Sunday 27 April 2014

Viber, Skype போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி ஒருவருக்கு இலவச குரல் அழைப்புக்களை ஏற்படுத்தமுடியும்




Libon எனும் Android மற்றும் iOS Smart சாதனங்களுக்கான மென்பொருளானது ஏனைய Messaging மென்பொருள்களை பார்க்கிலும் சற்று வித்தியாசமான வசதியை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.

நாம் Viber, Skype போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி ஒருவருக்கு இலவச குரல் அழைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் எனின் குறிப்பிட்ட இரு நபர்களும் அந்த தளங்களில் கணக்கினை வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த Libon எனும் மென்பொருளை பயன்படுத்தி 90 இற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள எந்த ஒரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கும் இலவச அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இருப்பினும் இதனை நாம் வரையறை இன்றி பயன்படுத்த முடியாது. அதாவது நீங்கள் குறிப்பிட்ட மென்பொருளில் இணையும் புதிய வாசகர் எனின் ஒவ்வொரு மாதமும் இலவச 60 நிமிடங்கள் என்ற வகையில் முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும். அதன் பின்னும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் எனில் (என்னை மன்னிக்க வேண்டும்) கட்டணம் செலுத்தித் தான் பயன்படுத்த வேண்டும்.

மேலும் உங்கள் நண்பரும் Libon இல் கணக்கொன்றினை வைத்திருந்தால் அது Libon Contact என்ற பக்கத்தில் தரப்பட்டிருக்கும் அந்த இலக்கங்களுக்கு வரையறை இன்றி உங்களால் அழைப்புக்களை ஏற்படுத்த முடிவதோடு எழுத்து வடிவிலும் குரல் பதிவு மூலமும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்.

17Mb அளவினை கொண்டுள்ள இந்த மென்பொருளானது Android 2.3 பதிப்பு இயங்கக்கூடிய சாதனத்திலும் இயங்கக் கூடியது.

இலங்கை, இந்தியா,கனடா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட 90 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பினை ஏற்படுத்த உதவும் இந்த மென்பொருளை பயன்படுத்தி கடல் கடந்து இருக்கும் உங்கள் உறவுகளுடன் தாராளமாக பேசி மகிழுங்கள்.

நீங்கள் இலங்கையில் வசிப்பவரா? அப்படி எனில் இதனையும் பார்க்க: Google இன் சில முக்கிய சேவைகளுக்காக கட்டணமற்ற இணைய சேவையை வழங்கும் Dialog

No comments: