Thursday, 6 September 2012
Wednesday, 5 September 2012
பெர்முடா முக்கோணம்
வியாழன், 16 ஆகஸ்ட், 2012
பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்) - Bermuda Triangle
உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..
இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..
ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது.... ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..
இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..
இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...
இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..
இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...
ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....
அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...
இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..
ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது.... ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..
இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..
இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...
இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..
இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....
அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...
NANRI:faris fana
அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்
அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.
1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:
*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.
சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது.
இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.
*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:
1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.
*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.
*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ****நன்றி : .....என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..faris fana

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்.
இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.
அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.
BY.faris fana
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.BY.faris fana
Tuesday, 4 September 2012
Thursday, 30 August 2012
விருத்த சேதனம் செய்து கொள்வது பற்றிய தகவல் !!!! (circumcision)

விருத்த சேதனம் ( english : circumcision :அரபி: ختنة; ஈப்ரு: בְּרִית מִילָה) அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சை

யாகும். கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் இது செய்யப்படுகின்றது. பெரும்பாலும் மத மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30% ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுகின்றது .வட கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடிகளிடம்தான் முதன் முதலில் விருத்த சேதனம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. எகிப்தில் காணப்படும் பழங்கால குகை ஓவியங்களில் இருந்து இதனை அறியலாம்.விருத்த சேதனம் பால்வினை நோய்கள், ஆண்குறி புற்றுநோய், பெண் துனையின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் எயிட்சுதாக்கப்படுவதர்க்கான இடறும் இதன் மூலம் சிறிது குறைவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது[6
இதில் இருக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டால் பலரும் இந்த பழக்கத்தை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொள்வார்கள். எச்ஐவி என்ற கொடிய ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் விருத்த சேதனம் பெரும் பங்காற்றுவதாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்சிசகளை வெளியிட்டிருக்கின்றனர்.
உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.
விருத்த சேதனம் செய்யும் இந்த பழக்கம் கிறித்தவத்தில் எப்படி மறைந்து போனது என்பதை விக்கி பீடியா விளக்குகிறது. அதையும் இனி பார்ப்போம்:
கிருத்துவம்
கிருத்துவத்தை பொருத்தவரை தொடக்கத்தில் அது தன்னை யூத மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவாகவே கருதியது. எனவே விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் ஆதி கிருத்துவர்களிடம் இருந்தது. இயேசு கிறித்துவுக்கும் யூத மரபு படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டது. இருப்பினும் இயேசுவின் மரணத்திற்குப் பின் கிருத்துவம் தன்னிடம் உள்ள யூதத்தின் அடையாளங்களை விலக்குவதின் ஒரு பகுதியாக விருத்த சேதனத்தை கைவிட்டது. ஏறக்குறைய கிபி 50ல் எருசலேம் நகரில் கூடிய முதலாவது கிருத்துவ திருச்சங்கம் (The first Christian Church Council in Jerusalem) இதனை உறுதி செய்தது பிற்பாடு அதிக அளவில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்ட ரோமர்களிடம் இருந்த விருத்த சேதனத்தின் மீதான வெறுப்பும், முதலாம் பாப்பரசர் பேதுருவின் எதிர் அறிக்கையும் விருத்த சேதனத்தை கிருத்துவர்களிடம் இருந்து இல்லாமல் செய்தது.
இருப்பினும் இன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில கிழக்கு மரபு வழி காப்திக், எத்தியோப்பியன் மற்றும் எறித்தீன் ஆகிய பிரிவுகளில் விருத்த சேதனம் வழமையான ஒன்றாகவே உள்ளது குறிப்பாக கென்யாவில் உள்ள நோமியா பிரிவு போன்றவை, தனது உறுப்பாண்மைக்கு விருத்த சேதனத்தை கட்டாயமாக்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பு உலகில் பெரும்பான்மையான நாடுகளில் ஆண்கள் 80 சதவீதமான பேர் விருத்த சேதனம் செய்து கொள்வதாக அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் நமது இந்தியாவைப் பொருத்த வரை 20 சதவீதத்துக்கு கீழே வந்து விடுகிறது. இந்தியா இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதும் ஒரு காரணம்.
அமெரிக்காவில் மத வித்தியாசம் பார்க்காமல் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்து வருகின்றனர்.
அறிவியல் பூர்வமாக விருத்த சேதனம் செய்வது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பதையும் அது தற்காலங்களில் மிக இலகுவாக எந்த சிரமமுமின்றி செய்யபடுகின்றது

மோடி மஸ்தான் ஆட்சியும் கோயபல்ஸ் ஊடகங்களும் !!!

கட்டுரைக்கு நன்றி
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றிகண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
.....
வெற்றி என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றி ஒன்றும் இல்லை
‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமையானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்பட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத்தான் ஆட்சி நடத்த வேண்டும்’
‘ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்று குவிக்கக் காரணமாயிருந்தார். மதவெறியர்களின் கொலைவெறித் தாண்டவம ் முடியும் வரை எதுவும் செய்யக்கூடாது என காவல்துறைக்கு ஆணையிட்டார். நீதியை வளைத்து, உண்மையைப் புதைத்து, கொலைகாரர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டார்’
மேலே சொன்ன இரண்டுமே ஒருவரைப் பற்றிய செய்திதான். அவர் வேறு யாருமன்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். ஒரே மனிதரைப் பற்றி, இரண்டுவிதமான செய்திகள், அதுவும் கொஞ்சமும் பொருத்தமில்லாத, முற்றிலும் முரண்பட்ட கோணத்தில். இரண்டில் எது உண்மை, இதில் மறைந்திருக்கும் அரசியல் என்ன?
2007, நவம்பர் 3ஆம் நாளிட்ட தெகல்கா புலனாய்வு வார இதழ் மோடியின் மதவெறியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 2002 பிப்ரவரியில் நடந்த கலவரம், முதலமைச்சர் மோடி மற்றும் பிஜேபி தலைமையிலான நடுவண் அரசின் ஆதரவுடன், திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அந்தப் புலனாய்வு இதழ் மறுக்க முடியாத சான்றுகளுடன் முன்வைத்தது. இந்துத்துவக் கலவரக்காரர்களின் வாயிலிருந்தே அத்தனை உண்மைகளையும் காட்சிப் பதிவுகளாக வெளியிட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முன் வரவில்லை.
இந்நிலையில், குஜராத் உயர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திர பட், உச்ச நீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்துக்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்டட்டும்” என்று முதலமைச்சர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டார் என அந்த வாக்குமூலத்தில் சஞ்சீவ் பட் கூறியிருக்கின்றார். இவர் ஏதோ ஊகத்தின் அடிப்படையிலோ, கற்பனையாகவோ இதைச் சொல்லவில்லை. 2002 பிப்ரவரி 27 ஆம் நாள் குஜராத் முதல்வர் மோடி, தனது வீட்டில் கூட்டிய காவல்துறை உயரதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் இந்த சஞ்சீவ் பட். அன்று தங்களுக்கு முதல்வர் இட்ட உத்தரவைத்தான் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவ் பட். அதோடு இவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை, இவரது வாகன ஓட்டியான, தாராசந்த் யாதவ் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இவற்றின் மீது என்ன விசாரணை மேற்கொள்ளப்படும், மோடிக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதெல்லாம், உச்சநீதிமன்றத்தின் நேர்மைக்கான வினாக்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறியைக் கட்டவிழ்த்துவிட்ட பெரும்பான்மை இந்துக்களின் முதல்வராக மட்டுமே செயல்பட்டவர் நரேந்திர மோடி. இப்படிப்பட்ட மதவெறியரைத் தான், காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கின்ற அன்னா ஹசாரே முதல் தமிழ்நாட்டின் சீமான் வரை முன்மாதிரி முதல்வர் என்று போற்றுகிறார்கள். மோடிக்கு அவர்கள் சூட்டிய புகழாரம் தான் கட்டுரையின் முதல் பத்தி.
அன்னா ஹசாரே மோடி புகழ் பாடியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதுவும் குஜராத் மாநிலத்தின் சமூக ஆர்வலர்களிடமிருந்தே அந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.(தி ஹிண்டு ஏப்ரல் 13, 2011)
மோடியின் கிராமப்புற மேம்பாட்டுக்கான மாதிரிகள், ஊடகங்கள் சொல்வது போலத் தொழில் முன்னேற்றம், வளர்ச்சிப் பாதையில் குஜராத் என்பதெல்லாம் தகரத்திற்குத் தங்க முலாம் பூசியது போன்றது என்பது அவர்களின் கூற்று. குஜராத்தின் வளர்ச்சி என்பது மேல்தட்டு மக்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிதானே ஒழிய, பெரும்பான்மை கிராமங்களின் வளர்ச்சியாக இல்லை. குஜராத்தின் பெரும்பான்மை சமூக சக்திகள், தங்களின் குறைகளை மறைக்க இந்த ‘குஜராத் முன்னேறுகிறது’ என்கிற முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர் அவர்கள்.
இந்தக் கருத்துகளைத் தனித்தனியாக யாரும் சொல்லவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு, கூட்டறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சமூகத்திற்காகப் பணியாற்றுபவர்கள். சமூக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா, மனித உரிமைகள் ஒருங்கமைப்பின் இயக்குனர் பிரசாந்த் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரோகித் பிரஜாபதி, சாராபாய், நந்தினி மஞ்ரேகர் ஆகியோர் அந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அன்னா ஹசாரே மோடியை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் அவர் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்து விலகப்போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் குஜராத்தின் பின்னோக்கிய வளர்ச்சியை அன்னா ஹசாரே நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தை விளக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
மோடி தலைமையிலான அரசு விவசாயிகள், பெண்கள், உழைக்கும் வகுப்பார், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எதிரானது என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சரி, இப்போது செய்திக்கு வருவோம். ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவற்றிற்கு நேர்மாறாக இருக்கின்றன. அவை குஜராத்தின் தொழில் வளர்ச்சியையும், மோடியின் நிர்வாகத்தையும் வானளாவப் புகழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் பெரிய கட்டமைப்புகளைக் கொண்ட ஊடகங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கின்றன. மோடியின் அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டி வருகிறது. டாடா கார் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழில்நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகத் தந்திருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவைதான் குஜராத்தின் உண்மை நிலை. இதனை இங்கிருந்து கொண்டு நாம் சொல்லவில்லை, அங்கே மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து, அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர், பெருமுதலாளிகளின் கைப்பாவைதான் முதல்வர் மோடி என்று.
ஜெர்மானியர்களை யூதர்களுக்கு எதிராக மூளைச் சலவை செய்த, ஹிட்லரின் படுகொலைகளை நியாயப்படுத்திய கோயபல்சின் ‘தி அட்டாக்’ என்ற நாளிதழின் பணியைத்தான் இப்போது இந்த ஊடகங்கள் செய்துவருகின்றன. பளபளப்பான பக்கங்களை மட்டுமே காட்டி, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, மக்களிடையே ‘ரொம்ப நல்லவர் மோடி’யின் மாய பிம்பத்தை உலவவிட் டிருக்கின்றன.
‘அங்கு இருக்கின்ற இசுலாமியர்களும் அமைதியாக இருக்கின்றனரே! 2002 கலவரத்திற்குப் பிறகும், மோடியைத்தானே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நிர்வாகத் திறமை மிக்கவர் மோடி என்பதால்தானே, அனைத்தையும் மறந்துவிட்டு, மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர் ’ என்று ஒரு பரப்புரை, தமிழ்நாட்டிலும் நடந்துவருகிறது. அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற அளவிற்கு, அங்கே சிறுபான்மையினரான இசுலாமியர்களின் வாக்கு வங்கி இல்லை. எதிர்த்துக் குரல் கொடுக்கின்ற அளவிற்கு, அவர்களுக்கு ஆதரவான வலிமையான அமைப்புகளும் அங்கு இல்லை. ஏற்கனவே மதப் பெரும்பான்மையினரால், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான இசுலாமியர்கள், அச்சத்தின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கின்றனர். இதுதான் உண்மை.
தவறு செய்தவன் தனி மனிதாக இருந்தால், அவன் மனம் திருந்தும் நிலையில் மன்னிக்கலாம், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நரேந்திர மோடி என்பவர் தனி மனிதர் அல்லர். இந்துத்துவாவின் அடையாளம். அகண்ட பாரதம் காணத் துடிக்கும், பிஜேபி தலைவர்களில் ஒருவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மாநிலத்தின் முதல்வர். அங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் தன்மான நல்வாழ்க்கைக்குப் பொறுப்பானவர். அப்படிப்பட்டவர் செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைத்து, மேலோட்டமாகப் பார்த்துக் கருத்துக்களைச் சொல்வது எப்படி சரியாகும்?
முடக்கி வைக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தோண்டி எடுக்க, நல்லதொரு வாய்ப்பை சஞ்சீவ் பட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகும், மோடியே நேரடியாக வந்து சொன்னால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று சட்டமும், நீதிமன்றமும் கருதினால்... குஜராத்தின் தற்காலிக அமைதி இப்படியே காலத்திற்கும் நீடிக்கும் என்று சொல்லுவதற்கில்லை.

Subscribe to:
Posts (Atom)