Tuesday, 19 June 2012

அமரிக்க ஏகாதிபத்தியப்பேய் இஸ்லாமிய நாடுகளை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து பயன் அடைந்து கொண்டும் வருகிறது

அமரிக்க ஏகாதிபத்தியப்பேய் இஸ்லாமிய நாடுகளை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து பயன் அடைந்து கொண்டும் வருகிறது . அமரிக்க பிரிட்டிஷ் கள்ளத் தொடர்பில் பிறந்த இஸ்ரேலிய குழந்தைக்கு தாய்ப்பால் ,பாலஸ்தீனிய இஸ்லாமியகுழந்தைக்கு கள்ளிப்பாலா ? அமரிக்காவின் புதிய திட்டம் முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிப்பது தற்போது சிரியாவில், பஹ்ரைனில் சவுதி படைகள் அடுத்தது என்ன ? ஸ்ரீலங்காவில் இந்திய அமைதிப்படை எப்படி ஆத்திரப்படை ஆனது தமிழ் மக்களை பாதுகாக்க வந்து தமிழ்,முஸ்லிம் மக்களையும் அழித்தத்தோடு தானும் அழிவை சந்தித்தது நாம் அறிந்த வரலாறு. முஸ்லிம்-முஸ்லிம் மோதல் நாடகத்தை ஆரம்பித்து வேடிக்கை பார்க்கிறது. அரை நூற்றாண்டு தாண்டிய பாலஸ்தீனிய பிரச்சினைக்கு தீர்வு இன்னும் இல்லை லிபியாவிலும் பாக்கிஸ்தானிலும் உலக அமைதிப்படை தாக்குதல், இவை யாவும் ஒட்டு மொத்த முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, தற்போது இலங்கையிலும் தமிழ்,முஸ்லிம் பகுதிகளில் புத்தர் சிலை வைப்பது பள்ளிவாசல் ,கோயில் தாக்குவது போன்ற சிங்கள தீவிர வாதிகள் ஈடுபடுவதும் இதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது இது இனவாதத்தை தூண்டும் செயலாகும் மூவின மக்கள் மக்கள் வாழும் சின்னஞ்சிறிய அழகிய தீவை சாக்கடையாக்க மீண்டும் ஒரு முறை ஆக்க முயற்சிப்பதை நாம் அனுமதிக்க முடியாது. பள்ளி வாசல் சம்பவங்களுக்கு பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை எவ்வாறு கண்டு கொள்வதில்லையோ அதேபோல்இலங்கையில் முஸ்லிம்கள்மீது சிங்கள தீவிரவாதிகள் மேற்கொள்ளும் எந்த ஒருநட வடிக்கைக்கும் சர்வ அதிகாரங்களை கொண்டுள்ள ஜனாதிபதி கண்டும் காணாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும். உலகில் நியாயம் மறைந்து அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது ,உலக முடிவு நாள் நெருங்கி விட்டது போலும் திருமறையில் சொல்லப்பட்ட யுக முடிவின் அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன .எனவே நாம் அமரிக்காவின் மோசமான இந்த இரட்டை வேட நிலைப்பாடுகளுக்கும் இஸ்ரேலின் மொசாட் நடவடிக்கைகளுக்கும்நமது எதிப்புக்களை தெரிவிப்போமாக!

No comments: