அமெரிக்காவின் புகழ்பெற்ற Fox TV அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
ஒருபுறம் இஸ்லாத்திற்கு வெளியில் இருந்து இஸ்லாத்தின் எதிரிகளின் தாக்குதல். இன்னொரு புறம் இஸ்லாத்துக்கு உள்ளிருந்து இஸ்லாத்தை பாதுக்காக்கிறோம் என்ற பெயரில் சில வழிகேடர்கள் செய்யும் தீவிரவாதம். இத்தனைக்கு மத்தியிலும் எப்படி இது சாத்தியமாகிறது?
வாளாலோ தீவிரவாதத்தாலோ மனிதர்களின் உள்ளங்களை வெல்ல முடியுமா? செப்டெம்பர் 11 தாக்குதல், இன்னும் உலகெங்கும் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் என எல்லாப்புறமும் இஸ்லாத்திற்கு கெட்ட பெயர்களை உருவாக்கும் செயல்பாடுகள் நடந்தேறியும் இந்த மக்களின் உள்ளங்களை மாற்றியது எது?
அதற்கு நீங்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான். (அல் குர்ஆன் 9:32)
எத்தனை பேர் திட்டம் போட்டோ அல்லது தன் அறியாமையாலோ இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் தேடி தர நினைத்தாலும் இறைவனின் ஒளியை யாராலும் ஊதி அணைத்துவிட முடியாது. கடைசி வரை இறைவன் அதனை பாதுகாப்பான்.
மேலும் இது போன்ற இஸ்லாமிய ஆய்வு தொடர்களையும், ஆவணப்படங்களையும் பார்வையிட எமது பக்கத்தை லைக் செய்யுங்கள்:
No comments:
Post a Comment