எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!
பைத்துல் முகத்தஸில் யூத பெண்மணி இஸ்லாத்தை தழுவினார்.....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் இஸ்ரேலை சேர்ந்த யூத பெண்மணி ஒருவர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார்.
உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக பின்னபடும் சதிவலைகளின் பின்னணியில் முதல் இடத்தில் இருப்பது இஸ்ரேல் தான்.
இஸ்லாத்தை எதிர்ப்பதையும், விமர்ச்சிப்பதையுமே முழு முதல் பணியாக கொண்டு செயல்படும் யகூதிகளும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினால் இஸ்லாத்தை ஏற்று கொள்வதை தவிர வேறு வழியே இல்லை என்பதும் உலகம் அறிந்த உண்மை என்பதற்கு சிறந்த எடுத்து காட்டாக அற்புதமான ஒரு நிகழ்வு பைத்துல் முகத்தஸில் அரங்கேறியது.
இஸ்ரேலை சார்ந்த யகூதி பெண் ஒருவர் புனித பூமியான பைத்துல் முகதஸிற்கு வருகை தந்து அங்கிருந்த மார்க்க அறிஞர்களிடம் தான் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்று கொள்ள விரும்புவதாக கூறினார்.
அதனை தொடர்ந்து அந்த இடத்திலேயே தன்னை பகிரங்கமாக இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.
அதன் பிறகு அவர் இஸ்லத்தின் பால் எப்படி ஈர்க்கப்பட்டார் என்ற தகவலை அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் கூறினார்....
அந்த நிகழ்வு இதோ...
கடந்த 2008 ஆம் ஆண்டு தனது முஸ்லிம் தோழியை சந்திப்பதற்காக இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீன பகுதிக்கு அவர் வருகை தந்தார்.
தோழியை சந்தித்து விட்டு திரும்பும்போது பாதையில் வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் எழுதபட்டிருந்த ஒரு புத்தகம் தரையில் கிடப்பதை பார்த்து எடுத்து கொள்கிறார்.
அதை அவர் படிக்கவில்லை, அவர் தனது வீட்டில் வைத்திருந்த அந்த புத்தகம் அப்படியே இருக்கிறது ஆண்டுகள் சில உறுண்டு ஓடுகின்றது.
2013 ம் ஆண்டில் அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிறகு வீடு திரும்புகிறார் இப்போது 2008 ம் ஆண்டு அவர் பாதையில் கண்டெடுத்த புத்தகம் அவரின் கண்ணில் படுகிறது
அதை படித்து தான் பார்ப்போமே என படிக்க தொடங்கினார். அதில் கூறபட்டிருந்த இஸ்லாம் தொடர்பான கருத்துகள் அவரது உள்ளத்தை கவர்கிறது
அது உண்மையெனவும் அவருக்கு புரிகிறது இதனை தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய புத்தகங்களை தேடி படிக்கிறார். இணைய தளங்களில் இருந்தும் இஸ்லாம் தொடர்பான செய்திகளை சேகரிக்கிறார்.
அதன் பிறகு பலஸ்தீனை சார்ந்த ஒரு மார்க்க அறிஞரை தொடர்பு கொண்டு தான் இஸ்லாத்தை ஆராய விரும்புவதாகவும் அதற்குரிய வாய்புகளை உருவாக்கி தரும்படி கேட்கிறார்.
அந்த மார்க்க அறிஞர் உதவியுடன் அதற்கான வாய்பு அவருக்கு உருவாக்கி கொடுக்கப்படுகிறது.
தொடர்ந்து ஆறு மதங்கள் இஸ்லாம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுகிறார், இறுதியில் இஸ்லாத்தை ஏற்று கொள்வது என்ற தீர்மானமானத்திற்கு வந்து தான் இஸலாத்தில் இணையும் முடிவை பகிரங்கமாக அறிவிப்பதற்காக புனித தளமான பைத்துல் முகத்தஸிற்கு வந்து அந்த இடத்திலேயே தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
அந்த அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது...
அல்ஹம்துலில்லாஹ்....!!
No comments:
Post a Comment