Sunday, 23 February 2020



 அஸ்ஸலாமு அலைக்கும்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு நமது தீர்க்கதரிசி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியது போல் மேற்கில் இருந்து சூரியன் எவ்வாறு உதயமாகும் என்பதை நம்மில் யாராவது கற்பனை செய்திருக்கிறோமா!!*

 ஆனால் இப்போது அது எவ்வாறு நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர்*.. விஞ்ஞானிகள் நீண்ட காலமாக MARS குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர் .... பூமியின் அதே திசையில் சுழலும் MARS *இப்போது எதிர் திசையில் சுழலத் தொடங்கியது* ... *இப்போது சூரியன் மேற்கிலிருந்து உதயமாகிறது  MARS இல்.*.இது *RETROGRADE MOTION* என்று பெயரிடப்பட்டுள்ளது ... மேலும் *இது எல்லா கிரகங்களுக்கும் அதிகமாக நிகழ்கிறது.. அடுத்தது EARTH* . !!

 *மேற்கில் இருந்து சூரியன் உதிக்கும் போது மன்னிப்பின் கதவுகள் மூடப்படும்* என்று அல்லாஹ் கூறுகிறான்..  மேலும்... மனந்திரும்புதலுக்கான  துவா ஏற்றுக்கொள்ளப்படாது..இது நடக்க வெகு தொலைவில் இல்லை .. !!

 *திரைப்படங்கள், இசை, பார்ட்டிகள் போன்றவற்றில் நேரத்தை வீணாக்க வேண்டாம்*. குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படிக்கவும் கற்றுக்கொள்ளவும் *அதிக நேரம் செலவிடுங்கள்.. ஐந்து முறை பிரார்த்தனை செய்யுங்கள் .. மேலும் நம் குழந்தைகளுக்கு இஸ்லாத்தைப் பற்றி கற்பிக்கவும்...*

*இஸ்லாம் ஒரு அருமையான மதம்* மற்றும் அல்லாஹ் நமக்கு *அன்பான தீர்க்கதரிசி முஹம்மது (ஸல்)* அவர்களின் *வழியைப் பின்பற்றுவதை மிகவும் எளிதாக்கியுள்ளான்*...

 *ஒரு நொடி உங்கள் சுயத்தை கேளுங்கள்*..  நமது வாழ்வுக்குப் பிறகு
 *நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வை சந்திக்க நாம் தயாரா*???
 நினைவில் கொள்ளுங்கள் .. *அந்த நாளில் நாம் அனைவரும் தனியாக இருக்கிறோம்* ..
  நம் அலைபேசியை ( *Mobile phone ஐ) நாம் நடத்தும் விதத்தில் குர்ஆனை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா* ...?

 *ஒவ்வொரு நாளும் நாம் அதை முன்னுரிமையாக மாற்றினால் என்ன* ??

  ▪ *நாம் நகைச்சுவைகளையும் கிசுகிசுக்களையும் பகிர்ந்து கொண்டோம்* / அனுப்பினோம் ...

  ▪ *ஆனால் நாம் எத்தனை முறை குர்ஆனைத் திறந்து அல்லாஹ்விடமிருந்து அனுப்பிய செய்திகளைப் படித்தோம்*.

  அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது:
   *குர்ஆனைக் கேட்பது மனித உடலில் புற்றுநோய் செல்கள் பரவுவதைக் குறைத்து அவற்றை அழிக்கிறது*.
*நினைவாற்றலை பலப்படுத்துகிறது, மேலும் பக்கவாதத்தைத் தடுக்கிறது*.

Thursday, 29 August 2019

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்து பெண்மணியின் இஸ்லாமிய நேசம்



'நான் சிறு வயதாக இருக்கும்போதே எனக்கு முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் மிக தவறாக எ  கற்பிக்கப்பட்டது.தீவிரவாதிகள், தேச துரோகிகள் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டேன். பெரியவளாகி வளர்ந்தவுடன் அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்கள் நான் கேள்விப்பட்டதற்கு மாற்றமாக மிக சாந்தமாக பழகுவதற்கு மிக இனிமையாக நேர்மையாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அன்று முதல் இஸ்லாத்தை பற்றி தெளிவு கிடைக்க வேண்டும் என்ற தேடல் என் மனதுள் எழுந்தது. இணையத்தின் மூலமாக இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தேன். நாள் ஆக ஆக இஸ்லாம் என்னை ஈர்த்தது. கடைசியாக குர்ஆனை கையில் எடுத்தபோது எனக்குள் எழுந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்று நான் ஒரு இஸ்லாமிய பெண்ணாக உங்கள் முன் அமர்ந்துள்ளேன்.'

Saturday, 10 August 2019

இறைவனின் படைப்புகளிலேயே மிகவும் அற்புதமான ஓர் படைப்பே ஒட்டகமாகும். இது பற்றி அல் குர்ஆனில் இறைவன் " ஒட்டகத்தை நாம் எவ்வாறு படைத்துள்ளோம்" என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என்று.எம்மைப் பார்த்து அல்லாஹ் கேட்கின்றான்.. அதனைப் பறறிய ஓர் ஆய்வு:

"ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது என்பதை பற்றி!..1,400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன !

பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக. உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும். குளிர் காலங்களில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் வாழும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும். குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு விரிந்து இடமளிக்கிறது (மற்ற மிருகங்கள், மனிதர்களுக்கு ஒரு மடங்கு விரிந்தால் போதும் வெடித்து விடும்) மேலும் இரப்பையில் உள்ள நீர் அறைகளிலும் (WATER CELLS) நீரை ஏற்றிக் கொள்கிறது. மனிதனாகட்டும், மிருகமாகட்டும் எல்லாவற்றிற்கும் இர்த்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக (சுழுருNனு) இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்து மட்டும் முட்டை வடிவத்தில் (ROUND) இருக்கும்.

ஒட்டகம் ஒரு மாதம் நீர் அருந்தாமல் இருந்தால் கூட உடல் எடை 3மூமட்டும் குறையும். சாகாது. ஆனால் மனிதர்களுக்கு 72 மணி நேரம் நீரில்லாமல் போனால் உடல் எடையில் 8மூ குறைந்து மரணத்திற்கான ஏற்பாடு ஆரம்பித்து விடும். மனிதர்களுக்கு உடல் எடையில் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிந்துவிடும் ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.

குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழைப்பை தாங்கி கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் மற்றும் மனிதன் இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் வெகுவாக குறைந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் (EXPLOSIVE HEAT DEATH) நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையாது. நீரில்லாமல் இதன் இர்த்தத்தில் நீர் அளவு குறையாது. நீரில்லாமல் நீண்ட நாள் வறட்சி ஏற்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீர் அருந்தினால், அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகளுக்கு (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழந்துவிடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரும் குடிக்கும். சாகவும் செய்யாது.

வெயிலின் சூடு 104 டிகிரியை அடைய வேண்டும்;. அப்போது தான் ஒட்டகத்துக்கு வியர்வையே வரும். அதுவரை வியர்க்காது. அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு தனித்தன்மையே ஆகும். மற்ற பிராணிகள் (மனிதன்) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும். ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் வெப்பத்தை 12 டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொள்ளும். அதனால் அதன் சூட்டை வியர்க்க வைத்து வெளியேற்றாமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வெளியாக்கி வடுகிறது.

ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம். (நம்முடையதாக இருந்தால் வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டின் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றி விடுகிறது அதன் உள் உறுப்புகள்.

மற்ற பிராணிகளின் (மனிதன்) மலம் காய்வதற்கு குறைந்தபட்சமாக இரண்டு நாட்கள் வேவைப்படும். ஆனால் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்றவைத்து விடலாம், என்ற அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது ஒட்டகம். பசுமலம், சிறுநீர் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை.

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். (நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம்) ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசே~ மூக்கமைப்பு தான் இதன் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் இடுக்கான திசு அமைப்புகள். அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பு வழியா மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு.

Monday, 26 November 2018

அகீகா (குழந்தை தர்மம் )

                               

                          “அகீகா” இது குழந்தை கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம், ஆடறுத்து இறைச்சியை விநியோகித்தோ விருந்து சமைத்துக் கொடுத்தோ கொண்டாட இஸ்லாம் காட்டிய சிறந்த வணக்கம்.

இதை எப்படி கொடுக்க வேண்டும்?
யாருக்கு கொடுக்க வேண்டும்?
எப்போது கொடுக்க வேண்டும்?
எதை கொடுக்க வேண்டும்?
என்பன போன்ற சந்தேங்கள் பலருக்கு உண்டு அதை எனது இப்பதிவு தீர்த்து வைக்கும் என நம்புகின்றேன்.

ஒருவருக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டால் அதற்காக இரண்டு ஆடுகளும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஒரு ஆட்டையும் அறுத்தும் விருந்தாகவோ அல்லது இறைச்சியாகவோ கொடுப்பதே அகீகாவாகும்.

இதை தங்களது சொந்தங்கள்/ அயலவர்கள்/ நண்பர்கள் / ஏழை எளியோர் என்று நாம் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுப்பவர்களும் உண்ணலாம் அதில் தடை இல்லை.

ஆட்டுக் கடாய்தான்  கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெட்டை ஆடும் கொடுக்கலாம். ஆனால் குட்டி இருந்து பால் கொடுக்கும் நிலையில் உள்ள பெட்டை ஆட்டை தவிர்த்தல் வேண்டும்.

அவ்வாறே எந்த வயதுடைய ஆட்டை கொடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. பொதுவாக சமைத்துண்ண நாம் எவ்வாறான, எந்த வயதுடைய ஆட்டை விரும்புவோமோ அதை அளவு கோலாக கொண்டால் போதுமானது.

எங்களது குடும்பம் பெரிதாக இருக்கிறது ஆடு கொடுத்து போதாது பகரமாக மாடு கொடுக்க முடியாதா? என்ற கேள்வியும் சிலருக்கு உண்டு.

நிச்சயமாக ஆடுதான் கொடுக்க வேண்டும். ஆடு என்பது அனைத்து சூழலிலும் பிரதேசங்களிலும் வாழக்கூடிய, கிடைக்கக் கூடிய ஒரு பிராணி என்பதாலோ என்னவோ இஸ்லாம் அகீகா விடயத்தில் ஆட்டை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இது குழந்தை பிறந்து ஏழாம் நாளே கொடுக்க வேண்டும்.  மாறாக ஏழு நாட்களுக்குள் என்றோ அல்லது ஏழு நாட்கள் முடிந்த பின்னர் என்றோ தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப் பட்டுள்ளது.குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்

இதை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை வசதி இல்லாதவர்கள் கடன் பட்டு கஸ்ட்டப்பட்டு கொடுப்பது அவசியமில்லை.

இறைவா எனக்கு நீ வசதியைத் தந்திருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ளவேண்டும்        நன்றி; ஹாறூன் ஸஹ்வி       ********************************


بسم الله الرحمن الرحيم
ஒரு குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமே அகீகாவாகும். இந்த அகீகா குறித்து பலர் அதிகமான விடயங்களை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அகீகாவுடைய விடயத்தில் அதிகமானவர்களுக்கு சந்தேகம் எழக்கூடியது பின்வரும் மூன்று விடயங்களிலேயாகும்.
1.அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
2.ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா  கொடுக்கப்பட வேண்டுமா?
3.ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக்கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
ஆகவே, இம்மூன்று வினாக்களுக்குமான தெளிவை இங்கு நாம் உங்களுக்கு சுருக்கமாகக் கூறுகின்றேன்.
முதல் வினா:
அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
விடை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நுபுவ்வத்திற்குப் பின் தனக்காக அகீகா கொடுத்ததாக ஒரு ஹதீஸ் முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பொறுத்தவரையில் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் என்ற தரத்தைப் பெற்றவராவார். ஆகவே, இவர் பலவீனமானவர் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
அத்தபரானீ அல்அவ்ஸத் என்ற நூலிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னுல் முஸன்னா என்பவர் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவர் என்ற காரணத்தால் இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
இமாம்களான அதாஃ, ஹஸன், இப்னு ஸீரீன் ஆகியவர்கள் பெரிய வயதில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீகா கொடுக்க முடியாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்கள். ஏனென்றால் அகீகா என்பது ஒரு தந்தை தனது மகனுக்கு நிறைவேற்ற வேண்டியதாகும் என்ற காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளார்கள். மேலும், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யார் இவ்வாறு அகீகா கொடுக்கிறாரோ அதனை நான் வெறுக்கமாட்டேன் என்றும் மேலும், மற்றோர் அறிவிப்பில் யார் இவ்வாறு செய்கிறாரோ அது சிறந்ததாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் இவ்வாறு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. ஏனென்றால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அவருடைய நூலான பத்ஹுல் அல்லாமில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்முங்னீ 13:397, அத்துஹ்பா பக்கம்: 87, 88, அல்மஜ்மூஃ 8:431
இரண்டாவது வினா:
ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டுமா?
விடை:
ஹன்பலீ மற்றும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் அகீகா கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றார்கள். ஏனென்றால் ஒரு குழந்தை பிறப்பதன் மூலமே அகீகா நிறைவேற்றப்படுகின்றது என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகா குறித்து வரக்கூடிய பொதுவான ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
இமாம் மாலிக் மற்றும் ஹஸன் ஆகியோர் மரணித்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல எனக்கூறுகின்றனர். அக்குழந்தைக்கு ஏழாவது நாளில் அதை அறுக்கப்பட வேண்டும் என்ற திர்மிதியில் வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸை முன்வைத்து இவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு ஏழாவது நாள் உயிர் வாழக்கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சரியான கருத்து ஏழாவது நாளுக்கு முன் மரணித்தவர்களுக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் மற்றும் இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.
மூன்றாவது வினா:
ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக் கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
விடை:
பெரும்பாலான அறிஞர்கள் ஆடு அல்லாத கால்நடைகள் அகீகாவுக்குச் செல்லுபடியாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் சரியான அறிவிப்பு வரிசையின்படி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஒட்டகத்தை அகீகாவுக்காக அறுத்ததாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இக்கருத்து ஹன்பலீ, ஷாபிஈ மற்றும் மாலிகீ ஆகிய மத்ஹப்களைச் சார்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம் மற்றும் மாடு ஆகியன ஆட்டைவிட அதிக கூலியைப் பெற்றுத்தரும் என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற பொதுவான ஹதீஸை முன்வைத்து அவர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆட்டை மாத்திரமே அகீகாவாகக் கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.
ஹப்ஸா பின்த் அப்திர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவருக்கு நீங்கள் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுக்க வேண்டாமா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், என்னுடைய மாமியான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும் மற்றும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தர்கள் எனக்கூறினார்கள்.                                        - முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் 4:328
இந்த ஆதாரத்தை முன்வைத்து இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அவருடைய கருத்தை முன்வைக்கின்றார்கள். மேலும், அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற ஹதீஸை நாம் ஆதாரமாக் கொண்டால் பறவைகளையும் அகீகாக் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மறுப்பளிக்கின்றார்.
மேலும், அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டையே குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் கூறும்போது: ஹதீஸில் வந்த செய்தியோடு சுருக்கிக்கொள்வதே மிக ஏற்றமாகும். யார் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுத்தால் அது செல்லுபடியாகும் என நான் ஆசை வைக்கின்றேன் என்கிறார்கள்.

Thursday, 1 November 2018

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்....

ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.

(ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 1277)


அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)


நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?

இத்தனைக்கும் அப்போது அவர் மன்னர்.
நாட்டுக்கே ஜனாதிபதி.
போர்ப்படை தளபதி..
மார்க்க அறிஞர்.
இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,
சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

ஆக‌,
வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம்.
வறுமையிலும் வீரம்
வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி
வறுமையிலும் சுய மரியாதை
வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.
அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கினார்.

நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

Thursday, 30 August 2018

மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டானா அல்லது

         
மனிதன்_விந்திலிருந்து_படைக்கப்பட்டானா மண்ணிலிருந்து_படைக்கப்பட்டானா?

#பதில்: மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா?’ (அத்தியாயம் 75 ஸூரத்துல் கியாமா – 37வது வசனம்)

மேலும் அருள்மறை குர்ஆனின் பல இடங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘..நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்..‘ (அத்தியாயம் 22 ஸூரத்துல் ஹஜ் – 5வது வசனம்).

மனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமியில் இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.

அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.

மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:

‘இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து..‘ ( அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்கான் 54வது வசனம்).

மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradiction).

உதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் – அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் – மேற்படி இரண்டு கூற்றுக்களும் வௌ;வேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன மூன்று கருத்துகளில் எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

இவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (ஊழவெசயனiஉவழைn) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும்(ஊழவெசயனளைவinஉவழைn).

உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).

ஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும் (Contradiction). முரண்பாடில்லாத, தனிப் பண்புள்ள இரு வேறு கருத்துக்களாகும்.                                            நன்றி ;ABDHUL HAKEEM FB

Sunday, 26 August 2018

நீர் அருந்தும்போது பின் பற்ற படவேண்டிய ஒழுங்கு

                               
                                                 
உட்கார்ந்து கொண்டு நீரை அருந்துங்கள்...
நம் உடலில் 70% நீர் ஆட்கொண்டு உள்ளது...
இந்த நீரை அருந்து வழிமுறைகள் கூட நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகிறார்கள்
நீரை நின்று கொண்டு அருந்துவதினால் நம் உடலின் நுரையீரல் முதல் குடல் வரை செங்குத்தாக நீர் பாய்ச்சப்படுகிறது,
மேலும் கடைசியாக இந்த நீர் குடலை கடக்கும் போது நாம் உண்ட உணவுகள் துரிதமாக கலங்கிய நிலையில் வயிற்றுக்கோளாறு களை ஏற்படுத்துகிறது.

இதனால் பித்தப்பைக் கோளாறு,
நுரையீரல் கோளாறு,மற்றும் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நம் உடலில் ஏற்படுகிறது...

1400 வருடங்களுக்கு முன்னதாகவே அண்ணல் நபி அவர்கள் நீர் அருந்தும் ஒழுங்கு முறை ஒன்றை நபித்தோழர்களுக்கு எடுத்துக்கூறியதை இங்கே நினைவுக்கு கொண்டு வருவது சிறப்பாக அமையும் என எண்ணுகின்றேன்.   

1.பிஸ்மில்லா என்று இறைவனின் பெயரைச் சொல்லி அருந்துங்கள்                              2.தண்ணீரைப் பார்த்து அருந்துங்கள்
3.வலதுகையால் அருந்துங்கள்                              4.உட்கார்ந்து அருந்துங்கள்                                      5.மும்மூன்று மிடர்களாக அருந்துங்கள்.              6.குடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று
     அல்லாஹுவைப் புகழுங்கள்