Thursday, 22 May 2014

திருமணம் பற்றி இஸ்லாம்




’திருமணம்’ என்பது எல்லா மக்களாலும் எல்லா மதத்தினராலும் மகிழ்ச்சிகரமாக நடத்தும் வாழ்வியல் நிகழ்ச்சியாகும்.

அந்த வைபவத்தை இறைவனும், இறைதூதரும் காட்டிய நெறிமுறையில் செய்யும்போது மனிதன் இம்மை மறுமைப் பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வான். ’திருமணம்’ எனும் நிகழ்ச்சி வெறும் மகிழ்ச்சிக்கே உரிய நிகழ்ச்சியெனக் கருதி கேளிக்கைகளிலும், வீண் விரயங்களிலும் இறங்கி, மார்க்க நெறிகளை மீறிச்சென்று இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டிச் செல்லும் அவல நிலையை இன்று எங்கெணும் காண முடிகிறது. எனவே, சமுதாயத்தில் வேரூன்றியுள்ள களைகளை பிடுங்கி எறிந்து கண்மூடித்தனமான பழக்கங்களை மண்மூடச் செய்து மாற்றாரும் போற்றும் நமது உயர்ந்த நெறிகளை மக்களுக்கு உணர்த்தி, இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன? அதை எவ்வாறு நடத்துவது? என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அந்த நல்ல நோக்கம் நிறைவேற வல்லான் இறையை வேண்டுகிறோம்.

இஸ்லாமியத் திருமணத்திற்குத் தேவை

1. சீதனமா? சீர் வரிசைகளா ?
2. சடங்குகளா ? சம்பிரதாயங்களா?
3. ஊர்வலமா? ஊர்திகளா?
4. மேளதாளங்களா? வாத்தியங்களா?
5. பூமாலையா ? பூச்செண்டுகளா?
6. ஆரத்தியா? ஐதீகங்களா?
7. தாலியா? கரிசைமணியா?
8. குத்பாவா? வேதமந்திரங்களா?
9. அல்லிஃப் பைனஹுமாவா?
அல்ஃபாத்திஹாவா?
10. கட்டித்தழுவுவதா? காலில் விழுவதா?

ஒரு திருமணம் முழமை பெற தேவையானவை:-

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
2. மணமக்களின் முழமையான சம்மதம் (ஈஜாபு , கபூல்)
3. இரு நீதமுள்ள சாட்சிகள் (ஷாஹித்கள்)
4. மணமகளுக்கு உரிமையுள்ள (மஹர்)

இவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நோக்கம்”இறைவனின் படைப்பு:

உலகிலுள்ள படைப்புகள் யாவும் ஜோடிகளாகவே படைக்கப்பட்டுள்ளன என்பதை இறைவேதம்1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டது. இதை இன்றைய விஞ்ஞானமும் நிருபித்துள்ளது.

’நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காகவே ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகவே நாம் படைத்துள்ளோம்.’
அல்குர்ஆன் 78:8, 51:49, 53:45, 75:39

மனிதன் பிறந்து வளர்ந்து பருவமடைந்ததும் தனக்குரிய துணையைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும் என்பது இறை நியதியாகும்.

’நீங்கள் மனதிற்கிசைந்தோரை மணந்து வாழுங்கள்’ என அல்குர்ஆன் (4:3) வலியுறுத்துகிறது.

படைப்பின் நோக்கம்:

மனித சமுதாயம் பல்கிப் பெருக வேண்டும் என்பது இறைவனின் நோக்கமாகும்.

’மக்களே! ஓரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிலிருந்து அதன் துணையையும் படைத்து அவ்விருவரிலிருந்தே ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகுமாறு செய்தான்’
அல்குர்ஆன் (4:1)


சந்ததிகள் பெருக:

சந்ததிகள் பெருக ஆணும் பெண்ணும் இணைந்து நெறியோடு வாழவேண்டும். அவர்கள் சீராக வாழ இறைவன் அவ்வப்போது இறை தூதர்களை அனுப்பி, அவர்களை மனித சமுதாயத்திற்கோர் முன்மாதிரியாகவும் ஆக்கியுள்ளான். அவர்களும் திருமணம் செய்து மனைவி மக்களோடு வாழ்ந்துள்ளனர்.
’(நபியே) உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும் மனைவி, மக்களையும் அவர்களுக்கு ஆக்கியுள்ளோம்’ என் அல்குர்ஆன் 13:38 வசனம் கூறுகிறது.

ஆகவே திருமணம் என்பது இறைத்தூதர்கள் யாவரும் காட்டிய நெறியாகும்.

நபிவழி

இஸ்லாத்தில் துறவறம் என்பது கிடையாது, நபிகள் நாயகம்(ஸல்) பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்ததோடு, ’நான் திருமணம் செய்துள்ளேன். எனவே யார் எனது வழிமுறையை விட்டுவிடுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்’ எனக்கூறி திருமண வாழ்வுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள்.

திருமணம் ஏன்?

திருமணம் ஏன் செய்யவேண்டும்? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே விளக்கம் தந்துள்ளார்கள்.
திருமணம் என்பது (தீய பார்வைகளை விட்டும்) பார்வையை தடுக்கிறது. (தீய தொடர்புகள், விபச்சாரம் போன்றவைகளிலிருந்து) கற்பை காத்து நிற்கிறது.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

திருமணம் என்பது மனிதன் வாழ்க்கையில் வழுக்கி விடாமல் தடுத்து நிறுத்தும் அரண் என்பதை இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
இன்றைய காலத் திருமணம்

இன்று திருமணம் என்பது சம்பிரதாயச் சடங்குகளைக் கொண்ட கோலாகல விழாவாக மாறிவிட்டது.
ஐந்தே நிமிடங்களில் நடந்தேற வேண்டிய ஓர் எளிய நிகழ்ச்சி ஐந்து மாதங்கள் முதல் ஐந்தாண்டுகள்வரை தயாரிக்கப்படும் இமாலய முயற்சியாகி விட்டது.
செல்வந்தர்களுக்கு இது ஓர் ஆடம்பர விழா! நடுத்தர மக்களுக்கு ஒரு கடின விழா! எளியவர்களுக்கு ஒரு கனவு விழா எண்ணிப்பார்க்கவே உள்ளம் வெதும்புகிறது.
அப்படியானால், திருமணத்தைப் பற்றி அறிவுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ன கூறுகிறது? அது கூறும் இனிய மார்க்கம் என்ன? எளிய வழி என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

நிகாஹ் என்பதன் பொருள்

திருமணத்திற்கு ‘நிகாஹ்’ என அரபியில் சொல்லப்படும். அதன் விரிந்த பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
நிகாஹ்’ என்பதற்கு திருமண ஒப்பந்தம் செய்தல், அல்லது மனைவியுடன் உடல் உறவு கொள்ளுதல் என்பது அகராதிப்படி பொருளாகும்.

நிகாஹ் என்பதற்கு மார்க்க ரீதியான பொருள்: ‘ஆண், பெண் இருவருக்கிடையிலான ஒப்பந்தம்’ என்பதாகும். அதன் குறிக்கோள் ‘அவ்விருவரும் ஒருவர் மற்றவரின் மூலம் சுகம் அனுபவிப்பதும் நல்லதொரு குடும்பத்தை அமைத்து சீரான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதுமாகும்.

“விதி முறைகள்”

திருமணம் புரிவோ் கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள் திருமணம் செய்ய முன்வருவோர் சில விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

1. மணப்பெண்னை தேர்வு செய்தல்

திருமணத்தின் முதற்படி, மணப் பெண்ணைத் தேர்வு செய்வதாகும். அப்பெண் எப்படி இருக்க வேண்டும்?
இஸ்லாம் கூறும் தேர்வு முறை
ஒரு பெண் அவளது செல்வம், குடும்பம், அழகு, மார்க்கப்பற்று என்ற நான்கு விசயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். எனினும் மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இவற்றுள் செல்வமும் அழகும் நிரந்தரமானவையல்ல. குடும்பம் கௌரவம் என்பது இறையச்சம் (தக்வாவைப்) பொறுத்தது.

எனவே, இந்த ஹதீஸ் மார்க்கப் பற்றுள்ள இறை பக்தியுள்ள பெண்ணை மணப்பதே சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.

’மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுப்பதால், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறும் முறைப்படி வாழ்வாள். இறையச்சமுடையவளாகவும் இருப்பாள். கணவனுக்கேற்ற காரிகையாக விளங்குவாள். தன் பொறுப்புகளை உணர்ந்தவளாக செயல்படுவாள்.
’உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி மறுமையில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்கு பொறுப்பாளி ஆவாள். அவளிடம் தமது பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

’சிறந்த மனைவி அமைவதே ஒரு மனிதன் பெறும் மிகப்பெரிய பேறாகும்.’

நபிகள்ள நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
’உலகம் ஒரு செல்வமாகும். அந்த செல்வங்கள் அனைத்திலும் சிறந்தது (ஸாலிஹான) நல்லொழுக்கமும் நற்பண்பும் மிக்க நல்ல பெண்மணியாவாள்’ ( அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி)
ஆதாரம்: முஸ்லிம்.)

இறையச்சம், மர்க்கப்பற்றும், நல்லொழுக்கமும் மிக்கப் பெண்ணே சிறந்த மனைவியாகத் திகழமுடியும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து அறியலாம்.

2. பெண்ணைப் பார்த்து மண முடித்தல்

தேர்வு செய்த பெண்ணை மணமகன் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நபித் தோழர் முகீரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நான் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ள பேசியிருந்தேன். (சிச்சயித்திருந்தேன்) இதனை அறிந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நீர் அப்பெண்ணைப் பாhர்த்துக் கொள்வீராக: ஏனெனில், அது உங்களிருவருக்கிடையே அன்பையும், நட்பையும், இணக்கத்ததையும் ஏற்படுத்தும் (பின் விவகாரமாகி விடக்கூடாது) என நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள். ஆதாரம்: அஹ்மத், திர்மிதி.
ஆனால் இன்றைய சமுதாயத்தில், இத்திருமண ஒழுங்கை கடைபிடிக்காமல் பெற்றோர் கட்டாயத்திற்காகத் திருமணம் முடித்து, பின்னர் பெண்ணை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அல்லது கணவனை பிடிக்கவில்லை என்பதற்காக மணமுறிவு (தலாக்) ஏற்படுவதையும் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கின்றோம்.

ஏனெனில் ஒவ்வொருவரும் தனது வாழ்க்கைத் துணைவியைப் பற்றி மனதில் பல கற்பனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டிருப்பர்.
மணப்பெண்ணை பார்க்காமல் மணம் செய்து. பின்னர் தமது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைந்து விட்டால், இல்வாழ்க்கையே பாதித்து விடுகிறது. எனவேதான், பின்னால் வரும் இவ்விளைவுகளை தவிர்க்க முன்கூட்டியே மணமகன் மணப்பெண்ணைப் பார்க்கவும் மணமகள் மணமகனை பார்க்கவும் இஸ்லாம்
வலியுறுத்துகிறது.

3. பெண்ணை நேரில் பார்த்தல்

மேலும், முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக. தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடிய கை, முகத்தைத் தவிர (வேறு எதையும் வெளியே காட்டலாகாது.)
அல்குர்ஆன்: 24:31.

மேற்கூறிய மறைவசனம் மணமுடிக்கும் மணமகன் பெண்ணை நேரில் பார்க்க விரும்பினால், அனுமதிக்கப்பட்ட அவளது முகம், முன்கைகளை மட்டுமே பார்க்கலாம் என்பது தெளிவாகிறது.
மேலும், அப்பெண்ணை நேரில் பார்க்கும்போது, அவளை மணக்கத்தடை விதிக்கப்பட்ட மஹ்ரமான ஒருவரையும் இருக்கச் செய்ய வேண்டும். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கக்கூடாது.

அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியுள்ள ஒருவர் அப்பெண்ணிடம் அவளைத் (திருமணம் செய்ய) ஹராமான ஒருவர் இல்லாமல் தனிமையில் இருக்க வேண்டாம். (அப்படி இருந்தால்) அவ்விருவருடன் மூன்றாவது நபராக ஷைத்தான் உள்ளான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: அஹ்மத்.

ஆகவே மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதலில் மார்க்கப் பற்றும் ஒழுக்கமும் மிக்க பெண்ணாக தேர்நதெடுத்து அவளை நேரிலும் பார்த்து அதன் பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்பதை நபி மொழிகளிலிருந்து அறியலாம்.

ஒரு திருமணம் முழுமைபெற தேவையானவை

மணமகன் – மணமகள்

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
2. மணமக்களின் முழுமையான சம்மதம் (ஈஜாபு கபூல்)
3. இரு நீதமுள்ள சாட்சிகள்
4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
என நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையிட்டார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
5. மணப் பெண்ணின் சம்மதம் பெறுதல்

மணமகன் பெண்ணைப் பார்த்து சம்மதிப்பது போல் மணப்பெண்ணும் சம்மதிக்க வேண்டும். பெற்றோர் நிர்பந்திக்கும் பெண்ணையோ, ஆணையோ மணக்க வேண்டும் என்ற கட்டாயம் இருவருக்கும் இஸ்லாத்தில் இல்லை.

’கண்ணிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

6. மஹர் கொடுத்து மணமுடித்தல்

மஹர் என்பது திருமணத்தை முன்னிட்டு மணமகன் சார்பாக மணமகளுக்கு வழங்கப்பட வேண்டிய பெண்ணின் உரிமையாகும்.
இன்று மஹர் என்பது ஒரு சம்பிரதாய் சடங்காகி விட்டது. ஜமாஅத் ஏடுகளில் மட்டும் எழுதப்பட்டிருக்குமே தவிர மணப்பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. மஹர் என்றால் என்ன? இதை யார் எப்போது கொடுப்பது? மஹரை நிர்ணயிக்கும் உரிமை யாருக்குரியது? என்பது கூட அறியாதவர்களே இன்று இமாமாக இருந்து நிகாஹ்வை நடத்தி வைக்கிறார்கள்.
இது அவசியம் வழங்கப்பட வேண்டுமென பின்வரும்
இறைமறை கட்டளை இடுகிறது.

மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். அல்குர்ஆன்: 4:4
“மஹர்”


மஹர் வசதிக்கேற்றசாறு வழங்கலாம்.

1. பணம்

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்கு 12.5 ஊகியா (சுமார் 500 திர்ஹம் அதாவது 6500 ருபாய் வரை) மஹர் வழங்கியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்:
அறிவிப்பாளர்: அபூஸலமா(ரலி)
ஆதாரம்: முஸ்லிம்,அபூதாவூது,அஹ்மத்,நஸயீ,இப்னுமாஜா.

2. நகை (தங்கம், இரும்பு)

நாயகத் தோழர் அப்துர் ரஹ்மான இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் தங்கத்தில் ஒரு சிறு அளவை தம் மனைவிக்கு மஹராகக் கொடுத்தார்கள்.
ஆதாரம்: புகாரி.

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணமுடியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்: ஸஹ் இப்னுஸகத் (ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

3. தோட்டம்

ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களின் மனைவி ஒரு தோட்டத்தையே மஹராகப் பெற்றிருந்தார் (சுருக்கம்)
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
ஆதாரம்: புகாரி, நஸயீ.

4. கல்வி புகட்டல்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நாயகத் தொழர் ஒருவர் மஹர் கொடுக்க வசதியே இல்லாதபோது அவருக்குத் தெரிந்த குர்ஆனின் சில அத்தியாயங்களை மணப்பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பதையே மஹராக நிர்ணயித்தார்கள்.
அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

5. அடிமைத்தழையிலிருந்து விடுதலை

ஒரு அடிமையை உரிமைவிட்டு அதையே மஹராக அறிவித்தார்கள் நபியவர்கள்.
அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
பெருமானார்(ஸல்) அவர்கள் ஸபிய்யா என்னும் பெண் போர்க்கைதியை விடுதலை செய்து அதையே மஹராக அவர்கள் மணந்து கொண்டார்கள்.

6. இயலாதோருக்கு காலணிகள், பேரீத்தம் பழங்கள்

இயலாதோருக்கு காலணிகள், பேரீத்தம் பழங்கள், துணிமணிகள் தேவiயான பொருட்கள் போன்றவற்றையும் மஹராக வழங்கலாம் என்பதை நபிமொழிகள் அறிவிக்கின்றன.

ஒரு பெண்மணிக்கு காலணிகளை வழங்கி திருமணம் செய்ய அனுமதித்துள்ளார்கள்.
அறிவிப்பாளார்: ஆமிர் இப்னு ரபீஆ (ரலி)
ஆதாரம்: திர்மிதி, அஹ்மத், இப்னுமாஜா.

7. இஸ்லாத்தை தழுவுதல்

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதையே மஹராக நிர்ணயித்திருப்பதை இஸ்லாம் வரவேற்கிறது.
நாயகத்தோழி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அபூதல்ஹா என்பவர் தம்மை மணம் செய்ய விரும்பியபோது ‘நீர் முஸ்லிமானால் அதுவே எனக்கு மஹராகும் அதைத்தவிர வேறு எதையும் மஹராகக் கேட்க மாட்டேன்’ எனக் கூறினார்கள்.
’இஸலாத்தை ஏற்பதையே மஹராக இருந்தது’ என அவரது மகன் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: நஸயீ.
(இஸ்லாத்தை தழுவுவதே தனக்கு மஹராகும் என உலகில் அறிவித்த ஓரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.)

மஹரில் வரையறை இல்லை

மஹர் என்பதற்கு சில ஊர்களில் சில வரையறைகளை வகுத்துள்ளார்கள். அதிகப்படியாக கொடுக்க விரும்பினாலும் அதை சில ஊர் ஜமாஅத்தினர் அனுமதிப்பதில்லை. 51 ரூபாய், 97.5 ரூபாய், 101 ரூபாய் என மஹ்ரை நிர்ணயம் செய்திருப்பது வேதனைக்குரியதாகும். திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணுமே மஹரைப் பற்றிப் பேசிக் கொள்ளவேண்டுமே தவிர மற்றவர்கள் மஹரை நிர்ணயிக்க முடியாது.

மறரைப் பற்றி பேசவும் கூட்டவும் குறைக்கவும் தகுதி பெற்றோர் மணமக்களே 4:24 மறைவசனம் தெரிவிக்கிறது.
மஹரின் உரிமை பெண்தான் மஹரைக் கேட்க வேண்டும். அந்த உரிமையை இஸ்லாம் அவளுக்கு வழங்கியுள்ளது. மணமகன் மஹ்ரை கொடுக்கக் கடமைப்பட்டிருப்பதால் அவள் கேட்கும் தொகையை அவன் கொடுத்தாக வேண்டும்.

உம்மு ஸுலைம்(ரலி) அவர்களே மஹரை முடிவு செய்த ஹதீஸ் மூலம் மஹரை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கே உரியது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மஹரின் அளவு

எதையும் எளிதாகச் செய்ய வேண்டுமென விரும்பும் இஸ்லாம், மஹரையும் குறைவாக இருப்பதே சிறப்பிற்குரியது. அது எளிய மக்களுக்கு ஒரு சுமையாகி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது.
’குறைவான மஹரே மிகச் சிறந்தது’ என நபிகள் (ஸல்) அவர்கள் குறிப்பிடுள்ளதாக உக்பத் இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: அபூதாவூது. ஹாக்கிம்.

எனினும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பதில் தவறில்லை இருப்பவர் தாராளமாகக் கொடுக்கலாம்.
இரும்பு மோதிரம் முதல் தங்கப்புதையல் வரை கொடுக்கலாம்.

ஒரு (கின்தாரை) பொற்குவியலை (மஹராகக்) கொடுத்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள் அல்குர்ஆன் 4:20 என்ற வசனத்தின் மூலம் ஒரு பொற்குவியலையும் மஹராக வழங்கலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

நிகாஹ்

நிகாஹ்-திருமண ஒப்பந்தம்
திருமண சபையில் திருமண ஒப்பந்தத்தின் போது சாட்சிகள், மஹர் தொகை, அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஊர்களிலும் ஜமா அத்துகள் திருமணப் பதிவேடுகளை வைத்திருப்பர். இவ்விதம் பதிவு செய்வதால் பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. பிரச்சனைகள் எழுந்தாலும் இது தீர்க்கவும் பயன்படும். சாட்சிகள் இறந்து விட்டால்கூட பயன் அளிக்கும். அதனால், திருமண ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக வைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தில் எந்த ஒப்பந்தமாயினும் கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் அதை நீதி மிக்க இரு சாட்சிகளுடன் எழுதி வைக்க வேண்டும் என 2:282 இறைவசனம் கட்டளையிடுகிறது. (இது திருக்குர்ஆனின் மிக நீண்ட வசனமாகும்)

ஒப்பந்த வாசகம் (செய்யும் முறை)

‘இன்ன பொருளை அல்லது பணத்தை மஹராகத் தந்து உங்கள் மகளின் சம்மதத்துடன் நான் திருமணம் செய்து கொள்கிறேன் உங்களுக்கு சமம்மதமா?’ என்று மணமகன் கேட்க பெண்ணின் வலி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லது ‘இன்ன பொருளை அல்லது பணத்தை மஹராக ஏற்று, எனது மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் உங்களுக்கு சம்மதமா? என்று வலி கேட்க மணமகன் ஒப்புக் கொள்ளவேண்டும். அத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்துவிடும்.

இருசாட்சிகள்

திருமணம் செய்தபின் இருசாராரிடையே பிணக்குகள் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் அவசியமாகிறது.

அந்த சாட்சிகள் திருமணத்தின்போது. அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.

சாட்சிகள் ஆண்களாக இருத்தால், இருவரை சாட்சியாக நியமிக்க வேண்டியது அவசியமாகும்.

திருமண உரை

திருமண உரை என்பது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. வாய்ப்பும், சுழ்நிலையும் சரியாக அமைந்தால், செய்து கொள்ளலாம்.

அப்துல் முத்தலிபின் மகள் உமாமா அவர்களை குத்பா ஓதாமலேயே நபி(ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள் என பனீஸுலைம் வகுப்பைச்சார்ந்த நபித் தோழர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமண உரையின் பொருள்

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். எங்களின் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் எங்களின் தீயச் செயல்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை வழி கெடுப்போர் எவருமில்லை. மேலும் அல்லாஹ் வழிகேட்டில் வைத்திருப்பவரை நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது அடியாரும் திருத்தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
அல்லாஹ்வை முழுமையாக அஞ்சுங்கள். முஸ்லிம்களாகவே தவிர மரணிக்க வேண்டாம்.
அல்குர்ஆன் 3:102.

எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ, அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். உறவினர்கள் விசயத்திலும் அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்லாஹ்) உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:1

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்.அல்குர்ஆன் 33:70

இது நபி(ஸல்) அவர்கள பொதுவாக உரை நிகழ்த்தும்போது பயன்படுத்தும் வாசகங்களாகும். திருமணத்திலும் பயன்படுத்தி உள்ளனர். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு, திர்மிதி, இப்னு மாஜா போன்ற நூல்களில் இது சம்மந்தமான ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

இன்றைய திருமணத்தில் இந்த உரை, ஒரு சடங்காக, மந்திரமாக நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சடங்கல்ல. உரையின் நோக்கம் வந்திருப்போரிடம்

இறைவனைப்பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகும். அரபி மொழயில்தான் உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மக்கள் அறியும் மொழியில் உரை நிகழ்த்துவதே சிறந்ததாகும்.


வலீமா திருமண விருந்து

திருமணத்தின் போது மணமகன் வழங்கும் விருந்திற்கு வலிமா என்று சொல்லப்படும். இந்த விருந்து ஒரு சுன்னத் ஆகும்.

அப்துர்ரஹ்மான இப்னு அவ்ஃப்(ரலி) என்ற நபித் தோழர்
ஒரு அன்சாரிப் பெண்ணை மணம்; முடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், என்ன விசேஷம் என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது என பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், எவ்வளவு மஹர் கொடுத்தீர்? என கேட்டார்கள்.
அதற்கு இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரித்தம் பழம் அளவு தங்கம் என்றார்கள்.
ரசூல்(ஸல்) அவர்கள், ‘ஒரு ஆட்டையாவது அறுத்து வலிமா விருந்து வைப்பீராக’ என்றார்கள் (ஹதீஸின் சுருக்கம்)அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)ஆதாரம்:புகாரி, முஸ்லிம்.

வலீமா எப்போது கொடுப்பது?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும், இரண்டாவது நாள் கொடுப்பது ஸுன்னத் ஆகும், மூன்றாவது நாள் கொடுப்பது பகட்டாகும். எவன் பகட்டு காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பகிரங்கப்படுத்துகிறான்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூது (ரலி)ஆதாரம்: திர்மிதீ.

இன்று பல பகுதிகளில் வலீமா என்ற சுன்னத்தான விருந்து நடைமுறையில் இல்லை. அதற்குப் பதிலாக வரவேற்பு (ரிசப்ஷன்) என மாற்றார் கலாச்சாரத்தைப் பின்பற்றி நடத்தப்படும் விருந்துகளே வழக்கில் உள்ளன.எனவே வலிமா என்னும் விருந்து முறை (ஸுன்னத்) அனுசரிக்ப்பட்ட வேண்டும்.
ஆனால் மணமகன் கட்டாயமாக விருந்தளிக்க வேண்டும் என்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. தன் வசதிக்கு ஏற்றவாறு சாதரணமாக சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும். ஆடம்பரமாக வலிமா செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

பெருமானாரின் வலீமா வீருந்துகள்

நபி (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தின்போது இரு முத்துக்கள் அளவுள்ள கோதுமையையே வலிமாவாக அளித்ததாக ஸபிய்யா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(1 முத்து என்பது 750 கிராம் ஆகும். ஆதாரம்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது நாயகத்தோழர்கள் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். விருந்தில் ரொட்டியோ, கறியோ கிடையாது. போர்வையை விரித்து பேரீத்தம்பழம், பாலாடைக்கட்டி நெய்(போன்றவை) பரிமாறப்பட்டன.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நீங்கள் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள்.அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்’
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


திருமண வாழ்த்து துஆ

நமது சமுதாயத் திருமணங்களில், திருமண துஆ என்ற பெயரால், ‘அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா…’ என்று ஆதாரமில்லாத ஒரு துஆவை ஒதி வருகிறார்கள். இதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்துவதற்கென்றே அழகிய துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.

இந்த துஆவின் பின்னனியைப் புரிந்தால் யாரும் இதனை ஓத முன் வரமாட்டார்கள்.

நபி(ஸல்) மணமக்களை வாழ்த்திய துஆ
பாரகல்லாஹ் ல(க்)க வபார(க்)க அலை(க்)க வஜமஅபைனகுமா ஃபீகைர்

பொருள்:

அல்லாஹ் உனக்கு (பரக்கத்) அருள் புரிவானாக. உன்னிலும் (உன் சந்ததிகளிலும்) அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: அஹ்மத்.

மிகச் சிறிய வார்த்தையானது மிகப்பெரிய பொருளையும் கருத்தாழத் தையும் தாங்கி நிறிகிறது.மனிதனுக்கு வேண்டிய அருட் செல்வம், பொருட் செல்வம், மக்கட் செல்வம் ஆகியவற்றைப் பெற்று சமுதாயத்துக்கும், நாட்டிற்கும் வேண்டிய அறப்பணிகளில் கைகோர்த்து நின்று அருஞ்செயலாற்றி சாதனைகள் பல படைக்க வேண்டுமென வாழ்த்தும் இந்த அரிய வாழ்த்தும் துஆ வும் மணமக்களுக்கு மிகவும் பொருத்தமானவையாகும். உள்ளத்தால் உணர்ந்து வாழ்த்தி துஆ செய்வதை விட்டு விட்டு பொருள் புரியாமல் புரியாத மொழியில் கேட்கும் ஒரு சம்பிரதாயப் பிரார்த்தனைக்கு தலை அசைப்பதும் இஸ்லாம் கற்றுத் தராத அல்லிஃப் பைனஹுமா போன்ற துஆக்களை ஓதுவம் சரியல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
நடைமுறையில் சிறந்தது, என்னுடைய நடைமுறை, காரியங்களில் கெட்டது பித்அத்கள், (இஸ்லாமிய மார்க்கத்தில் நபி வழிக்கு மாற்றமாக அதிகப்படியாக சேர்க்கப்பட்ட புதுமைகள்) பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகளே. வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி). ஆதாரம்: புகாரி.

வரதட்சணையும் மலர்மாலையும்

இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிடமிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது. வரதட்சணைக் கொடுமை இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் தமிழகத்திலும், கேரளாவிலும் தலைவிரித்தாடுகிறது. வரதட்சணை பேசாத திருமணங்களே இல்லை எனும் அளவுக்கு வரதட்சணைப் பேரம் நடைபெற்று வருகிறது. நாளிதழ், வார, மாத இதழ்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் வரதட்சணையின் விளைவுகளைப் பற்றி அன்றாடம் செய்திகள் இடம் பெறாமலில்லை.வரதட்சணைக்கு எதிராக பலர் குரல் கொடுத்தாலும் வரதட்சணை ஒழிந்த பாடில்லை.
இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது. அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம்.
அல்குர்ஆன் (25:37)

தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45)

பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு இம்சைப்படுத்தும் மணமகன் வீட்டார் மறுமையில இழிநிலையை எய்துவர் என மேற்கூறிய மறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும், பாதிக்கப்பட்டோரின் மன வேதனையாலும், பிரார்த்தனையாலும் பல்வேறு சோதனைகளை அடைவர்.உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் (ஏக்கப்பெரு மூச்சால் எழும்) பிரார்த்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் அவனது பிரார்த்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி.

மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்ற 4:4 ஆவது இறைக் கட்டளையை மீறிய பாவத்திற்கும் இவர்கள் ஆளாவர். மணமகன் வீட்டார் வரதட்சணையாக கேட்பது அறவே கூடாது ஆயினும் பெண் வீட்டார் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புகளைப் பெறுவதில் தவறில்லை. எனவே இலட்சங்களுக்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக. ஆமீன்.

இன்றையத் திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை யாரும் கண்டுகொள்வதே இல்லை.பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. திருமண விருந்து உட்பட அனைத்து செலவுகளையும் மணமகனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மலர் மாலை

திருமணம் என்றாலே மாலை அணிதல் கண்டிப்பான ஒன்றாகி மாலை இல்லாமல் திருமணமே இல்லை என்னுமளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. இது மாற்று மத கலாச்சாரமாகும்.

மாலை எடுக்கும்போது அணிவிக்கப்படும் போதும், பெற்றோர், பெரியோர் முன்பு நீட்டப்படும்போதும் தங்களின் கண்களிலே ஒன்றிக் கொள்வர். இதற்காக சில ஊர்களில் ஹஸ்ரத்தை வைத்து பாத்திஹா ஓதப்படுகிறது. சில ஊர்களில் கழுத்தில் என்றில்லாமல் தலை, வயிறு, முதுகு என்று உடல் முழுவதும் பூமாலை சுற்றுவர். இது வாடினாலும் வதங்கினாலும் கருகிப்போனாலும் பாதுகாக்கப்பட்டு மணவறையில் பல்லாண்டுகளாக தொங்க விட்டு இப்பூ மாலையைப் புனிதமாகக் கருதுவோரும் உண்டு.

இந்த பூமாலைக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமே இல்லை. அதற்கு எவ்வித புனிதத்துவமும் கிடையாது.


Cuddalore Muslim Friend

Wednesday, 21 May 2014

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள் பற்றி இஸ்லாம்




விருந்தளிப்பதையும், விருந்துக்கு அழைக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள விருந்துகளில் பெரும்பாலானவை விருந்துகள் அல்ல. திருமண விருந்து, அகீகா, புதுமனை புகுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் அந்த விருந்துகளில் இஸ்லாம் கூறும் முறைகள் பின்பற்றப்படுவதில்லை.

“செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

எந்த விருந்துகளில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் படுகிறார்களோ விருந்தளிக்கும் இடத்தில் மார்க்கம் அனுமதிக்காத ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவை இடம்பெற்றால் அத்தகைய விருந்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக விருந்து தயார் செய்து அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படங்களை கண்டதும் திரும்பிச் சென்றுவிட்டனர். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் அமரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ


மரண விருந்து

இறந்தவரின் பெயரால் மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் மற்றும் ஆண்டு நிறைவு நாட்களில் வழங்கப்படும் விருந்துகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே!

ஜஃபர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஜஃபரின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா

இறந்தவரின் குடும்பத்தினரிடம் கூட்டமாகக் கூடுவதையும் அடக்கம் செய்யப்பட்டபின் விருந்து தயாரிப்பதையும் ஒப்பாரி வைப்பதன் ஒருவகையாக நாங்கள் கருதி வந்தோம். அறிவிப்பவர்: ஜஃபர் (ரலி) நூல்: அஹ்மத்

இறந்தவரின் குடும்பத்தினருக்காக மற்றவர்கள் தாம் விருந்தளிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தினர் விருந்தளிக்கக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. விருந்து மகிழ்ச்சியுடன் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். குடும்பத்து உறுப்பினர் ஒருவரை இழந்து நிற்பவர்கள் விருந்தளிப்பதும், அவர்களிடம் விருந்து உண்பதும் மனிதாபிமானமில்லாத செயலாகும்.

குடும்பத்தின் பொறுப்பைச் சுமந்து வந்தவன் மரணித்து அதனால் எதிர்காலம் என்னவாகுமோ என்று கலங்கி நிற்கும் குடும்பத்தினர் நகை நட்டுகளை விற்று, அல்லது அடைமானத்திற்கு வைத்து அல்லது கடன்பெற்று இத்தகைய விருந்துகளை நடத்துகின்றனர். தாங்கமுடியாத சுமை என்று தெரிந்திருந்தும் ஊருக்கும், உலகுக்கும் பயந்து இந்தச் சுமையை தங்கள் மீது ஏற்றிக் கொள்கின்றனர். எனவே மனிதாபிமானமற்ற மரண விருந்துகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.

கொடியேற்றம், கந்தூரி, நேர்ச்சை விருந்து

நாகூர் ஆண்டவருக்காக, முஹ்யித்தீன் ஆண்டவருக்காக என்று முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பிராணிகளை அறுக்கின்றனர். உண்ணுகின்றனர்.

அவ்லியாக்களுக்காக அறுப்பவர்கள் யாரும் அந்த அவ்லியா அதை உண்பார் என்று கருதி அறுப்பதில்லை. அவர் அதை உண்பதுமில்லை. அல்லாஹ் நமக்கு அருள்புரிவான் என்பதற்காக அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுகின்றதைப் போன்று அந்த அவ்லியா அருள்புரிவார் என்பதற்காகவும், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தான் அவருக்காக அறுக்கப்படுகின்றது. அல்லாஹ்வுக்காக அறுக்கும்போது, மாமிசமோ, இரத்தமோ, அவனைச் சென்றடையாது. உள்ளத்திலிருக்கும், பக்தியே அவனைச் சென்றடையும் என்று குர்ஆன் கூறுகிறது. அவ்லியாவுக்காக அறுக்கும்போதும் இரத்தமோ, மாமிசமோ அவரைச் சென்றடையாது. அவ்லியாக்களின் மீது அறுப்பவர் கொண்ட பக்தியே அவரைச் சென்றடைகிறது என்று அவ்லியாவுக்காக அறுப்பவர் நம்புகிறார். இவ்வாறு அறுப்பதும், உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளதை பின்வரும் வசனத்தின் மூலம் அறியலாம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி)யுள்ளான். யார் வலியச் சொல்லாமலும், வரம்பு மீறாமலும் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக்குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன். அல்குர்ஆன் 2:173

தொழுவது, இறைவனுக்காக மட்டுமே அமையவேண்டும் என்பதுபோலவே அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்காகவே அமைய வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது.

நான் அலி (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு இரகசியமாகக் கூறியவை என்ன? என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மக்களுக்கு மறைத்துவிட்டு எனக்கென்று எந்த இரகசியத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதில்லை என்றாலும் என்னிடம் நான்கு போதனைகளைக் கூறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்கள்.

அப்போது நான் அமீருல் முஃமினீன் அவர்களே! அந்த நான்கு போதனைகள் யாவை? என்று கேட்டேன். அதற்கு அலி (ரலி) அவர்கள்

“யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கிறான்.

தம் பெற்றோரை சபிப்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான்.

பித்அத் (மார்க்கத்தில் இல்லாத புதிய செயல்)களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் தருபவனையும் அல்லாஹ் சபிக்கிறான்.

பூமியில் உள்ள எல்லைக் கற்களை மாற்றியமைப்பவனையும் அல்லாஹ் சபிக்கிறான்

(இவையே அந்த நான்கு விஷயங்கள்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதுஃபைல் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தலங்கள் ஏதும் உள்ளனவா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்று கூறினார்கள். அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும், மனிதனுடைய கைவசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஷாபித் இப்னு லஹ்ஹாக் (ரலி) நூல்கள்: அபூதாவூத்

அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழிபாடு நடத்தப்படும் இடங்களில் அதை நிறைவேற்றக்கூடாது என்றால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக என்று தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெருங்குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதுபோல் அறுத்துப் பலியிடாமலும் அவ்வாறு பலியிடப்படும் போது தரப்படும் விருந்தை ஏற்காமலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு தான் அறுக்கப்படும் ஹலாலான பிராணிகள் உண்பதற்கு இரண்டு தனித்தனி நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும் என்பது ஒரு நிந்தனை. அல்லாஹ்வுக்காக மட்டுமே அறுக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படுவதால் அங்கே ஒரு கட்டளை செயல்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கக்கூடாது என்ற மற்றொரு கட்டளை மீறப்பட்டுள்ளது. யார் பெயர் கூறி அறுத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தோம் என்று இவர்கள் கூறமுடியும். யாருக்காக அறுத்தாய்? என்று கேட்டால் நாகூர் ஆண்டவருக்காக என்று தான் இவர்களால் பதில் கூறமுடியுமே தவிர அல்லாஹ்வுக்காக என்று கூற முடியாது. இரண்டு கட்டளைகளில் ஒன்று மீறப்பட்டாலும் உண்ணப்படுவதற்கான தகுதியை அது இழந்துவிடுகின்றது.

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளில் திருமண விருந்து, அகீகா விருந்து, புதுமனை புகுவிழா விருந்து ஆகிய மூன்றைத் தவிர ஏனைய விருந்துகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

அனாச்சாரமான விருந்துகள்

கத்னாவின் விருந்துக்காக உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்க அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர்களிடம் காரணம் கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் கத்னாவுக்குச் செல்லவும் மாட்டோம் அழைக்கப்படவும் மாட்டோம். என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஹஸன் (ரலி) நூல்கள்: அஹ்மத், தப்ரானி

மார்க்கத்தில் சுன்னத் என வலியுறுத்தப்பட்ட கத்னா எனும் நிகழ்ச்சிக்கே விருந்து கிடையாது என்றால் பெண்கள் பருவமடைதல், காது மூக்கு குத்துதல் போன்றவற்றுக்கு விருந்தளிப்பதும், அதில் பங்கெடுப்பதும் கூடாது என்பதை விளங்கலாம். பெயர் சூட்டுதல் கத்னாச் செய்தல் போன்ற வைபவங்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளதால் இதனால் ஏழைகள் படும்பாட்டைச் சொல்ல வேண்டியதில்லை.

ஹஜ்ஜின் பெயரால் நடத்தப்படும் விருந்து

ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முன் அதை அனைவருக்கும் விளம்பரப்படுத்தும் வகையில் ஊரை அழைத்து விருந்து நடத்துவதும் நம் சமுதாத்தில் வழக்கத்தில் உள்ளது.

தொழுகை, நோன்பு, ஜகாத் போன்று இறைவனுக்காகச் செய்யப்படும் கடமைகளில் ஒன்று தான் ஹஜ். மற்ற அமல்களை நிறைவேற்றும்போது எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித் தான் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும்போதும் நடந்து கொள்ள வேண்டும்.

விருந்து கொடுக்க வேண்டிய நிகழ்ச்சிகளில் ஹஜ்ஜுக்குச் செல்வது ஹதீஸில் இடம் பெறவில்லை. திரும்பி வரும்போது தான் ஹாஜி என்பதை பிறர் அறியவும், தங்களின் பெருமையை பறைசாற்றிக் கொள்ளவும், பெருமை விரும்பினால் இது அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரால் தரப்படும் விருந்து அனாச்சாரமான, ஆடம்பரமான விருந்தாக இல்லாமல் இஸ்லாம் அனுமதித்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் தரப்படும் விருந்து, பொதுவாக அன்பை வளர்க்கும் அடிப்படையில் முஸ்லிம்கள் தரும் விருந்தில் கலந்து கொண்டால் அதில் தரப்படும் உணவைக் குறித்து துருவித்துருவி விசாரிக்க வேண்டியதில்லை. அது நம்மீது குற்றமில்லை.

உங்களில் ஒருவர் தனது முஸ்லிமான சகோதரர் வீட்டிற்குச் சென்றால் அவர் உண்ணக் கொடுப்பவைகளை உண்ணட்டும் (அதுபற்றி) துருவிக் கேட்கவேண்டாம். அவர் குடிக்கத்தந்ததை குடிக்கட்டும். (அதுபற்றியும்) கேட்கவேண்டாம் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: பைஹகீ

முஸ்லிம்களின் உணவை துருவித்துருவி ஆராயக்கூடாது என்பதை இதன் மூலம் விளங்கமுடிகிறது. இதற்கு மேல் அவர்கள் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுத்திருப்பார்களா? இல்லையா? என்ற சந்தேகம் வந்தால் நாம் பிஸ்மில்லாஹ் கூறி அதை உண்ணலாம்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சிலர் எங்களுக்கு மாமிசம் தருகின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. (அதை உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள் என்று விடையளித்தார்கள். ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

பிற மத பண்டிகைகளின் போது தரப்படும் விருந்து

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்று மதத்தவர்களிடமிருந்து அன்பளிப்புகளை, விருந்தை ஏற்றுள்ளார்கள்.
உகைதிர் தூமா என்ற மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி

ஜலா நாட்டு மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிற கோவேரிக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் அவர்களுக்கு மேலாடை ஒன்றையும் போர்த்தினார். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) நூல்: புகாரி

யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்

இதுபோல் இன்னும் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிமல்லாத மக்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புக்களைப் பெற்றுள்ளனர். பண்டிகைகளின் போது பெறக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லாததால் அதைப் பொதுவான அனுமதியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. உண்பதிலும், பயன்படுத்துவதிலும் சில தடைகள் உள்ளன. அவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் நமக்கு வழங்கினால் என்ன நிலை? இதைப் பற்றி தனியாக நாம் ஆராய வேண்டும்.

பண்டிகைகளின் போது அவர்கள் தருகின்ற உணவுப் பொருட்களில் சில நமக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கக் கூடும். அதைப் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி மற்றும் இறைவனல்லாதவர்களுக்காக படைக்கப்பட்டவை ஆகியவற்றைத் தான் உங்களுக்கு விலக்கியுள்ளான். (அல்குர்ஆன் 2:173)

முதல் மூன்று உணவுகளையும் நம்முடைய நண்பர்களாக உள்ள மாற்று மதத்தவர்கள் நமக்குத் தரமாட்டார்கள். இவை நமக்குத் தடை செய்யப்பட்டதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

நான்காவதாக இறைவன் குறிப்பிடக்கூடிய உணவு வகைகள் நமக்கு விலக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாததால் பண்டிகைகளின் போது அவற்றை நமக்குத் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பண்டிகைகளின் போது உணவுப் பொருட்களில் சிலவற்றை ஏக இறைவனல்லாத மற்றவர்களுக்காக படையல் செய்வார்கள். ஆசாரமாக நடப்பவர்கள் படையல் செய்யப்பட்டதை வேறு மதத்தவர்களுக்குத் தரமாட்டார்கள். அவ்வாறு தரக்கூடாது என்று அவர்களின் மதநம்பிக்கையால் இருப்பதே இதற்குக் காரணம்.

ஆசாரமாக நடக்காதவர்கள் படைக்கப்பட்டவற்றை நமக்குத் தந்தால் நாம் அதை உண்ணக்கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனில் இது தெளிவாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனம் புண்படமாட்டார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் மாற்று மத நண்பருக்கு அசைவ உணவை கொடுக்க மாட்டோம். அப்படிக் கொடுக்கும்போது அவர் மறுத்தால் அதற்காக கவலைப்பட மாட்டோம். அவர்களின் நம்பிக்கையை மதித்து சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். இதுபோன்றே அவர்களும் எடுத்துக் கொள்வார்கள். எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளாவிட்டால் நாம் நமது கொள்கையை அவர்களுக்கு விளக்கவில்லை என்பது தான் பொருள்.

இத்தனைக்குப் பிறகும் அவர்கள் மனம் கவலைப்படுவார்கள் என்று நினைத்து அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அதைப் பெற்று மற்றவர்களுக்கு வழங்கலாமா? என்ற கேள்வி வரலாம்.

பள்ளிவாசலின் முன்னால் பட்டாடை விற்கப்படுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும்போதும் அணிந்து கொள்ளலாமே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மறுமையில் பாக்கியம் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்!” என்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களுக்கு அந்த ஆடையிலிருந்து ஒரு ஜதை வந்தது. அதை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். “பட்டாடை குறித்து அதிருப்தி வெளியிட்ட நீங்கள் அதை எனக்குத் தருகிறீர்களே?” என்று கேட்டார்கள். “நீர் அணிந்து கொள்வதற்காக நான் அதைத் தரவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவில் இருந்த தனது முஸ்லிமல்லாத சகோதரருக்கு வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

முஸ்லிம் ஆண்களுக்கு பட்டாடை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அந்த ஆடையை நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பெண்களுக்குத்தான் அனுமதி உள்ளதே என்பதற்காக அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமல்லாத இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்குள் வராத தனது சகோதரருக்கு வழங்கியுள்ளார்கள்.
ஆண்களுக்கு இது ஹராம் என்றால் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் தான் ஹராம். முஸ்லிமல்லாத ஆண்களுக்கு இந்தத் தடையைப் போடமுடியாது. அந்த அடிப்படையில் மாற்றுமத நண்பர் மனம் புண்படுவார் என்று எண்ணினால் முஸ்லிமல்லாத யாருக்கேனும் அதைக் கொடுக்கலாம். தவறில்லை. அப்படியானால் நமக்குத் தடை செய்யப்பட்ட மதுபானத்தை யாரேனும் நமக்குத் தந்தால் அதையும் வாங்கி அடுத்தவருக்குக் கொடுக்கலாமா? என்று கேட்கக்கூடாது. ஏனெனில் இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.

வேதம் வழங்கப்பட்டோரின் விருந்து

நமக்கு முன் வேதங்கொடுக்கப்பட்ட யூத, கிருத்துவர்களின் உணவு, இறைச்சி உட்பட உண்ணுவதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

இன்று முதல் உங்களுக்கு (உண்ண) பரிசுத்தமானவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேதத்தையுடைய (யூத, கிருத்து)வர்களின் உணவு உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவு அவர்களுக்கு ஆகுமானதாகும். (அல்குர்ஆன் 5:5)

இந்த வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் யூத கிறிஸ்தவர்களின் உணவு என்பது அறுக்கப்பட்ட மாமிச உணவுகள் என்றே விளக்கமளித்துள்ளனர். நூல்: புகாரி

மேலும் நபி (ஸல்) அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மாமிச உணவுகளை சாப்பிட்டுள்ளனர் என்பதற்கும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்பதற்கும் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. யூதப் பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் நஞ்சூட்டி நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் விருந்தளித்து அதை அவர்கள் சாப்பிட்டார்கள் என்பதற்கு புகாரி உட்பட பல நூல்களில் சான்றுகள் உள்ளன.

நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தோம். அப்போது ஒரு (யூத) மனிதர் ஒரு தோல் பையில் கொழுப்புகளை நிரப்பி வீசினார். அதை எடுப்பதற்காக நான் பாய்ந்து சென்றேன். (எடுத்துவிட்டு) திரும்பிப் பார்த்தபோது அங்கே நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். அதனால் வெட்கமுற்றேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவிக்கின்றார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிமில் இடம்பெற்ற இன்னொரு அறிவிப்பில் நான் திரும்பிப் பார்த்தபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகை செய்தவர்களாக நின்றனர் என்று காணப்படுகிறது.

யூதர்கள் அறுத்த மாமிசக் கொழுப்புகளை நபித்தோழர்கள் எடுத்ததைக் கண்ட நபியவர்கள் புன்னகை மூலம் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இந்தச் சான்றுகளிலிருந்து வேதமுடையவர்கள் அறுக்கும் மாமிச உணவுகள் நமக்கு ஹலால் என்பதையும், அதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது என்பதையும் சந்தேகமற அறியலாம்.

இந்த இடத்தில் அடிப்படையிலில்லாமல் சிலர் எழுப்பும் சந்தேகத்திற்கான விடையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேதம் வழங்கப்பட்டவர்களின் உணவு ஹலால் என்பதை ஒப்புக் கொண்ட பிறகும் வேறொரு சந்தேகத்தை எழுப்புகின்றனர். வேதக்காரர்கள் தற்போது யாரும் கிடையாது. இன்று வேதக்காரர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் வேதங்களை மாற்றிவிட்டனர். முக்கடவுள் கொள்கையை உருவாக்கிவிட்டனர். எனவே இவர்கள் எப்படி வேதங் கொடுக்கப்பட்டவர்களாக ஆகமுடியும்? இவர்களின் உணவு எப்படி ஹலால் ஆக முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

யூத, கிறிஸ்துவர்கள் தங்கள் வேதத்தை மாற்றிவிட்டனர். சொந்த சரக்குகளை அதில் நுழைத்துவிட்டனர். தங்கள் கொள்கையை அவர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர் என்பது உண்மை தான். ஆனால் இந்த மாற்றம் இப்போது ஏற்பட்ட மாற்றமில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே யூதர்கள் தங்கள் கொள்கைகள், வேதங்களை மாற்றிவிட்டனர். முக்கடவுள் கொள்கையை கடைப்பிடித்தனர்.
நபி (ஸல்) காலத்து யூத, கிறிஸ்துவர்களின் கொள்கைகள் எத்தகையனவாக இருந்தன என்பதை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

முக்கடவுள் கொள்கை அன்றே அவர்களிடம் இருந்ததை 5:73, 4:171 ஆகிய வசனங்களிலும், ஏசுவை அவர்கள் அன்றே கடவுளாக கருதி வழிபட்டதை 5:72 வசனத்திலும், வேத வசனங்களை நபி (ஸல்) காலத்திலேயே மாற்றியமைத்தனர் என்பதை 4:46, 5:13, 41, 2:79, 5:15, 3:7, 2:159 ஆகிய வசனங்களிலும் காணலாம்.

இந்த வசனங்கள் யாவும் யூத, கிறிஸ்தவர்கள் இன்றுள்ளதைப் போல் தான் அன்றும் தவறான கொள்கையில் இருந்தனர் என்பதை தெளிவாக அறிவிக்கின்றன. அவர்களின் தவறான கொள்கையைத் தெரிந்தே அவர்களின் மாமிச உணவுகளை இறைவன் அனுமதித்துள்ளான். எனவே யூத, கிறிஸ்துவர்கள் தவறான கொள்கையுடையவர்கள் என்பது வேறு. அவர்களின் உணவு அனுமதிக்கப்பட்டது என்பது வேறு.

அல்லாஹ் அனுமதித்தாலும் நபியவர்கள் வேதமுடையோரின் மாமிச உணவுகளை உட்கொண்டிருப்பதாலும், உண்ண அனுமதித் திருப்பதாலும் அன்றைய வேதக்காரர்களின் கொள்கையும் இன்றைய வேதக்காரர்களின் கொள்கையும் ஒன்றாக இருப்பதாலும் இந்த அனுமதியை மறுக்க, எந்த முகாந்திரமும் இல்லை.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் உணவு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறைவன் தடைசெய்துள்ள பன்றி, இரத்தம் போன்றவற்றை அவர்கள் கொடுத்தாலும் சாப்பிடலாம் என்று புரிந்து கொள்ளக்கூடாது. இறைவன் தடுத்தவற்றை யார் கொடுத்தாலும் அதை உண்ணக்கூடாது.

முஸ்லிம்களின் உணவில் அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுக்கப்பட்டதாகவோ அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப் பட்டதாகவோ இருந்தால் உண்பது எப்படி தடுக்கப்பட்டுள்ளதோ! அதுபோலவே
வேதம் கொடுக்கப்பட்டவரின் உணவிலும் அத்தகைய உணவை உண்ணக்கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.


Monday, 19 May 2014

ஒரு யூதர் குடும்பமே இஸ்லாத்தை தழுவியது..



ஒரு யூதர் குடும்பமே இஸ்லாத்தை தழுவியது... அல்லாஹ் இவர்களின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக..

எதிரிகள் கூட விரும்பும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதற்கு இது போன்று ஏராளமான சான்றுகளை கட்ட முடியும



Sunday, 18 May 2014

ஆரோக்கியம் பற்றி இஸ்லாம்


ஆரோக்கியம் என்றால் என்ன
ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர்.

இஸ்லாம் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு வலியுறுத்தியுள்ளது?

இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துவதைப்போல் உலகில் வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை.

தூய்மை என்பது ஈமானின் பாதி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 328)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு. அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1.ஆரோக்கியம் 2.ஓய்வு. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)

நோயற்ற வாழ்வே ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்குமான ஒரு உந்துகோளாக அமைகின்றது. நோயற்ற வாழ்விற்கு தூய்மை முதல் இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டுகின்றது.

நாளின் துவக்கத்திலேயே இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகின்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியத்தில் கூட உடல், உள சுத்தத்தையே வலியுறுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உளுச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளு செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள் (நூல்: புகாரி 162)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளுச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் தான் தங்கியிருக்கின்றான்.
அறிவிப்பவர்:அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 3295)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து, தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கைகள் உறங்கும்போது எங்கே கிடந்தன என்று அறியாத காரணத்தினால் கைகளை முதலில் கழுவிக் கொள்ளுமாறும்; மூக்கிற்கு தண்ணீர் செலுத்துமாறும் நபி(ஸல்)அவர்கள் கட்டளை இடுகிறார்கள்.

ஏன் என்றால் மூக்கின் நாசிப்பகுதியல் ஷைத்தான் தங்கி இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.

இங்கு ஷைத்தான் தங்கியிருக்கிறான் என்றால் அழுக்குகள் தங்கியிருக்கிறது என்று பொருளாகும். நபி(ஸல்)அவர்கள் ஏதாவது தீங்கான செயல்களைக் குறிப்பிடும் போது ஷைத்தானுடன் ஒப்பிட்டு கூறுவார்கள்.இது போன்று ஏராளமான செய்திகளில் நபி(ஸல்)அவர்கள் தீங்கான விஷயங்களுக்கு ஷைத்தானை ஒப்பிட்டு கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் மலஜலம் கழித்துவிட்டு சுத்தப்படுத்துமாறு கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.

மேலைத்தேய நாடுகளில் மலஜலம் கழித்துவிட்டு முறையாக சுத்தம் செய்யாத காரணத்தினால் அவர்கள் அடிப்படை சுகாதார அறிவற்றவர்களாகவும், தூய்மையில் பின் தங்கியவர்களாகவும் உள்ளனர்.

ஏன், நம் நாட்டவர்கள் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடம் கூட சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யும் பழக்கம் காணப்படுவதில்லை. இதனால் இவர்கள் இலகுவாக சிறுநீர் சம்பந்தமான தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், இஸ்லாம் நாம் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கே வழிகாட்டுகின்றது.

மூக்கிலுள்ள நுண்ணிய மயிர்கள் வெளியிலிருந்து மூக்கிற்குள் வரும் தூசு, துணிக்கைகளை அகற்றக்கூடியவையாகவுள்ளன. அத்துடன் ஐந்து நிமிடங்களிற்கு ஒரு முறை மூக்கினுள் சளி சுரக்கப்பட்டு இதுவும் வெளியிலிருந்து மூக்கினுள் வரும் அந்நிய பதார்த்தங்கள் உடலினுட் செல்லாமல் உடலைப் பாதுகாக்கின்றது. இச்சளி அந்நிய பதார்த்தங்களுடன் மூக்கில் தேங்குகின்ற காரணத்தினால் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் பக்டீரியாக்கள் இலகுவாக நுரையீரலுக்கள் நுழையும் அபாயம் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளுச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 160, 164)

எனவே தூக்கத்திலிருந்து எழுந்தவுடனும், ஐவேளை உளுச் செய்யும்போதும் மூக்கை சுத்தம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தி நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மார்க்கமாக விளங்குகின்றது.

பற் சுத்தம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 7240)

இன்று அநேகமானோர் பற் சுகாதாரத்தைப் பேணாததால் நிறைய பல் வியாதிகளால் அவதிப்படுகின்றனர். மனிதன் சாப்பிடுவதோ மூன்று வேளை. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முடியுமானால் ஐவேளை பல் துலக்குமாறு கட்டளையிடுகின்றார்கள். அதாவது மனிதர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் தான் கட்டாயமாக செய்யும்படி தாம் வலியுறுத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வாய், பற் சுகாதாரத்தைப் பேண வலியுறுத்துகின்றார்கள்.

பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்று பொதுவாக சொல்வார்கள். அதாவது வாய், பல் சுகாதாரம் பேணப்படாதவிடத்து வாய்க்குள் ஏற்படும் கோளாறுகளால் உணவு உட்கொள்ள முடியாமல் மனிதன் ஆரோக்கியத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

British Medical Journal (BMJ) ஆய்வின்படி பல் துலக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இருதய அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின்படி வாயிலுள்ள குறிப்பிட்ட இரு பக்டீரியாக்களில் ஒன்றின் மூலம் 50% மற்றையதின் மூலம் 35% இருதய அடைப்பு ஏற்படுவதற்குரிய அபாயம் காணப்படுகின்றது. பல் துலக்கல், வாய் சுகாதாரம் பேணப்படாதவிடத்து இருதய நோய்களுக்கான அறிகுறிகள் அதிகம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்பாதிப்பு மனிதனுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைக்கு முன் பல் துலக்கலை கடமையாக்க நினைக்கும் அளவிற்கு வலியுறுத்துகிறார்கள்.

இஸ்லாம் போன்ற ஒரு இனிய மார்க்கத்தை உலகில் எந்ந இடத்திலாவது காணக் கிடைக்குமா?

கண்களின் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர் ! (சில நாட்கள்) நோன்பு வையும், (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும் (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 1975

மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்துள்ள இக்காலகட்டத்தில், மனிதனின் நவீன கண்டுபிடிப்பு சாதனங்கள் சிலதின் மூலம் மனிதன் அவனது கண்களின் ஆரோக்கியத்தை இழந்தவனாகக் காணப்படுகின்றான். அவற்றில் சில தொலைக்காட்சிப்பெட்டி, கணனி ஆகியன. இவற்றின் பாவனை இடைவிடாது தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் கண்கள் பார்வையைப் படிப்படியாக இழக்கின்றன. மனிதன் கண்களுக்குக் கொடுக்க வேண்டிய ஓய்வைக் கொடுக்கத் தவறியமையே இதற்குக் காரணம்.

இதனாலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்லித் தருகின்றார்க
ள். மனிதனது கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். இதற்கு முறையான உறக்கமே சிறந்த வழி. ஆனால் இன்று பொருளாதாரத்தை மையமாக வைத்து உலக மக்கள் அனைவரும் இயங்குவதால் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லாமல் இரவு, பகல் பாராமல் உழைக்கத் தழைப்பட்டுள்ளனர். பெரும்பாலான இள வயதினர் பொழுதுபோக்கிற்காகவும், தம் நேரங்களை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்ற ரீதியில் தொலைக்காட்சியிலும், கணனியிலும் தங்கள் நேரங்களை செலவிட்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தங்கள் கண் பார்வையில் பிர்ச்சினை ஏற்படும் வகையில் தமக்குத் தாமே தீங்கிழைத்துக்கொள்கிறார்கள்

எனவே, இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நம் உடலுக்கும், கண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வோமேயானால் உடலினதும், கண்களினதும் ஆரோக்கியம் கெடாமல் வாழலாம்.

தோல் ஆரோக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தினத்தில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 858)

சில தண்ணீர் வசதியில்லாத பிரதேசங்களைப் பொருத்தமட்டில் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியமில்லை. சில நோயாளிகளைப் பொருத்தமட்டிலும் அன்றாடம் குளிப்பது என்பது சாத்தியப்படாமல் போகலாம். இவ்வனைத்தையும் கருத்திற் கொண்டு இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்தும் மார்க்கமாக உள்ளதால் கிழமைக்கு ஒரு முறையாவது அதாவது ஜும்ஆ தினத்தன்று குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமை என்று வலியுறுத்துகின்றது.

வியர்க்கும் போது தோலிலுள்ள வியர்வைத் துவாரங்களின் மூலம் வியர்வை வெளியேறி தோலில் படிகின்றது. குளித்து சுத்தமாகும்போது தோலிலுள்ள இக்கழிவுகள் அகற்றப்பட்டு வியர்வைத் துவாரங்கள் அடைபடாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு கிழமைக்கு மேலாகவும் குளிக்காமல் இருந்தால் வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது.

இஸ்லாத்தைப் பொறுத்தளவில் ஐவேளைத் தொழுகைக்கு வுழூ செய்யும்போதும் முகம், கை, கால், மூக்கு, வாய், காது, தலைமுடி ஆகியவை சுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே, கடமை தவறாத ஒரு முஃமினானவன் எந்ந வேளையிலும் சுத்தத்தைப் பேணியவனாகவே இருப்பான்.

நகங்களை வெட்டி அகற்றப்படவேண்டிய முடிகளை அகற்றி ஆரோக்கியம் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1.விருத்தசேதனம் செய்வது. 2.மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது. 3.அக்குள் முடிகளை அகற்றுவது. 4.மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 6297)

மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடியைக் களைவது, மர்ம உறுப்பு முடியைக் களைவது ஆகியவற்றுக்கு நாற்பது இரவுகளை விட விட்டு வைக்கக்கூடாது என நாங்கள் நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 379)

நகங்கள் வளர்ந்து அதனுள் அழுக்குகள் தேங்குவதால் உணவு உட்கொள்ளும்போது அவையும் உணவுடன் சேர்ந்து சமிபாட்டுத் தொகுதிக்குள் சென்று உணவு சமிபாட்டில் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாந்திபேதி, உணவு நஞ்சாதல் போன்ற நோய்கள் ஏற்படும். அத்துடன் அக்குள் முடி, மர்ம உறுப்பு முடி ஆகியவற்றைக் களையாதவிடத்து வியர்வையின்போது வியர்வை அவ்விடங்களில் படிந்து பக்டீரியாக்களின் தாக்கம் அதிகரிக்கும்.

ஆனால், இஸ்லாம் நாற்பது இரவுகளுக்குள் அக்குள் முடி, மர்ம உறுப்பு முடிகளைக் களைந்து, மீசையைக் கத்தரித்து வாரத்தில்  ஒருமுறை  நகங்களை வெட்டி ஆரோக்கியமான வாழ்வு வாழ வழிகாட்டுகின்றது.

மன ஆரோக்கியம் மனிதனின் கட்டாயத் தேவையே!

பிறர் நலம் நாடுதல்.

உடல் ஆரோக்கியம் எந்தளவிற்கு ஒரு மனிதனுக்கு முக்கியமோ அதேபோல் மன ஆரோக்கியமும் அத்தியவசியமானது. சிலர் உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பினும் மன ஆரோக்கியம் இல்லாத காரணத்தினால் எந்த விடயத்திலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் வாழ்க்கையில் விரக்தியடைகின்றனர்.

இன்று பெரும்பாலான மனிதர்களின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தும் வகையிலும், மனதைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன. இதனால் மனதளவில் நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 10)

மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத் தாரி(ரலி)அவர்கள் (நூல்: முஸ்லிம் 82)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் (நூல்: புகாரி 13)

எனவே, நாம் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருந்தால் நம் நாவினாலும், கைகளினாலும் பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இதனால் மன ஆரோக்கியம் பேணப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 2320)

ஒரு முஸ்லிமானவன் தனக்கு எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு பிறருக்கு உதவக்கூடியவனாகவும், பிறர் நலம் நாடக்கூடியவனாகவும் இருக்க வேண்டும். இதனால் தாம் மனநிறைவைப் பெறுவது மட்டுமல்லாமல் பிறர் மனதையும் குளிர்சிசியடையச் செய்ய முடியும்.

பொது இடங்களில் மனச் சங்கடங்களை ஏற்படுத்துதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம், பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 239)

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் இரண்டு சாபத்திற்குரிய காரியங்களுக்கு பயந்து கொள்ளுங்கள். அந்த இரண்டு காரியங்களும் என்ன இறைத்தூதர் அவர்களே என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். அவை மக்களின் பாதையில் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலஐலம் கழிப்பதும் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் (நூல்: முஸ்லிம் 397)

இன்று சில மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமாக பாதைகளில் நடந்து கொள்கின்றனர். தாம் சுற்றாடலை
அசுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றனர்.

எனவே, இஸ்லாம் காட்டிய வழியில் நடந்து நம் உடல் , உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பிறர் உடல், உள ஆரோக்கியம் கெடாத வண்ணமும் நம் நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக வாழ முயற்சிப்போமாக!

காதல் பற்றி இஸ்லாம்


மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவானது தான் "காதல்"

”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி

”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது.



அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதல்'கற்பு, கன்னித் தன்மை பற்றி அங்கே யாரும் அலட்டிக் கொள்வதில்லை. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு! இளம் பெண்களின் உடை களை உரித்தெடுத்து பவனி வரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுது போக்கு! அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அளந்து பார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவர்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு! பெண்ணின் கற்பை மயக்க மருந்தாக உட்கொள்வதற்கா ன அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதற்காகவே பற்பல தினங்களை பற்பல சந்தர்ப்பங்களையும்     படுத்துகிறார்கள்..


அமெரிக்க பாடகி மடோனா கூறும் போது ‘என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்கா வீ.ஐ.பி.க்களின் பட்டியலை நான் எடுத்து விட்டால் அவர்களுடைய ”பெரிய மனிதர் இமேஜ் அத்தோடு காலி” என்றாள்.

மேலை நாட்டுகளில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லும் அட்வைஸ், "மகளே! யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பாவிக்க மறந்திடாதே!" என்பது தான். கற்பை இழந்தாலும் கர்ப்பத்தோடு வராதே என்பது அவார்களின் தார்மீக மந்திரம்!

பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்லும் பெண்களும் தங்களது பைகளில் (Bags) களில் கருத்தடை மாத்திரை, கருத்தடை உறை வைத்துக் கொள்ள மறந்திடமாட்டார்கள். திருமணத்திற்கு முன் கன்னித் தன்மை இழத்தல் கர்ப்பம் தரித்தல் கர்ப்பத்தை கலைத்தல் ஏன் குழந்தையை பெற்றெடுத்தல் எல்லாம் சர்வ சாதாரணமான விடயம். பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளும் அம்மா பாசம் இல்லாத பிள்ளைகளும் நாளுக்கு நாள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மேலை நாட்டினர் .

”நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது”

என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றி பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம். ஆனால் நடை முறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.

*காதலித்து கைவிடப்பட்ட எத்தனையோ அபலை பெண்களை பார்க்கிறோம்.

*கற்பை சூரையாடி குதூகலிக்கும் எத்தனையோ கயவர்களையும் காண்கிறோம்.

*ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கதறி அழும் கன்னியர்களையும் கண்டிருக்கிறோம்.

*மானம் போய்விட்டதே என்று தற்கொலை செய்துக்கொள்ளும் அப்பாவி பெண்களை யும் அன்றாடம் கேள்விப்படுகிறோம்.

*மகள் ஓடிப்போய்விட்டாளே என்று உயிரை மாய்த்து கொள்ளும் பெற்றோரையும் பாரக்கிறோம்.

*கருவை கலைக்கச் சென்று மரணித்து போன பெண்களின் செய்திகளையும் படித்திருக்கிறோம்.

*காதலியுடன தனித்திருந்து சல்லாபித்த காட்சிகளை மறைமுகமாக புகை படம் எடுத்து வீடியோ பண்ணி ‘பிளக்மையில்’ பண்ணும் காதலன்; அதனை இன்டர்நெட்டுக்கு விட்டு பணம் பறித்து -சம்பாதிக்கும்-விடயத்தையும் பார்க்கின்றோம்.

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் , காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள்தானே இவைகள்.

ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் இதை இஸ்லாம் கண்டிக்கிறது.

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்ணின் கற்பைப் பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.

”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள்தானே”

என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்புக் கேள்விக் குறியாகிவிடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.

உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.'' (51:49)

''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)

கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.


”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும்.                         நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!” ”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும்                           நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31)

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது.

நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

'அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)
'ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)


'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1,முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2,வருமானத்தை அறுத்துவிடும்
3,ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4,நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்'
(ஆதாரம் : அத்தபராணி)

பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்)

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.' (அஹ்மத்)




'உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் .' (புகாரி, முஸ்லிம்)


உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம்  அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்.)



சமூதாயக் கட்டுக்கோப்பை தகர்த் தெறியக் கூடிய அர்த்தமற்ற செயற்பாடுகளை இஸ்லாம் தடைசெய்கிறது. எச்சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, ஊர் சுற்றித் திரிவதைத் தடுக்கிறது. பெண்ணின் நன்மை கருதியே இஸ்லாம் இந்த தடையுத்தரவை பிறப்பிக்கின்றது.


ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதற்காக இவர்கள் வேலிதாண்டிப் போக வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, அவளைத் தொடுவது, அவளுடன் உட்காருவது விபச்சாரத்தின் பக்கம் கொண்டுப் போகக் கூடிய காரியமென கண்டிக்கிறது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் - பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை 'ஸினா' (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

''நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.'' (17:32)

விபரீதம் ஏற்பட முன்பு விளைவைப் பற்றி அறிவுறுத்துகிறது. அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது.

இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது.

(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)

மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.

”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25)

எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலான காதலை இஸ்லாம் திருமணத்திற்கு முன் தடை செய்கிறது என்பதில் 
எந்தவித ஐயமும் இல்லை .                              ****************************

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்


நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே , உங்க  குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க.. 
நாம் பார்க்கும் , கேட்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது  முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :

ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல் .

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :

explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :

மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்

யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி

முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி

தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ ,சிங்களமோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்

2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .
3 .முழு கவனம் மிக அவசியம் .

4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்

Example - news - north ,east,west,south ....

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை

8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 .தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.