Sunday, 27 April 2014

Arnoud van Doorn னின் மகனும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்






எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.. நபிகள் நாயகத்திற்கு எதிரான திரைப்படத்தை எடுத்தவரின் மகன் புனித இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு.

வான் டூர்ன்" மகன் உள்ளிட்ட 37 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் !துபாய் பீஸ் கன்வென்ஷனில் நெகிழ்ச்சி !!

தட்சு நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகரும், இஸ்லாத்துக்கு (நபிகள் நாயகத்திற்கு) எதிராக 'பித்னா' என்ற திரைப்படத்தை தயாரித்தவருமான 'அர்னௌட் வான் டூர்ன்' (Arnoud Van Doorn) கடந்த 2013 ஏப்ரலில் இஸ்லாத்தை ஏற்றார்.

சரியாக ஓராண்டு இடைவெளியில், 'இஸ்கந்தர்' என்ற அவரது மகனும் நேற்றைய தினம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
22 வயது இஸ்கந்தர், முறையாக இஸ்லாமிய கல்வியை கற்ற பின்னர், கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு, முக்கிய காரணியாக இருந்தவர் 'யூனுஸ்' என்ற தனது நண்பர் தான் என்ற அவர்,
இஸ்லாத்தை ஏற்றப் பிறகு எனது தந்தையின் செயல்களாலும் பழக்க வழக்கங்களாலும், தான் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

துபாய் இண்டர்நேஷனல் பீஸ் கன்வென்ஷனில், இஸ்கந்தரையும் சேர்த்து இதுவரை 37 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக நேற்றைய (21/04/14) 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வந்துள்ளது


No comments: