உலகின் இரண்டாவது ஆலயம் மஸ்ஜிதுல் அக்ஸா.
மஸ்ஜிதுல் அக்ஸா. இதன் பொருள் ‘ தொலைவிலுள்ள தொழுமிடம் என்பதாகும்.
இந்தப் பள்ளி வாயில் முதன் முதலாக நபி யஃகூப் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் நபி சுலைமான் அவர்களால் ஜின்களின் மூலமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.
இதைப்பற்றி இறைவன் கூறும் பொழுது ‘ அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள பள்ளிக்கு (மஸ்ஜித் அக்ஸாவுக்கு) ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(ஆல்-குர்ஆன் 17:1)இங்கு ஓரிரவு மிஃராஜ்-விண்ணேற்றத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கிருந்து தான் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். துவக்கத்தில் 18 மாதங்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் தொழுது வந்தனர்.
அதன் பிறகு 2:144-வது வசனம் அருளப்பட்டதும் கஃபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தனர்.கி.பி 771-ல் நில அதிர்வால் சேதப்பட்ட பொழுது இதனை அப்பாஸியக் கலீஃபா மன்சூர் புனர் நிர்மாணம் செய்தார்.
சிலுவைப்போர் வீரர்கள் கையிலிருந்த இதனை ஸுல்தான் ஸலாஹுத்தீன் கி.பி 1187-ல் வெற்றி கொண்டார்.இப்புனிதப்பகுதி (மக்கா, மதீனா எல்லைகளைப் போல்) ‘ஹரம் ஷரீஃப்’ என்று அழைக்கப்படுகிறது. இது மக்கா, மதீனாவுக்கு அடுத்த படியாக புனித இடமாகும்.இங்குத் தொழப்படும் தொழுகை ஒருவர் தன் வீட்டில் தொழுவதை விட ஐநூறு மடங்கு மேலானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment