Saturday, 24 March 2018

#உஸைர்_நபியும்… #உயிர்_பெற்ற_கழுதையும்…

“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள் தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன்.

உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னா பின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அழிந்து போன இந்த ஊரை அல்லாஹ் எப்படித்தான் உயிர்ப்பிப்பானோ என்று எண்ணினார். அல்லாஹ் அவருக்கு தனது ஆற்றலை நேரடியாகக் காட்ட விரும்பினான்.

அல்லாஹ் அவரை நூறு வருடங்கள் மரணிக்கச் செய்தான். பின்னர் அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான். அவர் நூறு வருடங்கள் மரணித்த நிலையில் இருந்தது அவருக்குத் தெரியாது. தூங்கி விழிப்பது போல் அவர் உணர்ந்தார்.

அவர் ஒரு மரத்தடியில் உறங்கும் நிலையில்தான் மரணித்தார். அவரது கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவரது உணவும் பானமும் கூட அந்த மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

நூறு வருடங்கள் மரணித்து உயிர் பெற்ற அவரிடம், “நீ எவ்வளவு காலம் இந்த இடத்தில் தங்கி இருந்தாய்?” என்று கேட்டான். அவர் நான் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதிகள் கழித்திருப்பேன் என்றார். அதற்கு அல்லாஹ்,

“இல்லை, நீ நூறு வருடங்கள் தங்கி இருந்தாய்.” இதோ உன் உணவையும் பானத்தையும் பார்! அது இன்னும் கெட்டுப் போகவில்லை என்றான். அவர் கொண்டு வந்த உணவு நூறு வருடங்கள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருந்தது. இது அதிசயம்தானே!

இதோ உன் கழுதையைப் பார் என்றான். அவரது கழுதை இறந்து கிடந்தது. அதன் எலும்புகள்தான் எஞ்சியிருந்தது. இதோ பார் அந்த எலும்பில் எப்படி நாம் சதையை சேர்க்கின்றோம் என்றான். இறந்து அழிந்து எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த கழுதையின் எலும்புகள் இணைந்தன. அதற்கு சதையும் தோலும் உருவானது. அது உயிர் பெற்றது. இறந்த கழுதைக்கு அல்லாஹ் உயிர் கொடுப்பதைக் கண்ணால் கண்ட அவர் அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன் என்று எனக்குத் தெரியும் என்று தனது ஈமானின் உறுதியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் திருக்குர்ஆனில் சூறா அல் பகரா 02 ஆம் அத்தியாயம் 259 ஆம் வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

أَوْ كَالَّذِي مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْيِي هَـٰذِهِ اللَّـهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ اللَّـهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَانظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِّلنَّاسِ ۖ وَانظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللَّـهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் – (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார். ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார். (அல் பகரா: 259)

நாமும் மரணித்த பின் அல்லாஹ் எங்களை உயிர் கொடுத்து எழுப்புவான்.


  • அதன் பின் எமது நல்லறங்களுக்குப் பரிசும் தவறுகளுக்குத் தண்டனையும் வழங்குவான். இதை மனதில் கொண்டு நாம் இந்த உலகில் வாழ வேண்டும். நம்மை படைத்த அந்த அல்லாஹ்வுக்கு நாம் மரணித்த பின்னர் மீண்டும் நம்மை உயிர் கொடுத்து எழுப்புவது இலகுவானதுதானே!

Wednesday, 21 March 2018

உலகம் அழியும் #காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் #யஃஜூஜ் #மஃஜூஜ் ஆவர்.
உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக #நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தினர் நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அவர்களால் வரவும் முடியாது.
அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.
#யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள்.
 உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள் என்று 21:96 வசனம் கூறுகிறது.

    இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் #Flores என்ற ஒரு தீவு உள்ளது.
இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.

    இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் சிறியதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை
(Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பண்டாரம்.

    இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் சில ஆண்டு முன்பு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகை முடிவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு #எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.

    இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.

    முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் அல்லது பாதாள நகரத்தில் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்களை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) ஏவாள் (ஹவ்வா )அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ

இவர்கள் நூஹ்(அலை) நோவா அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.

    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர்.

ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573

     “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.

 அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ

    கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயணம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம்

    இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்”

    துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில்  இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்களால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள்.

மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் குர்ஆன் ஹதீஸ் மூலம் அறியும்   யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில்   வாழ்ந்து வரலாம். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 20 March 2018

மூன்று நாட்கள் பட்டினி இருந்த சமயத்தில் நடந்தது என்ன?


                                                                      ஒரு சமயம் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவ ர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.
குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.
மனைவி கொடுத்த துணியை கடைத் தெருவுக்கு கொண்டு போய் ஆறு திர்ஹம்  களுக்கு விற்றார்கள். ஆனால் அந்த ஆறு திர்ஹம்களையும் வாங்கி வரும் பொழுது சில ஏழைகள் ஹஜ்ரத் அலியிடம் ஏதாவது தாருங்கள் என்று கேட்ட போது அப்படியே தர்மம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு மனிதர் ஒரு ஒட்டகத்தை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்தவுடன் அபுல் ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்டார்கள்.
இந்த ஒட்டகத்தை வாங்க என்னிடம் பணம்இல்லையே’ என்று ஹஜ்ரத் அலி (ரலி) சொன்னபோது பரவாயில்லை. இதனை தவணை முறையில் உமக்கு விற்பனை செய்கிறேன். பணத்தைப் பிறகு தரலாம். அது பற்றி கவலை இல்லை என்றார்.
உடனே நூறு திர்ஹம்கள் விலை பேசி அந்த ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள். மற்றொரு அரபி அங்கு வந்து அபுல் ஹஸன் அவர்களே இந்த ஒட்டகத்தை விற்பனை செய்கின்றீர்களா? என்று வினவினார்.
ஆச்சரியப்பட்ட அலி (ரலி) அவர்கள் இதை நான் நூறு திர்ஹம்களுக்கு வாங்கினேன். நீர் எவ்வளவு தருவாய்? என்று கேட்டார்கள். அப்படியா, நான் இந்த ஒட்டகத்தை 160 திர்ஹம்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். சரியென சம்மதித்து ஒட்டகத்தை ஒப்படைத்து 160 திர்ஹம்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
சிறிது தூரம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது முதலில் ஒட்டகத்தை தவணை முறையில் கொடுத்தவர் அங்கு வந்தார். ‘அபுல் ஹஸன் அவர்களே! ஒட்டகத்தை விற்பனை செய்து வீட்டீரா? என்று வினவினார்.
ஆம் என அலி (ரலி) அவர்கள் கூறியதும் ‘அப்படியானால் வாக்குப்படி எனக்கு சேர வேண்டிய நூறு திர்ஹம்களைக் கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டார்.உடனே ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் நூறு திர்ஹம்களை கொடுத்து விட்டு மீதி 60 திர்ஹம்களை எடுத்துக் கொண்டு போய் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள்.
ஆச்சரியப்பட்ட பாத்திமா (ரலி) அவர்கள் நான் கொடுத்த துணிக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைக்கும்? இவ்வளவு பணம் எப்படி உங்களுக்குக் கிடைத்தது? என்று வினவினார்கள்.
உங்கள் துணியை ஆறு திர்ஹம்களுக்குத் தான் அதை அல்லாஹ்வுக்காக வியாபாரம் செய்தேன். அவன் ஒன்றுக்குப் பத்து இலாபமாகப் பெருக்கி 60 திர்ஹம்களை நமக்குத் தந்தான். என்று கூறி நடந்த நிகழ்ச்சியை சொல்லிக் காட்டினார்கள். பாத்திமா (ரலி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
உடனே அலி (ரலி) அவர்கள் அருமை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘அலியே உம்மிடம் ஒட்டகத்தை விற்றது யார் தெரியுமா? அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) ஆவார்கள்.
உம்மிடமிருந்து ஒட்டகத்தை வாங்கியது யார் தெரியுமா? மீக்காயீல் (அலை) ஆவார்கள். இன்னும் கேட்டுக்கொள் அந்த ஒட்டகம்தான் கியாமத் நாளில் சொர்க்கத்தில் பாத்திமா (ரலி) அவர்களின் வாகனமாகும்’ எனக் கூறிவிட்டு அலியே! எவருக்கும் கொடுக்கப்படாத மூன்று சிறப்புகளை அல்லாஹ் உமக்கு வழங்கி உள்ளான்.
1. உம்முடைய மனைவி சுவனப் பெண்களின் தலைவி.
2. உம்முடைய இரண்டு மக்கள் ஹஸன், ஹுஸைன் (ரலி) சுவனத்து வாலிபர்களுக்கு தலைவர்கள்
3. உம்முடைய மாமனார் ரசூல் மார்களுக்கெல்லாம் தலைவர். ஆகையால் உமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பாக்கியங்களுக்கு அல்லாஹ்வுக்கு நன்றியுடையவராக நீர் இருந்து வருவீராக!மொழிந்தார்கள்.

திருக்குர்ஆன் ஓதும் போட்டியில் வெற்றியீட்டிய இந்து மத மாணவி

   
                                                              குர்ஆன் ஓதும் போட்டியில் வெற்றியீட்டிய இந்து மத மாணவி
---------------------------------------------------------------
ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. .
அந்த பள்ளியில் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. அதில் தானும் கலந்து கொள்வதாக ஆசிரியைகளிடம் சொன்னாள் ஸ்வர்ண லஹரி. மகிழ்ந்த ஆசிரியைகள் இந்த மாணவிக்கு குர்ஆனை ஓத பயிற்சி கொடுத்தனர்.
ஆச்சரியமாக 200 மாணவிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் பலரையும் பின்னுக்கு தள்ளி விட்டு பரிசை தட்டிச் சென்றார் ஸ்வர்ண லஹரி. இவர் குர்ஆனை ஓதும் அழகைப் பார்த்து முஸ்லிம்களே ஆச்சரியப்பட்டனர்.
 .பரிசு வென்ற ஸ்வர்ண லஹரி கூறுகிறார் 'நான் கோவிலுக்கும் செல்கிறேன். குர்ஆனை தொடர்ந்து ஓதி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதன் பொருள் உணர்ந்து படிக்க தொடங்கி விடுவேன். என்னை இந்த அளவு ஊக்கப்படுத்திய எனது தந்தைக்கும் எனது ஆசிரியைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்..
ஸ்வர்ண லஹரியின் தந்தை துர்கா பிரசாத் கூறுகிறார்:
'பலரும் எனது மகளை பாராட்டி மகிழும் போதுதான் எனது மகள் எவ்வளவு அழகிய பணியை செய்துள்ளாள் என்பது விளங்குகிறது. அவளது திறமையைக் கண்டு மொத்த ஆடிட்டோரியமும் நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். .
இதற்கு முன்னால் நான் குர்ஆனைப் பார்த்ததில்லை. எனது மகள் எனக்கு குர்ஆனை அறிமுகப்படுத்தினாள். அவளது ஆர்வத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினேன். .
எனது நம்பிக்கையானது தனிப்பட்ட ஒன்று. உலக முடிவு நாளில் அனைத்து மதங்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்' என்கிறார். .
மகளும் தந்தையும் அனைத்து செல்வங்களும் பெற்று சிரமமின்றி நேர் வழியில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்

Saturday, 17 March 2018





இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த பதிவுகள் மீளாய்வு செய்யப் படல் வேண்டும் *********************************************
இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்.

போர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது இலங்கையில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த அரேபிய வழித் தோன்றல்களை “மூர்ஸ்” என அழைத்தார்கள், அதற்கான பிரதான காரணம் ஐரோப்பாவில் கடல் வழி வர்தகத்தினூடாகவும் மேற்கு நோக்கிய இஸ்லாமிய பரம்பலினூடாகவும் குடிபெயர்ந்த அரேபிய மற்றும் ஆபிரிக்க குடிகள் வரலாற்றில் “மூர்ஸ்” என அழைக்கப்பட்டமையாகும்.

MOORS$போர்த்துக்கல் எனும் நாடு சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.பி 711-1249) இஸ்லாத்தைப் பின்பற்றிய ‘மூர்ஸ்’ என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஒரு இனத்தின் ஆளுகைக்குட்பட்டு இருந்ததும், ‘இலங்கைச் சோனகர்’ போர்த்துக்கீசரால் ‘மூர்ஸ்’ என அழைக்கப்பட்டு வந்தமையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.

ஆனால், போர்த்துக்கேயரின் இலங்கை வருகைக்கு (1505) முன்னர் இலங்கையில் “சுவனர்கள்” அல்லது “சோனகர்கள்” என அழைக்கப்பட்ட பூர்வீகக் குடிகள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இலங்கையில் ஏற்கனவே வாழ்ந்த தமிழை தாய் மொழியாக கொண்டிருந்த சுவனர்கள் அல்லது சோனகர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அரேபிய வழித் தோன்றல்கள் காரணமாக இருந்திருக்கலாம்.

தென்னிந்திய கரையோரம் தழுவிய கடல் வழி வர்த்தகத்தில் தமிழர்களினதும் கேரளத்து மலையாளிகளினதும் செல்வாக்கு இருந்தமையால் அவர்களூடாக இஸ்லாமும், அறபுத் தமிழும் இலங்கை சோனகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகளே அதிகம் காணப் படுகின்றன.

மாறாக வர்த்தக நோக்கத்திற்காக இலங்கை வந்த அறபிகள் விஜயனின் வருகைக்குப் பின்னர் இலங்கை வந்த ஆரிய சிங்கள வனிதையரை திருமணம் செய்து அறபுத் தந்தை மாருக்கும் சிங்கள தாய்மாருக்கும் பிறந்த ஒரு வம்சாவழியினராக இலங்கை முஸ்லிம்களை இனம் காண்பது வரலாற்றுத் தவறாகும்.

பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமே இருருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Moors 1அதுமாத்திரமன்றி, இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, மகாவம்சம் தருகின்ற தகவலின்படி குறைந்ததது 2300 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் சோனகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகின்றது.

இதனால்தான் முதலாவது இலங்கைப் பிரதமரான டி.எஸ் சேனாநாயக்க போன்ற தலைவர்களே நேர்மையாக, இலங்கைத்திரு நாட்டில் சிங்கள இனம் வாழும் கால அளவிற்கு யோனக மக்களின் வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றிருக்கின்றார். (The Sunday Times Plus Magazine, 1 February 1998. 50 Years (Freedom) Anniversary Edition.)

குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-

அதே போன்று, கிரேக்க மாலுமி “ஓனோஸ் கிறிட்டோஸால்” என்பவரால் கி.மு 326ல் வரையப்பட்ட இலங்கை வரைபடத்தில் புத்தளம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் ‘சோனாள்களின் குடியேற்றம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்’ என்கின்ற தனது நூலில் பக் 5-8ல் குறிப்பிடுகின்றார்.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துக்குரிய இக்குறிப்பையும், தொலமியின் வரலாற்றுக்குறிப்பிலிருந்தும் பார்க்கும் போது இலங்கைச் சோனகர்களின் வரலாறு கிட்டத்தட்ட 2500க்கு மேற்பட்ட கால வரலாற்றை உடையது என்பதையும் சோனகர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அறேபியர்களதும் பின்னர் இஸ்லாத்தின் வருகைக்கும் முன்பிருந்தே சோனகர்கள் இலங்கையில் பூர்வீகத்தை கொண்டிருந்தனர்.

இலங்கை சோனகர்களின் தாய் மொழி ஏன் தமிழ் மொழியாக இருந்திருக்கின்றது, அவர்கள் ஏன் அறபு மொழியையோ, அல்லது சிங்கள மொழியையோ தாய் மொழியாக கொண்டிருக்க வில்லை, ஏன் அவர்கள் மத்தியில் அறபுத் தமிழ் புழக்கத்தில் இருந்தது என்ற கேள்விகளிற்கும் வரலாற்று ஆய்வாளர்கள் விடை கண்டேயாக வேண்டும்.

பட்டுப்பாதை எனும் மேற்காசியாவிலிருந்து கிழக்காசியா (சீனா)  வரையிலான சர்வதேச கடல் வழி வணிப பாதையை மேற்கில்  அரபிகளும் கிழக்கில் தமிழர்களும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததனால் அறபு திராவிட  உறவு மேலோங்கியிருந்தது.

கேரளா மற்றும் தமிழ் நாட்டுடன் மாத்திரமன்றி இலங்கையில் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை  அறபிகள் கொண்டிருந்தனர், ஆரிய சிங்களவர்களின் வருகையோடு அவர்களோடும் அறபு வணிகர்கள் நல்லுறவை வளர்த்துக் கொண்டனர்.

ceylon moorsஅறபிகள் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவிலும் இலங்கயிலுமிருந்த திராவிடர்களோடு கொண்டிருந்த வர்த்தக உறவு நாளடைவில் பிராந்தியத்தில் இஸ்லாத்தின் பரவலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றது, அதனால் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கின்றார்கள்.

எமது தாய்மாரின் மொழி தமிழாகவும் இருந்ததோடு மாத்திரமல்லாது  எங்களுக்கு அறபுத் தமிழ் எனும் தனித்துவமான ஒரு மொழி வழக்கு கூட இருந்திருக்கின்றது.

வரலாற்றில் ஒல்லாந்தரின் ஆங்கிலேயரின் வருகையோடு எவ்வாறு சிங்கள  தமிழ்  கிறிஸ்தவர்கள் தோற்றம் பெற்றார்களோ அதேபோன்று சோனகர்கள் மற்றும் அறபு  வழித் தோன்றல்கள் மூலம்  இஸ்லாம் இலங்கையில் பரவியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் சகலரும் அறபு அல்லது அறபு  சிங்கள  பூர்வீகத்தை கொண்டவர்கள் என்ற வரலாற்று ஆய்வுகள் மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப் பட வேண்டும்.

Moor-Picசோனகர்கள் (சுவனர்கள் ) தமிழர்களா என்ற கேள்விகளோடு பல ஆய்வுகளும் அங்காங்கே தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் அவை முழுமையான நடுநிலமையான ஆய்வுகளாக இன்னும் வெளி வரவில்லை என்பதே உண்மையாகும்.

அதேபோன்றே இலங்கையில்  அறேபியர்களதும் ஆரியர்களதும் வருகைக்கு முன்னர் வாழ்ந்த சுதேசிகளான நாகர்களே பெரும்பாலும் அறபு மற்றும் தமிழ் கடல் வழி வர்த்தக சமூகத்தினருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் வரலாற்று தடயங்கள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் முஸ்லிம்களது பூர்வீகம் மிகவும் விரிவாக ஆழமாக பல்வேறு பரிமாணங்களில் ஆராயப் பாடல் வேண்டும் ,  பல்கலைக் கழக முஸ்லிம் சமூகத்தினையும் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்று பீடமும் இந்த துறையில் முனைப்பான ஆய்வு முயற்சிகளில் இறங்க வேண்டும்.

இலங்கை  சோனகர்:  சில வரலாற்றுக் குறிப்புக்கள்:

தமிழ்நாட்டிலுள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் சோனகர் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. சி.கந்தையாபிள்ளை குறிப்பிடுவது போன்று காயல்பட்டினமும், பொன்பரப்பி ஆற்றுப் படுக்கையும் இணைந்த நிலப்பகுதியே சோனகம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் உருவான இந்திய தமிழ் இலக்கியங்களிலும், வட இந்திய இலக்கியங்களிலும் சோனகர் என்னும் வார்த்தைப் பிரயோகம் இடம் பெற்றிருக்கின்றது.

பண்டுகாபய மன்னன் (கி.மு.377 – 307) அனுராதபுரத்தில் மேற்கு வாசலுக்கருகில் சோனகர்களுக்கு என்று ஒரு நிலப்பகுதியை ஒதுக்கிக் கொடுத்திருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகா அலக்சாந்தருடைய கட்டளைப்படி கிரேக்கத் தளபதி ஒனொஸ் கிறிட்டோஸ் (கி.மு.327) தயாரித்த பூகோளப் படத்தில் இலங்கை அரேபியரைக் குறிப்பிடுகையில் ‘சோனை'(sonai) என்னும் பெயரையும், அவர்கள் குடியிருந்த பிரதேசத்திற்கு (Sonai Potomas) என்ற பெயரையும் பிரயோகித்திருக்கிறார். (அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1992. பக்.20, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, கொழும்பு)

கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது புத்தளம் (முஸலிம்கள் வரலாறும் வாழ்வியலும். எம்.எஸ்.எம்.அனஸ் (2009) குமரன் புத்தன இல்லம், கொழும்பு.பக்.38)

KONICA MINOLTA DIGITAL CAMERA

எகிப்திய கணித வல்லுநர் க்ளோடியஸ் தொலமி (Claudius Ptolomy) கி.பி.140 ல் வரைந்த உலக வரைபடத்தில், இலங்கை இன்றிருப்பதை விட பதினான்கு மடங்கு பெரிதாக வரையப்பட்டு தப்ரபேன் (Taprobane) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.[8] பழைய கற்காலம் முழுவதும் இணைந்தே இருந்த இலங்கையும் இந்தியாவும் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிந்துள்ளன. இலங்கையில் முதல்முதலாகக் குடியேறிய மக்கள் யாராயினும் இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி வழியாக நடந்தே வந்துள்ளனர்.  (புத்தளம் முஸலிம்கள் வரலாறும் வாழ்வியலும். எம்.எஸ்.எம்.அனஸ் (2009) குமரன் புத்தன இல்லம், கொழும்பு.பக்.38)

கிளோடியஸ் தொலமி கி.பி. 150ல் இலங்கையை உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைந்தார். இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆவில் ஈடுபட்டிருந்த ஓனஸ் கிரிட்டஸ் என்பவரிடமிருந்து தொலமி பெற்ற தக வல்களும் புவியியல் ஆவுக் குறிப்புக்களுமே தொலமி இலங்கையையும் உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைவதற்கு உதவியாக அமைந்தது. இலங்கையின் வரலாறு பற்றிய ஐரோப்பியர்களின் தேசப் படங்களில் தொலமியின் வரைபடமே காலத்தால் முந்தியதும் மிகவும் தொன்மை யானதுமாகும்.

இலங்கையை தப்ரபேன் என்றழைக்கும் தொலமி இலங்கை யின் மிகப் பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை பாசில் பலூசியஸ் (பாரசீக நதி) என்றும் தெதுரு ஓயாவை சோனா பலூசியஸ் (அரேபிய நதி) என்றும் ஜின் கங்கையை அஸனாக் பலூலியஸ் (எதியோபிய நதி) என்றும் குறிப் பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோரங்களில் பாரசீக, அறாபிய, மற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சிதறலாகவும் வேறு சில சில இடங்களில் சேறிவாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார்.

The History of Commerce in Indian Ocean என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப் பகுதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம்பெற்றன” என்கிறார்.

“கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முற்றாக அவர்களின் (அரபிகளின்) கைகளிலேயே இருந்தது. கிறிஸ்தவ யுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதி களில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்.” (Thomas Arnold – Preaching of Islam)

அரேபியர்களின் கடல் கடந்த வணிகம் இந்தியத் துணைக் கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக் காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.

பழங்கால கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களும் இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் முதன் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்க ளுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் எனக் குறிப்பிடுகின்றது. பிலைனிங் (கி.பி.1) ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோ பிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் சேல்வாக்கினை உறுதி சேகின்றனர். கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் சேல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.

Moorsஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிகத்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென் கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும் அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்த கத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக் கண்டத் துடனான வர்த்தகத்தில் சேல்வாக்குச் சேலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

இக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் “அரேபியர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர், கள்ளிக்கோடு, கொல்லம், காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும் மலபாரின் ஏனைய துறைமுகங்களி லும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்ச” என்று குறிப்பிடுகின்றார்.

இந்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முன்னரே இலங்கை யில் அரேபியர் குடியேற்றங்கள் இருந்ததையும் அரேபியர் வியாபாரத்திற்கு செல்வாக்கு  பெற்றிருந்ததையும் காட்டுகின்றன.

Friday, 2 March 2018

குர்ஆனில் சினிமாவைப் பற்றி.?


ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று அப்துல் அலீம் சித்தீக்கி அவர்களைப் பேட்டி கண்டனர்.

அவர்களில் ஒரு மாணவர்,

*குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும் கூறப் பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால்*இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா?என்று கிண்டலாகக் கேட்டார்.

அப்போது சினிமா அறிமுகமகாத காலம். ஸித்தீக்கீ அவர்கள், சினிமா என்றால் என்ன என்றும்  சற்று விளக்மாகக்கூறுங்கள். பின்னர் நான் பதில் சொல்கின்றேன் என்றார்கள்.

அந்த மாணவர்,

“கற்பனைக் கதைகளை விலைக்கு வாங்கி அதில் கூத்தாடிகளை நடிக்க வைத்து, மக்களை சிரிக்கவைத்துப் பொழுது போக்குவது தான் சினிமா என்று விளக்கம் கூறினார்"

 உடனே மௌலானா அவர்கள் “ஆம்! இது பற்றி குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதே என்றார்கள். அம்மாணவர்களோ வியப்பு மேலீட்டால், "எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் என மீண்டும் வினாவைத் தொடர்ந்தார்கள்" அந்த மாணவர்கள்.

அதைக் கேட்ட மௌலானா சிறிதும் தயங்கா மல், குர்ஆனின் 31வது அத்தியாயத்தில் சூரா லுக்மானில் ஆறாவது வசனத்தில்

وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُواً أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ

(அல்குர்ஆன் : அத்தியாயம் -லுக்மான், வசனம்- 33)
*மனிதர்களில் சிலர் உள்ளனர்.அவர்கள் வீணான செய்திகளை பொய்யான கட்டுக் கதைகளை) விலைக்கு வாங்கி அறிவின்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுத்து அதனை பரிகாசமாக்கிக்கொள் கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு* (31:6)
என்ற திருமறை வசனத்தை ஓதிக்காண்பித் து கேள்வி கேட்டவரையே வாயடைக்கச் செய்தார்கள். உடனே அந்த மாணவர் அனைவரும் “1400 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவைப்பற்றியும் கூறப்பட்டி ருக்கிறதே” என்று அதிசயித்து இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றனர்.

*சினிமாவை சென்ற நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி மிகத்துல்லியமாகக் கூறப்பட்டிருக்கிறது என்றால் அது முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வேத வாக்காகத்தான் இருக்கமுடியும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்* ?

இதுவும் குர்ஆன் இறைவேதம் என்பதற்கும், அல்லாஹ் கூறும் வீணாணவர்கள் யார் என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.
இதனுடன் மற்றுமொரு பதிவையும் இணைக்கின்றேன்.

*சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள்தான் என்ன...?

⚠ *சகோதரிகளாகப் பார்க்க வேண்டிய நமது இளம் பெண்களை காதலிகளாக பார்க்க வைத்ததும், சகோதரர்களாகப்பார்க்க வேண்டிய நமது இளைஞர்களை காதலனாகப்பார்க்க வைத்ததும்* இந்த சினிமாதான் ??

⚠ *பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ *திருட்டின் வகைகளை கற்றுக்கொடுத்தது* இந்த சினிமா ??

⚠ நகைச்சுவை என்ற போர்வையில் *பொய்யை மனித பண்பாக மாற்றியது* இந்த சினிமா ??

⚠ *இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது* இந்த சினிமா ??

⚠ *வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ *காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது* இந்த சினிமா ??

⚠ *தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ Fashion என்ற பெயரில் *பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம், பண்பாடுகளை அழித்தது* இந்த சினிமா ??

⚠ *ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது* இந்த சினிமா ??

⚠ *உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது* இந்தசினிமா ??

⚠ *உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது* இந்த சினிமா ??

⚠ *திரையில் பெண்களை போகப் பொருளாக ஆக்கியது* இந்த சினிமா ??

⚠ *"அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே"* என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி *மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது* இந்த சினிமா ??

⚠ *வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது* இந்த சினிமா??

⚠ *ஒழுக்கக் கேட்டைத் தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை* என்பதுதான் நிதர்சனமான உண்மை??

⚠ *இன்னும் பல வன்செயல்களை மக்கள் மனதில் விதைத்தது* இந்த சினிமா ??

மேற்கூறிய அனைத்து பெருமைகளும் இந்த பாழாப்போன சினிமாவையே சாரும்...

மொத்தத்தில் சினிமா??
என்பது

👉 *ஒழுக்கச்சீர்கேட்டின் - "கையேடு"*
👉 *விபச்சாரத்தின் - "நுழைவாயில்"*
👉 *சமூக சீர்குலைவிற்கான - "ஆயுதம்"*

என் அன்பு சகோதர சகோதரிகளே நண்பர்களே இந்த சினிமாவில்
*1000 நல்ல காட்சிகள் இருந்தாலும் அது எமது வாழ்கைக்கு ஒரு துளியும் உதவாது என்பது தான் உண்மையானது* இப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.🤝😰​
​தற்காலத்து எமது முஸ்லிம்👨‍💼 ஆண்களும் 👩‍💼பெண்களும் அவர்களின் மார்க்கமும்​

🍄இன்று எமது சகோதர,சகோதரிகள் அதிகமாக விரும்பக் கூடிய ஒன்றுதான் ​சினிமா​ மற்றும் கவிதைப் புகைப்படங்கள்....📺📲
​ஹராமான ஒரு காரியத்தை அல்லாஹ் எம்மை பார்த்த வண்ணமாக உள்ளான் என்று பயம் இல்லாமல் வெளிப் படை யாகவே செய்கின்றார்கள். அதுதான் அவர்களின் whatsapp profile and whatsapp status...📲​

💃🏾ஒரு விபச்சாரி அதுவும் காசுக்காக தன் உடம்பை உலக மக்களுக்கு காண்பிக்கும் ஒரு கேவலமான ​சினிமா கூத்தாடியின்​ புகைப் படங்களையும் அவர்களின்  அசிங்கமான பாடல் காட்சிகளையும் ​கொஞ்சம் கூட வெட்கம், அருவருப்பு இன்றி உங்கள் whatsapp இலும்Facebookஇலும் பதிவிடுகிறீர்கள்.​

​🍄இதுதான் நமக்கு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாம் மார்க்கமா ? கூத்தாடிகளுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்...?📵⚠​

*🙅🏼ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்துவிட்டு  மானம் கெட்ட ஒரு விபச்சாரியின் புகைப்படத் தையோ அல்லது வீடியோவையோ பதிவிடுகிறீர்களே நீங்கள்தானா உத்தம நபியின் உம்மத்துகள்*..?

🍄நீங்கள் இன்று மரணித்தால் உங்களை ​மண்ணறையில்​ அடக்கிவிடுவார்கள் ஆனால் நீங்கள் பதிவிட்ட அசிங்கமான, ஹராமான  பாடல்கள், புகைப்படங்கள் உங்களின்  ​whatapp status​ ஆக 24 மணி நேரமும் இருக்கப் போகிறது. இதுமட்டுமா வருடாந்த நினைவுவாகக் கூட வருடா வருடம் அப்போதெல்லாம் இப்பதிவுகள் வலம் வந்து கொண்டே இருக்கும் இதை யார் யாரெல்லாம் பார்க்கிறார்களோ பகிர்கிறார்களோ ​அவர்களின் பாவங்களும் உங்கள் பாவங்களுடன் சேர்ந்து மண்ணறைக்கு வரும்​ இப்போது உங்களுக்கு புரிகிறதா? இதன் விளைவுகள்...

​🤝நல்லவற்றை பதிவிடுங்கள் மற்றவர்களுக்கு அது பயன் படும் ( *இவ்வுலகம் மறுமையின் விளை நிலம்* ) ஆனால் இப்படி விபச்சாரிகளின் பாடல்களை யோ அல்லது புகைப்படங்க ளையோ பதிவிட்டு மறுமை யில் உங்களின் தங்கும் இடத்தை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள்....😱😰​

🍄நாளை மறுமையில் அந்தக் கூத்தாடிகளுடன் தான் உங்களையும் எழுப்பப்படும் என்ற ​நபி (ஸல்) அவர்களின்​ வார்த்தை பொய் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.....

​🔥அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்....🙇🏼😭​

​💥அவனது பிடி மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அதில் இருந்து அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக...ஆமீன்​

*​இப்போதே உங்களின் profile and status என்பவற்றை மாற்றி விடுங்கள்!!* *அல்லாஹ்வின் கோபப் பார்வையில் இருந்து தப்பி விடுங்கள்!!*

இது ​நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கான நவீன காலத்திற்கேற்ற பதிவாக அமைய வேண்டுமென்பதே எனது அவாவும் நோக்கமும் ஆகும்.
*யாரையும் காயப்படுத்துவதற்காகவும் அல்ல*
*கருணைக்கடலான எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மன்னித்து அருள்புரிவானாக!* *ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்*

Saturday, 20 January 2018

இந்து வேதங்களைக் கற்றறிந்த,பிராமண வகுப்பைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரான ராவ் ஏன் முஸ்லிம் ஆனார்? இஸ்லாத்தை ஏற்றது குறித்து ராவ் கூறியதாவது: நான் நடுத்தர வகுப்பு வைதீக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை டெக்ஸ்டைல் என்ஜினியர். தாய் தனியார் பள்ளி ஆசிரியை. பள்ளிக் கல்வியுடன், எனது தாய் மாமாவிடம் வைதீகக் கல்வியையும் கற்றேன். எனது குடும்பத்தார்கள் எல்லோரும் வைதீகக் கல்வி கற்றவர்களே. இதனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு சிறு வயதிலேயே என் உள்ளத்தில் ஆணி அடித்தது போன்று படிந்திருந்தது. பருவ வயதை அடைந்ததும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தேன். முஸ்லிம்கள் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது. பள்ளிவாசல்களில் கூறப்படும் பாங்கொலி எனக்கு அதிக எரிச்சலைத் தந்தது . மசூதிக்கு அருகில் ஏதேனும் விழா நடந்தால், வாய்ப்பை பயன்படுத்தி பாங்கு சப்தம் கேட்காதவாறு மியூசிக் சப்தத்தை அதிகமாக்குவேன். இந்நிலையில் பள்ளி விடுமுறை காலம் வந்தது. இரண்டு மாதம் விடுமுறை. எனது தாயாரும், சகோதரியும் அருகில் இருந்த முஸ்லிம் வணிக நிறுவனத்தில் கோடைக் கால வேலையில் சேர்ந்தனர். என்னையும் சேருமாறு கட்டாயப்படுத்தினர். ஏற்கனவே என்னுள் ஊறிப் போயிருந்த வெறுப்பால் முஸ்லிம் வணிக நிறுவனத்தில் வேலைக்குச் சேர துளியும் எனக்கு விருப்பமில்லை. எனது தாயார் என்னைத் திட்டினார். என்னால் குடும்பத்திற்கு எந்த பலனும் இல்லை என்றார். இதனால் வேதனையடைந்த நான் வேறு வழியின்றி அந்த முஸ்லிம் நிறுவனத்தில் சேர்ந்தேன். அந்நிறுவனத்தின் முஸ்லிம் நிறுவனர், அங்கு வேலை செய்த பணியாளர்கள் அனைவரையும் நன்கு கவர்ந்திருந்தார். எனது தாயாருக்கும், சகோதரிக்கும் கூட அவரைப் பிடித்துப் போயிற்று. எனினும் நான் அவரை வெறுக்கவே செய்தேன். யாராவது அவரை புகழ்ந்து ஏதேனும் கூறினால் அதனைச் செவி தாழ்த்திக் கேட்கமாட்டேன். இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர். இது எனக்கு இன்னும் வெறுப்பையும், அவர் மீதான கோபத்தையும் அதிகப்படுத்தியது. அத்துடன் இன்னொன்றையும் சவாலாக எடுத்துக் கொண்டேன். அது, நான் பின்பற்றும் இந்து மதம்தான் உண்மை மதம், என்பதை அந்த முஸ்லிம் முதலாளிக்கு உணர்த்த வேண்டும் என்பதே,இதற்காக உழைத்தேன் . எனது அறிவை அதிகப்படுத்திட நிறைய படித்தேன். எனது இம் முயற்சியில் இஸ்லாம் குறித்தும் தெரிந்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதானே அவரிடம் இஸ்லாத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி, இந்து மதத்தை உயர்த்திப் பேச முடியும். அதற்காக, அப்துல்லாஹ் யூசுப் அலி என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்றினை வாங்கிப் படித்தேன். திருக்குர்ஆனைப் படிக்க படிக்க இந்து மதத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்தன. ஏதோ தவறான கொள்கையில் இருக்கிறேன் என எனக்குப் புரிந்தது. கடைசியில் “நான் பின்பற்றும் மதம்” வெறும் கதை, கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற முடிவுக்கு வந்தேன். பள்ளிக் கல்வியைக் கூட முடித்திராத என் முன் இப்போது பல கேள்விகள் நின்றன. இப்போது நான் என்ன செய்வது ? எங்கு செல்வது ? இந்த உண்மை எனக்கு ஏன் இவ்வளவு நாள் தெரியாமல் போனது ?என் பொறுப்பு என்ன? இவ்வாறு பல கேள்விகள் சிந்தனையில் ஓடின. மாணவப் பருவத்திலேயே இதற்கான விடைகளைத் தேட முடிவெடுத்தேன். எனது குடும்பத்தார்களிடமும், எனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டேன். பெயிண்ட் மூலம் வரைகின்றோம். அவனை பார்த்தவர் யார்? குடும்பத்தினர்கள் என்னிடம் சொன்னார்கள். இறைவனை யாரும் பார்க்கவில்லை. கற்பனை செய்துதான் வரையப்படுகிறது என்று. உடனே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. திருக்குர்ஆனில் நான் படித்திருக்கிறேன். “இறைவனை யாரும் காண இயலாது.” (திருக்குர்ஆன் 6 :103. மிச்சம் மீதி இருந்த நம்பிக்கையும் இப்போது அறுந்து போனது. விநாயகர், சாமுண்டீஸ்வரி , ராமன், சீதா என அனைத்து உருவங்களும் வெறும் கற்பனைகள் என எனக்குப் புரிந்தது. இத்தனை நாளும் இக் கற்பனைகளையா இறைவன் என எண்ணி ஏமாந்தேன்.? என்னையே நான் நொந்து கொண்டேன். பின்பு ஒரு முறை எனது குடும்பத்தாரிடம் கேட்டேன். நமது வேதங்கள் சிலை வழிபாட்டை ஆதரிக்கவில்லை. நாம் ஏன் சிலை வைத்து வணங்க வேண்டும் ? உடனே எனது தாயார் என்னைத் திட்டினார். பின்பு சொன்னார். நமது முன்னோர்கள் அவ்வாறே செய்தனர். நாமும் அதனைச் செய்கிறோம் ஏன்றார். மறுநாள் திருக்குர்ஆனில் யதார்த்தமாக இரண்டாவது அத்தியாயமான பகராவில் 134 மற்றும் 170 ஆம் வசனங்கள் எனது கண்களில் பளிச்சிட்டன. அவ்விரு வசனங்களும் பின்வருமாறு, மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? ((திருக்குர்ஆன் 2:170) 2:134. அந்த உம்மத்து (சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்றிரவு எதைப் பற்றி எனது தாயாரிடம் கேட்டேனோ, அதற்கான பதில்கள் இப்போது நான் படித்த மேற்கண்ட வசனங்களில் இருந்தன. நான் திகைத்துப் போனேன். அவ்வசனங்கள் எனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன. சிலைகளை வணங்குவதை நிறுத்தினேன். பல தெய்வ வணக்கத்தைப் (polytheism) பாவமாக பார்க்கத் தொடங்கினேன். இஸ்லாம் குறித்து இன்னும் தெரிந்து கொள்ள முடிவு செய்து அல்பகரா அத்தியாயத்தை படித்து முடித்தேன். அதில் சிலர் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவர்கள் உலக இலாப நோக்கத்திற்காக இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களை முனாபிக்குகள் ( நயவஞ்சகர்கள்- Hypocrities) என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டது.மேலும் திருக்குர்ஆனின் இன்னொரு வசனத்தையும் படித்தேன். அவ்வசனம் பின்வருமாறு, திருக்குர்ஆன்:5:3. “... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தையே (நன் மார்க்கமாகப் ) பொருந்திக்கொண்டேன்... இப்போது எனக்கு புரிந்தது. எனது மனதில் உள்ள எல்லா சந்தேகங்களுக்கும் திருக்குர்ஆனில் விடை உள்ளது. தொடர்ந்து திருக்குர்ஆனைப் படித்தேன். மனதளவில் இஸ்லாத்தை எனது வாழ்க்கை நெறியாக ஏற்றேன். அப்போது எனது படிப்பைக் கூட நான் நிறைவு செய்திருக்கவில்லை. எனவே B.E படிப்பை நிறைவு செய்ய விரும்பினேன். இதற்கிடையில் இஸ்லாம் குறித்து எனக்கு தெரிந்தவற்றை, எனது குடும்பத்தார்களிடம் எடுத்துச் சொல்லவே செய்தேன். அல்லாஹ்வின் மகத்தான அருளால் எனது சகோதரி இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றாள். படிப்பை முடித்த பின்பு நானும் என் சகோதரியும் குடும்பத்தை விட்டு வேலை தேடி தனியாகத் தங்கி இருந்தோம். கையில் பணமோ, வேலையோ இன்றி தவித்த நாட்களை அல்லாஹ்தான் கழியச் செய்தான். பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை அப்பொழுது நினைத்துப் பார்ப்பேன். திருக்குர்ஆன்: 29:2. “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?” எனக்கு நிறைய வாய்ப்புகள் வரவே செய்தன ஆனால் நேர்முகத் தேர்வில் பணி நேரங்களில் “ஐந்து நேர தொழுகை” தொழுதிட வாய்ப்புக் குறித்து கேட்பேன்.. “முடியாது” என கூறப்பட்டால் அப்பணியில் சேர்வதைத் தவிர்த்து விடுவேன். கடைசியில் படிப்பு சம்மந்தப்பட்ட வேலை கிடைக்காததால், B.E படிப்பை முடித்த நான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்தேன். சுமார் ஒரு வருடம் இவ்வாறே கழிந்தது. அல்லாஹ்வின் மகத்தான அருளால் நல்ல வேலை கிடைத்தது. முஹம்மது உமர் ராவ் எனும் அழகிய பெயரில் தற்போது வாழ்ந்து வருகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்.