மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவானது தான் "காதல்"
”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி
”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது.
அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதல்'கற்பு, கன்னித் தன்மை பற்றி அங்கே யாரும் அலட்டிக் கொள்வதில்லை. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு! இளம் பெண்களின் உடை களை உரித்தெடுத்து பவனி வரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுது போக்கு! அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அளந்து பார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவர்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு! பெண்ணின் கற்பை மயக்க மருந்தாக உட்கொள்வதற்கா ன அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதற்காகவே பற்பல தினங்களை பற்பல சந்தர்ப்பங்களையும் படுத்துகிறார்கள்..
அமெரிக்க பாடகி மடோனா கூறும் போது ‘என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்கா வீ.ஐ.பி.க்களின் பட்டியலை நான் எடுத்து விட்டால் அவர்களுடைய ”பெரிய மனிதர் இமேஜ் அத்தோடு காலி” என்றாள்.
மேலை நாட்டுகளில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லும் அட்வைஸ், "மகளே! யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பாவிக்க மறந்திடாதே!" என்பது தான். கற்பை இழந்தாலும் கர்ப்பத்தோடு வராதே என்பது அவார்களின் தார்மீக மந்திரம்!
பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்லும் பெண்களும் தங்களது பைகளில் (Bags) களில் கருத்தடை மாத்திரை, கருத்தடை உறை வைத்துக் கொள்ள மறந்திடமாட்டார்கள். திருமணத்திற்கு முன் கன்னித் தன்மை இழத்தல் கர்ப்பம் தரித்தல் கர்ப்பத்தை கலைத்தல் ஏன் குழந்தையை பெற்றெடுத்தல் எல்லாம் சர்வ சாதாரணமான விடயம். பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளும் அம்மா பாசம் இல்லாத பிள்ளைகளும் நாளுக்கு நாள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மேலை நாட்டினர் .
”நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது”
என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றி பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம். ஆனால் நடை முறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
*காதலித்து கைவிடப்பட்ட எத்தனையோ அபலை பெண்களை பார்க்கிறோம்.
*கற்பை சூரையாடி குதூகலிக்கும் எத்தனையோ கயவர்களையும் காண்கிறோம்.
*ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கதறி அழும் கன்னியர்களையும் கண்டிருக்கிறோம்.
*மானம் போய்விட்டதே என்று தற்கொலை செய்துக்கொள்ளும் அப்பாவி பெண்களை யும் அன்றாடம் கேள்விப்படுகிறோம்.
*மகள் ஓடிப்போய்விட்டாளே என்று உயிரை மாய்த்து கொள்ளும் பெற்றோரையும் பாரக்கிறோம்.
*கருவை கலைக்கச் சென்று மரணித்து போன பெண்களின் செய்திகளையும் படித்திருக்கிறோம்.
*காதலியுடன தனித்திருந்து சல்லாபித்த காட்சிகளை மறைமுகமாக புகை படம் எடுத்து வீடியோ பண்ணி ‘பிளக்மையில்’ பண்ணும் காதலன்; அதனை இன்டர்நெட்டுக்கு விட்டு பணம் பறித்து -சம்பாதிக்கும்-விடயத்தையும் பார்க்கின்றோம்.
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் , காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள்தானே இவைகள்.
ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் இதை இஸ்லாம் கண்டிக்கிறது.
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்ணின் கற்பைப் பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.
”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள்தானே”
என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்புக் கேள்விக் குறியாகிவிடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.
ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.
உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.
அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.
''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.'' (51:49)
''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)
கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.
”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!” ”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும் நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31)
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது.
நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
'அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (அஹ்மத், அபூதாவூத்)
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)
'ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1,முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2,வருமானத்தை அறுத்துவிடும்
3,ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4,நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்'
(ஆதாரம் : அத்தபராணி)
பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்)
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.' (அஹ்மத்)
'உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் .' (புகாரி, முஸ்லிம்)
உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்.)
சமூதாயக் கட்டுக்கோப்பை தகர்த் தெறியக் கூடிய அர்த்தமற்ற செயற்பாடுகளை இஸ்லாம் தடைசெய்கிறது. எச்சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, ஊர் சுற்றித் திரிவதைத் தடுக்கிறது. பெண்ணின் நன்மை கருதியே இஸ்லாம் இந்த தடையுத்தரவை பிறப்பிக்கின்றது.
ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதற்காக இவர்கள் வேலிதாண்டிப் போக வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, அவளைத் தொடுவது, அவளுடன் உட்காருவது விபச்சாரத்தின் பக்கம் கொண்டுப் போகக் கூடிய காரியமென கண்டிக்கிறது.
திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் - பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை 'ஸினா' (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.
''நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.'' (17:32)
விபரீதம் ஏற்பட முன்பு விளைவைப் பற்றி அறிவுறுத்துகிறது. அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது.
இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது.
(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)
மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.
”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25)
எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலான காதலை இஸ்லாம் திருமணத்திற்கு முன் தடை செய்கிறது என்பதில்
எந்தவித ஐயமும் இல்லை . ****************************
எந்தவித ஐயமும் இல்லை . ****************************
No comments:
Post a Comment