Tuesday, 8 April 2014

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை அன்றி வேறில்லை....!!



உலகப்பொதுமறையான திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று உலகிலுள்ள முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர்.

உலகிலுள்ள பல்வேறு ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் திருக்குர்ஆனை ஆய்வு செய்து திகைத்து நின்று இது இறைவனுடைய வார்த்தை தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தழுவி வருகிறார்கள்.

அந்த வகையில் இறை மறுப்பாளர்களும், கிறித்தவர்களும் திருக்குர்ஆனின் சில வசனங்களை மேற்கோள் காட்டி இது உலக விசயத்துக்கு முரண்பட்டு இருக்கிறது என்று சில வசனத்தை மேற்கோள் காட்டினார்கள்.

1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா ?

2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா ?

3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.

4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.

5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

(திருக்குா்ஆன் 105)

மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தை மையமாக வைத்து...

யானைகள் பசுமையான பிரதேசங்களில் தான் வாழும், பாலைவனங்களில் அவைகளால் வாழ முடியாது என்றும் அரேபிய தேசத்தில் யானைகள் வாழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை இல்லை என்று கூறினார்கள். 

இதற்கு நமது இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது...

அரேபியாவில் வாழ்ந்த யானைகள் என்று குர்ஆனில் குறிப்பிப்படவில்லை. அப்ரஹா என்பவன் ஏமன் நாட்டிலிருந்து யானைப்படைகளை கொண்டு வந்தான். 

அவனது தலைமையகமும் அபீசீனியாவில் தான் இருந்தது.

எனவே தங்களது பாதுகாப்பிற்காக பல மன்னர்களும் பல நாடுகளிலிருந்தும் ஒட்டகம், குதிரை, யானை போன்றவைகளை வைத்திருநதனர்.

யானைகள் வாழ்ந்து வந்ததற்கான பல ஆதாரங்கள் பைபிளில் காணக்கிடைக்கின்றது என்பதை பைபிள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி விளக்கம் சொன்னார்கள்.

அல்லாஹ் அவர்களுக்க நற்கூலி வழங்குவானாக...!!

தற்போது சவுதி அரேபியாவின் வட பகுதியில் பழங்காலத்தில் வாழ்ந்து வந்த யானைகளின் தந்தங்கள் உட்பட யானைகளின் பல பாகங்கள் புவியியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளும் இல்லை, திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தை தான் என்பதற்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதை உலகுக்கு அடையாளப்படுத்தி இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று நிரூபிப்பவர்கள் நிரூபிக்கலாம்.

இறுதியில் இஸ்லாமே வெல்லும்!

நன்றி:அரப் நியூஸ்

No comments: