Tuesday, 29 May 2018

பிள்ளைகளின் முதல் ஆசிரியை,அப்பிள்ளைகளின் தாய்தான்

குழந்தைகள் முதலில் கற்கும் கல்வி தாயிடமே. அந்த தாய் எதை சொல்லி தருகிறாளோ அதுவே பசு மரத்தாணி போல் உள்ளத்தில் பதிந்து விடும். ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படிப்பட்டவர்களாகவும் உருவாக்க முடியும் இது தாயின் கடமையும் கூட. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கும், அவனின் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அறிவிப்பாளர் உமர்(ரலி) அவர்கள் புகாரி 2554.

ஆகவே, தாய் குழந்தைகளுக்கு முதலில் மார்க்க கல்வியை கற்று தரவேண்டும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் தான் மறுமை வெற்றி உண்டு தினமும் காலை மாலை குர்ஆன் பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் இரவில் தூங்கும் போது குழந்தைகளுக்கு (முன்னோர்கள்) பாட்டி கதை சொல்வார்கள் தற்போதுள்ள குழந்தை சினிமா, சீரியல், கிரிக்கெட் இன்னும் பல. இதை தவிர்த்துவிட்டு குழந்தைகளுக்கு நபி(ஸல்) அவர்களின் போதனைகளை அழகிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உதாரணமாக குகைவாசிகள் ஹதீஸ் உள்ளது. மூவர் பாறைக்குள் நுழைந்து கொண்டார்கள் பாறை மூடியது அப்போது ஒவ்வொருவடைய பிரார்த்தனையால் வெளிவே வந்தார்கள் அதில் ஒருவர் தன் தாய்க்கும், தந்தைக்கும் செய்த பணிவிடையால் பாறை விலகியது. இந்த ஒரு செய்தியை மட்டும் வைத்து அழகாக சொல்லலாம். அப்படியே குழந்தைகள் உள்ளத்தில் பதிந்து விடும். பிறகு பாருங்கள் அந்த குழந்தை தாய் தந்தையருக்கும் செய்ய வேண்டிய முதல் கடமையை சிறு வயது முதல் அறிந்து கொள்வார்கள். இஸ்லாத்தில் முதல் வணக்கம் அல்லாஹ்வுக்கு அடுத்த தாய் தந்தையர்களுக்குதான் என்று 17:23 என்ற வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

அடுத்து குழந்தைகள் மார்க்க கல்வி பயில சரியாக செல்கிறார்களா பள்ளிக்கூடம் சரியாக போகிறார்களா நல்ல நண்பர்களோடு பழகுகிறார்களா? காசை வீண்விரயம் செய்யாமல் நல்ல செலவு செய்கிறார்களா? என்று பல அம்சங்களை கவனிக்க வேண்டும் மேலும் நேற்றைய படிப்புக்கும் இன்றைய படிப்புக்கு குழந்தையிடம் என்ன வித்தியாசம் உள்ளது என்று கவனிக்க வேண்டும். புதிய நண்பர்கள் உருவாகும் போது அவர்களுடைய பழக்கங்களையும் ஆராய வேண்டும் முதலில் தொழுகை உள்ளதா? என்று கவனிக்க வேண்டும் எந்த அளவிற்கு குழந்தையை கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு குழந்தையின் வெற்றியை காண்பீர்கள்.
                                                                               




No comments: