட்டேன்
* என்னால் அரபியில் தொழ முடியாமலேயே போய்விட்டால் என்ன செய்வது?
* என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது?
அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்து விட்டேன்… ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன்.
ஏனென்றால்,சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக் கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக் கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்… இப்படியே தொடரும்… நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.
பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை. பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார். அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன். என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும். அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் “நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல” என்று…
ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்…. இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.
என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார்.
ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்.
நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன். அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.
நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல்,இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல்ல இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.
நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்……

Thursday, 12 December 2013

இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது




இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது, இறைவனின் தூதராக அறியப்பட்ட முகமது நபி (ஸல்) அவர்கள் தான் அறிமுகபப்டுத்திய கொள்கைக்காக தன் சொந்த மக்களால்மிகவும் கொடூரமான முறையில் மக்கா நகரில் கொடுமைப்படுத்தப்படுகிறார். அந்த நகரின் அன்புக்கு உரியவாராய் 42 வருடங்கள் வாழ்ந்து வந்த நபிகள் நாயகம் அவர்கள் ,தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது. எல்லா மக்களும் சரி நிகர் சமமானவர்களே என்றது. இன வேறுபாடு கூடாது என்றது. அடிமை முறைகளை சமுதாயத்திலுருந்து வேர் அறுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ,ஒவ்வொரு இறைக் காரியங்களுக்கும் பகரமாக அடிமைகளை விடுதலை செய்து அவர்களின் உரிமைகளை கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த காலகட்டதில் அடிமை வைத்திருப்பது பெரும் செல்வம் வைத்திருப்பது போன்றதாகும், பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்களின் அன்பு தோழர்கள் அடிமைகளை விடுதலை செய்து ,உரிமையை விடுவதற்கு போட்டி போட்டனர். இன்னும் நபி அவர்கள் சமுதாயத்தின் கொடிய நோயாக இருக்கும் இன வேறுபாடுகளை களைவதற்கு தானே ஒரு முன்மாதிரியாய் மற்ற குலத்தவர்களிடம் திருமண உறவு செய்து கொண்டார். மேலும் தனது தோழர்களையும் கலப்புத்திருமனங்கள் செய்து கொள்ள ஆர்வம் மூட்டினார். அதன் மூலம் இன வெறுப்புகளை இஸ்லாமியர்களிடமிருந்து முழுமையாக களைந்தார். குல பெருமை கொள்வதை இறைவன் வெறுப்பதாக இஸ்லாமியர்களிடம் அறிவுறுத்தி ,கடும் எச்சரிக்கை செய்தார்கள். அடிமைத்தனம் ,இன வேறுபாடுகள்இல்லாத இஸ்லாம் அராபிய கண்டம் முழுவதும் வேகமாகப்பரவியது . முகமது நபி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த அரபு நாடுகளின் முதல் கலிஃபா (மக்கள் பிரதிநிதி) அபுபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலேயும், இரண்டாம் கலிஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் அடிமைத்தனங்களை முன் எப்பொதும் இல்லாத அளவிற்க்கு அரபு மன்னை விட்டு விரட்டினர். அதில் உமர் (ரலி) அவர்கள் அடிமைதனத்தை அரபு மன்னை விட்டு வேறறுக்க மிகவும் சிரத்தை கொண்டார்கள். அடிமைகளை முழுவதுமாய் விடுதலை செய்யும் சட்டத்தினை கொண்டுவந்தார், இன்னும் அடிமைகளை விடுதலை செய்வோருக்கும், அடிமைகளாய் இருந்தவர்களுக்கும் அரசு நிதிகளும் ,சன்மானங்களும் கொடுத்து மக்களை ஊக்குவித்தனர். இதற்கு முன்னால் அடிமைகளாய் இருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே இஸ்லாமியர்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்கஅறிஞர்களாக்கப்பட்டனர். தங்களுக்குள் திருமண உறவுகள் மேற்கொண்டனர். இன்னும் தங்களிடம் பணிக்கு இருக்கும் வேலைக்காரர்களுக்கு தன் எஜமானர்கள் மிகவும் மரியாதைக்கொடுக்கும் படியும் , அவர்களை தங்களுக்கு சமமாகாத்தான் நடத்தபட வேண்டும் என்றார் ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்கள். அதற்ககு தானே முன் மாதிரியாய் இருந்தார். எஜமானர்களும் ,பணியாளர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அடிமைகளிடம் உறவுகள் கொண்டு வாழ்ந்து வருவதை தடை செய்து அவர்களை திருமணம் செய்து கண்ணியம் அளித்து அவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உமர் அவர்களின் காலத்திலேயே பரந்து விரிந்த அரபு உலகம் முழுவதும் ஒரு அடிமை கூட இல்லை என்று பிரகடனபடுத்தும் அளவிற்கு அடிமை ஒழிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. 1400 வருடஙகளுக்கு முன் தொடங்கிய அடிமை சாதிய ஒழிப்பு இன்று வரை இசுலாத்தில் தொடர்ந்து வருகின்றது. அதற்கு காரணம் இஸ்லாத்தின் பார்வை ஆன்மீகத்தினைத் தாண்டி சமூக சீர்திருத்ததின் மீது கொண்ட ஆளுமையாகும். அதன் வீரியம் கொஞ்சமும் குறையாமல் ஆன்மீகத்துடன் ஒன்றாக பினைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் உலகம் போற்றும் உத்தமர் காந்தியும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமையும் அரசு உமரின் ஆட்சியை போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். சமூகதின் நோய் சாதியம் ,அச்சாதியின் பிறப்பிடமே மதங்கள் ,எனவே சமூக விடுதலை பெற ,சாதியம் ஒழிக்கப்படவேண்டும் ,அதனாலே எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகுத்தறிவாளன் அறியாமை இருள் அகற்ற வந்த தந்தை பெரியார் கூட சாதியம் அழித்து ,சமூக விடுதலை காண இஸ்லாம் ஒன்றே அருமருந்து என்றார். அடிமைத்தனம் கலைந்து , ஏகாதிபத்திய ,சாதிய விலங்குகளை உடைத்தெரிந்து உண்மையான சமூக விடுதலை காணதுடிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் மத,கலாச்சார கோட்பாடுகளை சுயஆராய்ச்சி செய்வது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். 

இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது, இறைவனின் தூதராக அறியப்பட்ட முகமது நபி (ஸல்) அவர்கள் தான் அறிமுகபப்டுத்திய கொள்கைக்காக தன் சொந்த மக்களால்மிகவும் கொடூரமான முறையில் மக்கா நகரில் கொடுமைப்படுத்தப்படுகிறார். அந்த நகரின் அன்புக்கு உரியவாராய் 42 வருடங்கள் வாழ்ந்து வந்த நபிகள் நாயகம் அவர்கள் ,தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது. எல்லா மக்களும் சரி நிகர் சமமானவர்களே என்றது. இன வேறுபாடு கூடாது என்றது. அடிமை முறைகளை சமுதாயத்திலுருந்து வேர் அறுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ,ஒவ்வொரு இறைக் காரியங்களுக்கும் பகரமாக அடிமைகளை விடுதலை செய்து அவர்களின் உரிமைகளை கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த காலகட்டதில் அடிமை வைத்திருப்பது பெரும் செல்வம் வைத்திருப்பது போன்றதாகும், பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்களின் அன்பு தோழர்கள் அடிமைகளை விடுதலை செய்து ,உரிமையை விடுவதற்கு போட்டி போட்டனர். இன்னும் நபி அவர்கள் சமுதாயத்தின் கொடிய நோயாக இருக்கும் இன வேறுபாடுகளை களைவதற்கு தானே ஒரு முன்மாதிரியாய் மற்ற குலத்தவர்களிடம் திருமண உறவு செய்து கொண்டார். மேலும் தனது தோழர்களையும் கலப்புத்திருமனங்கள் செய்து கொள்ள ஆர்வம் மூட்டினார். அதன் மூலம் இன வெறுப்புகளை இஸ்சலாமியர்களிடமிருந்து முழுமையாக களைந்தார். குல பெருமை கொள்வதை இறைவன் வெறுப்பதாக இஸ்லாமியர்களிடம் அறிவுறுத்தி ,கடும் எச்சரிக்கை செய்தார்கள். அடிமைத்தனம் ,இன வேறுபாடுகள்இல்லாத இஸ்லாம் அராபிய கண்டம் முழுவதும் வேகமாகப்பரவியது . முகமது நபி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த அரபு நாடுகளின் முதல் கலிஃபா (மக்கள் பிரதிநிதி) அபுபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலேயும், இரண்டாம் கலிஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் அடிமைத்தனங்களை முன் எப்பொதும் இல்லாத அளவிற்க்கு அரபு மன்னை விட்டு விரட்டினர். அதில் உமர் (ரலி) அவர்கள் அடிமைதனத்தை அரபு மன்னை விட்டு வேறறுக்க மிகவும் சிரத்தை கொண்டார்கள். அடிமைகளை முழுவதுமாய் விடுதலை செய்யும் சட்டத்தினை கொண்டுவந்தார், இன்னும் அடிமைகளை விடுதலை செய்வோருக்கும், அடிமைகளாய் இருந்தவர்களுக்கும் அரசு நிதிகளும் ,சன்மானங்களும் கொடுத்து மக்களை ஊக்குவித்தனர். இதற்கு முன்னால் அடிமைகளாய் இருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே இஸ்லாமியர்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்கஅறிஞர்களாக்கப்பட்டனர். தங்களுக்குள் திருமண உறவுகள் மேற்கொண்டனர். இன்னும் தங்களிடம் பணிக்கு இருக்கும் வேலைக்காரர்களுக்கு தன் எஜமானர்கள் மிகவும் மரியாதைக்கொடுக்கும் படியும் , அவர்களை தங்களுக்கு சமமாகாத்தான் நடத்தபட வேண்டும் என்றார் ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்கள். அதற்ககு தானே முன் மாதிரியாய் இருந்தார். எஜமானர்களும் ,பணியாளர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அடிமைகளிடம் உறவுகள் கொண்டு வாழ்ந்து வருவதை தடை செய்து அவர்களை திருமணம் செய்து கண்ணியம் அளித்து அவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உமர் அவர்களின் காலத்திலேயே பரந்து விரிந்த அரபு உலகம் முழுவதும் ஒரு அடிமை கூட இல்லை என்று பிரகடனபடுத்தும் அளவிற்கு அடிமை ஒழிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. 1400 வருடஙகளுக்கு முன் தொடங்கிய அடிமை சாதிய ஒழிப்பு இன்று வரை இசுலாத்தில் தொடர்ந்து வருகின்றது. அதற்கு காரணம் இஸ்லாத்தின் பார்வை ஆன்மீகத்தினைத் தாண்டி சமூக சீர்திருத்ததின் மீது கொண்ட ஆளுமையாகும். அதன் வீரியம் கொஞ்சமும் குறையாமல் ஆன்மீகத்துடன் ஒன்றாக பினைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் உலகம் போற்றும் உத்தமர் காந்தியும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமையும் அரசு உமரின் ஆட்சியை போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். சமூகதின் நோய் சாதியம் ,அச்சாதியின் பிறப்பிடமே மதங்கள் ,எனவே சமூக விடுதலை பெற ,சாதியம் ஒழிக்கப்படவேண்டும் ,அதனாலே எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகுத்தறிவாளன் அறியாமை இருள் அகற்ற வந்த தந்தை பெரியார் கூட சாதியம் அழித்து ,சமூக விடுதலை காண இஸ்லாம் ஒன்றே அருமருந்து என்றார். அடிமைத்தனம் களைந்து , ஏகாதிபத்திய ,சாதிய விலங்குகளை உடைத்தெரிந்து உண்மையான சமூக விடுதலை காணதுடிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் மத,கலாச்சார கோட்பாடுகளை சுயஆராய்ச்சி செய்வது இன்றைய கால  கட்டத்தின் தேவையாகும்.

Thursday, 5 December 2013

சகோதரர் சுரேஷ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்!!





இஸ்லாத்தை எதிர்த்து ஓராயிரம் சதி திட்டங்கள் ஓவ்வொருநாளும் அரங்கேறினாலும்

ஆதரிக்கும் அலைகள் ஓய்வதில்லை 

இதன் வரிசையில் சகோதரர் சுரேஷ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்!! 

தன் பெயரை "சபியுல்லாஹ்" என்றும் மாற்றி கொண்டார்...

☆☆ அல்லாஹு அக்பர்☆☆

அலைகள் தொடரும்...

இஸ்லாத்தின் எதிரிகள் மனதை திடப்படுத்தி கொள்ளட்டும் ...

Wednesday, 27 November 2013

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!


1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8. குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.


மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!



14. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.


15. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

16. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

17. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

18. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

19. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

20. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

21. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

22. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

Saturday, 23 November 2013

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர் நபியின் மஸ்ஜிதில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்




நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்  நபியின் மஸ்ஜிதில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்

இந்த ஆண்டு ஹஜ்ஜீ கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிட தக்கவர் ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் சினிமா பட தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசை பாடும் விதமாக திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிர்கும் கோபத்திர்கும் உள்ளானவர்

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்க தொடங்கினார் முஹம்மது நபியை பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தை பற்றி படிக்க தொடங்கினார் படித்து முடித்த பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

அவர் மக்கமா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்

இந்த மண்ணில் கால் பதித்த திலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன் அழுது புலம்பி எனது இறைவனிடம் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசை பாடி திரைபடம் எடுத்த குற்றத்திர்கு மன்னிப்பு கோரியே நான் இங்கு வந்துள்ளேன்

இப்படி கூறிய அவர் எந்த நபியை வசை பாடி படம் எடுத்தாரோ அந்த நபியின் மஸ்ஜிதிலும் அமர்ந்து தனது தவறை நினைத்து வருந்தி தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்தி கூறுகிறது


இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்கு புகலிடமாக மாறுகிறது என்பதர்கு மற்றோரு எடுத்து காட்டாக ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்!