--------------------------
1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போது எண்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவத
இவ் வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார்.
அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.
பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார்.
நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்தசான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலு
prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும் அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.
அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே.
முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார்.
prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை.
பிர்அவ்னைப் பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார்.
அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்
மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே”என்று கூறினார்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார்.
‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது.
எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று
அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார்.
முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?”
‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?”
‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது.
மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார்.
‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை.
மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இருந்தாலும் மாரிஸ் அவர்களால்ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார்.
அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும்
‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்.
இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது.
உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக
‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம்உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு
‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார்.
இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது.
எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது.
இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான் அல்ஹம்து லில்லாஹ்...
1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.
சிந்தனையில் மோரிஸ் புகைல்!
திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)
இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.
ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார் அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்றஇறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார். அவ்வசனம்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்
(அல்-குர்ஆன் 10: 92)
இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருககும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!
நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்(அல்-குர்ஆன் 10:92)
No comments:
Post a Comment