Wednesday, 4 September 2013

இதயத்திற்கு இதமான பொருட்களின்


இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.
பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது.
ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார்.
இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.
பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது.
இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!

Saturday, 20 April 2013

அமெரிக்கக் கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம்


எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி 
பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் 
இறைவன் அப்படி ஆக்கி அருள்புரிய வேண்டுமென்று துவா செய்திருப்போம். 
அவர்களுக்கு மத்தியிலே வாழ்வதற்கு  விருப்பப்பட்டிருப்போம்.அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த 
என்பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து தொகுத்து உங்களுக்காக இங்கே பதிவிட விரும்பி  இங்கே பதிவிடுகிறேன்.இவரும் நாஸ்த்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான். டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr.Lawrence Brown), தற்போது இவர்     கனேடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith 
துறையின் தலைவர். அமெரிக்க விமானப் படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக 
பணியாற்றியவர்.1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை  நம்பிக்கையின்பால் வந்த நேரம். "அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள். மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும்  அதிர்ச்சி அடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் 
அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு 
மருத்துவராக, அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை 
உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன்.இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை. குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் 
குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன். இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய 
பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது. பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது  தான். அது கூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்,"இறைவா நீ இருந்தால்..." 
அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய 
மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன்.
இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை 
பிரிவிற்கு திரும்பினேன். என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். 
அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், 
மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள். நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and 
spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது. பயத்தில் 
இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறை
வேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புதுப் புதுக்
காரணங்களை கண்டுபிடிப்பர். என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவக் காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்.ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், இறை நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை 
இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் 
என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் 
நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான்,
இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் 
மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் 
யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை 
தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றி நடக்கவும்
முடியவில்லை. பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் "Muhammed: His life based on the Earliest Sources" என்னும் எனக்கு  அறிமுகமாயின. நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களைக் குறிப்பிடுவதை 
படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்? பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.ஆக, குரானைப் 
படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make 
sense).நபிமார்கள்,ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்து இஸ்லாத்தை ஏற்று கொண்டேன். நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், 
என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாமெனும்  உண்மையை அறியாமல் 
இருக்கின்றனர். நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த 
அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.  
"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - 
முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" குர்ஆன் 42:13 
தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குர்ஆன் 24:46. அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான்.அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட செய்ய முடியும்." அல்ஹம்துலில்லாஹ். இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின்
கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார். 
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை 
அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற ஒரு நிலையைத் தாண்டித் தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள்     மிக அதிகமாகவே இருக்கின்றன. "நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார். நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து" வேண்டும்  என்று மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து 
அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டும் என்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும். என் 
குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். என்னுடைய  பெற்றோர்களோ  என்னை  முற்றிலுமாக   நிராகரித்து விட்டனர் ஒருமுறை 
 அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்பக் கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது
என் மனைவி மீதோ அல்லது என்னுடைய  பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக 
வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணிப்பார்க்கவேண்டும்.
அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய 
காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.
என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் 
எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான். தற்போது நிலைமை பெரிதும் மாறி  
விட்டது என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான். 
அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா 
நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமியக்  குடும்பத்தில் ஒருவன்.எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான்  தெரிந்து  கொள்ள முடியும் என்று. தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர  ஆரம்பித்துள்ளனர்.என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது. இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்டகாலங்களுக்கு பின்னர் 
சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான் நான் இழந்ததை விட பெற்றவை அதிகம். என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், 
பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள்
அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் 
தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள். என்
அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன
அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட 
மேலானதாக இருக்கும்"சுப்ஹானல்லாஹ்! 

ஈமானை இறுகப்பற்றி பிடித்திருக்கும்
இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம் நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது. டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட.
இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது. பல நூல்களை 
எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்... இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக.. ஆமின். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
நன்றி- அறிவின் பக்கங்கள்
--------------------------------------


படித்ததில் பிடித்தது.
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார் டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் (பிறப்பு: 1959) ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா? 
பகுதி 03

இஸ்லாத்தை ஏற்றேன்.
எனக்கு ஏற்பட்ட சோதனைகள்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள். இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன். எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது. அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.
இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன். மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா? நான் சவாலாக கேட்கிறேன். இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?
இறைவனின் உதவி. 

இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன்.

தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
1) The First and Final Commandment – By Laurance B Brown.
2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown.
3) The Eighth Scroll – By Laurance B

Image may contain: 1 person

Tuesday, 26 March 2013

இஸ்லாத்தைக் கடுமையாக வெறுத்த நான்,முஸ்லிம் ஆகிவிட்டேன்-அர்னோட் வேன் டோர்ன்




"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான்,முஸ்லிம் ஆகிவிட்டேன் என்பதை எங்கள் கட்சியினர் நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும்.


நான், கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்த பின்னரே, இஸ்லாத்தை ஏற்றேன் என்கிறார், நெதர்லாந்தின் "Party for Freedom" எனும் வலதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான "அர்னோட் வேன் டோர்ன்

Friday, 1 February 2013

நீங்கள் இறைவனை தேடுபவரா?

நீங்கள் இறைவனை தேடுபவரா?????????
அன்பிற்கினிய சகோதர்களே நீங்கள் அகில உலகையும் படைத்து பராமரிக்கும்   ஓர் இறைவனை தேடக்கூடியவரா???
நீங்கள் தேடக்கூடிய இறைவன் கீழ் காணும் தகுதியுடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா???
1) இறைவன் ஒரே ஒருவனே
2) அவனே படைக்க கூடியவன்
3) அவனே காக்க கூடியவன்
4) அவனே அழிக்க கூடியவன்
5) அவன் எந்த தேவையும் அற்றவன்
6)அவன் யாரையும் பெற்றவனாக இருக்க கூடாது
7) அவன் யாராலும் பெறப்பட்டவனாகவும் இருக்க கூடாது
8) அவன் சாப்பிடுபவனாக இருக்க கூடாது
9) அவன் தூங்குபவனாகவும் இருக்க கூடாது
10) அவன் சாவுபவனாகவும் இருக்க கூடாது
11) அனைத்தையும் கண்கானிக்க கூடியவனாக இருக்க வேண்டும்
12) அனைத்தையும் பார்க்க கூடியவனாக இருக்க வேண்டும்
13) அனைத்தையும் கேட்க கூடியவனாக இருக்க வேண்டும்
14) அனைத்து ஆற்றலும் அதிகாரமும் உடையவனாக இருக்க வேண்டும்
15) அவனுக்கு நிகராக வேறேதும் இருக்க கூடாது


இந்த தகுதியுடைய இறைவனை நீங்கள் வெறுப்பு விருப்பு இன்றி தேட ஆரம்பித்தால்  உண்மையிலேயே இஸ்லாமிய மார்க்கம் (குர்ஆன்  ஹதீஸை) தவிர வேறு எந்த மதத்திலேயும் வேறு எந்த கொள்கைலேயும் காணமுடியவே முடியாது.

மேலுள்ள ஒவ்வொன்றுக்கும் இதோ ஆதாரம் இஸ்லாமியர்களின் வேதமான புனித குர்ஆனிலிருந்து


1) உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 2:163

2)  படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? 16:17

3) அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. மறுமையை நம்புபவரையும் சந்தேகப்படுபவரையும் வேறுபடுத்திக் காட்டவே (இது நடந்தது). உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன். 34:21

4)  ''மர்யமுடைய மகன் மஸீஹ்92 தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ''மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.5:17

5) அல்லாஹ் தேவைகளற்றவன்.112:2

6) (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. 112:3

7) (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.112:3

8) வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை' என்று கூறுவீராக! 'கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்' எனவும் கூறுவீராக! 6:14

9) அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? 17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டை யும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 2:255

10) அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? 17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டை யும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 2:255

11) உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்' (எனவும் கூறினார்) 11:57

12)  (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 42:11

13) (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 42:11

14) அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன். 51:58

15) அவனுக்கு நிகராக யாருமில்லை. 112:4

உங்கள் தேடல் இதுவாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

Tuesday, 22 January 2013

சவூதி அரேபியா பற்றி அறிந்ததும் அறியாதததும்


தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம்இருக்கிறது.
அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.

சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.

பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.

*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை( world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.

*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய்( Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.

*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜிர்யாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.

*Abraj al bait towers இந்த ஹோட்டல்mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.

*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது.இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்கமுடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும்.http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers

*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.

*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.

*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university.

*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லுமளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.

*முகம்மத் பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.

*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.

*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.

*சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.

*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.

*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது.

*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.
*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.

*மேற்கூறிய கடைசி மூன்று விடயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.

*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.
ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.

*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.

*Saudi ARAMCO தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam ல் உள்ளது.

*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவூதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.

*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.

*Mono Ethlene Glycol உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள SABIC தான் வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய கம்பெனியாக உள்ளது.

நன்றி: lakshmanaperumal

Wednesday, 2 January 2013

IS THE BIBLE TRUE ?






பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதி போலியாக இட்டுகட்டபட்டது! பைபிள் அறிஞர் ஒப்புதல்

-ஜான் பிலைக் (CNN -தொலைகாட்சியின் செய்தி தொடர்பாளர்)

உடல் பலஹீனமான முதியவர் ஒருவர் சிறைச்சாலையில், குளிரில் நடுநடுங்க அமர்ந்து இருக்கிறார். முன்பு ஒருமுறை மரணத்தில் இருந்து தப்பியவர். ஆனால் இம்முறையோ மரண தண்டனை உறுதி செய்யபட்டுள்ளார்.

“ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”2 -ம் திமோத்தேயு(4:6-7)

அந்த வயதான முதியவர் வேறு யாருமில்லை அவர் தான் பவுல். மேலே குறிப்பிட்டுள்ள பைபிளின் படி புதிய ஏற்பாட்டின் மிகவும் சோகம் தோய்ந்த பகுதியாக கிறிஸ்த்தவர்களால் கருதப்படுகிறது. பவுல் மரணிக்கும் முன்பு இறுதி வார்த்தைகளாக மேற்குறிப்பிட்டவாறு கூறினார் என்று பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் .

ஆனால் அங்கு தான் ஒரு பிரச்சனை. அதுவென்ன பிரச்சனை? அதாவது இதனை உண்மையில் பவுல் கூறவில்லை. அது அவர் சொற்கள் இல்லை !உண்மையில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் பாதிக்கும் மேல் உள்ள பகுதிகளை பவுல் என்கின்ற அபோஸ்தல பெயர்தாங்கிகள் தான் எழுதினார்கள்.

“பெய்யைச் சொல்லி நல்லதைப் பரப்பினால் அது மக்களிடம் எடுபடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் பல மக்களிடம் காணப்பட்டது” என்று மிகவும் பிரசுத்தி பெற்ற பைபிளின் முற்கால கையெழுத்து பிரதிகளையும் ஆய்வு செய்யும், மிகவும் அனுபவமிக்க கிறிஸ்த்துவ அறிஞர் எஹ்ர்மன்(Ehrman) தனது புத்தகமான “போர்ஜெட்(Forged)” (போலியாக இட்டுகட்டபட்டவைகள்) என்பதில் கூறுகிறார்.

மொத்தம் உள்ள 27 புதிய ஏற்பாடு புத்தகங்களில் 11 புத்தகங்கள்பொய்யாக இட்டுகட்டபட்டவை.

இயேசுவின் சீடர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குறிப்பிடப்படும் பைபிளின் புதிய ஏற்பாடுகளில் சில பகுதிகளும் அவர்கள் எழுதியவை இல்லை. ஏனெனில், இயேசுவின் சீடர்கள் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக இருந்தனர்.

இயேசுவின் சீடர்கள் படிப்பறிவில்லாத விவசாயிகளா?

எஹ்ர்மனின் இந்த புத்தகம் அவரின் மற்ற பல புத்தகங்களை போலவே பல்வேறு விதமான விமர்சனங்களை கிளப்பிய வண்ணம் உள்ளது. அதில் ஒருவர் “பென் வித்தரிங்டன் (Ben Witherington)” இவர் “”ஃபோர்ஜ்ட்” என்ற எஹ்ர்மானின் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால், அதில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை!

வித்தரிங்டன், எஹ்ர்மனின் புத்தகத்தை “ஒரு மூர்க்க தனமான ஏமாற்று புத்தகம், இதையும் மக்கள் நம்பதான் செய்கிறார்கள்” என்று விமர்சிக்கிறார்.

வித்தரிங்டன் மேற்படி எஹ்ர்மனின் புத்தகத்துக்கு ஒரு நீண்ட விமர்சனைத்தையே எழுதியுள்ளார். அதில், புதிய ஏற்பாட்டில் II பேதுருவைதவிர ஏனையவை இயேசுவின் வாழ்வுக்கும் பவுலுக்கும் சாட்சியாயிருந்த எழுத்தறிவுள்ள மிகச்சிறு கூட்டத்தினரால் எழுதப்பட்டிருக்க முடியும் என்கிறார்.

அடுத்து II திமோத்தேயு-வில் பவுலின் கூற்றாக சொல்லப்படுவது, அவர் எழுதாவிட்டாலும் அவர் சொல்லச் சொல்ல வேறு ஒரு எழுத்தர் வருங்கால சந்ததியினருக்காக எழுதியிருக்கலாம் என்றும்,

தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய, பவுலின் மனதைப் புரிந்து கொண்ட நண்பரோ அல்லது உதவியாளரோ பவுலின் கூற்றை செவியேற்று இருக்கலாம். இது புனையப்பட்டதல்ல! மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரின் வாக்கு! என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால்எஹ்ர்மன்,பேதுருவின் (பீட்டரின்) கடிதங்களை மாத்திரம் விமர்சித்துவிட்டு மற்றவைகளை விட்டுவிடவில்லை ! அவர், பரிசுத்த சுவிசேஷங்கலாக கருதப்படும் மத்தேயு, மார்க் மற்றும் யோவான் சுவிஷங்களும் கூட அவர்கள் எழுதியவைகள் இல்லை. இதில் எந்த ஒன்றும் இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்களையும் முன் வைக்கின்றார்.

முற்காலத்தில் எழுத பெற்ற எந்த சுவேஷங்களானாலும் அவைகளில், அதை எழுதியவர்கள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆக சுவேஷங்களின் பெயர்களை உண்டாக்கியவர்கள் பிற்கால எழுத்தர்கள் தான் என்று கூறுகிறார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று இயேசுவின் சீடர்களாக கருதப்படும் ஜான் (யோவான்) மற்றும் (பீட்டர்) ஆகிய இருவருக்கும் இன்றைக்கு பைபிளில் அவர்கள் பெயரில் உள்ள அதிகாரங்களுக்கும் எந்த விதமான சம்மதமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

இதற்கு சான்றாக பைபிளில் அப்போஸ்தலர் 4 : 13 இல் இயேசுவின் சீடர்களான, பேதுரு மற்றும் ஜான் இருவரும் மீனவர்களாக் இருந்தனர். இது பற்றி குறிப்பிடுகையில் “agrammatoi,(அக்ரமத்தொய்)”என்ற கிரேக்க மொழிசொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி அர்த்தம் “எழுதப்படிக்க தெரியாதவர்கள்” என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கும்போது எப்படி இந்த ஆகாங்களை இவர்கள் எழுதியிருப்பர் என்பதே எஹ்ர்மனின் வாதம்.

பைபிளில் பவுலின் பெயரால் எழுதப் பட்டவைகள் உண்மையான பவுலால் எழுதப்பட்டது தானா?

புதிய ஏற்பாட்டின் உண்மையான மூல பிரதியான பவுலின் கடிதங்களில் சுமார் சரிபாதி (13 கடிதங்களில் 7 கடிதங்கள்) போலியானவையே என்று ஏர்மன் கூறுகிறார்.

அவரது கடிதங்கைளை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, பயன்படுத்தப்பட்ட சொற்களின் தரங்கள், மற்றும் தனது போதனைக்கு தேரந்தெடுத்த சொற்களிலுள்ள தெளிவான முரண்பாடே இதற்கு காரணம்.

அதாவது, ஒவ்வொருவரது மொழி நடையும் வித்தியாசமானது. சிலர் ரத்தினச்சுருக்கமாகவும், சில பந்தி பந்தியாகவும் எழுதுவர். ஆனால் பவுலின் கிரேக்க மொழி நடையானது முதல் ரகம். கிரேக்கத்தில் குறுகிய சொற்களையே பயன்படுத்துவார். கனகச்சிதமான வசனங்களை பயன்படுத்துவார். ஆனால் எபேசியரில் (Ephesians) பவுலின் நடைக்கு மாற்றமாக மிக நீண்ட வசனங்களைக் கொண்டதாக காணப்படுகிறது.

இவ்வாறு நீண்ட வசனங்களை பயன்படுத்தவது கிரேக்க மொழியில் உள்ளதுதான். ஆனாலும், பவுலின் மொழிநடை அவ்வாறானதல்ல என்கிறார். இந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் பைபிளில் எபேசியருக்கு வழங்கிய ஆசிரியர் உரை அமைந்துள்ளது.

முதலாம் கொரிந்தியரில் பவுல்,பெண்கள் அனைவரும் தேவாலயங்களில “வாய் மூடிஅமைதியாக இருக்க வேண்டும், கேள்விகள் கேட்கக்கூடாது. அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் வீட்டில் சென்று தன் கணவனை தான் கேட்க வேண்டும்” என்கின்ற 14ம்அதிகாரத்தின் 34 மற்றும்35 வசனங்களை எஹ்ர்மன் மேற்கோள் காட்டுகிறார்.

மேலும், இதேமுதலாம்கொரிந்தியரில்11ம்அதிகாரத்தின் 5,6 மற்றும்13ஆவதுவசனங்களில் பவுல்,“பெண்கள் திருச்சபைகளுக்கு வந்து இறைவேண்டலில் ஈடுபடும் போது தலையை மறைக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

பவுல், 11ம்அதிகாரத்தில்பேச அனுமதித்து விட்டு 14ம் அதிகாரத்தில் பேசக்கூடாது என்று எப்படிசொல்வார்? என்று எஹ்ர்மன்கேட்கிறார். இதிலிருந்து இதற்கும் பவுலுக்கும் சம்மந்தமில்லை என்று தெரிகிறது.

ஏன்பொய்யானசெய்தியைபுனைந்தார்கள்?

பைபிளில் பொய்யான செய்திகள் புனயபட்டதற்க்கு முக்கிய காரணம் முற்கால கிறிஸ்த்துவ தேவாலயங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான் .
கிறிஸ்த்துவதேவாலயங்கள் பெண்களை நடத்தும் விதம், தலைமைத்துவம் மற்றும் எஜமானர்களுக்கும், அடிமைகளுக்கும் இடையேயான உறவு முறைகள் போன்ற விஷயங்களில் முரண்பட்டு சிதறி கிடந்தனர், என்கிறார் எஹ்ர்மன்.
தாம் எதை நம்ப வேண்டும் என்பதை பற்றி, ஒவ்வொருகிறிஸ்த்துவ பிரிவைச் சார்ந்தவருக்கு மத்தியில் பயங்கரமான கருத்து வேறுபாடுகள் நிலவின. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் வாதங்களை நிலை நிறுத்த வேதத்தின் துணையை நாடினர் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒருவர் எந்த பிரிவினரையும் சாராதவராக இருப்பின், அவர் தன்னுடைய பெயரை கொண்டு எந்த ஒன்றையும் எழுதாமல் பேதுரு (பீட்டர்) அல்லது யோவான் (ஜான்)என்கின்ற பெயர்களில் தங்கள் கருத்துகளை எழுதி வெளியிட்டனர்.

ஆக இந்த ஆரம்ப முதல் நான்கு நூற்றாண்டுகளில் தான் பேதுரு, யோவான் என்கின்ற பெயர்களில் பல்வேறு நபர்கள் தங்களை ஏசுவிற்கு மிகவும் நெருங்கியவர்களாக காட்டி கொண்டு தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பேதுரு, யோவான்என்கின்ற பெயர்களை பயன்படுத்தி போலியாக நூற்றுக்கணக்கான செய்திகளை இட்டுகட்டினர் என்று மதிப்பிட்டு எஹ்ர்மன் கூறுகிறார்.

இதனை வித்தரிங்டன் அவர்களும் மறுக்க முடியாத காரனத்தால், முற்கால கிறிஸ்த்துவ பிரிவினர்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் பொய்யான செய்திகளும், கட்டுகதைகளும் மிதந்து கொண்டிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார் !

அதே சமயம், பேதுரு (பீட்டர்) என்பவர் மீனவர் என்கின்ற காரனத்தால் அவர் எழுத படிக்க தெரியாதவர் என்று கூறுவது சரி இல்லை என மறுக்கிறார். ஏனெனில் மீனவர்களும் கூட வியாபாரத்தில் ஈடுபடும் பொழுது கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்களை செய்ய எழுத்தை கையாளுகின்றனர் என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் வித்தரிங்டன்.

ஊடக பரபரப்பை மக்கள் விரும்புவதால், எர்ஹமனின் ஆக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்று வித்தரிங்டன்கூறுகிறார்.

விவிலியத்தை பற்றிய ஞானமே இல்லாத இயேசுவை தேடக்கூடிய கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். எந்த விதமான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்து சொல்லலாம்.ஏனெனில் “போர்ஜெட்(Forged)” போன்ற புத்தகங்களை ஆய்வு செய்யும் மக்கள் மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ ஒரு புதிய கருத்துக்கு செல்லவாய்ப்பே இல்லை என்கிறார் வித்தரிங்டன்.

ஆனால் எஹ்ர்மனின்கோணமோ இதற்கு மாற்றமானது.

“போர்ஜெட்(Forged)” என்கின்ற புத்தகத்தின் மூலம் பல மக்கள் உண்மையை கண்டு கொள்வர்.நானும் கூட இந்த உண்மைகளை முதலில் ஒப்பு கொள்ள மறுத்தேன். ஆனால் இப்போது இல்லை” என்று முன்னால் கிறிஸ்த்துவ அடிப்படைவாதியான எஹ்ர்மன் கூறுகிறார். தற்போது அவர் கடவுளை என்றுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்கின்ற கொள்கைக்கு மாறி விட்டார் !

பைபிளின் புதிய ஏற்பாடு கடவுளின் கரம் கொண்டு எழுதப் பட்டதல்ல, மாறாக அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் மனித கரங்களின் அச்சு தான் பதிந்துள்ளது !!

“நான் இதை மக்கள் தூக்கி வீச வேண்டும் என்றோ அல்லது இது பயனுள்ள இறையியல் என்றோ சொல்லவில்லை! மாறாக இதில் பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது”. இதிலிருந்தே பைபிள் என்பது ஒரு சராசரி மனிதனால் எழுதப் பெரும் புத்தகத்தின் அந்தஸ்தை தான் பிடிக்கும்!!! பைபிள் என்பது இறைவனிடமிருந்து பெற்ற புத்தகம் இல்லை.

ஏனெனில் பைபிளில் பல்வேறு ஆசிரியர்கள் தங்களை யார் என்றே காட்டிகொள்ளாமல் பொய்யான பெயர்கள் கொண்டு எழுதியதே இதற்க்கு போதுமான சான்று என்று கூறி முடிக்கிறார் எஹ்ர்மன் !

பைபிளில் மனிதக்கரங்கள் மலிந்து காணப்படுகின்றன. அது இறைவேதமே இல்லை! என்று நாம் பல வருடங்களாக சொல்லி வருகிறோம். அதை கிறிஸ்த் வர்களுடனான நேரடி விவாதத்திலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.

ஆனாலும், அதை பல கிறிஸ்த்தவ சகோதரர்கள் கிறிஸ்த்தவத்தின் மீது இருக்கும் காழப்புணர்வினால்தான் இவ்வாறு நாம் பேசி வருகிறோம் என்று நம்மை விமர்சனம் செய்கின்றனர்.

அது உண்மையல்ல! நாம் மட்டுமல்ல, இந்த பைபிளை காய்தல் உவத்தலின்றி யார் எக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அது மனிதக்கரங்கள் விளையாடிய ஒரு புத்தகம்தான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக இந்த கட்டுரை விளக்குவதை மறுக்க முடியாது!!!

நன்றி
tntj,net


Sunday, 30 December 2012

இஸ்லாத்தை நோக்கி ....இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் :



{{{{{ இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காமல் மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களில் சிலருக்கு..
மாற்று மதத்தைச் சார்ந்த ஒருவர் குர்ஆனை முறையாக படித்ததின் விளைவாக அறிவுரை சொல்வதை கேளீர் !!!}}}}}}}


இஸ்லாத்தை நோக்கி ....இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் :

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார்.

இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது:

குர்ஆனை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது.

இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரின் மைத்துனி லோரன் பூத் 2010ம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே!!!· ·

ல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.............!! 

இஸ்லாத்தை நோக்கி திரும்பியது டோனி பிளேரின் பார்வை.............!!


மேலும் குர்ஆனையும் புரட்ட தொடங்கிவிட்டார் டோனிபிளேர்................!





இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இஸ்லாத்தை நோக்கி தமது பார்வையை

திருப்பியுள்ளார்,

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா சபை ஐரோப்பிய தூதராகவும்

செயல்பட்டு வருகிறார்,

அடிப்படையில் கிறித்தவரான இவர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் இஸ்லாத்தை நோக்கி அவர் தனது கவனத்தை திருப்பியுள்ளார், தற்போது

அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார்,

இது குறித்து டோனி பிளேர் கூறியதாவது :-

குர்ஆன் படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன், சர்வதேச அளவில் செயல்பட

நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும், அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன்,

 உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குர்ஆனின் போதனைகள் உதவுகிறது,

இது ஒரு சீர்திருத்த புத்தகம், இதில் எல்லா விஷயங்களும் உள்ளன, அறிவியலை போற்றி,

 மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது என்றும் டோனி பிளேர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரின் மைத்துனி லோரன் பூத் 2010 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியது

அனைவரும் அறிந்ததே....

இந்நிலையில் இவரின் கவனமும் இஸ்லாத்தை நோக்கி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

அல்ஹம்துலில்லாஹ்...............!!
 —