''நான் என் வாழ்நாள் முழுவதுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறேன். உண்மையைத் தீவிரமாகப் பேசுகிற யாரும் எதிர்ப்புகளைச் சந்தித்தாக வேண்டும்.
''எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது''
''எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது''
''குடும்ப அமைப்பும் சிதையக் கூடாது; ஆனால், பெண் விடுதலையும் அவசியம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதே முரண்பாடு என்று பெண்ணிய வாதிகள் பேசுகிறார்களே?''
''பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, 'கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்' என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது.
தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன்- முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்-கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனை களில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்.''
''உங்கள் எழுத்துக்களால் நிறைய பேர் காயமடைகிறார்களே?''
''யார் காயப்படுகிறார்கள்? பலவீனமானவர்கள் காயப்படுகிறார்கள். பிறரைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் உடையவர்கள் காயப்படுகிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் திருந்தட்டும். அதுதான் அவர்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது.'' சுமார் எட்டு வருடங்கள் ஆகின்றன.ஆனால் சகோதரியின் எழுத்துக்களின் வீரம் என்றும் மறைவதில்லை .
(ஆனந்தவிகடன் 02-07-2006 , கமலா சுரையா பேட்டியிலிருந்து)
எல்லாமே இந்த உலகம்தான், எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்,
இது என் உடல், என் உரிமை,
எப்படிவேண்டுமானாலும் பயன்படுத்துவேன்” என்று
கட்டுப்பாடற்ற பெண் விடுதலையை ஒரு காலத்தில்
ஆதரித்தவர்தான் கமலா தாஸ் எனும் மாதவிக் குட்டி.
அதே கமலா தாஸ் பிந்தைய காலத்தில்
இஸ்லாம் மட்டும்தான் பெண்ணுக்கு
நிம்மதியையும் பாதுகாப்பையும்
மன அமைதியையும் அளிக்கிறது,
பர்தா மட்டுமே பெண்ணுக்கு கண்ணியத்தையும்
சிறப்பையும் தருகிறது என்று கூறி
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு
கமலா சுரைய்யாவாக வாழ்ந்தார்.
கமலாதாசின் “என் கதை” நூல்
கேரளாவையே உலுக்கியது எனில்
அவர் இஸ்லாத்தைத் தழுவியது கண்டு
இந்தியாவே அதிர்ந்தது.
அவருடைய “என் கதை” நூல் ஆங்கிலம் உட்பட
பதினைந்து மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.
அவருடைய தாய் பாலாமணி அம்மாவும்
மிகச் சிறந்த படைப்பாளி ஆவார்.
2009இல் டைம் இதழ் கமலாவை
“நவீன ஆங்கில இந்தியக் கவிதையின் தாய்”
என்று புகழாரம் சூட்டியது.
பறவையின் மணம், தணுப்பு, மானசி,
மாதவிக் குட்டியின் தேர்ந்தெடுத்த கதைகள்,
என் கதை, இளமைக்கால நினைவுகள்,
வருஷங்களுக்கு முன்பு,
டைரிக் குறிப்புகள், நீர்மாதளம் பூத்த காலம்,
நஷ்டப்பட்ட நீலாம்பரி,
சந்தன மரங்கள், மனோமி, மீண்டும் சில கதைகள்,
ஒற்றையடிப் பாதை, யா அல்லாஹ் என்று
ஏராளமாக எழுதிக் குவித்துள்ளார்.
1984இல் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின்
பட்டியலில் கமலா சுரய்யாவின் பெயரும் இருந்தது.
1934 மார்ச் 31-இல் பிறந்த கமலா தாஸ்( மாதவிக் குட்டி)
2009 மே 31-இல் கமலா சுரய்யாவாக இறந்தார்.
இந்த மே 31 அவருடைய ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்.
இறை நெறியாம் இஸ்லாம் ஒன்றே
உண்மையான வாழ்க்கை நெறி என்று
உலகிற்குச் சொல்லிச் சென்ற அந்தச் சகோதரிக்கு
இறைவன் உயர்ந்த சுவனங்களைப் பரிசளிக்கட்டும்...!
இது என் உடல், என் உரிமை,
எப்படிவேண்டுமானாலும் பயன்படுத்துவேன்” என்று
கட்டுப்பாடற்ற பெண் விடுதலையை ஒரு காலத்தில்
ஆதரித்தவர்தான் கமலா தாஸ் எனும் மாதவிக் குட்டி.
அதே கமலா தாஸ் பிந்தைய காலத்தில்
இஸ்லாம் மட்டும்தான் பெண்ணுக்கு
நிம்மதியையும் பாதுகாப்பையும்
மன அமைதியையும் அளிக்கிறது,
பர்தா மட்டுமே பெண்ணுக்கு கண்ணியத்தையும்
சிறப்பையும் தருகிறது என்று கூறி
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு
கமலா சுரைய்யாவாக வாழ்ந்தார்.
கமலாதாசின் “என் கதை” நூல்
கேரளாவையே உலுக்கியது எனில்
அவர் இஸ்லாத்தைத் தழுவியது கண்டு
இந்தியாவே அதிர்ந்தது.
அவருடைய “என் கதை” நூல் ஆங்கிலம் உட்பட
பதினைந்து மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.
அவருடைய தாய் பாலாமணி அம்மாவும்
மிகச் சிறந்த படைப்பாளி ஆவார்.
2009இல் டைம் இதழ் கமலாவை
“நவீன ஆங்கில இந்தியக் கவிதையின் தாய்”
என்று புகழாரம் சூட்டியது.
பறவையின் மணம், தணுப்பு, மானசி,
மாதவிக் குட்டியின் தேர்ந்தெடுத்த கதைகள்,
என் கதை, இளமைக்கால நினைவுகள்,
வருஷங்களுக்கு முன்பு,
டைரிக் குறிப்புகள், நீர்மாதளம் பூத்த காலம்,
நஷ்டப்பட்ட நீலாம்பரி,
சந்தன மரங்கள், மனோமி, மீண்டும் சில கதைகள்,
ஒற்றையடிப் பாதை, யா அல்லாஹ் என்று
ஏராளமாக எழுதிக் குவித்துள்ளார்.
1984இல் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின்
பட்டியலில் கமலா சுரய்யாவின் பெயரும் இருந்தது.
1934 மார்ச் 31-இல் பிறந்த கமலா தாஸ்( மாதவிக் குட்டி)
2009 மே 31-இல் கமலா சுரய்யாவாக இறந்தார்.
இந்த மே 31 அவருடைய ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்.
இறை நெறியாம் இஸ்லாம் ஒன்றே
உண்மையான வாழ்க்கை நெறி என்று
உலகிற்குச் சொல்லிச் சென்ற அந்தச் சகோதரிக்கு
இறைவன் உயர்ந்த சுவனங்களைப் பரிசளிக்கட்டும்...!
No comments:
Post a Comment