நடிகை பூஜா லாமா:
நேபாளின் பிரபல நடிகை மற்றும் விளம்பர மாதிரியாக இருந்த பூஜா லாமாவின் இஸ்லாத்தை பற்றிய பார்வை வித்தியாசமாக இருந்தது. அவர் மதங்களின் பொருத்தப்பாடு பற்றிய ஒப்பீட்டு கற்கை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். துபாய் மற்றும் கத்தார் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்குள்ள மதப்பெரியார்களுடன் இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள்
பற்றிய விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டார்.
மதங்கள் பற்றிய தேடல் இவருக்கு பல விடயங்களை புரிய வைத்ததோடு இறுதியாக இஸ்லாத்தை தழுவும் முடிவை எடுத்தார். இஸ்லாத்தில் இணைந்த பின்னர் இஸ்லாம் அவரது வாழ்வில் உன்னத அமைதியை கொண்டு வந்ததாக கூறுகிறார்.
அப்துஸ் சபூர் நூர் என்பவர் இவருடன் ஒரு நேர்காணலை நடாத்தி இருந்தார். நேர்காணலின் வரி வடிவம் பின்வருமாறு:
கே: இஸ்லாத்தின் எந்த அம்சம் நீங்கள் இஸ்லாத்தில் இணைய தூண்டுகோலாக இருந்தது.
ஒரு வருடத்தின் முன்னர் எனது மனதில் ஏனைய மதங்களான இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தை பற்றி அறிய வேண்டும் என்ற ஒரு எண்ணம் உதயமானது. இதன் காரணமாக எனது கல்வி சுற்றுலாவின் பொழுது இவை பற்றிய ஒரு ஒப்பீட்டு கற்கையை ஆரம்பித்தேன். இந்த கற்கையின் மூலம் இஸ்லாமிய போதனைகள், அதன் பங்களிப்பு மற்றும் நாகரிகம் என்பன என்னை மிகவும் கவர்ந்தன. இஸ்லாத்தின் பிரதான விடயம் ஏகத்துவமாகும். அல்லாஹவை நம்புவபர்கள் மிகவும் உறுதியானவர்களாக இருப்பதை அவதானித்தேன்.
கே: உலகளாவிய ஊடகங்கள் இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இது உங்களை பாதிக்கவில்லையா?
உண்மையில் இந்த பிரச்சாரங்களும் நான் இஸ்லாத்தை தழுவ ஒரு காரணமாகும். இஸ்லாம் அனைவருக்கும் சம உரிமையை உறுதிப்படுத்துவதோடு அனைவருக்கும் பாகுபாடின்றி நீதியையும் அமைதியையும் வழங்குகின்றது.
கே: நீங்கள் திரைப்பட துறையில் இருந்த பொழுது பல தரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானீர்கள். இவற்றின் மூலம் அதிகம் துன்பப்பட்ட நீங்கள் ஒரு தடவை தற்கொலைக்கு கூட முயற்சித்தீர்கள் இது பற்றி சிறிது விளக்குவீர்களா?
எனது சொந்த வாழ்வில் என்னை அவமதித்ததற்காக நான் ஊடகங்களை குறை கூற போவதில்லை. எனது மூன்று திருமணத்திலும் நான் மிகவும் கடினமான காலப்பகுதியிலேயே இருந்தேன். எனினும் இஸ்லாத்தை நான் ஏற்ற பின்னர் எனது வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது. எனக்கு மன அமைதி கிடைத்துவிட்டது. இந்த அமைதி எனக்கு கிடைக்கும் என நான் ஒரு போதும் எண்ணியிருக்கவில்லை. நான் நிறைய வாசிக்கிறேன், தொழுகிறேன், மற்றும் அடுத்தவர்களுக்கு உதுவுகின்றேன் இவைகள் எனக்கு நிம்மதியை தருகின்றன.
கே: பூஜா, இஸ்லாத்தை தழுவிய பின்னர் ஸ்கார்ப் மூலம் தலையை மறைக்கும் நீங்கள் மது மற்றும் புகைத்தல் பழக்கங்களை கை விட்டுள்ளீர்கள். இம்மாற்றங்களை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்.
தயவு செய்து என்னை பூஜா என்று அழைக்காதீர்கள். எனது பெயர் அம்னா பாரூக்கி. எனது வாழ்வு மிகவும் பதற்றமானதாக இருந்தது. அந்த வேளையில் மது மற்றும் சிகரட் ஆகியனவே எனது துணைகளாக இருந்தன. மன அழுத்தத்தினால் மிகவும் அவதிப்பட்டேன். சுய நினைவு இழக்கும் வரை குடிக்கும் பலக்கமுள்ளவளாக இருந்தேன். என்னை சூழ இருட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனினும் இஸ்லாம் இவற்றை என்னிடம் இருந்து அகற்றி ஒரு புதிய வாழ்வை எனக்கு தந்துள்ளது.
கே: இஸ்லாத்தில் பெண்களின் உடலழகை வெளிக்காட்டுவது. பாடல்கள் மற்றும் இசை என்பன தடுக்கப்பட்டுள்ளன. இதை பற்றி என்ன கருதுகிறீர்கள்
இஸ்லாமிய உடைக்கலாச்சாரம் கண்ணியத்தையும் கவுரவத்தையும் வழங்குகின்றது. இசை என் இரத்தத்துடன் கலந்துள்ளதாக் எண்ணியிருந்தேன். ஆனால் தற்போது இசை பற்றி என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.
கே: இஸ்லாத்தின் நோக்கங்கள் எவை என்று கருதுகிறீர்கள்
நான் இஸ்லாம் பற்றி இன்னும் அதிகமாக கற்க விரும்புகிறேன். இவ்வாறு அதிகமாக கற்கும்போது இந்த உலகை நடைமுறை ரீதியாக என்னால் அதிகமாக விளங்கிக்கொள்ள முடியும்.
கே: நீங்கள் இஸ்லாத்தை தழுவியதை தொடர்ந்து உங்களின் குடுபத்தாரின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது.
நான் இஸ்லாத்தை ஏற்ற பின் டார்ஜிலிங் இல் வசிக்கும் எனது குடும்பத்தாருக்கு அறிவித்தேன். எனது தாயார் இதை அங்கீகரித்ததோடு எனக்கு ஒத்துழைப்பும் வழங்கினார். சிலர் நான் நேர் வழியை தேர்ந்தேடுத்துள்ளதாகவும் நான் சந்தோஷமாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்கள்
No comments:
Post a Comment