Friday, 29 August 2014

துபாயில் கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்து இஸ்லாத்தை




துபாயில் கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்து இஸ்லாத்தை ஏற்ற காட்சி.
சோப்ரா : எனது பெயர் சோப்ரா. நான் ஒரு கண் மருத்துவர். 1984 லிருந்து துபாயில் வேலை செய்து வருகிறேன். ஜாகிர் நாயக்கான உங்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். மிகவும் தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கும் உங்களின் சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனது கேள்விக்கு வருகிறேன். கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்றால் மக்காவில் உள்ள கஃபா என்ற இடத்தில் மட்டும் இறைவன் இருப்பதாக நம்புவது முரண்பாடாக தெரிகிறதே? இதற்கான விளக்கம்?
ஜாகிர்நாயக்: தோழரே! நான் சொன்னதை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். இறைவன் இந்த பூமியின் மையத்தில் இருப்பதாக நான் சொல்லவில்லை. கஃபா என்ற கட்டிடம் உலகின் மையப் பகுதியில் இருப்பதாகத்தான் சொன்னேன். உலக முஸ்லிம்கள் ஒரே சீரான வணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக கஃபாவின் திசையை நோக்கி தொழுகிறோம். இது பற்றி குர்ஆனிலேயே இறைவன் மிகத் தெளிவாக சொல்லி விடுகிறான்.
‘உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவன், இறுதி நாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு மன விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே இறைவனை அஞ்சுபவர்கள்.
-குர்ஆன் 2:177
இந்த வசனத்தின் மூலம் ஒரு திசையை நோக்கி தொழுது விடுவதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மையாகி விடாது. அவனது செயலில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் இருக்க வேண்டும். அவரே உண்மையாளர் என்கிறான் இறைவன். எனவே உலக ஒற்றுமைக்காக இந்த ஏற்பாட்டை செய்யப்பட்டதேயொழிய கடவுள் மெக்காவில் உள்ள கஃபாவில் இருக்கிறார் என்பது அதன் அர்த்தமல்ல. நான் சொன்னதை தவறாக விளங்கியுள்ளீர்கள்.
சோப்ரா: சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தஸரஸில் அனைவரும் அனுமதிக்கப்படும் போது மெக்காவில் முஸ்லிம்களைத் தவிர மற்ற யாரையும் அனுமதிப்பதில்லையே ஏன்?
ஜாகிர் நாயக்: அமிர்தசரஸ் பாதுகாப்பட்ட தூய்மைபடுத்தப்பட்ட பகுதியில் வரவில்லை. ஆனால் கஃபா வருகிறது. அங்குள்ள புல் பூண்டுகளைக் கூட முஸ்லிம்களே பிடுங்கக் கூடாது. வேட்டையாடுதலும் தடுக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு நன்கு தெரியும். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லையாதலால் தவறுகள் நேர்ந்து விடும் என்பதற்காக அனுமதிப்பதில்லை. நீங்கள் உலகின் மற்ற எந்த பள்ளிகளுக்கும் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். துபாயில் உள்ள எந்த பள்ளிக்கும் நீங்கள் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய விசாவைப் பெற வேண்டும். ‘லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அதாவது இறைவன் ஒருவனைத் தவிர வேறில்லை: முகம்மது நபி அந்த இறைவனின் தூதராக உள்ளார்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் நாவால் மொழிந்தால் அந்த விசா உங்களுக்கு கிடைத்து விடும்.
சோப்ரா: இவ்வாறு நான் சொல்லி விட்டால் என்னால் மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல முடியுமா?
ஜாகிர் நாயக்: ஆம்…… கண்டிப்பாக….. நான் முன்பு சொன்ன வார்த்தைகளை சொல்கிறீர்களா?
சோப்ரா: மற்றவர்கள் சொன்னதையும் பார்த்தேன். அந்த வார்த்தைகளை சொல்வதில் எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை.
ஜாகிர் நாயக்: வாயால் சொல்வது மாத்திரம் அல்ல. அந்த நம்பிக்கை உங்கள் மனதில் வர வேண்டும். அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
சோப்ரா: ஒரு உண்மையை நம்புவதில் தயக்கமில்லை. நான் நம்புகிறேன்.
(பலத்த கரகோஷம்)
ஜாகிர் நாயக்: இறைவன் ஒருவன் என்பதை நம்புகிறீர்களா?
சோப்ரா: ஆம். கண்டிப்பாக….
ஜாகிர் நாயக்: முகமது நபி அந்த இறைவனின் தூதுவர் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா?
சோப்ரா: ஆம்…. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஜாகிர் நாயக்: இதை உளப்பூர்வமாக ஒத்துக் கொண்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு முஸ்லிம். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்வதற்கு உங்களை யாரும் இனி தடுக்க முடியாது.
சோப்ரா: நான் உளப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.
(பலத்த கரகோஷம்)
ஜாகிர் நாயக்: வாழ்த்துக்கள் நண்பரே! அந்த உறுதி மொழியை அரபியிலும் ஆங்கிலத்திலும் சொல்கிறேன். அதனை திருப்பி சொல்லுங்கள்.
(அந்த உறுதி மொழியை ஜாகிர்நாயக் சொல்ல சகோதரர் சோப்ராவும் அதனை திரும்ப சொல்லி இஸ்லாமிய வட்டத்துக்குள் நுழைகிறார். எல்லா புகழும் இறைவனுக்கே!)
ஜாகிர் நாயக்: சகோதரர் சோப்ரா! நீங்கள் மெக்கவுக்கு சென்று வர நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.
சோப்ரா: நன்றி, உங்களின் இந்த செய்தியானது என்னைப் போன்று அறியாமையில் சிக்கியிருக்கும் பல கோடி மக்களையும் சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே!

No comments: