Friday, 21 December 2012

மியான்மர்,இலங்கை,பௌத்த பயங்கரவாதங்கள் ஒரு கட்டுக்கதை அல்ல


புத்தர் போதித்தது அகிம்சையா? அல்லது நரவேட்டையா?

செவ்குன் கிராமவாசி 2001-இல், நடந்த சம்பவம் ஒன்றை பீதியுடன் நினைவு கூர்கிறார்:

“எங்கள் வீடுவாசல்களை, நிலபுலன்களை பிடுங்கிக் கொண்ட BKBA ராணுவத்தினர், கிராமத்துக்குள்ளேயே ஒரு முகாம் அமைத்தார்கள். மசூதி இடித்த இடத்தில் பெளத்த கோயிலைக் கட்டிக் கொண்டனர். எங்கள் முப்பாட்டன் காலத்துக்கும் முன்னிருந்து நாங்கள் உழுதுவந்த செழுமையான சமதள நிலத்து வயல்களை அபகரித்துக் கொண்டனர். எங்கள் கண்முன்னாலேயே அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் கரும்பை அறுத்துச் சென்றார்கள்!”

செவ்குன் கிராமம் நூறு முஸ்லிம்களின் இருப்பிடம். குடியிருப்புகளுக்கு எதிரே அமைந்திருந்தது அழகிய மசூதி – வழிபாட்டு ஸ்தலம்.

பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த BKBA பெளத்த பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளை இடிக்க ஆரம்பித்தார்கள். பள்ளிவாசலை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். மசூதி இருந்த இடத்தில் வழக்கம் போல பௌத்த மடத்தைக் கட்டினார்கள். முஸ்லிம்களின் குடியிருப்புகள் இருந்த இடத்தில் சாலையை அமைத்தார்கள்.

சொந்த நாட்டிலேயே அகதிகளான முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்கள். சொற்பமான சிலர் வேறு இடங்களில் குடியேறினார்கள். அதே கிராமத்தில் இருக்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சிலர்.

மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் வாழும் முஸ்லிம்களின் உண்மை நிலை இதுதான்.

இதில் குறிப்பாக பர்மாவின் கெரென் மாநிலம் பாஸிஸ பௌத்த தீவிரவாதிகள் மூட்டிவிட்ட இன துவேஷங்களால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

புத்தர் போதித்தது அகிம்சையா? அல்லது நரவேட்டையா? என்று திரும்பவும் பௌத்த வரலாறுகளை  மறு பரீசிலனை செய்ய வேண்டியிருக்கிறது. அன்பு-அகிம்சை என்று சொல்லிக் கொண்டே பௌத்த பிக்குகள் நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போல மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறர்கள் அங்கே
அன்றாடம் அடிமைகளைவிட மோசமான நிலையில்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டி உள்ளது.

இறை வழிபாடுக்கு முற்றிலும் தடை. சமய நெறிகளுக்கு எதிரான அவமானம். இதெல்லாம் பர்மிய முஸ்லிம்கள் அன்றாடம் பறிகொடுத்து வரும் மனித உரிமைகள்.

அவரவர்க்கு பிடித்த உணவு உண்ணவும் தடை. 2000மாம் ஆண்டில் இருந்தே மியான்மரில் இறைச்சியை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறைச்சி சாப்பிட்டது ஊர்ஜிதமானால்.. அவர்கள் 5 ஆயிரம் கியாட் அதாவது 42 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும்.

இறைச்சிக்காக அறுக்கப்பட்டது ஆடாக இருந்தால்.. அதை பயன்படுத்தியவருக்கு 10 ஆயிரம் கியாட்டிலிருந்து (84 ஆயிரம் ரூபாய்)  .50 ஆயிரம் கியாட்வரை (4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

மாடாக இருந்தாலோ ஒரு லட்சம்  கியாட் (8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும்.

மீனை உணவாக எடுத்துக் கொண்டாலும் அவருக்கும் இதே நிலைதான்; அபராதம்!

மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் பயங்கரவாத புத்த பிக்குகளிடம் மாட்டிக் கொண்டு அந்த அரக்கர்களின் காலடியில் விழுந்த கதறி அழுது பாவமன்னிப்புப் பெற்ற சம்பவங்களும் ‘டேக் வெஹ் பு’ கிராமத்தில் நடந்துள்ளன.

KHRG மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் இது பதிவாகியுள்ளது.

முஸ்லிம்கள் மீன்களை வேட்டையாடக் கூடாது. யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் மீன் வேட்டையாடி சிக்கிக் கொண்டால்..அவர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அந்தத் தண்டனை அடி-உதையாக இருக்கலாம். புத்த பிக்குவின் காலில் விழுந்து கதறி அழுது பாவமன்னிப்பு கேட்பதாகவும் இருக்கலாம். இத்தனையும் நடந்தும் கூட மீன்பிடித்தல் குற்றத்துக்காக 5 ஆயிரம் கியாட் (42 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்தியவர்களும் உண்டு.

மீன் பிடித்த குற்றவாளி பணிந்து போகவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு 30 ஆயிரம் கியாட் (2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படும் உச்சக் கட்ட உத்திரவும் உண்டு.

அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போரின் பதிவுகள் இவை.

2000 லிருந்து மியான்மரில் இறைச்சி உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றாடம் அரங்கேறும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பயங்கரவாதம் SPDC அரசுக்குத் தெரியாமல் நடக்கும் ரகசியம் அல்ல. ஏனென்றால்.. இந்த சம்பவங்கள் எல்லாம் அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் நடக்கின்றன. அரசு அதிகாரிகள் ஒருநாளும் BKBA பௌத்த தீவிரவாதிகளைக் கைது செய்து முஸ்லிம்களின் உயிர் உடமைகளை பாதுகாத்ததாக இதுவரையும் வரலாறு இல்லை.

தாய்லாந்தில் பௌத்த துறவிகள் எவ்வாறு முழு ஆயுதபாணியாக ஒரு ராணுவ வீரனைப் போல துப்பாக்கி சகிதமாக நடமாடகிறார்களோ அது போன்ற நிலைதான் பர்மாவிலும்.

பௌத்தத் துறவிகள் பௌத்தம் அல்லாத மக்களிடம் இன துவேஷங்களைக் காட்டி வரும் மரபு ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அது வரலாற்றுப் பூர்வமானது கூட.


இலங்கை: முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத வெறுப்பினையும் மத அசௌகரியங்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற 
தீவிரவாத பிக்குள் அமைப்பான பொதுபல சேனாவினையும் அதனுடைய பிரதான பிக்குவான ஞானசார தேரரையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் எது இதய சுத்தியுடன் கடந்த அரசாங்கமோ அல்லது அதற்குப் பிறகு வந்த   நல்லாட்சி அரசாங்கமோ செயற்படத் தவறியுள்ளது என்பது ஒரு வரலாற்றுத் தவறாகும் 

மிகவும் உறுதியான அரசியல் இருப்புடனும் பாரம்பரிய அடையாளங்களுடனும் வரலாறு நெடுக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பல்வேறு விதங்களிலும் அத்துமீறுகின்ற விதமாக பொதுபலாசேனா என்கின்ற பயங்கரவாத பிக்குகள் அமைப்பும் அதன் தலைமைப் பிக்குவான ஞானசார தேரரும் தம்முடைய அடாவடித்தனங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்து வருவது ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள முடியாதது.


01. முஸ்லிம்களின் அடிப்படை மத வழிபாட்டு உரிமைகளைத் துவம்சம் செய்யும் விதமான எதிர்ப்புப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை

02. முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மத அனுட்டானங்களான ஹலால் உணவு முதலான பண்பாடுகளைக் கொச்சைப்படுத்துகின்றமை
03. முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாயல்களையும் அழித்து இல்லாமலாக்கும் அடாவடித்தனங்களை நேரடியாக அரச பாதுகாப்புடன் ஈடுபடுகின்றமை
04. முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறிவைத்து பொய்ப்பிரச்சாரங்களையும் அழிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றமை.


என நீண்டுகொண்டே போகின்ற இவர்களின் அத்துமீறல்களின் பட்டியலானது முஸ்லிம்களை மட்டுமன்றி ஏனைய இன சகோதரர்களையும் கடும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

தேசிய ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக அரச பாதுகாப்புப் படைகளின் துணையுடன் அரங்கேறும் இந்த வன்முறை நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்கவோ சட்டத்தின் முன் நிறுத்தவோ நாதியின்றி வாய் மௌனித்த அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் சமூகம் இன்று நடுத்தெருவில் அரசியல் அநாதைகளாக நின்றுகொண்டிருக்கிறது.
அதற்காக நமது எந்தவித அரசியல் கருத்து வேறுபாடுகளையும் கடந்து மொத்தமாக  இலங்கை முஸ்லிம் சமூகம் என்கின்ற ஒரே அடையாளத்துடன் ஒன்று சேர்ந்து நமது குரல்களைப் பலமாக ஒலிக்கச் செய்வது நம் ஒவ்வொருத்தருக்கும் கடமையாக இருக்கிறது
பொதுபலசேனா என்கின்ற இந்தப் பயங்கரவாத பிக்குகளின் அமைப்பினதும் அதன் தலைமைப் பிக்குவான ஞானசர தேரரைரினதும் இனவாத அத்துமீறல்களை வன்மையாகக் கண்டிக்கின்றதாகவும், இவர்களை இத்துடனாவது தடுத்து நிறுத்தி சட்டத்தின் முன்னால் சமர்ப்பிக்கவும் இலங்கையின் அதிகாரத் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கவுமாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது  அஸ்ர்,கார் கி
முஸ்லிம்  பெயர் தாங்கிகள்(முனா,பிக்குகள்) தரவு கொடுக்க றுத்து
 விட்டனர்.
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான். (அல் குர்ஆன் 9:32)

எத்தனை பேர் திட்டம் போட்டோ அல்லது தன் அறியாமையாலோ இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் தேடி தர நினைத்தாலும் இறைவனின் ஒளியை யாராலும் ஊதி அணைத்துவிட முடியாது. கடைசி வரை இறைவன் அதனை பாதுகாப்பான்.






No comments: