Wednesday, 27 December 2017

இயேசு தீர்க்கதரிசிதான் பிதா மகன் அல்ல!!

இயேசு தீர்க்கதரிசிதான் பிதா மகன் அல்ல!

கட்டளைகளில் எதுவும் மறையாது - பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது
 ===================================

இயேசுவின் மலைப் பிரசங்கம்  (லூ 6:20-23)
இயேசுவும் பழைய ஏற்பாடும் (மாற் 9:50; 4:21; லூ 14:34-35; 8:16)

17 “மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன்.

18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.

===================================
அருள் மறை குர்ஆன்
===================================
உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தே இருக்கின்றன.

(அருள்மறை குர்ஆன் 6:34)
===================================
 (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.

(அருள்மறை குர்ஆன் 50:4)

Monday, 25 December 2017

கிறிஸ்மஸ் மறைக்கப்பட்ட உண்மைகள்

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.

#கிறிஸ்மஸின்_தோற்றம்

ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.

விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.

#இதனை_உறுதிப்படுத்தும்_வகையில்,

கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,
சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.

‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென்,“பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –

சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.

இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.

மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.

மத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.

தூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்- Washington Irving- எழுதிய -“The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas”- என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.

எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.

#பைபிளின்_ஒளியில்..
#லூக்கா_அதிகாரம்: 02

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

இப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.

இரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.

பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின்பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.

இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.

மேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.

#இயேசுவின்_பிறந்தநாள்_டிசம்பர்_25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.

அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.

இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.

எனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.

அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.

முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.

எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)

எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).

ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.

அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.

#இயேசுவின்_பிறந்தநாள்_டிசம்பர்_25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.

அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.

#இயேசுவின்_பிறந்தநாள்_டிசம்பர்_25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.

இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)

எனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.

#இயேசுவின்_பிறந்தநாள்_டிசம்பர்_25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.

மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.

#இயேசுவின்_பிறந்தநாள்_டிசம்பர்_25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.

இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)

மேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.

பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.

மாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.

#திருக்குர்ஆன்_ஒளியில்..

இயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் “ஈஸா” என்று அழைக்கின்றது. ‘அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.

இதோ இறைமறையின் வார்த்தைகள்…

22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ”நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
24. ”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. ”பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக.

திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.

எனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற டிசம்பர் 25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.

இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?

பைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.
‘எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’

Sunday, 10 December 2017

முஸ்லிங்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்?

உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும்.

நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.

நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக்கேட்டேன்.

அவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை! ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.

தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது.நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.எவ்வித பயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை!

"நீங்கள் பைபிளைப் படிப்பது போல ‘உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்!"
என்னால் நம்பவே முடியவில்லை! அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களை யும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும்.இதற்கு முன்னர் இஸ்லாத் தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம்.
மறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்க ளைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்க ளாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரி யதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன்.ஏன்? ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை! இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரகமீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குறுதியும் இருக்கின்றது.
இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? "இது வேறோரு கடவுள்", "பொய்யான கடவுள்" என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன்,சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கி ன்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரேயொரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்து விற்குப்பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.

கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ் தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார்.விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பி ல்  அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப்பற்றி விளக்குவோம்.முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை!மேலும் மூல பாசைகளா ன  ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில் லை.என்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியதா கும். முஹம்மது என்பவர் யார்? கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வழி படுவது இல்லை என்பதை அறிந்து கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை! மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன்.

முஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள். உண்மையில் 1418 ஆண்டுகளுக் குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை! இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும்.

இஸ்ரவேலர்களே! கேளுங்கள்! – இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும். ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29)

பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம்.

முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுகக் கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன்.
மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆராய்ச்சிக்குப் பிறகு, அந்த வார இறுதியில், இஸ்லாம் என்பது ஒரு உண்மையான மார்க்கம்'என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில்  நம்பிக்கைவரவில்லை.
நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக் கொண்டும், பிரார்த்தனை செய்து கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன்.
நான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன். உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறு பட்டிருந்தது.நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள்! ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள்.இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன் முறையாக இறைவனின் பெயரைக்கொண்டு ‘இறைவா! நீ ஒருவனே! நீயே உண்மையான இறைவன்’ என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை.
இதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை! நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளி லிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளிடம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்காவிட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூறக் கடமை பட்டுள்ளேன்.
"நீர் கூறும்: ‘மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ‘அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)" (அல்குர்ஆன் 6:162-163)
சகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரின்கிறார்..!!
அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, 6 December 2017

முன்னோர்கள் யார்?!



* முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!
* சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
* மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!
* மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!
* முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்...?ll
* முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
*முன்னோர்கள்_யார்?
முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
"எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)
முன்னோர்களின் அடிச்சுவட்டைப்  பின் பற்றுதலே  உண்மையை  மறுக்க மனிதனை தூண்டுகிறது!
இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 43:23,24)
சிலை   வணக்கம்  முன்னோர்  மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
"நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன என்று அவர் இப்றாஹீம் (அலை) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 21:52-54)
மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில்  வீழ்த்துகிறது!
"அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் 
கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)
மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும் தூதரின்  நடைமுறையுமே!
அல்லாஹ் அருளியதைப் பின் பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின் பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)
முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம்  என் அடம்பிடித்தால்...?
"அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)
முன்னோர்கள் யார்?
"பெரியார்கள், முன்னோர்கள்" என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித் தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்."முன்னோர்கள், பெரியார்கள்" என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத் தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.அண்ணல் நபி (ஸல்)  அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்  மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட "மிகச் சிறந்த சமுதாயம்" என்று நபி (ஸல்)  அவர்களால் பாராட்டப் பெற்ற "ஸஹாபாக்கள்" இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த "நாற்பெரும் கலீபாக்கள்" இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை "முன்னோர் பெரியோர்" என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற "பித்அத்"களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.
அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின் பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்? இன்றோ அந்த ஸஹாபாக்கள் முன் மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கை களும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை இத்தனைக்கும் காரணகர்த்தாக்களை  இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்ற னர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!
நன்றி Fb friend Abdhul Hakeem


திசை மாறும் இயக்கங்கள்

இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற நற்பணியை தொடர்வதற்கே ஆகும். நபியவர்கள் இறைக்கட்டளைகளை பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தும், சில சறுக்கல்களின் போது இறைவனின் கண்டனத்திற்கும் ஆளாகி நன்னடத்தைகளின் சிகரமாய் விளங்கி இப்பெரும் பணியை இனிதே நிறைவு செய்தார்கள். அவர்கள் வழி வந்த சத்திய ஸஹாபாக்களின் காலங்களுக்குப் பின் வந்தவர்களிடம் ஏற்பட்ட ஒழுக்க வீழ்ச்சி மற்றும் கொள்கை புரட்டல்களின் காரணமாகவும்,ஆடம்பர உலக ஆசை காரணமாகவும் இஸ்லாத்தின் அடிப்படைகளை விளங்க மறுத்து, மனம் போன போக்கில் ஆட்சி புரிந்ததின் விளைவாக இப்பணி நலிவடைந்து திசைமாறி சென்றது.

உலகெங்கும் பரவி வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய விளக்கம் திரிபடைந்து, உண்மையான இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக அவர்களின் நடைமுறைகள் அமைந்தன. இது போன்ற ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்த இஸ்லாத்தின் எதிரிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளை முனைப்புடன் பரப்பத் தொடங்கினர்.

இதனால் பலதரப்பட்ட மக்களுக்கு மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியப் பெயர்தாங்கிகளின் நடைமுறைகளே இஸ்லாம் என மற்ற மதத்தினரால் கருதப்பட்டது. இதனைச் சீர் செய்வதற்குக் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றினார்கள். அவர்கள் பிறந்த மண்ணின் சூழலுக்கேற்ப முஸ்லிம்களின் மீள் எழுச்சிக்காகப் பல திட்டங்களை முன்மொழிந்து சென்றார்கள்.அவற்றின் அடிப்படையில் அமையப்பெற்றவைதான் இன்று நாம் காணும் இயக்கங்கள். இறை திருப்திக்காக தொண்டாற்றும் இயக்கங்கள் பல சோதனைகளுக்கிடையே வாய்மையுடனும், தூய்மையுடனும் பணி செய்யும் நிலையில் உள்ளன.

இப்பணி இருவகையாக அமைகின்றது.
முதலாவதாக இஸ்லாத்தை பற்றி அறியாத அல்லது தவறாக விளங்கி வைத்திருக்கிற பிற சமய மக்களிடம் தூய இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி உண்மையான வெற்றியின் பக்கம் அழைப்பது.

அடுத்ததாக முஸ்லிம் பெற்றோர்க்குப் பிறந்ததாலும், பெயரில் மட்டும் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டிருப்பவர்களிடமும், மேலும் தவறான வழிகாட்டுதல்களினால் பிற கலாச்சாரத்தோடு கலந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களை, நபிகளாரின் வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துச்சொல்வதாக இப்பணி அமைய வேண்டும்.

இத்தூய இறைப்பணியை அல்லாஹ்வால் இடப்பட்ட கட்டளை என்பதை மறந்து சில இயக்கங்கள் தம் சொந்தப் பணி போல் தனிச்சையாக நினைத்து செயல்படுவதுடன், சகோதர இயக்கங்களை கலிமா முன்மொழிந்தவர்களாக, இஸ்லாமிய அடிப்படையைக் கொண்டு செயல்படுவர்களாகக் கூட கருதுவதில்லை.

 இன்னும் சில இயக்கங்களோ தாங்கள் செய்யும் பணிகளை விட சகோதர இயக்கங்களின் குறைகளை விளம்பரப்படுத்துவதையே தங்கள் முழு நேர பணியாகச் செய்யும் கேவலமான நிலையை இன்று கண்டு வருகிறோம். தங்களுக்கு இறைவனால் அருட்கொடையாகக் கொடுக்கப்பட்ட சிந்தனாசக்தியையும் செல்வதையும் அரிய நேரத்தையும், பிறரின் தவறுகளை உலகிற்கு ஆனந்தமாக அறிவிப்பதில் செலவிட்டு வரும் இழிநிலையைக் கண்கூடாகக் காண்கிறோம்.

இப்படித் திசை மாறிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீட்டப்படும் சதிகளை உணர்ந்து தங்களுக்கிடையேயான சில்லறைப்பிரச்சனைகளை பின்னுக்கு வைத்துவிட்டு ஒன்றுபட முன்வர வேண்டும். இப்பணி "இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கே" என்பதை இயக்கங்கள் உணர்ந்து தூய இஸ்லாத்தின் மாபெரும் எழுச்சிக்கு வித்திட இறைவனை இறைஞ்சிடுவோம்.
நன்றி Fb friend Abdhul Hakeem

நீங்கள் தௌஹீதா சுன்னத் ஜமாஅத்தா

நீங்கள் தவ்ஹீதா? சுன்னத் வல்  ஜமாஅத்தா                     
தவ்ஹீது (ஏகத்துவம்) என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் :

அஹ்லுஸ் ஸுன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் ஆவர்
இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள்.
ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!
இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான்மறையில்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய  அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))

திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவு கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் விசயங்களில் எல்லாம் இறை நேசர்களை முன்னிலைப் படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்

அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...
கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.

பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!
அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம் அல்லாஹ் மட்டுமே  வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்  கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.

மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால் எந்த தேவைக்கும்  என்னை முன் வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்?
ஒருவரை நாம் மதிப்பது  உண்மை என்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று.

இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெல் மார்க்கம் அனுமதிக்காத  செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத,  முன் மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில் செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?
இவைதான் இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில்  எழுப்ப வேண்டிய கேள்விகள்...
ஆனால்,
"தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...!"
ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் அவர்களின்  செயலில்  மாற்றத்தை ஏற்படுத்துகிறான்.
ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.

1.. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.

2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே.

 அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன
நம்பக தன்மையில் குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாகத்தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்து கொள்வார் என்னும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!
மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது. இதன் விளைவாய் தனி மனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.
மேலும்,
இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?
இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.
உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு!
அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???
நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.
இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!
நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!
அல்லாஹ் நன்கு அறிந்தவன்
நன்றி Fb friend Abdhul Hakeem

Tuesday, 5 December 2017

தௌஹீத் என்பது ஓர் இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான பெயரா


தவ்ஹீத் என்பது  ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?

தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் கூடிய ஒரு அவல நிலையை பரவலாக தெற்காசிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் காணக் கூடியதாக இருக்கின்றது.
19ஆம் நூற்றாண்டின ஆரம்பத்தில் உதயமான இஸ்லாமிய இயக்கங்கள் மத்ஹப் வெறியையும் தாண்டி மக்களை கூறு போட ஆரம்பித்த காலப்பகுதியில் இந்த தவ்ஹீதின் பெயரால் ஒரு இயக்கத்தை உருவாக்கி அதன் இஸ்தாபகத் தலைவராக யாரும் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. தமது சொந்த சரக்குகளை முஸ்லிம் சமுதாயத்தில் சந்தைப்படுத்தி இயக்கம் வளர்க்க முற்பட்ட அக்காலகட்டத்தில் இஸ்லாம் என்றால் அல்லாஹ்வின் வஹியும் நபியவர்களின் சீரிய வாழ்கை வழி முறையும் என்று பேச்சளவில் உச்சரித்துவிட்டு நபியவர்களின் சுன்னாவுக்கு மாற்றமாக மௌலானாக்களின் சுன்னாக்களை இஸ்லாமாக காண்பித்து தமது இயக்கங்களுக்கு நல்ல பெயரை சமுதாயத்தில் எடுத்துக் கொள்ள அள்ளும் பகலும் பாடுபட்டனர். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் வீரியத்துடன் எடுத்தியம்பிய நல்லோர்களின் கூட்டம் தவ்ஹீதை முதன்மைப்படுத்திய தமது பிரச்சாரத்தில் உலகின் நாலா பாகங்களிலும் பரந்து கிடந்த தவ்ஹீதுக்கு எதிரான ஷpர்கை அழித்தொழித்து அல்லாஹ் மாத்திரம் தான் வணங்கப்பட வேண்டும், எல்லா வணக்கங்களின் ஊடாகவும் அல்லாஹ்வின் ஏகத்துவம் உரிதிப்படுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்கள் மீது தவ்ஹீது வாதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தூய இஸ்லாமிய கொள்கையைக் கொண்ட எந்த ஒரு அறிஞரும் தவ்ஹீத் இயக்கம் என்று ஒரு பெயரை தெரிவு செய்து தமது இயக்கத்திற்கு பெயர் வைத்த வரலாற்ரை காணமுடியாது.
இயக்கங்கள் என்று வந்துவிட்டால் அங்கு இஸ்லாத்தின் வளர்சியை விட இயக்கத்தின் வளர்சியே முதன்மைப் படுத்தபடுவதை பரவலாக காணமுடிகின்றது. இயக்க ரீதியாக வளர ஆரம்பிக்கும் போது அங்கு ஏனைய இயக்கங்களோடு போட்டி போட்டுக் கொண்டு அங்கத்துவம், சந்தா, அமீர், பொதுச் செயளாலர், பொதுக் குழு என இயக்கத்தின் பண்புகள் கிளைவிட்டு வளர ஆரம்பிக்கும். இஸ்லாத்தின் தூய கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வது என்பதை விட தமது இயக்கத்தின் கொள்கைகள், கட்டுப்பாடுகளை மக்கள் ஏற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர். வெளிப்படையில் அரசியல் கட்சிகளை ஒத்த இயக்கங்கள் தமது இயக்கத்திற்குல் இருப்பவர்கள் கூட இயக்கம் சார்ந்த ஒரு செயற்பாட்டை அல்லது இயக்கத்தின் அமீரின் கொள்கை சார்ந்த ஒரு பிழையை அல்லது கருத்தை விமர்சிக்க முடியாத ஒரு நிர்பந்தம் ஏற்படுவதை காணலாம். மீறியும் விமர்சித்தால் உடனே பொது குழுவை கூட்டி குறித்த அங்கத்தவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதோ அல்லது அவரை ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு கேவலமான நிலையை இஸ்லாமிய இயக்கங்களில் காணமுடிகின்றது. இதனால் கட்சித் தாவலை ஒத்த இயக்க தாவல்களும் அல்லது இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்த ஒதுங்கிக் கொள்ளுவதையும் ஆங்காங்கே காணமுடிகின்றது.
இஸ்லாத்தின் பெயருக்கு குந்தகம் ஏற்பட்டாலும் பரவாயில்லை இயக்கத்தின் பெயருக்கு குந்தகமோ விமர்சனமோ ஏற்பட்டு விடக் கூடாது என நினைக்கும் இப்படிப்பட்ட இயக்க வெறியர்கள் மூலம் இஸ்லாத்திற்கு சேவை நடை பெரும் என்று எல்லளவும் எதிர்பார்க்க முடியாது. மீறியும் ஏதாவது சேவைகள் நடந்தாலும் அதனை அதிகபட்சமாக விளம்பரம் பன்னி அதனூடாக இயக்கத்தை போசிக்க நினைக்கின்றனர். சிலர் விளம்பரம் இல்லாத இயக்கம் என்று சொல்லிச் சொல்லியே அதனை சமூக வலைத்தளங்களில் பெரும் விளம்பரமாக்கியுள்ளனர். எனவே தான் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவை அதன் தூய வடிவிலே எடுத்துச் சொல்லும் அழைப்பாளர்களுக்கு ஒரு இயக்கத்தில் தொங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்காது. ஏகத்துவக் கொள்கையை சரியாக ஏற்று நல்வழி நடந்த முன்னோர்கள் காட்டிதந்த பிரகாரம் இஸ்லாத்தின் வரம்புகளை பேணி நடப்போர் எப்போதும் சத்தியத்தின் பக்கம் இருப்பதோடு அசத்தியத்திற்கெதிராக போராடுவதற்கு எந்நிலையிலும் அஞ்சமாட்டார்கள். தூய ஏகத்துவக் கொள்கையை கடைபிடிக்க நினைப்பவர்களுக்கு இயக்கத்தின் தேவைக்கு அப்பால் நல்வழி நடந்த உலமாக்களின் முன்மாதிரிகளைக் கொண்டு தமது கொள்கையில் உறுதியாக இருப்பதோடு மற்ற மக்களுக்கும் சத்தியக் கொள்கையை எடுத்துச் சொல்வார்கள்.
ஏகத்துவ கொள்கை தொடர்பான தெளிவு இல்லாத ஒரு மனிதர் தன்னை முஸ்லிம் என அறிமுகப்படுத்த முடியாது. காரணம் இக் கொள்கையே முஸ்லிம்களை ஏனைய மதத்தவர்களின் பல கடவுள் கொள்கையில் இருந்து வேறாக்குகின்றது. ஆக ஏகத்துவக் கொள்கையில் தெளிவு மற்றும்அதனை பற்றிப் பிடித்துக் கொள்ளும் உறுதி என்பன இன்றியமையாதவை எனலாம். முஸ்லிமாக தன்னை அறிமுகப்படுத்தக் கூடியவர்கள் அல்லாஹ்வின் ருபூபிய்யத்தை (அவனே படைப்பாளன், பரிபாளிப்பன், உயிரை தந்து கைப்பறுபவன், உணவளிப்பவன்) என்ற முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ள ருபூபிய்யத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால் மாத்திரம் ஏகத்துவத்தில் தெளிவு பெற்றுவிட்டார் அல்லது அவரது ஈமான சம்பூர்னமாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. காரணம் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஓரே கடவுள் தான எம்மை படைத்தான் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
அல்லாஹ்வின் ருபூபிய்யத்தை ஏற்றுக் கொள்கின்றவன் அவனுக்கு மாத்திரம் தனது எல்லா வணக்க வழிபாடுகளை செலுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் உளுஹிய்யத்தை (வணங்கப்படத் தகுதியானவன் அவன் மாத்திரமே) ஏற்றுக் கொண்டு அதனை உறுதி செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை எவ்வித கூட்டல் குறைத்தலோ, மாற்றுதலோ, மறுத்தலோ அல்லது உவமானங்களோ இன்றி நம்புவதன் மூலம் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
வெறுமனே அல்லாஹ் படைப்பாளன் எனற் விடயத்தில் மாத்திரம் அவனது ஏகத்துவத்தை உறுதி செய்வது பூரண ஈமானாகாது. நபியவர்கள் அனுப்பட்ட குறைஷி சமூகம் கூட ருபூபிய்யத்தை ஏற்று இருந்தார்கள் என்பதற்கு அல்லாஹ் ஏகப்பட்ட சான்றுகளை அவனது திருமறையில் குறிப்பிடுகின்றான். எனவே தான் அல்லாஹ்வை அறிமுகப்படுத்துவது நபியவர்களின் நுபுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை. காரணம் அம்மக்கள் அல்லாஹ் தான் படைத்து பரிபாளிப்பவன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அப்துல்லாஹ், அப்துல் மனாப் என்ற பெயர்களை எல்லாம் தமது பிள்ளைகளுக்கு சூட்டினர். இப்படி அல்லாஹ்வை அறிந்து வைத்திருந்த சமுதாயத்திற்கு அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மாத்திரமே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் என்பதை எடுத்து வைப்பதே நபியவர்களின் தஃவாவின் சாரம்சமாக இருந்தது. இதனை எத்திவைக்கவே மக்காவில் 13 வருடங்கள், மதீனாவில் 10 வருடங்கள் என தமது வாழ்கையை தியாகம் செய்தார்கள். ஏகத்துவத்தின் மூன்று பிரிவுகள் தொடர்பான விளக்கத்தை ஒரு முஸ்லிம் கட்டாயமாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

#தவ்ஹீதின்_வகைகள்

#தவ்ஹீது_மூன்று_வகைப்படும். அவைகள்: –

தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனை ஒருமைப்படுத்துவது)
தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)

1. #தவ்ஹீதுர்_ருபூபிய்யா: –

இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் இருக்கும் அனைத்து வஸ்த்துக்களiயும் படைத்து, காத்து, உணவளித்து பரிபாலிக்கும் விஷயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவற்கு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யா’ என்று பெயர்.

அதாவது, இந்த அனைத்து செயல்களையும் செய்பவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு யாதொரு இணை துணையுமில்லை என்றும் மனதால் நம்பி நாவால் உறுதிகொள்வதாகும்.

படைப்பும் ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். [அல்-அஃராப்:54]

இந்த வகை தவ்ஹீதை பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஏற்றுக் கொள்கின்றனர். ஏன் குறைஷp காபிர்கள் கூட மகத் தெளிவாக இதனை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் (நபியே!) ‘நீர் இவர்களிடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?’ என்று கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? [அல்-அன்கபூத்:61]

ஒரு சிலர் இயற்கை என்று மறுத்தாலும் அவர்கள் ஆள்மனது அதனை ஏற்றுக் கொள்வதாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும் அநியாயமாகவும் பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால்இ இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக. [சூரதுன் நம்ல்:14]

2. #தவ்ஹீதுல்_உலூஹிய்யா: –

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அனைத்து வகையான வணக்கங்கங்களையும் அல்லாஹவுக்கே செய்து அவனை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் உலூஹிய்யா’ என்று பெயர்.

அதாவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், பிரார்த்தனை, நேர்ச்சை, குர்பானி, பேரச்சம் கொள்ளுதல், ருகூவு செய்தல், ஸூஜூது செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என உறுதிகொள்வதாகும்.

3. #தவ்ஹீதுல்_அஸ்மா_வஸ்ஸிஃபாத்: –

அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள்
மற்றும் ஆற்றல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்பி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்று பெயர்.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான்இ அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன்இ பார்ப்பவன். [சூரதுஸ் ஸுரா:11]

அல்லாஹ்வின் பெயர்களை மற்றும் பண்புகளை மாற்றுதல், மறுத்தல், விபரித்தல், உவமைப்படுத்துதல் என்பவற்றுக்கு அப்பால் அல்குர்ஆன், ஹதீஸில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாரே நம்பியாக வேண்டும். யூதர்கள் அல்லாஹ்வின் பண்புகளில் எப்படியெல்லாம் விளையாடினர் என்பதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது’ என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான். உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது. ஆகவே அவர்களிடையே பகைமையும் வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான். (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். [அல்-மாயிதா:64]

 #தவ்ஹீதின்  முக்கியத்துவம்

மேற்கூறப்பட்ட மூன்று வகை தவ்ஹீதும் ஒன்றுக்கொன்று தொர்புடையதும் பிரிக்கமுடியாததாகும். இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் மறுத்தாலும் அவர் தவ்ஹீது கொள்கையை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்.

இந்த தவ்ஹீது வகைகளில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது ‘ஷிர்க்’ என்னும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலாகும். (அல்லாஹ் நம் அனைவைரயும் பாதுகாப்பானாவும்).

எனவே தான் அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகிய சூரதுல் பாதிஹாவில் அல்லாஹ் இந்த மூன்று பிரிவு தொடர்பாகவும் பேசுகின்றான்.

சூரதுல் பாதிஹாவின் ஆரம்பத்தில் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்கின்றான். இங்கு தவ்ஹீதுர் ருபூபிய்யாவை சுட்டிக் காட்டுகின்றான். பின்னர் அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் என தனது பெயர்கள் மற்றும் பண்புகளை குறிப்பிடுகின்றான், இது தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிபாத் ஆகும். மேலும் தவ்ஹீதின் மிக முக்கிய பிரிவாகிய தவ்ஹீதுல் உலூஹிய்யாவை ‘உன்னையே வணங்குகின்றோம் உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்’ என கூறுவதன் மூலம் அண்ட சராசரங்களை படைத்து பரிபாளிக்கும் அந்த ரஹ்மான் அனவே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் என்பதனை நாம் சூரதுல் பாதிஹாவில் உறுதி மொழியாக அல்லாஹ்விடம் வழங்குகின்றோம்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களுக்கு முன் இறக்கிய வேதங்களை ஒன்றினைத்து அல்லாஹ் அல்குர்ஆனை அருளினான், அல்குர்ஆனின் கருத்துக்களை ஒன்றினைத்து சூரதுல் பாதிஹாவை அருளினான், சூரதுல் பாதிஹாவின் கருத்துக்களை ஒன்றினைத்து ‘உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்’ என்ற வசனத்தில் அருளினான்.’

ஒரு நாளைக்கு பல தடவைகள் அல்லாஹ்வுக்கு முன் தொழுகையில் நின்று கொடுக்கும் வாக்குறுதியை ஒரு சில மக்கள் சில வினாடிகளில் மறந்து விட்டு பள்ளியில் இருக்கும் அல்லது பள்ளிக்கு வெளியே இருக்கும் அவ்லியாக்களிடம்(?) சென்று தமது பிரச்சினைகளை முன் வைக்கின்றனர். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டவேண்டும். இந்த மாபெரும் அநியாயத்தை தடுக்காமல் அப்படியே நின்றுவிடாது. சிலர் நினைக்கலாம் இப்போது படிப்படியாக ஷிர்க்கான செயற்பாடுகள் குறைந்துவிட்டன என்றும், காலப்போக்கில் முழுமையாக இல்லாது போய்விடும் எனலாம். ஆனால் ஷிர்க்கான செயற்பாடுகள் ஒரு போதும் கால ஒட்டத்தின் மாற்றத்தில் நின்றுவிடும் என நினைப்பது பெரும் மடமையாகும். காரணம் இன்று எமது சமுதாயத்தில் ஏகத்துவ எழுச்சியும் ஷிர்க் ஒலிப்பும் ஏற்பட்டுள்ளது என்றால் அதன் பின்புலத்தில் பலத்த தியாகங்களுடன் தமது பிரச்சாரத்தை வீரியமாக முன்வைத்த உலமாக்களை மறந்து விடமுடியாது. எல்லா இயக்கங்களும் தாம் முதன்மைப்படுத்தும் இபாதத்தை அல்லது கொள்கையை சமூகத்தில் முன்வைப்பதுடன் ஒதுங்கிக் கொள்ளும் அதே வேலை தவ்ஹீத் சிந்தனையையும், ஷிர்க் ஒலிப்பையும் பற்றி பேசுவதில் இருந்து பின்வாங்குகின்றனர். காரணம் மீறியும் போசினால் தமது இயக்க செயற்பாடுகளை தொந்தரவு இல்லாமல் செய்யவதில் பல பிரச்சினைகளை முன்னோக்க வேண்டி வரும் என்ற பயம் தான் அன்றி வேறில்லை. இப்படி மக்கள் மன்றத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயங்குகின்றவர்கள் தாம் கஷ;டப்பட்டு செய்த அமல்களை அனைத்தையும் ஷிர்க் பாலடித்துவிடும் என்பதை மறந்து விடுகின்றனர்.

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும் தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோஇ அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால்இ அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்துவிடும். [சூரதுல் அன்ஆம்:88]

ஏன் நபியாக இருந்தால் கூட அவர் இணைவைத்தாலும் அவரின் நல்லரங்கள் அழிக்கப்படும் என அல்லாஹ் பின்வருமாரு கூறுகின்றான்.

அன்றியும் உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால்இ ‘நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால்இ உம் நன்மைகள் (யாவும்) அழிந்துஇ நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). [சூரதுஸ் ஸுமர்:65]

எகத்துவ பிரச்சரம் மற்றும் ஷிர்க் ஒலிப்பு என்ற விடயத்தில் எல்லா முஸ்லிம்களும் தெளிவடைந்து இதனை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் மன்றத்தில் முன்வைத்து எமது சமுதாயத்தில் இருந்து ஷிர்க்கை முழுமையாக துடைத் தெரிய முயற்சிப்போமாக!                                             நன்றி Fb friend Abdhul Hakeem

Sunday, 3 December 2017

திருக் குர்ஆன் விடும் பகிரங்க சவால்

திருக்குர்ஆனின் பகிரங்க சவால்?
***********************************
பூமிக்கு அடியில் மலையின் உயரம்
அளவுக்குச் செல்ல இயலாது புனித குர்ஆன் சவால் விடுகிறது..
பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்!!
நீர் பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை   அடையவேமாட்டீர்!
அல்குர்ஆன்: 17:37 இந்த வசனம் குர்ஆன் இறைவேதம் தான் என்பதை எப்படி நிரூபிக்கிறது என்பதை காண்போம்.
ஆகாயத்தில் பயணம்  செய்து போவதை பற்றி (குர்ஆன் 55:33)
வசனத்தில் ஆற்றல் (power) இருந்தால்
செல்லலாம் என்கிறது.
அந்த அடிப்படையில் பல ஆயிரம்
கிலோமீட்டர் சென்று வருகிறார்கள்.
(சுற்றுலா கூட செல்கிறார்கள்.)
இதைப் பற்றிய விஞ்ஞானம் இல்லாத
காலத்திலேயே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது குர்ஆன் இறைவனுடைய வேதம்தான் என்பதை நிரூபிக்கறது.இப்படி ஆகாயத்தில் செல்ல முடியும்.என்று சொல்லக்கூடிய குர்ஆன் பூமிக்கு அடியில் மலை உயரம் கூட செல்ல முடியவே முடியாது என்று மனிதர்களை பார்த்து சவால் விடுகிறது. இந்த சவாலை,முறியடித்து மனிதர்கள் குர்ஆன் இறை வேதம் இல்லை என்று நிரூபித்தார்களா?
அல்லது குர்ஆன் இறைவேதம்தான்
என்பதை நிரூபிக்கின்றதா? என்று பார்ப்போம்.உலகிலேயே மிக உயர்ந்த மலையை எடுத்துக்கொள்வோம். Mount Everest 8.48 km உயரம் கொண்டது மனிதன் இந்த மலை அளவு பூமிக்கு அடியில் சென்றால் குர்ஆன் இறை வேதமில்லை என்று நிரூபிக்க முடியும்.
ஆனால் மனிதன் பூமிக்கு அடியில்
ஆழமாக சென்ற அளவு எவ்வளவு தெரியுமா?
South Africa வில் உள்ள tautona என்ற
தங்கச்சுரங்கத்தில் 3.9 km தான்.
இறைவனுடைய சவாலில் பாதி அளவு கூட மனிதனால் செல்லமுடியவில்லை.
உலகிலேயே உயரத்தில் 110வது இடத்தில் உள்ள lupghar sar என்ற மலையின் உயரமான 7.2 kஐ கூட மனிதனால் கடக்க முடியவில்லை.
இதற்குக் காரணம் என்ன வென்றால்

  • பூமிக்கு அடியில் 57c வெப்பம் இருக்கிறது.இதனால் மனிதன் இறந்து போகிறான்.South Africa வில் உள்ள gold mine (தங்கச்சுரங்கத்தில்) ஆண்டுக்கு பல நூறு மனிதர்கள், இறந்து போவதாக ஆய்வுகள் சொல்கி றது.அல்லாஹ்வின் ஆற்றலை பாருங்கள்சிறுவர்களும், சிறுமிகளும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச்சாதனை படைக்கிறார்கள்.ஆனால் பூமிக்கு கீழ் யாராலும் செல்ல முடிவதில்லை, குர்ஆன் இறைவனின் வார்த்தை இல்லை என்று கூருபவர்களால், இப்படி ஒரு சாதனையை செய்ய முடியவில்லை. நிச்சயமாக பூமிக்கு மேல் உள்ள வெப்பம் எவ்வளவு கீழ் உள்ள வெப்பம் எவ்வளவு என்று அறிந்திராத முஹம்மது (ஸல்) அவர்க ளால் இந்த வசனத்தை சுயமாக சொல்ல இயலுமா சிந்தனை செய்து பாருங்கள்.

எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றியும், அதன் உயரம் பற்றியும் அறிந்திடாத
முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சொந்தமாக இந்த கருத்தை சொல்ல இயலாது எனவே எவராலும் முறியடிக்க முடியாத சவாலை சொல்லி திருக்குர்ஆன் இறை வேதம்தான் என்பது  இந்தவசனத்தின் நிரூபணமாகியிருக்கிறது.
இப்புகைபடத்தில் உள்ள குழி உலகில் தோண்டப்பட்ட மிகவும் ஆழமான குழியாகும் இருப்பினும்  தோல்வியையே அடைந்தனர்..

One of proof that islam came from ALLAH & Muhammad (sal) is the messenger of ALLAH...

Wednesday, 29 November 2017

நோன்பாளி பகல் வேளைகளில்

நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)
சில அறிவிப்புக்களில். “நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார்” என்று காண்ப்படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)
இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்றுகள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடுகின்றோம்.
ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தமது மனைவியை முத்தமிட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரியதொரு தவறைச் செய்து விட்டேன். நோன்புடன் (என் மனைவியை) முத்தமிட்டுவிட்டேன் என்றார்கள். 
அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றிருக்கும் போது வாய் கொப்பளிப்பது பற்றி என்ன எண்ணுகிறாய்? என வினவினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறில்லையே எனப் பதிலளித்தார்கள். உடலுறவு, நீர் அருந்துதல் போன்றது என்றால் முத்தமிடுவது வாய்கொப்பளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த்தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)
எனவே, நோன்பாளியான கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரலாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுறவில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற அச்சம் இருப்பின் அதிலிருந்து விலகிக் கொள்ளல் கடமையாகும். நபியவர்களின் உவமானத்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னுமொரு உண்மையையும் அறியலாம். 
நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்லலாகாது” என்பது நபிமொழி. இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்தமிடுவதில் எல்லை மீறிச் சென்றிடலாகாது என்பதையும் யூகிக்கலாம்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

Tuesday, 28 November 2017

பர்ஸக் என்னும் திரை

   
         பர்ஸக் என்னும் திரை!

🔹 “அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல்குர்ஆன் 23: 99-100)

இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன.

🔹இந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவதற்காக அனுமதி கேட்கிறான். அதுவும் நன்மையான காரியங்களைச் செய்வதற்காக. ஆனால் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு அல்லாமல் அவர்களுக்கு முன்னே பர்ஸக் என்னும் திரையையும் இட்டுவிடுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

🔹இவ்வளவு தெள்ளத் தெளிவாக இறைவன் கூறியிருக்க, இறந்தவர்கள் ஆவியாக இவ்வுலகிற்கு வந்து சிலரை பிடித்து ஆட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம்களில் சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம், நல்ல நிலைமையில் இருக்கின்ற மனிதன் திடீரென்று அசாதாரணமான நிலைக்கு மாறி ஆட்டம் போடுதல், கூச்சல் போடுதல், பிற மொழிகளில் பேசுதல், தானாக சிரித்தல், மற்றவர்களை ஏசுதல், அச்சுறுத்தல் போன்ற காரியங்களைச் செய்வதால் தான்.

🔹இந்த வகையான காரியங்களைச் செய்யும் ஒருவனைப் பேய் பிடித்து விட்டதாகவும், இறந்தவனின் ஆவி அவனின் உடலில் புகுந்து அவனை அவ்வாறு ஆட்டுவிப்பதாகவும் கூறி அவனுக்கு தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை செய்துக் கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்க்கும் ஏராளமான போலிகள் எல்லா சமுதாய மக்களிடமும், குறிப்பாக நமது சமுதாய மக்களிடம் அதிகம் இருக்கிறார்கள்.

மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்துக் கட்டிய மார்க்கம் நமது இஸ்லாமிய மார்க்கம். நமது மார்க்கத்தில் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இவைகள் அனைத்தும் மனிதனை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் ஏமாற்று வேலைகள்.

🔹மனநோயாளிகளையும், சித்தம் கலங்கியவர்களையும் பேய், பிசாசு பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாக நம்புபவரை, அவரது இந்த நம்பிக்கையானது தமது ஈமானையும் இழக்கச் செய்யும் குப்ரான காரியங்களைச் செய்வதற்குத் தூண்டிவிடும். இதை நம்பக் கூடிய ஒருவன், தனது உயிரினும் மேலான ஈமானை இழந்து, சமாதிகளில் கையேந்தி நிற்கச் செய்து இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படமாட்டாத பெரும்பாவத்திற்கு ஆளாகி, பூசாரிகளிடமும், மாந்தரிகம் செய்யும் இறைமறுப்பாளாகளிடமும், தட்டு, தாயத்து போன்றவற்றைச் செய்து விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும் போலி ஆலிம்களிடமும் ஏமாந்து தமது பொருளாதாரத்தையும் இழந்து நிற்கும் கேவலமான நிலைமைக்கு தள்ளிவிடும்.

🔹மரணித்த ஆத்மா இவ்வுலகில் எவ்வகையிலும் தொடர்பில்லாத பர்ஸக் உலகில் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவற்றையெல்லாம் மீறி இவ்வுகிற்கு பேயாக, ஆவியாக வந்து மனிதனைப் பிடித்தாட்டுகிறது என்பதை நம்புவது, இறைவனின் வல்லமையில் குறை காண்பதாகும். இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்.

🔹இன்னும் சிலர் வேறு வகையான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். அதாவது இறைவனின் நேசர்கள் எனப்படும் வலியுல்லாக்கள் எனப்படுவோர் அவர்களின் சமாதிகளில் உயிரோடு இருப்பதாகவும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதாகவும் நம்பி அவர்களிடம் பிரார்த்தித்து வருகின்றனர். இது இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணை வைத்தல் எனும் மாபெரும் பாவமாகும்.

🔹மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை என்றும் ஒருவருக்கு நன்மையையோ அல்லது தீமையையோ செய்யும் அதிகாரம் இல்லை என்றும் திருமறையின் பல வசனங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.

அல்லாஹ் கூறுகிறான் :
“அல்லாஹ் எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை (தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்” (அல்-குஆன்: 39:42).

🔹மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் கூறுகிறாகள்:
“உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திமதி ஹதீஸ் சுருக்கம்)

🔹என் குடும்பத்தாடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது.
அப்படியிருக்க தீய ஆத்மா இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பாகளா? மாட்டார்கள். எனவே “மரணித்த மனிதனின் தீய ஆவி இவ்வுலகில் சுற்றித்திகிறது; அது பிற மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்டுவிக்கிறது” என்று கூறுவது எல்லாம் கற்பனையும், ஏமாற்று வேலையும் ஆகும்.
🔹எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்  உள்ள மரணித்த ஆத்மா இவ்வுலகில் பேயாக அலைகிறது, மனிதர்களைப் பிடித்தாட்டுகிறது என்று நம்புகின்றவனும், நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புவனும் மேற்கண்ட குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸையும் நிராகரித்தவர் போல் ஆவார்.

🔹அல்லாஹ் இத்தகைய தீய செயல்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். ஆமீன்.   
       
நன்றி fb நண்பர் ஷிர்க்கின் எதிரி

Tuesday, 21 November 2017

மழை எவ்வாறு உருவாகிறது.




மழை எவ்வாறு உருவாகிறது என்பதற்கான விஞ்ஞான விளக்கம், 1400 ஆண்டுகளுக்கு முன் வந்த திருமறையின் சான்று....!!

24:43. "அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது!"..

இவ்வசனத்தில் "வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது'' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.

இந்தப் பனிக்கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.

இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக்கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின்காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக்கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.

இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத்தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக்கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம்.

குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை!!..
   **************************

#அளவுக்குமேல் #மழை #பெய்தால்

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا 
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா 

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும். 

இதன் பொருள் : 

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! 

ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342

அல்லது 
اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ 

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B) வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி 

இதன் பொருள் : 

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1013, 1016 

அல்லது
اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B) வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி 

ஆதாரம்: புகாரி 1017
Read more at: www.Thelastchance4u.blogspot.com
நான் ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன்...? ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women).
ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்த இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"
இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.

" நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"
பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...

"நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக"

ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."
பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

" இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"
"நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.
ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது.

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.
அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும். ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.

"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- அல்குர்ஆன் 2:42
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாவிடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாவிற்காக குழந்தைகளை (ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்...

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.

"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராயத்தொடங்கினார்.

தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்க்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குர்ஆன் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிகஅதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
"அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- அல்குர்ஆன் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குர்ஆன் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.

"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" ---அல்குர்ஆன் 4:36

ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.

" நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"
அதற்கு அவரது தாய் " அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா, இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுப்ஹானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமை படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லா புகழும் அல்லாஹ்விற்கே.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை.
ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
அன்றோ இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர்.

இறைவன் தன்னை நாடிவந்தவர்க்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்தார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்தவர். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு.

சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்தப்புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள்.

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.

"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்களைச் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு" --- அல்குர்ஆன் 11:11

" நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" ---அல்குர்ஆன் 17:9

அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ஆமினா அசில்மி மரணம்
-------------------------
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 1977 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியவர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக தனது கணவர் உள்பட குடும்பத்தினர் அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்த போதிலும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

33 ஆண்டுகளாக இஸ்லாமிய பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் ஆமினா அசில்மி. ஆமினா அசில்மி தனது செல்வம் முழுவதையும் இஸ்லாத்திற்காக செலவிட்டார்கள். கடைசியில் அவர் வாழ்வதற்கு சொந்தமாக வீடு இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் இருப்பதாகவும் அது முற்றி ஒருவருடத்தில் மரணம் நிகழலாம் என்று மருத்துவர்கள் கூறியபொழுதிலும் மனங்கலங்காமல் "நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது" என்று கூறினார்களாம்.
என்றாலும் கடந்த 2010 மார்ச் 6 ஆம்தேதி கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி...).

இஸ்லாத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அந்த பெண்மணிக்கு அல்லாஹ் பாவங்களை பொறுத்து மறுமையில் சுவனத்தை அளிப்பானாக! ஆமினா அசில்மியின் உரைகள் யூ ட்யூபில் கிடைக்கப் பெறலாம்.

"நான் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத் துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது"

ஆமினா அசில்மி