Wednesday, 20 June 2012

நரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்

                                 
   

இன்றைய காலக்கட்டத்தில் இளசுகளுக்ககு கூட நரை முடி பிரச்சனை
உள்தா?சுற்று சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது. நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் தினமும் சேர்‌த்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத காரியம். சரி வந்த நரை முடியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.



தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு மற்றொரு தீர்வு, வெந்தையத்தை இரவே ஊற விட்ட, காலையில் அதனை மைய அரைத்து அந்த விழுதை தலை முடிவேர்களில் பேக் போல போட்டு, காய்வதற்குள் சியக்காய் கொண்டு அலசவும்.


வாரம் ஒரு முறை ஒரு கின்னத்தில் நல்லெண்ணெய், விலக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் தேவையானவற்றை எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் சிறு சிறு வட்ட சுழல் முறையில் மசாஜ் கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்தில் எண்ணெய் போக முடியை சியக்காய் கொண்டு அல்லது ஹெர்பல் ஷாம்பூவை தண்ணீரில் கலந்தோ உபயோகிக்கவும்.

நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், அதனுடன் புதினா, கறுவேப்பிலை. இவை மூன்றையும் தனிதனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள்.



மூன்று நாட்களில் கொற கொறப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு. காய்வதற்குள் அலசவும். இந்த பேக்கை தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எதனுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரை முடி வருவதற்கு முன்பு செய்ய இது தான் சூப்பர் டிப்ஸ்.

இளநரை ஏன் ஏற்படுகிறது தெரியுமா?



No comments: