Monday, 12 May 2014

ஜெர்மன் பாடகி கிறிஸ்டியான பேக்கர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்





இசையிலேயே எப்பொழுதும் மூழ்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியான பேக்கர் 1990 இல் ஐரோப்பாவின் நம்பர் ஒன் சேனலில் தொகுப்பாளராக இருந்தார். வெகு விரைவிலேயே நேயர்களின் விருப்பத்திற்கு உரியவராகவும் இருந்தார். 1965 டிசம்பர் 13ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்கரில் பிறந்த கிரிஸ்டியானா, ஐரோப்பாவின் பிரசித்திப் பெற்ற MTV யின் தொகுப்பாளராக 1996 வரை

 பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஒரு முறை கோல்டன் கேமரா அவார்டும் இரண்டு முறை கோல்டன் ஓல்ட் அவார்டும் பெற்றிருந்தார்.

1992-ல் அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் லண்டனில் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன்பின் இம்ரான்கானின் விருந்தாளியாக பாகிஸ்தான் செல்ல நேர்ந்தது. பாகிஸ்தான் பயணம் கிறிஸ்டியானாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மக்களின் குணமும், பழக்கவழக்கங்களும், மனிதநேயமும் அவரை மிகவும் கவர்ந்தது. எனவே கிறிஸ்துவ மதத்தை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய சூபிசம் அவருக்கு மிகவும் பிடித்தது. மனிதநேயமும்,அன்பும் சூபிசத்தின் மூலம் கிடைக்கிறது என்பது கிறிஸ்டியானாவின் கருத்து. இஸ்லாம் ஏற்றுக்கொண்டபின் 1995க்கு பின் தன் பிறந்த நாடான ஜெர்மனிக்கு சென்றாலும், அங்கிருந்தவர் களின் அணுகுமுறைகள் பிடித்தமானதாக இருக்கவில்லை. .

நண்பர்களும், உறவுகளும் அதிருப்தியுடன் பார்க்க துவங்கியதுடன் அவர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். இப்பொழுது லண்டனில் வசிக்கிறார். மேற்கத்திய இசையின் மூலம் ஏராளமான பணமும் புகழும் கிடைத்தபோதும் ஏதோ ஒரு வெறுமை தன் மனதில் தோன்றுவதாக உணர்ந்தார். இந்த மன உளைச்சலும்,வெறுமையும் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே விலகியது என்றும், 1995ல் வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரேயே ‘’நான் ஒரு முஸ்லிம்’’ என்ற உள்ளுணர்வின் நிழலில் வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைத்ததாக அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் என்றும் அவர் சான்று பகர்கிறார்.

சமீபத்தில்,இஸ்லாத்தின் சிறப்புகளையும், இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ‘’from mtv to mecca’’ [MTV முதல் மக்கா வரை ] என்ற புத்தகத்தை கிறிஸ்டியானா வெளியிட்டார். மேற்கத்திய சமூகத்தில் இந்த புத்தகத்திற்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் பார்லிமென்டின் கீழுள்ள all group parliment committy ஹாலில் 2012-sep 3ம் தேதி புத்தகத்தின் வெளியீட்டைப் பற்றிய சர்ச்சை நடந்தது. பிரிட்டனின் அறிவு ஜீவிகள் பங்கு கொண்ட செமினாரில் இஸ்லாம் சூடேறிய சர்ச்சைக்குட்பட்டது. இந்த புத்தகத்தின் அரபி, ஜெர்மன், இந்தோனேசியா, மலேஷியன் பதிப்புகள் உடன் வெளிவரும். தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் எவ்விதம் ஈர்த்தது என்பதைப் பற்றியே இந்த புத்தகம் கூறுகிறது.புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் , அதன் உள்ளடக்கம், கருத்துக்கள் பற்றி தெளிவாக கூறினார்.

‘சத்தியத்தைத் தேடும் ஒரு பெண்ணின் விடியலுக்கான பயணம்’’ என்று சிந்தனையாளர் தாரிக் ரமதான் இந்த புத்தகத்தை குறித்து சிறப்பித்தார். இஸ்லாம் மதத்தைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் கிறிஸ்டியானாவுக்கு அறிமுகப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய விருப்பம் பாடல்களிலும், உணவுகளிலும் மட்டுமல்ல பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இருந்தது என்பது அவரது சிறப்பியல்புகளாக இருந்தது. தொடர் முயற்சிகளின் பலனாக தன்னுடைய நம்பிக்கையின் மூலம் சத்தியத்தைப் பற்றிய தேடல் எனக்கு அவர்மீது மதிப்பை தந்தது. இந்த புத்தகம் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கவரும் என்பது உண்மை. அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எல்லா வெற்றிகளையும் தந்தருள்வானாக! என்று இம்ரான் கான் புத்தகத்தைக் குறித்து புகழ்ந்து கூறினார்.

ஒரு சர்ச்சையில் இஸ்லாத்தில் ஹிஜாபைக் குறித்து கிறிஸ்டியானா கூறியது; இஸ்லாம் கலாச்சாரத்தோடு உள்ள ஆடை அணிய வலியுறுத்துகிறது. ஹிஜாபை பரிகாசம் செய்பவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தையே  பரிகாசம் செய்பவர்களாவர். காரணம், கலாச்சார நாகரீகம் கொண்ட எந்த சமூகமும் பிற சமூகத்தை பரிகசிப்பவர்களாக இருக்கவே மாட்டார்கள். ஹிஜாபை பற்றி விமர்சிப்பவர் களை அடக்கி ஆள்வதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக, அவர்களே அதைச் சுயமாக தேர்ந்தெடுக்கும் நிலையைக் கொடுக்க வேண்டாமா என்பதே கிறிஸ்டியானாவின் கேள்வி. 43வயதான கிறிஸ்டியானா, ஹோமியோபதி மருத்துவர். இப்பொழுது NBC EUROPE போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்.

யூரோப்பில் சமீபத்தில் நடந்த நபிகள் நாயகம் கருத்தரங்கத்தில் பங்குகொண்டு இஸ்லாத்தில் பெண்களின் உயர்ந்த நிலை, பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புகள், நபிகள் நாயகம் சொன்ன பெண் விடுதலை போன்ற விஷயங்களை அவர் தைரியத்தோடு வெளிப்படுத்தினார். ’’சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதஉரிமை பாதுகாப்பு, பிற உயிரினங்களிடம் கருணை, ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் உதவி செய்தல், போன்ற பல விஷயங்களையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இஸ்லாம் உலகத்தில் வசிக்கும் அனைத்து படைப்புகளின் ஒழுங்கமைப்பு என்ற நிலையில் வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டிருக்கிறது என்று உதாரணங்களுடன் தன் கருத்தை பதிவு செய்தார்.

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!


சூசன் பஷீர் - எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத்
தொடங்கினர்.
சூசனின் மேலதிகாரி ஒரு நாள்  அருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய    ஹஜாபைப்பிடித்திழுத்தார் அவ்வளவுதான்!  பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று! AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் 

சகோதரி சூசன் பஷீர்!
"இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்." நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத்தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!

அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு,
அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு
பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு! AT&T நிறுவனம்
சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகைகொடுக்க வேண்டும்! அது மட்டுமன்று. சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர,
வழக்கறிஞருக்குக்கொடுக்கவேண்டிய தொகை பற்றிப்  பின்னர்   அறிவிக்கப்படும்!
பணியிடத்தில் பாகுபாடுசூசன் பஷீர்! இதுதான் இந்தப் பேறு பெற்ற
பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை
 வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண்இவர்! இவருக்கு என்ன நிகழ்ந்தது?
இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் 
அனைவருக்கும்நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன.
‘The Kansas City Star’ என்ற பத்திரிக்கை தரும் தகவல்களின்படி, இப்பெண் கடந்த
பத்தாண்டுகளாக,அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான
AT&T யில் முக்கியப் பொறுப்பில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டில் இவர் இஸ்லாத்தைத் தழுவியபோது, வடக்குக் கான்சாஸ்
சிட்டியில் வசித்துவந்தார். அப்போது முதல் தொடங்கியதுதான், இவருக்கு,எதிரான
religious discrimination என்னும் மதப் பாகுபாட்டுத் தொல்லைகள்!
இருப்பினும் என்ன? ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டுவந்தார் சூசன்.
உடலை முழுவதுமாக மறைத்து, தலைச்சீலை (headscarf) அணிந்துதான்
அலுவலகத்திற்கு வந்து தனது பணியை முறையாகச் செய்துவந்தார். இவருக்கு
எதிரான,தொல்லைகள்,இவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்குச்  சில மாதங்கள்,முன்பிருந்தே தொடங்கி விட்டனவாம். அதற்கு முன், இவருடைய சிறப்பான சேவைகளுக்காக AT&T நிறுவனம் இவருக்குப் பல பாராட்டுச் சான்றுகளை,வழங்கிச் சிறப்பித்துள்ளதாக அறிகின்றோம்.ஆனால், எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து
வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன்
பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத்
தொடங்கினராம். கண் சாடையால் ‘that thing on her head’ என்று கூறிச் சிரித்து
மகிழ்ந்தனராம்.
"என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது! அதிர்ச்சியுற்றேன்! இதற்கு முன் நான் எப்படியெல்லாம் உடலின் பெரும் பகுதிகள் தெரிய உடை அணிந்து வந்தபோதெல்லாம் இது போன்ற கிண்டல்கள் இல்லை! கண் சிமிட்டல்கள்
இல்லை! குத்தலான பேச்சுகள் இல்லை! யாருக்கும் எந்தக் கவலையும்
இல்லை, என் உடையைப் பார்த்து! இப்போது இஸ்லாத்தைத் தழுவிய பின்னர்
முழுஉடலையும்,மறைத்து உடையணிந்தபோது.....?"என்று வியக்கிறார்;வேதனைப் படுகிறார்.
சகோதரி சூசனின் அலுவலக மேஜை மீது, தலையை மறைத்த தோற்றத்தில்
கன்னி மேரியின் படமும், அதனுடன் பைபிளின் வசனம் ஒன்றும் காட்சிக்காக
வைக்கப்பட்டுள்ளது! அந்த வசனத்தையும் தோற்றத்தையும்,பார்க்கும்போதெல்லாம், சூசனுடன் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் கேட்கும் கேள்வி, அவரை வேதனைப் பட வைக்கிறது! "ஏண்டி! நீ
தீவிரவாதியா? இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறாயா?
Towel-headed Terrorist!" திட்டித் தீர்த்தார்கள்.மார்ச் 2008 வரை பொறுத்துப் பார்த்தார் சகோதரி சூசன். அதன் பின்னர், Equal Employment Opportunity Commission என்ற சட்டப் பாதுகாப்புத் துறையிடம் தன்

முறையீட்டை வைத்தார். அந்தத் துறையும் தனது புலனாய்வைத் தொடங்கிற்று. இதன் பிறகே, எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் கடுமையாயின!இதையொட்டி நிகழ்ந்ததுதான் climax எனும் உச்ச கட்டச் சோதனை! அதுவே,சூசனை வன்மையாக இயக்கிற்று!சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன்
அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம்
கர்ஜிக்கத் தொடங்கிற்று! AT&amp நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார்

சகோதரி சூசன் பஷீர்!
"இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த
அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்." நியாயமான
கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர்
கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள்
வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு,
தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!
அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு,
அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
என்னைப் பணி நீக்கம் செய்ததுகொண்டு, தான் விரும்பிப் பணி செய்து வந்த ஊழியர் ஒருத்தியை இழந்துவிட்டது, AT&T நிறுவனம். நான் எனது வேலையை விட விரும்பவில்லை. ஏனெனில், அவ்வளவுக்கு என் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தேன். எனக்கே ஓர் ஆத்ம திருப்தி, நான் எனது நாட்டு முன்னேற்றத்தில் என் பங்களிப்பை முறையாகச் செய்கிறேன் என்று. இப்போது அந்த மோசமான நிர்வாகத்தின்கீழ் வேலை செய்யவில்லை என்பது கொண்டு,நான் மகிழ்கின்றேன்.
ஆனால், எனது நாட்டின் பொருளாதாரச் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது வாழ்க்கையை எத்துணைப் போராட்டத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று நினைக்கும்போது, என் இதயம்
கணக்கிறது." வேதனைப்படுகிறார் சகோதரி சூசன் பஷீர்.வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று, அவருடைய இல்லற வாழ்விலும் விரிசல் கண்டுள்ளது! ஆம், கணவர் பஷீரிடமிருந்து விவாக ரத்துக் கோரி இப்போது விண்ணப்பமும் செய்துள்ளார் சூசன்!
வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு! AT&T நிறுவனம்
சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று. சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர,
வழக்கறிஞருக்குக்கொடுக்கவேண்டிய தொகைபற்றிப் பின்னர்    அபறிவிக்கப்படும்!
இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது. அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்று ஆக, நாமனைவரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம்
இறைஞ்சுவோமாக!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்



இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் சகோதரி இஸ்லாத்தை ன்
வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...




Sunday, 11 May 2014

இரு கடல்களுக்கிடையே தடுப்பு..


  1.  



இரு கடல்களுக்கிடையே தடுப்பு...

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப் பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே
ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

காஞ்சியில் மாவட்டத்தில் 2 குடும்பத்தில் 12 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

காஞ்சியில் மாவட்டத்தில் 2 குடும்பத்தில் 12 பேர் இஸ்லாத்தை தழுவினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கல்குளம் எனும் கிராமத்தில் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.

அவர்களில் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் 12 நபர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்

சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

காயத்ரி என்ற சகோதரி இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஃபாத்திமா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

TNTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி காயத்ரி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் காயத்ரி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தழுவி கொண்டு தனது பெயரை ஃபாத்திமா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சரளா....!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சரளா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையில் சரளா என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சாரா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....