விருத்த சேதனம் ( english : circumcision :அரபி: ختنة; ஈப்ரு: בְּרִית מִילָה) அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும்.
கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் இது செய்யப் படுகின்றது. பெரும்பாலும் மத மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30% ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுகின்றது .வட கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடிகளிடம்தான் முதன் முதலில் விருத்த சேதனம் செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. எகிப்தில் காணப்படும் பழங்கால குகை ஓவியங்களில் இருந்து இதனை அறியலாம்.விருத்த சேதனம் பால்வினை நோய்கள், ஆண்குறி புற்றுநோய், பெண்களின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் எயிட்சு தாக்கப் படுவதர்க்கான வாய்ப்பும் இதன் மூலம் சிறிது குறைவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதில் இருக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டால் பலரும் இந்த பழக்கத்தை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொள்வார்கள். எச் ஐ வி என்ற கொடிய ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் விருத்த சேதனம் பெரும் பங்காற்றுவதாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்சிசகளை வெளியிட்டிருக்கின்றனர்.
உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வி யினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேதனம் ஆகும்.இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேதனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேதனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.
விருத்த சேதனம் செய்யும் இந்த பழக்கம் கிறித்தவத்தில் எப்படி மறைந்து போனது என்பதை விக்கி பீடியா விளக்குகிறது. அதையும் இனி பார்ப்போம்:
கிருத்துவம்
கிருத்துவத்தை பொருத்தவரை தொடக்கத்தில் அது தன்னை யூத மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவாகவே கருதியது. எனவே விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் ஆதி கிருத்துவர்களிடம் இருந்தது. இயேசு கிறித்துவுக்கும் யூத மரபு படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டது. இருப்பினும் இயேசுவின் மரணத்திற்குப் பின் கிருத்துவம் தன்னிடம் உள்ள யூதத்தின் அடையாளங்களை விலக்குவதின் ஒரு பகுதியாக விருத்த சேதனத்தை கைவிட்டது. ஏறக்குறைய கிபி 50ல் எருசலேம் நகரில் கூடிய முதலாவது கிருத்துவ திருச்சங்கம் (The first Christian Church Council in Jerusalem) இதனை உறுதி செய்தது பிற்பாடு அதிக அளவில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்ட ரோமர்களிடம் இருந்த விருத்த சேதனத்தின் மீதான வெறுப்பும், முதலாம் பாப்பரசர் பேதுருவின் எதிர் அறிக்கையும் விருத்த சேதனத்தை கிருத்துவர்களிடம் இருந்து இல்லாமல் செய்தது.
இருப்பினும் இன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில கிழக்கு மரபு வழி காப்திக், எத்தியோப்பியன் மற்றும் எறித்தீன் ஆகிய பிரிவுகளில் விருத்த சேதனம் வழமையான ஒன்றாகவே உள்ளது குறிப்பாக கென்யாவில் உள்ள நோமியா பிரிவு போன்றவை, தனது உறுப்பாண்மைக்கு விருத்த சேதனத்தை கட்டாயமாக்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பு உலகில் பெரும்பான்மையான நாடுகளில் ஆண்கள் 80 சதவீதமான பேர் விருத்த சேதனம் செய்து கொள்வதாக அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரை 20 சதவீதத்துக்கு கீழே வந்து விடுகிறது. இந்தியா இந்துக்களை பெரும் பாண்மையாகக் கொண்ட நாடு என்பதும் ஒரு காரணம்.இலங்கையிலும் இப்படித்தான்.
அமெரிக்காவில் மத வித்தியாசம் பார்க்காமல் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்து வருகின்றனர்.
அறிவியல் பூர்வமாக விருத்த சேதனம் செய்வது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பதையும் அது தற்காலங்களில் மிக இலகுவாக எந்த சிரமமுமின்றி செய்யபடுகின்றது
************************************************************************
சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள்!!உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள்!!
(டாக்டர் த முஹம்மது கிஸார்)
மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே
முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று
தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை
கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே
குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics
என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடமி, கத்னா
செய்வதால் அதிக மருத்துவ பயன்கள் உள்ளன என்று 2012 இல் தான் ஆய்வு
செய்து உறுதிபடுதயுள்ளது.
எளிதான சுகாதாரம் :
கத்னா செய்த ஆணுறுப்பை மிக இலகுவாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக
வைத்து, நுண்கிருமிகள் ஆண்குறியின முன்பக்கம் சேர்வதைத் தடுக்க
முடியும். ஆண்குறியின் முன்பு சேரும் அழுக்கை, தனி அக்கறை எடுக்காமல்
சாதாரணமாக நீக்கி கத்னா செய்த ஆணுறுப்பைப் பராமரிக்க முடியும்.
சிறுநீர்ப் பாதை நோய் தொற்று குறையும் வாய்ப்பு :
சிறுநீர்ப் பாதையில் தொற்றுநோய் வரும் வாய்ப்பு, கத்னா செய்யாத
ஆண்களுடன் ஒப்பிடும்போது கத்னா செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு
சிறுவர்களுக்கு phimosis என்னும் ஆணுறுப்பின் முன் தோல் மிக இறுக்கமாக
இருந்து அதனால் சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை கத்னா செய்த
ஆண்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த phimosis
காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். சில சமயம்
சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம்
இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது
பால்வினை நோய் வரும் ஆபத்து குறைகிறது : கத்னா செய்த ஆண்களுக்கு
எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பு மிக குறைவு. இதை
ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வும், CDC math model என்னும்
அமெரிக்க ஆய்வும் உறுதிபடுத்துகிறது.
ஆணுறுப்பில் வரும் பிரச்சினைகள் குறைவு:
கத்னா செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்க
முடியாமல் போகும் நிலை வருவதால், ஆண்குறியின் முன்தோல் அழற்சி,
ஆண்குறியில் அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து,
கட்டி போன்று உருவாகலாம்
ஆண்குறி கேன்சர் அறவே வாராது,
கத்னா செய்த ஆண்களுக்கு ஆண்குறியில் கேன்சர் வரவே வராது. .
கத்னா செய்த ஆண்களின் மனைவியருக்கு cervical cancer என்னும்
கர்ப்பப்பைவாய் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
காரணம் கத்னா செய்த ஆண்களுக்கு HPV என்னும் Human Pappiloma Virus தொற்று
வரும் வாய்ப்பே இல்லை .இந்த HPV என்னும் வைரஸ் கிருமிதான்
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் ஏற்படுத்துகிறது . மேலும் கத்னா
செய்த ஆண்குறியில், smegma என்னும் மாவு போன்ற அழுக்கு சேராததால்,
ஆண்குறியில் வரும் நோய்த்தாக்கம் குறைவு.இதை இன்னொரு ஆப்ரிக்கன்
ஆய்வு உறுதிப்படுத்துகிறது ·
prostate cancer என்னும் ஆண் இனபெருக்க உள் உறுப்பில் வரும் புற்று நோய்,
கத்னா செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிக குறைவு என்று இன்றைய
ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
கத்னா பற்றி மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் சில..
ஒரு புதிய ஆய்வு இவ்வாறு உறுதிப்படுத்துகிறது : கத்னா செய்வதால்,
ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா ecocsystem எனப்படும் உயிர் பொருட்கள்
சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை, அதிகளவில் மாறுகிறது.
நோயை உருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது
அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜென் இல்லாமல் வாழும் பாக்டீரியாவான anaerobic
பாக்டீரியா வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில் வரும் நோய்த்
தொற்று குறைகிறது.
இதே தகவலை இன்னொரு ஆய்வும் உறுதி செய்கிறது. அமெரிக்க ஜார்ஜ்
வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, " ஒரு பாறையைப்
புரட்டி போட்டு ecosystem மாற்றுவதைப் போல் கத்னாவினால் ஆண்குறி
பக்டீரியா ecosystem மாற்றம் அடைகிறது " என்கிறார் ( "From an ecological
perspective, it's like rolling back a rock and seeing the ecosystem change.").
உலகிலேயே குழந்தை மருதுவதிற்கான மிகப் பெரிய அமைப்பான AAP, கடந்த
13 ஆண்டுகாலமாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த, கத்னாவினால் ஏற்படும்
அதிக நன்மைகளை, கடந்த 2012 ஆண்டு பல ஆய்வுகளுக்குப் பின்
உறுதிப்படுத்தி ஒத்துக்கொண்டுள்ளது..அல்ஹம்துலில்லாஹ்
உலகிலேயே கத்னாவால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு அதிகம்
ஆப்ரிக்காவில் தான் செய்யப்பட்டது
2005 இல் தென் ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கத்னா
செய்யப்பட்ட ஆண், HIV positive என்னும் எய்ட்ஸ் நோய் உள்ள பெண்களோடு
உடலுறவு கொண்டபோது, அவர்களுக்கு அந்தப் பெண்களில் இருந்து வரும் HIV
வினால் ஏற்படும் AIDS 63 சதவிகிதம் குறைவு, இதனால் கத்னா செய்த
ஆண்கள் பாதுகாப்பாக எந்தப் பெண்ணுடனும் தகாத உடலுறவு
கொள்ளலாம் என்று கருதக் கூடாது.இது ஒரு ஆய்வின் அறிக்கை தான்
இஸ்லாம் விபச்சாரத்தைஅறவேதடுக்கிறது .கத்னாவிற்கு எதிராக,
இதன் எதிர்ப்பாளர்களால் வைக்கப்பட்ட ஒரு வாதம்-
கத்னா செய்த ஆண்களுக்கு உடலுறவின் போது அதிக உடலுறவு சுகம் கிடைக்காது
என்பது தான். ஆனால் இந்த வாதத்தையும் பல ஆய்வுகள் பொய் என்று உறுதி
செய்து விட்டன.
இன்னொரு விஷயம் கத்னா செய்யப்பட்ட ஆண்களின் ஆணுறுப்பின் நுனிப்பகுதி, சிறுவயதில் இருந்தே, வேஷ்டி, ஜட்டி அல்லது பேன்ட் போன்றவற்றில் உரசி உரசி பழக்கப்பட்டதால், உடலுறவின் போது பெண்ணுறுப்பில், ஆணுறுப்பை வைத்த உடன் அதிக உணர்ச்சி கூச்சத்தால் ஏற்படும் premature ejaculation எனப்படும் முன்கூட்டியே விந்து வெளியாதல் என்னும் நிகழ்வு, கத்னா செய்த ஆண்ககளுக்கு ஏற்படாது. இதனால் அவர்களின் மனைவியருக்கு உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்டத்தை அடையமுடியாமல் போகும் ஏமாற்றம் ஏற்படாது.
No comments:
Post a Comment