இஸ்லாத்தை ஏற்கும் கொரிய மக்கள் :
- அவதூறுகளை தகர்த்தெறிந்து அபார வளர்ச்சி பெறும் இஸ்லாம்!
கொரியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள நிலவரப்படி 35,000 (முப்பத்தி ஐந்தாயிரம்) கொரிய மக்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...
அங்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மை உள்ளதா என்று ஆய்வு செய்ய முற்பட்டோம்; திருக்குர்ஆனை படித்தோம்; அதன் காரணமாகவே இஸ்லாத்தை தழுவினோம் என்று அந்த மக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் அவதூறு பிரச்சாரங்களாலேயே இஸ்லாம் அதிவேக வளர்ச்சி அடைகின்றது. தற்போது கொரியாவில் பெருகி வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு அங்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் ஹலால் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பன்றிக்கறி இங்கு விற்பதில்லை என்று அறிவிப்புச் செய்யக்கூடிய அளவிற்கு அந்நாட்டில் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றது இஸ்லாம்.
#முஸ்லிம்கள் #தீவிரவாதிகள் என்றும், அனைவரையும் மிரட்டித்தான் நாம் இஸ்லாத்தில் இணைய வைக்கின்றோம் என்றும், பணத்தாசை காட்டியோ அல்லது பெண்களுக்காகவோதான் இஸ்லாத்தை ஏற்கின்றார்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்வோருக்கு #யுவன் சங்கர் ராஜா முதல் #கொரிய மக்கள் வரை பதிலடி கொடுத்து வருகின்றார்கள்.
ஆக மொத்தத்தில் அவதூறுகளை அடித்து நொறுக்கி, பொய் வாதங்களை தகர்த்தெறிந்து இஸ்லாம் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றது. நாம் இந்த அளவிற்கு இஸ்லாத்தின் மீது அவதூறு பிரச்சாரங்களை அள்ளி வீசிய போதும் #இஸ்லாம் ஏன் அபார வளர்ச்சி அடைகின்றது என்பதை இஸ்லாத்தின் எதிரிகள் சிந்தித்தால் இது இறைவனின் மார்க்கம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அத்தகைய இஸ்லாத்தின் எதிரிகளையும் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்ய அழைக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்....
No comments:
Post a Comment